புதிய சிருஷ்டிகளாக இருப்பதன் மூலம் ஒருவர் அடையும் லாப நஷ்டங்களையும், உலகத்தையும், மாமிச இச்சைகளையும், சாத்தானையும் எதிர்த்து அவர்கள் போர் புரியும் போது,
எவ்விதம், எப்போது, எங்கே இவைகளை அடைந்தோம் என்பதையும் புதிய சிருஷ்டிகள் தங்களைக் குறித்து சோதித்து அறிவது தேவனுடைய பார்வையில் மேன்மையானது.
ஆவிக்குரிய இஸ்ரவேலர் தங்கள் அனுதின ஜீவியத்தில் பிரதான ஆசாரியரான இயேசுவிடம் நெருங்கி ஜீவிப்பது அவசியம்.
இவர்களுக்கு அருளப்பட்ட கல்யாண வஸ்திரம் எவ்விதத்திலும் கறைபடாமல் இரட்சகரின் இரத்தத்தால் சுத்திகரிக்கப்பட்டு கறை திறை ஒன்றுமில்லாமல் சுத்தமுள்ளதாகக் காணப்பட வேண்டும்.
வெண்வஸ்திரம் எக்காலத்திலும் உடுத்தப்பட்டதாயும் அவைகளில் சிறு கறை ஏற்பட்டாலும் அது உடனடியாக சுத்திகரிக்கப்படவும் வேண்டும். ( எபி. 12:58 )