" உங்கள் சாந்த குணம் எல்லா மனுஷருக்கும் தெரிந்திருப்பதாக. " ( பிலி. 4 : 5 )
" சாந்த குணம் " என்று இங்கே மொழி பெயர்க்கப்பட்டுள்ள கிரேக்கப் பதம் நியாயத்திற்குட்பட்ட ஓர் சிந்தையைக் காட்டக் கூடியதாகவும் எந்த ஒரு காரியத்திலும் நம் உரிமையை அதிகமாக வற்புறுத்தாமலும் இருக்கக் கூடிய நிலையைக் காட்டக் கூடியதாகவும் உள்ளது.
இவ்விதம் இருப்பதின் மூலமே நம் சாந்த குணத்தை மற்றவர்களுக்கு வெளிப்படையாக காட்ட முடியும்.
இரக்கமும், சில காரியங்களில் விட்டுக் கொடுப்பதும், அபிஷேகம் பெற்றவர்களுக்கு முக்கிய குணலட்சணமாகும்.
எல்லா நீதிக்கும் முன்னதாக விசுவாசமும், இரக்கமும் நம்மில் காணப்பட்டால்தான் நாம் பரலோகத்தில் உள்ள பிதாவுக்கு பிள்ளைகளாக இருக்க முடியும்.
ஏனென்றால் நம் பிதா நன்றியில்லாதவர்கள் மேலும் அன்பும், இரக்கமும் உள்ளவராக இருக்கிறார்.
சாந்த குணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள்.