ஒரு தாலந்தைப் புதைத்து வைத்த மனுஷனை இயேசு ஏன் இங்கு உதாரணமாக எடுத்துக் கொண்டார்?
குறைவு உள்ளவர்களாகக் காணக்கூடிய அங்கங்களுக்குள் ஓர் பொறுப்பை உணர்த்தவே.
கொடுக்கப்பட்டுள்ள தாலந்தில் குறைவுள்ளவர்களாகக் காணக்கூடியவர்கள் அதை அதிகப்படுத்தவே முற்சிக்க வேண்டும்.
தங்களுடைய சக்திக்குத் தக்கவாறு தேவ ஊழியத்தில் ஈடுபடவும், தனக்காகவும் தன் உடன் சகோதரர்களுக்காகவும் சத்தியத்திற்காக உழைத்து தனக்கருளப்பட்ட தாலந்தை அசட்டைப் பண்ணாமலும் தான் குற்றப்படுத்தப்படாமலும் தன்னைக் காத்துக் கொள்ளவேண்டும்.
சிறு தாலந்தையும் விருத்தியாக்க முயற்சிப்போருக்கு அதை அதிகப்படுத்த தேவன் சித்தமுள்ளவராயிருக்கிறார்.
தங்களுக்கு அருளப்பட்டத் தாலந்தை விருத்தி செய்ய விரும்பாதவர்கள் அதை இழந்து போக நேரிடும். ( லூக். 12: 47 48 )