" நீங்கள் முன்னே உங்கள் அறியாமையிலே கொண்டிருந்த இச்சைகளின்படி இனி நடவாமல், கீழ்படிகிற பிள்ளைகளாயிருந்து உங்களை அழைத்தவர் பரிசுத்தராயிருக்கிறது போல, நீங்களும் உங்கள் நடக்கைகள் எல்லாவற்றிலேயும் பரிசுத்தராயிருன்கள் . " ( 1 பேது. 1:14 - 15 )
தேவனே சகலத்தையும் செய்கிறார்.
மனுஷன் அவர் கையில் செயலற்றவனாயிருக்கிறான் என்பது சில கிறிஸ்தவர்களின் தவறான சிந்தை.
ஆனால் பேதுரு அவ்விதம் கூறுவதில்லை.
அவருடைய தெய்வீக போதனைகள் மூலம் நாம் நம்மை உடுத்திக் கொள்ள வேண்டும் என்றே போதிக்கிறார்.
போதிக்கப்பட்டபடி செய்யவேண்டிய காரியங்கள் அனேகம் உண்டு.
அதை ஒருவன் செய்யாமல், தேவன் என்னை வழி நடத்துவார் என்று உட்கார்ந்திருப்பது சோம்பலை வருவிக்கச் செய்யும்.
சாத்தானும் இச்சந்தர்ப்பத்தை ஆதாயப்படுத்தி அவர்கள் புறம்பான இருளிலே நடக்கத்தக்கதாக முற்றிலும் கட்டி விடுவான்.