" தேவன் தம் சித்தத்தின்படி அவயவ்ங்கள் ஒவ்வொன்றையும் சரீரத்திலே வைத்தார். " ( 1 கொ. 12:18 )
கிறிஸ்துவின் சரீரத்தில் இணைக்கப்பட்ட ஒவ்வொரு அங்கமும் மற்ற அங்கத்திற்கு இடமில்லை என்றோ அல்லது எந்த அங்கமும் தனக்கு அந்த சரீரத்தில் யாதொரு வேலையும் இல்லையென்றோ சொல்ல முடியாது.
ஆவியிலே நிரப்பப்பட்ட ஒவ்வொரு அங்கமும் தலையாகிய கிறிஸ்துவின் கீழ் அவர் நடத்தும் வழியில் அவர் ஊழியத்தைச் செய்ய வேண்டும்.
அவரவர் ஊழியத்திற்குத் தக்கதாக பரிசு வழங்கப்படும்.
காலம் வரும் போது தேவனுடைய ஊழியர்களுக்குப் பணிவிடை செய்து அவர்களை உற்சாகப்படுத்தி ஆதரித்து வந்த ஆக்கில்லாவையும், பிரிஸ்கில்லாளையும் விட அங்கீகரிக்கப்பட்ட பவுல், அப்பொல்லோ இவர்களின் ஊழியம் எவ்வள்வு மேன்மையுள்ளதாகக் கருதப்படும் என்பது யாருக்குத் தெரியும்?
தேவனே தம் சித்தத்தின்படி சகலத்தையும் செய்கிறார் என்பதை நாம் உணர வேண்டும்.