" கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாய் இருங்கள். சந்தோஷமாய் இருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன்." ( பிலி. 4:4 )
கிறிஸ்தவர்கள் அநேகர் சந்தோஷமுள்ளவர்களாக இருக்க முடியாது.
கிறிஸ்துவிடம் சநோஷமாக இருக்க விரும்புவோர் அதிகமான சந்தோஷத்தை உலகிலே அனுபவிக்கவும் முடியாது.
உண்மை கிறிஸ்தவ ஜீவியத்திலே இது மிக கடினமான காரியம்.
சந்தோஷம் என்பது உலகத்தாரைப்போல கொண்டாடுவது அல்ல.
உபத்திரவத்திலும் பல பாடுகளிலும் சந்தோஷம்.
ஒருவன் கிறிஸ்தவனாயிருப்பதினால் பாடுபட்டால் அதினிமித்தம் சந்தோஷப்பட்டு தேவனை மகிமைப்படுத்த வேண்டும்.
தேவனோடு நெருங்கி ஜீவிக்கும் புதிய சிருஷ்டிகள் மட்டுமே இந்த சந்தோஷத்தை அனுபவிக்க முடியும்.
அவருடன் ஒருமைப்பட்டவர்களாக அனுதினமும் அவருடைய தற்காப்பிலே நிலைத்திருப்பவர்கள் வாக்குத்தத்தங்களைப் பெற்று எல்லாக் கஷ்ட நஷ்டங்களிலும் சந்தோஷமுள்ளவர்களாகத் தங்களுக்கு முன் வைத்துள்ள கிரீடத்தைப் பெற ஓட வேண்டும். ( 1 பேது. 4: 12, 14 - 16 )