புண்ணியமானவைகளைச் செய்து எந்த அளவிலும் தேவனுக்குப் புகழ்ச்சியைத் தரக்கூடிய உதாரகுணமுள்ள வார்த்தைகளோ அல்லது கிரியைகளோ அல்லது கருத்துக்களோ இவைகளையே நாம் சதா காலங்களிலும் சிந்தித்து இதன் மூலம் புதிய சிருஷ்டி நமக்குள் நல்ல சிந்தையுடன் வளரப் பிரயாசப்பட வேண்டும்.
இதன் மூலம் நம் சிந்தை நாளுக்கு நாள் புதியதாக மாற்றப்பட்டு வரும்.
இதன் மூலமாகவே நாம் மகிமையில் கிறிஸ்து இயேசுவுக்குள் ஒப்பாகும் நிலையை ஒவ்வொரு அடியாக இந்த புதிய வாழ்க்கையில் உயரச் செய்து பூரணப்படுத்தக் கூடியதாகவும் இருக்கும்.
இந்நிலையில் நம் சிந்தனை உயர்த்தப்பட்டு கிறிஸ்துவோடு ஐக்கியப்படச் செய்யும். பின்னர் அவருடைய சாயலிலே இணைக்கப்பட்டு முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குபெறத் தகுதியுள்ளவர்களாக்கும்.