ஆவியிலே நாம் ஊக்கம் இழந்தவர்களாகக் காணப்பட்டு சோர்வு நம்மை மேற்கொள்ளுவது போல காணப்படும்போது ஆவியிலே நாம் பெலனற்றுப் போகாமல் விழிப்புள்ளவர்களாக ஜெபிக்க வேண்டும்.
சோர்வு நம்மில் காணப்படும் போது சத்தியம் நம்மை விட்டு விலகிப்போகக் கூடும்.
இத்தருணத்தில் நாம் ஒருவருக்கொருவர் புத்தி சொல்லி ஜெபத்திலே தேவனிடம் அதிகமாக தொடர்பு கொண்டு அவருடைய வார்த்தைகளின் பேரில் இரவும் பகலும் தியானமாயிருக்க பிரயாசப்பட வேண்டும்.
இதுவே நம்மை மீண்டும் ஆவியிலே உற்சாகப்படுத்தும்.
நாம் ஆரம்பத்திலே கொண்ட நம்பிக்கையை முடிவுபரியந்தம் உறுதியாய் பற்றிக் கொண்டிருப்போமாகில் கிறிஸ்துவினிடத்தில் பங்குள்ளவர்களாயிருப்போம்.