பொய்யான காரியங்களுக்கும், புகழ்ச்சிக்கும் யார் யார் தங்களை உட்படுத்துகிறார்களோ அவர்கள் தங்களின் தூய்மையைக் கெடுத்துக் கொள்கிறார்கள்.
யார் யார் மேற்சொன்னவைகளுக்குத் தங்களை விலக்கிக் காத்துப் பரிசுத்த சிந்தையுடையவர்களாக காணப்படுகிறார்களோ அவர்களே ஒழுக்கமுடையவர்களாக இருப்பார்கள்.
நாம் ஒவ்வொரு காரியத்தையும் சீர்தூக்கிப்பார்த்து நன்மையானவைகளையும், தேவனுடைய பார்வையில் மேனமையானவைகளுமானவைகளை செய்யும்போது தேவன் நமது பேரில் பிரியமுடையவராகவும் இருப்பார்.
நற்கீர்த்தியையும், புகழையும் உலகப்பிரகாரமாகத் தேடாமல் தேவ ஊழியத்தின் மேன்மையால் அதை உண்மையுடன் தேவனிடம் பெற பிரயாசப்பட வேண்டும்.
சகோதரரிடத்தில் மட்டும் நாம் அன்பைக் காட்டுகிறவர்களாக இராமல், சகலருக்கும் முன்பாக சகல நல்லொழுக்கத்துடன் ஜீவிக்கும் சிந்தை ஒவ்வொருவருக்குள்ளும் காணப்பட வேண்டும்.