" ஆகையால் நம்மில் தேறினவர்கள் யாவரும் இந்தச் சிந்தையாய் இருக்கக்கடவோம். எந்தக் காரியத்திலாவது நீங்கள் வேறே சிந்தையாயிருந்தால் அதையும் தேவன் உங்களுக்கு வெளிப்படுத்துவார். ஆகிலும் நாம் எது வரையில் தேறியிருக்கிறோமோ அது முதல் ஒரே ஒழுங்காய் நடந்து கொண்டு ஒரே சிந்தையாயிருப்போமாக." ( பிலி. 3:15 - 16 )
அன்பின் பிரமாணத்தின் எல்லையை பூரணமாக அடைந்த ஒவ்வொருவரும் தேவனுடைய ஊழியத்தில் அதிகமாகத் தங்களை ஈடுபடுத்தி தங்கள் ஜீவனையும் சகோதரர்களுக்காக அர்ப்பணிக்குமுன் வருவது மிக அத்தியாவசியமானது.
நீதியுள்ள காரியங்களுக்கும் தேவனுக்கும் மாத்திரம் இவர்கள் பிரதிநிதிகளாக நிற்காமல் தேவன் பேரிலும் அவர் வார்த்தைகளின் பேரிலும் உறுதியான விசுவாசமுள்ளவர்களாக யார் யார் இந்த ஓட்டப்பாதையில் தங்களைப்போல ஓடுகிறார்களோ அவர்களும் இந்த அன்பின் பூரண எல்லையை அடையச்செய்ய பிரதிநிதிகளாக நிற்க வேண்டும்.