" நீதியுள்ளவைகள் எவைகளோ...... அவைகளையே சிந்தித்துக் கொண்டிருங்கள். " ( பிலி. 4: 8 )
அநீதியான காரியங்களில் தேவனுடைய பிள்ளைகள் பிரியம் கொள்ளக்கூடாது. நீதியை நடப்பிப்பதில் நாம் வார்த்தையிலும், நடத்தையிலும் இதை காண்பிக்க வேண்டியவர்களாக இருக்கிறோம். இது நம்மில் மட்டும் அல்ல பிறரிடத்திலும் இவ்விதம் நடந்து கொள்ள, படித்துக் கொள்ள வேண்டும். இதனால் பல துன்பங்கள் நேரிடக் கூடும். நீதியின் நிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள் பரலோக இராஜ்யம் அவர்களுடையது. இந்த நீதியை நடப்பிப்பதிலே பசி தாகமுள்ளவர்கள் ( வாஞ்சையுள்ளவர்கள் ) தேவ ஆசீர்வாதம் பெற்று திருப்தி அடைவார்கள். நீதியை நடப்பிப்பதில் நம் இருத்யம் நம்மைக் குற்றப்படுத்தாதபடி சகலத்திலும் ஜாக்கிரதையுள்ளவர்களாக எதையும் சிந்திக்க வேண்டும். ( மத். 13: 43, செப். 2:3 )