அவளுடைய அருவருப்புகளுக்கு உடந்தையாக அவளுடன் குடும்பமே நடத்திக்கொண்டிருப்பவர்களுக்கு சத்தியமாக இது புரியாது. ஏற்றுக்கொள்ளவும் மாட்டார்கள். (ஒரு சில கழுகுகள் தவிர)
மேலும், இரகசியம், மகா பாபிலோன், வேசிகளுக்கு பூமியிலுள்ள அருவருப்புகளுக்கும் தாய் என்னும் நாமம் அவள் நெற்றியில் எழுதியிருந்தது" வெளி. 17:5 அருவருப்புகளுக்கும் தாய் என்றால், அத்தாயின் பிள்ளைகள் இன்றும் உள்ளனர் தானே! இந்த உலகத்தைப் படைத்த கடவுள் வெருப்பதே அருவருப்பாகும். அவருக்குப் பிடிக்காததில் ஒன்று உருவ சிலைகள் வழிப்படுதல். யாத்திராகமம் 20: 3,4 & 5. இன்று எந்த பிள்ளைகளின் கோபுரத்தில் பார்த்தாலும்,அல்லது பீடத்தை பார்த்தாலும் அருவருப்புகள் தான். தாயயைப் போல் தான் பிள்ளை என்பது மெய்யான பழமொழி (எசேக்கியேல் 16 : 44.) இன்றுள்ள சபைகளெல்லாம் தாய் சபையின் சாயலில்லாமல் இல்லை. சிலைகள், சிலுவைகள், அலங்கார மேடைகள், கண்ணைக்கவரும் வடிவமைப்புள்ள கட்டடங்கள், இருக்கைகள், முழங்காலிட முழங்காலனைகள், ஆலயமணிகள், விசுவாச பிரமாணங்கள், நீண்ட அங்கிகள்,அல்லவென்றால் "டை" கோட்டு, ஜிப்பா, சபாரி சூட்டுகள். அச்சடித்த ஜெபங்கள்,பொய்யான பாடல்கள்.பொய்யான பாரம்பரிய பழக்க வழக்கங்கள்.பொய்யான பண்டிகைகள், ஞாயிரு ஆராதனைகள்,லெந்து நாட்கள், சாம்பல் புதன், பெரிய வியாழன்,பெரிய வெள்ளி, ஈஸ்டர்,அச்சடித்த ஜெபங்கள், ஜெபிக்கும்போது இசை,சிலுவைக்குறிகள். பாவசங்கீர்த்தனங்கள், குருத்தோலைகள், மணமாகாமலே அப்பாக்கள்,மணமான குரு(க்)கள், சிலுவை ஓரு புனித சின்ன(மா)ம்,ஒரு பாவமும் அறியாத பச்சிளங்குழ்ந்தைகளுக்கு ஞானஸ்நாணம்.புது நன்மை,பிணத்தை வைத்துக்கொண்டு ஆராதனை, மெழுகுவத்திகள் அதுவும் பட்டப்பகலில்,ஒருசந்தி நாட்களில் திருமணம் கிடையாதாம், (ஆணால் ஏர்கனவே திருமணமானவர்கள் மட்டும் திருமண வாழ்க்கை நடத்தலாமா?) இரவு 12 மணிக்கு இவர்களுக்கு புத்தாண்டு, (மாலையும் விடியர்காலையுமாகி ஒரு நாள்.(ஆதியாகமம் 1: 5.)} குழந்தை யேசு,கிறிஸ்மஸ், உத்தரிக்கும் தலம்,பகலில் இரவு உணவு,ரொட்டி அப்பமாகி இப்பொழுது 'வேஃபராகி, உவமைகள் உண்மைக்கதையாகி. ஒட்டு மொத்தத்தில், அவள் அருவருப்புகளாலும், அசுத்ததாலும் நிறைந்த பொற்பாத்திரத்தை கையில் பிடித்திருந்தாள் (வெளி 17 :4) ஐயோ !
தாங்கள் கொடுத்த இந்த பெரிய லிஸ்டை துவக்கி வைத்ததே கத்தோலிக்க சபை தான்!! தங்களை இன்றும் "தாய்" திருச்சபை என்று தான் சொல்லிக்கொள்கிறார்கள்!! இந்த தாயிலிருந்து பி(ரி)றந்த குழந்தைகள் தானே மார்ட்டீன் லூத்தர் தொடங்கி இன்று காளான் போல் வந்திருக்கும் சபைகள்!! தாயும் பிள்ளைகளும்!!
தன் கோட்பாடுகளாலும், தன் பாரம்பரியங்களாலும், தன் பண்டிகைகளாலும், தன் விசுவாச பிராமனங்களாலும், தன் பாடல்களாலும் இன்றைய எல்லா சபைகளையும் மயக்கி வைத்திருக்கும் அந்த தாய் கத்தோலிக்க சபையும் அதன் பிள்ளைகளான இன்றைய சபைகளுமே!!