II தீமோத்தேயு 4:4 "சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்."
அந்த காலம் அப்போஸ்தலர்கள் சென்றவுடன் சுமார் 300ம் ஆண்டு முதல் தன்னை தாய் திருச்சபை என்று தம்பட்டம் அடித்துக்கொள்ளும் "கத்தோலிக்க" சபை தொடங்கியவுடன் முழு வேகத்தில் ஆரம்பமாகி இன்று வரை தொடர்ந்துக்கொண்டு தான் இருக்கிறது.
இன்று அநேகர் "உமது வசனமே சத்தியம்" என்று இயேசு கிறிஸ்து சொன்ன வார்த்தைகளுக்கு செவியை விலக்கி, "நான் நரகத்தை பார்த்தேன்", "நான் பரலோகத்தை பார்த்தேன்", "நான் பரலோகத்தில் அவரையும், இவரையும் பார்த்தேன்", "நான் நரகத்தில் ஊழியர்கள் உட்பட பலர் எரிந்துக்கொண்டிருப்பதை பார்த்தேன்" இவைகளையெல்லாம் பார்த்ததினால் தான் நான் கிறிஸ்தவனானேன் என்று கட்டுக்கதைகள் சொல்லி தங்களுக்கு என்று ஒரு கூட்டத்தை சேர்த்து வருவதை நாம் கண்கூடாக பார்க்க முடிகிறதே!!
வேதத்தில் இப்படி பட்ட வசனங்கள் இருந்தாலும், இதை எல்லாம் எங்கே நம்ப போகிறார்கள், இதை தள்ளி வைத்து விட்டு, வாங்க, என்னிடம் இயேசு கிறிஸ்து (எந்த இயேசு கிறிஸ்து என்று தெரியவில்லை) சொன்னதை/ காண்பித்தை உங்களுக்கு சொல்லுகிறேன் என்று கூட்டம் சேர்த்துக்கொண்டு, அப்பாவி விசுவாசிகளை நம்ப வைத்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறதே!!
இதை விட ஒரு படி மேல் போய், பலர், வேத வசனம் எல்லாம் உண்மை தான், ஆனால் அதினால் ஒன்றும் இல்லை, அதை ஆறாய்வதால் ஒரு பிரயோஜனமும் கிடையாது, அதை வைத்து விட்டு, அனுபவத்திலும், கணவுகளிலும், காட்சிகளிலும் கிறிஸ்துவத்தை விவரித்து வருகிறார்கள்!!
இந்த எச்சரிப்பு தீர்கதரிசன வசனம் சத்தியத்தை நம்பும் ஒரு சிறிய கூட்டத்திற்கு மாத்திரமே!! அநேகர் சத்தியத்தை விலக்கி, மேற்சொன்னவற்றில் தான் இருந்துக்கொண்டிருப்பதை நாம் பார்க்க முடிகிறதே!!