சுத்தமான காரியங்களைச் செய்வதில் நம் சிந்தையை பயிற்சிக்க வேண்டும்.
அவ்விதம் பழகின பிறகு அசுத்தமான எந்த சிந்தையும் நமக்கு வேதனையாகவும், சஞ்சலமாகவும் காணப்படும்.
நல்ல சிந்தனையின் மூலம் அசுத்தமானதை நாம் நினைவுக்கே கொண்டுவராமல் தடுக்க முடியும்.
உண்மையான அன்பை நாம் அதிக உயர்வாக கருதவும் வேண்டும்.
நாம் கற்புள்ளவைகளை ( சுத்தமுள்ளவைகளை ) சிந்தித்துக் கொண்டிருக்கும் போது உண்மை அன்பு நமக்குள் தானாக வேர் கொண்டு, தேவ அன்பையும், கிறிஸ்துவின் அன்பையும் உணரச் செய்யும்.
அதோடு கூட தன் உடன் ஊழியர் மேலும் மற்றவர்கள் மேலும், நம்மை பகைக்கிறவர்கள் மேலும் கூட இந்த அன்பைக் காட்டச் செய்யும்.
விசுவாசம், நம்பிக்கை, அன்பு இம்மூன்றும் ஒருவருக்கு அவசியம். இவைகளில் அன்பே பெரியது. இது சகல பாவங்களையும் மூடும். அன்பில்லாதவன் தேவனுடையயவனல்ல.