"அப்பொழுது, ராஜா தமது வலதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானதுமுதல் உங்களுக்காக ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.
பசியாயிருந்தேன், எனக்குப் போஜனம் கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்ததேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள், வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன் என்னைப் பார்க்க வந்தீர்கள் என்பார்... மத்தேயு25:34, 35, 36.
இந்த வசனத்தை மேற்கோள் காட்டி இவைகளைச் செய்கிறவர்களே நித்திய ஜீவனை சுதந்தரிப்பார்கள் என்றும் அப்படிச் செய்யாதவர்கள் என்ன ஆவார்கள் என்று கீழ்கண்ட வசனத்தையும் பதித்து
மத்தேயு 25:41-45 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார். அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள். அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
இவ்வசனங்களைக் கவனமாகப் படித்து, விளக்கம் சொல்லுங்கள் சகோதரரே!
என்று கவனமாகப் படித்து விளககம் சொல்லக் கேட்க்கிறார்கள்.
கருணாநிதி விஷயத்துக்கு வருவோம். பசியாயிருப்பவர்களுக்கு கிலோ 1ரூபாய்க்கு அரிசி கொடுக்கிறார்; மேலும் சத்துணவுத்திட்டத்தின் மூலம் தினமும் பல்லாயிரக்கணக்கான குழந்தைகளுக்கு பசியாற்றுகிறார்; அந்நியராக உள்ள இலங்கை அகதிகளை முகாம்கள் அமைத்து சேர்த்துக்கொள்கிறார்; இலவச வேஷ்டி சட்டை தருகிறார்; கலைஞர் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான் வியாதியஸ்தர்களை விசாரிக்கிறார்; காவலிலிருப்போரை அண்ணா நூற்றாண்டு விழாவை முன்னிட்டு விடுதலையே செய்திருக்கிறார்.
ஆக கருணாநிதி அவர்கள் ஒரு மாபெரும் நீதிமான், இவர் ராஜ்யத்தை சுதந்தரித்துக்கொள்வார்.
இதை வாசிக்கும் தள அன்பர்கள் கருணாநிதியளவு செய்ய முடியாவிட்டாலும் At least வாழ்க்கையில் ஒரு முறையாவது இதில் ஏதாவது ஒரு காரியத்தைச் செய்தாலே நீங்கள் நீதிமானாகிவிடுவீர்கள். நித்திய ஜீவனுக்கும் பங்காளிகளாகிவிடுவீர்கள்.
இத்தகைய எளிமையான சுவிசேஷத்தைத்தான் எல்லா மதங்களும் போதிக்கிறதே. போதிக்காவிட்டாலும் இயல்பாகவே மனிதன் இந்தக் காரியங்களை செய்கிறானே. இதில் கிறிஸ்துவின் பங்கு எது?
மேலும் இவர்கள் பரப்பும் சுவிசேஷம் என்னவென்றால்.....
கிறிஸ்துவின் மூலம் எல்லா ஜனங்க்களுக்கும் பாவ மன்னிப்பு ஏற்படவில்லை. எனவே செய்த எல்லா பாவ்ங்களுக்கும் தண்டனையான மரணத்தை நிச்சயம் அடைவார்கள் என்பதே.
மேலும் ஒருமுறை யாராவது நற்செய்தியைக் கேட்டுவிட்டால் பின் கடைசிவரை அறிக்கையிட்டு பாவத்தை விட்டுக்கொண்டே இருக்கவேண்டும். மீறி பாவம் செய்பவர்கள் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பான, 1000வருட அரசாட்சியின் முடிவில் எழுப்பப்பட்டு மறுபடியும் மரணதண்டனை அடைவார்களாம். இந்தக் கேலிக்கூத்தை இவர்களும் நம்பி மற்றவர்களையும் நம்பவைத்து மோசம்போய்க்கொண்டிருக்கிறார்க்ள். இதுவும் ஒரு தேவதூஷணம் என்று இவர்களுக்குத் தெரிவதில்லை.
இவர்களைப் பொறுத்தவரை கருணாநிதி ஒரு மாபெரும் நீதிமான்!