kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: இயேசுவின் 1000 வருட யுகத்தில் பாவிகள் உண்டா?


Executive

Status: Offline
Posts: 425
Date:
இயேசுவின் 1000 வருட யுகத்தில் பாவிகள் உண்டா?


ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

ஏசாயா 26:9,10 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறான்.

இவ்வசனங்களில் கூறப்பட்டுள்ள நிகழ்வுகள் யாவும், கிறிஸ்துவின் 1000 வருட யுகத்தில் நடப்பவைகளாகத் தோன்றுகின்றன. அவ்வாறெனில், அந்த 1000 வருட யுகத்திலும் பாவிகள் உண்டா? அவர்களின் கதி என்னாகும்?

பதில் தெரிந்தவர்கள் பதியும்படி வேண்டுகிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

பொய்யும் பொய்க்குப் பிதாவுமாயிருக்கிற சாத்தான் கட்டப்பட்ட நிலையிலும், அறியாமை என்கிற இருளே இல்லாமல் தேவனே நேரடியாக கிறிஸ்து மற்றும் சபையின்மூலம் நடத்தும் ஆட்சியிலும் பாவம் மீண்டும் பிரவேசிக்கிறது என்று வைத்துக்கொண்டால் அதை அனுமதித்த 'ராஜா'வைத்தான் தண்டிக்க வேண்டிவரும்.

மேலும் அந்த ராஜ்ஜியத்திலும் ஒருவன் பாவம் செய்ய ஏதுவாக இருந்தால் அனைவருமே பாவம் செய்யவும் நிச்சயம் கூடும்.

ஆக அனைவருக்கும் இன்னொரு மரணம்..........

சூப்பரான தேவ திட்டம்தான்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோதரரே!

நான் வேதவசனங்களை 7 வரிகளில் தந்து, அவற்றின் அடிப்படையில் 2 வரிகளில் எனது கேள்விகளை எழுப்பியுள்ளேன். ஆனால் நீங்களோ எந்த வேதவசனமும் குறிப்பிடாமல், எனது கேள்விகள் ஏதோ முட்டாள்தனமானவை என்பதுபோல் பரியாசம் கலந்த விமர்சனத்தைத் தந்துள்ளீர்கள். உங்கள் பரியாசமும் விமர்சனமுமெல்லாம் வேதவசனங்களுக்கும் அவற்றைத் தந்த தேவனுக்குமேயன்றி எனக்கல்ல. ஏனெனில் முழுக்க முழுக்க வேதவசனம் சொல்வதன் அடிப்படையில்தான் நான் கேள்வி எழுப்பியுள்ளேன். எனது சுருக்கமான பதிவை மீண்டும் ஒருமுறை நன்கு படித்துப் பாருங்கள்.

இப்பொழுது நான் ஒரு விஷயத்தை நன்கு புரிந்து கொண்டேன். நீங்கள் "Truth Seekers" ஆக இல்லை; "Truth Holders" என உங்களை நீங்களே கருதுபவராக இருக்கிறீர்கள். உங்கள் வசம் இருக்கின்ற "Truth" ஐ இத்தளத்திற்கு வருகிற மற்றவர்கள் கேள்விகேட்காமல் ஏற்கவேண்டும் என்பதுதான் உங்கள் நோக்கமாகத் தோன்றுகிறது.

வேதவசனங்களின் அடிப்படையில் நான் எழுப்பியுள்ள கேள்விக்கு வேதவசனங்களின் அடிப்படையில் பதில் தராமல், தேவையற்ற விமர்சனங்களைத் தந்திருப்பது, உங்கள் இயலாமையைத்தான் குறிக்கிறது.

வசனங்கள் நேரடியாகக் கூறுவதைகூட உங்களால் ஜீரணிக்க முடியாததற்குக் காரணம், “இதுதான் உண்மை” என்ற முடிவில் நீங்கள் மிகவும் உறுதியாக இருப்பதே.

நம் பாவங்கள் அனைத்திற்கும் காரணம் சாத்தானே எனப் பலரும் கருதுவதைப் போலத்தான் நீங்களும் கருதுகிறீர்கள். நம் பாவங்களுக்கு முழுக்க முழுக்க சாத்தான்தான் காரணமெனில், நமக்குத் தண்டனை அல்லது ஆக்கினை தருவது எப்படி நியாயமாக இருக்கமுடியும்?

ஆதாமின் மீறுதலுக்கு முழுக்க முழுக்க சாத்தான்தான் காரணமெனில், ஆதாமுக்கும் அவன் சந்ததிக்கும் சாபம் கொடுத்தது எப்படி நியாயமாக இருக்கமுடியும்?

எனவே நம் பாவங்களுக்கு சாத்தான் மட்டுமே காரணமல்ல, நாமுங்கூட காரணம்தான் எனும் உண்மையை முதலாவது நீங்கள் அறியவேண்டும். இவ்வுண்மையை அறியாததால்தான், சாத்தான் கட்டப்பட்ட நிலையில் இருக்கிற 1000 வருட ராஜ்யத்தில் பாவம் இருக்கமுடியாது என நீங்கள் எண்ணுகிறீர்கள்.

ஆதாம் உட்பட அனைத்து மனிதரின் பாவங்களுக்கும் சாத்தான் மட்டுமே காரணம் அல்ல. ஆதாமின் பாவத்தை சற்று நிதானமாகத் தியானித்துப் பாருங்கள்.

தேவன் ஆதாமிடம் சொன்னது: நடுவிருட்சத்தின் கனியைச் சாப்பிட்டால் சாகவே சாவீர்கள் என்று.

சாத்தான் ஏவாள் மூலம் ஆதாமிடம் சொன்னது: நடுவிருட்சத்தின் கனியைச் சாப்பிட்டால் சாகவே சாவதில்லை என்று.

ஆதாமின் முன்பாக இவ்விரு கூற்றுகளும் சமநிலையில்தான் இருந்தன. சொல்லப்போனால் தேவனின் கூற்றுதான் சற்று வலிமையான நிலையில் இருந்ததாகக்கூட சொல்லலாம். ஏனெனில் ஆதாமுக்கும் ஏவாளுக்கும் தேவனோடு இருந்ததைப் போன்ற மிக நெருக்கமாக உறவு, சாத்தானிடம் அவர்களுக்குக் கிடையாது. எனவே சாத்தானின் கூற்றைவிட தேவனின் கூற்றைத்தான் அதிகமாக நம்பக்கூடிய நிலையில் அவர்கள் இருந்தனர்.

அப்படியிருந்தும் மிகக்குறுகிய அளவே உறவு கொண்டிருந்த சாத்தானின் கூற்றை நம்பியதற்குக் காரணம், சாத்தான் மட்டுமல்ல, ஆதாமின் இச்சையும்தான். அந்த இச்சையைத் தூண்டியவன்தான் சாத்தான். யாக்கோபு 1:14-ஐப் படித்துப் பாருங்கள்.

14 அவனவன் தன்தன் சுய இச்சையினாலே இழுக்கப்பட்டு, சிக்குண்டு, சோதிக்கப்படுகிறான்.

சுய இச்சை ஆதாமிடமும் இருந்தது. ஆனாலும் தேவனின் சொல்லுக்குக் கட்டுப்பட்டு, அந்த இச்சை தலைதூக்காதவாறு ஆதாம் பார்த்துக்கொண்டான். கனியைச் சாப்பிட்டால் சாகநேரிடும் என தேவன் கூறியதை அவன் முழுமையாக நம்பியதால், அவரது வார்த்தைக்குக் கீழ்ப்படிந்திருந்தான். இப்படிப்பட்ட சூழ்நிலையில் சாத்தான் ஒரு பொய்யைச் சொன்னதும், சாத்தான் சொன்னதையும் நம்பத்தொடங்கினான். சாத்தானின் கூற்றில் நம்பிக்கை வரவும், தேவனின் கூற்றில் நம்பிக்கையை இழந்தான். சாத்தானின் கூற்றுக்கும் தேவனின் கூற்றுக்கும் இடையில், அவனது சுய இச்சை கிரியை செய்தது. எனவே தன் சுய இச்சைக்கு சாதகமாக இருந்த சாத்தானின் கூற்றை அவன் நம்பினான். தேவனின் கூற்றைப் புறக்கணித்தான். பாவத்தில் விழுந்தான்.

எனவே ஆதாமின் பாவத்திற்கு பிரதான காரணம், அவனது சுய இச்சையே. அந்த இச்சையைத் தூண்டுகிற ஒரு கருவியாக சாத்தானின் கூற்று இருந்தது. எனவேதான் ஆதாமுக்கும் தண்டனை, பொய் சொல்லி ஆதாமை வஞ்சித்த சர்ப்பமாகிய சாத்தானுக்கும் தண்டனை.

சாத்தான் ஆதாமை வஞ்சிக்காமல் இருந்திருந்தால்கூட, ஒருவேளை ஆதாம் தன் சுய இச்சைக்குக் கீழ்ப்படிந்து, தேவவார்த்தையை மீறியிருக்கக்கூடும். எனவே சாத்தான் இல்லாவிட்டால்கூட மனிதனிடம் பாவசிந்தை எழக்கூடும் என்பதே உண்மை. இவ்வுண்மையின்படித்தான், 1000 வருட ராஜ்யத்தில் சிலர் பாவியாக இருப்பார்கள் (ஏசாயா 65:20); அல்லது துன்மார்க்கராக இருப்பார்கள் (ஏசாயா 11:4); அல்லது நீதியைக் கற்றுக் கொள்ள மறுப்பார்கள் (ஏசாயா 26:9,10).

soulsolution wrote:
//சூப்பரான தேவ திட்டம்தான்.//

தேவதிட்டம் என்றால் அது இப்படித்தான் இருக்கவேண்டுமென நீங்களாகவே கற்பனை செய்துகொள்வதால், நீங்கள் நினைப்பதற்கு மாறானதை வசனத்தின் அடிப்படையில் சொன்னால்கூட அதை பரியாசமாக விமர்சிக்கிறீர்கள்.

soulsolution wrote:
//மேலும் அந்த ராஜ்ஜியத்திலும் ஒருவன் பாவம் செய்ய ஏதுவாக இருந்தால் அனைவருமே பாவம் செய்யவும் நிச்சயம் கூடும்.//

அனைவரும் பாவம் செய்யத்தான் வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள்? சாத்தானின் வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்கூட, பலர் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையக்கூடிய பரிசுத்தவான்களாக இருக்கும்போது (வெளி. 20:6), சாத்தானின் வஞ்சகம் இல்லாத ராஜ்யத்தில் ஏராளமானோர் பரிசுத்தவான்களாக மாறுவார்கள் என்பதுதானே உண்மையாயிருக்க முடியும்?


-- Edited by anbu57 on Tuesday 9th of March 2010 06:22:11 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

யாரையும் தனிப்பட்ட முறையில் பரியாசம் செய்வது நோக்கம் இல்லை. மேலும் தாங்கள் எழுதியது போல் "Truth Holders"ஆக இல்லாமல் நாங்கல் கடைசி வரையில் "Truth Seekers"ஆக தான் இருக்கிற ஒரு சிறிய கூட்டம், ஏனென்றால் வெளிப்படாத பல காரியங்கள் வேதத்தில் இன்னும் இருக்கிறது, நீங்கள் எழுதிய ஏசா 65:20 பகுதியை போல்.

அவரின் அன்பின் ஆழம், அகளம், நீளம் உயரம் இன்னதென்று அந்த அன்பின் வழியாகவே நாங்கள் தேவனின் திட்டத்தை பார்க்கிறோம், ஆனால் மற்ற கிறிஸ்தவர்களோ (தாங்கள் உட்படத்தான்), தண்டிப்பது, நித்திய அக்கினியில் போட்டு சாத்தானிடம் தன் பிள்ளைகளை ஒப்பு கொடுக்கும் ஒரு கொடுரமான பிதாவாக தான் பார்க்கிறீர்கள், ஆகவே தான் வேதத்தை புரிந்துக்கொள்ளுதலில் இத்துனை வேற்பாடுகள். தேவனின் அன்பை அறிய முற்பட்டோமென்றால் நிச்சயமாக அவர் நம் பிதாவாக தெரிவார், அல்லது கொடடூர‌மான ஒரு நீதிபதியாக தான் தெரிவார்.

எப்படி அக்கினியில் போட்டு "வாட்டி வதைக்க" போவதாக தோன்றும் சில வசனங்களை நீங்கள் உங்கள் புரிந்துக்கொள்ளுதலுக்கு ஆதரவாக தருகிறீர்களோ, அப்படியே, அனைவருக்கும் இரட்சிப்பு உண்டு என்று நாங்கள் தருகிற வசனங்களுக்கு தங்களிடமிருந்து பதில் இல்லையே!!

இந்த தளத்தில் யாரையும் நாங்கள் புரிந்துக்கொள்ண்டதை கேள்வியே கேட்காமல் ஏற்று கொள்ள சொல்லவில்லையே!! தயவு செய்து கொடுக்கப்படும் வசனங்களை தேவனின் அன்பை வைத்து பகுத்து வாசித்து பாருங்கள், வித்தியாசம் புரியும். நம் இருதயத்தில் அவர் தண்டிபவராக தெரிந்தால் அப்படியே தான் நமக்கு புரியவும் செய்யும்.

அப்ப‌டியே தான் ப‌ழைய‌ ஏற்பாட்டில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ யூத‌னுக்கு உள்ள‌ க‌ட்ட‌ளைக‌ளை இப்ப‌ பின் ப‌ற்ற‌ சொல்லுவ‌து, ம‌ன‌சாட்சி என்கிற‌ ஒரு யுக‌த்தில் இருந்த‌து போல் இப்ப‌வும் இருக்க‌ சொல்லுவ‌து, வேத‌த்தில் இருக்கிற‌ எந்த‌ ப‌குதியையும் எடுத்து அது இப்ப‌வும் அப்ப‌டியே தான் என்று சொல்லுவ‌து என்ல்லாம் வேத‌த்தை ச‌ரியாக‌ புரிந்துக்கொள்ள‌வில்லை என்றே கான்பிக்கிற‌து. ஆக‌வே தான் தேவ‌ன் பேசினார், காண்பித்தார் என்ப‌தை எளிதாக‌ விசுவ‌சிக்க‌ முடிகிற‌து.

ஆகவே தாங்கள் தங்கள் கருத்துக்களை அதே உற்சாகத்துடன் பதியும் படி கேட்டுக்கொள்கிறேன். அதே போல் தங்களின் கேள்விகளுக்கு பதில் தெரியவில்லை என்று அல்ல, மாறாக சொல்லிய பதில் தங்களுக்கு பல முறை சொல்லியும் தாங்களும் ஒரு விதமாக வேதத்தை புரிந்துக்கொண்டிருப்பதால் அதை விட்டு கொடுக்க மனம் இல்லாதவராக தான் இருக்கிறீர்களே!! நாங்கள் சொல்லும் அனைத்துமே பொய் என்கிறா கன்னோட்டத்தில் பார்த்தால் எப்படி?!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"எவர்களை முன்குறித்திருக்கிறாரோ அவர்களை அழைத்துமிருக்கிறார்; எவர்களை அழைத்தாரோ அவர்களை நீதிமான்களாக்கியுமிருக்கிறார்; எவர்களை நீதிமான்களாக்கினாரோ அவர்களை மகிமைப்படுத்தியுமிருக்கிறார்." ரோமர்8:30

அன்பு அவர்களே!

மேற்கண்ட வசனத்தில் அவர் தீர்மானித்த சிலர் மாத்திரமே நீதிமான்களாக முடியும். வேறு யாரும் ஆகவே முடியாது, என்னதான் முயற்சி செயதாலும். ஆக மற்றவர்களின் கதி?

வாசியுங்கள்,

"அதேனென்றால் சிருஷ்டியானது அழிவுக்குரிய அடிமைத்தனத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு, தேவனுடைய பிள்ளைகளுக்குரிய மகிமையான சுயாதீனத்தைப் பெற்றுக்கொள்ளும் என்ற நம்பிக்கையோடே,
அந்த சிருஷ்டியானது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தினவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது."
ரோமர்8:20:21.

இந்த அழிவுக்குரிய அடிமைத்தனம் என்ற பதத்தை நீங்கள் எப்படி எடுத்துக்கொள்கிறீர்கள் என்று தெரிய்வில்லை. என்னைப் பொறுத்தமட்டில் அது பாவம், மரணம் என்ற அடிமைத்தனம். அது சுய இஷ்டத்தினாலே அல்ல, கீழ்ப்படுத்தின தேவனாலே மாயைக்கு (பொய்க்கு) கீழ்ப்பட்டிருக்கிறது. இந்த மாயை உயிர்த்தெழுதலின் பின்பு நீக்கப்பட்டு விடுதலையாக்கப்படும். பாவமும் இராது, மரணமுமிராது.


"எல்லா மனுஷரும் இரட்சிக்கப்படவும், சத்தியத்தைதான் அறிகிற அறிவை அடையவும் (அப்போது), அவர் சித்தமுள்ளவராயிருக்கிறார்."
"எல்லாரையும் மீட்கும்பொருளாகத் தம்மை ஒப்புக்கொடுத்த மனுஷனாகிய கிறிஸ்து இயேசு அவரே; இதற்குரிய சாட்சி ஏற்ற காலங்களில் விளங்கிவருகிறது."
1தீமோ 2:4,6.

இந்த தேவசித்தம் நடைபெறாது என்று வசனத்துக்கு எதிராக, தேவனுடைய 'சர்வ வல்லவர்' என்ற தகுதியை குறைத்து வாதாட என்னால் முடியாது. ஏனென்றல் அவரால் கூடாதது ஒன்றுமில்லை.
இதற்கு மிஞ்சி எண்ணுவது மதியீனம் மட்டுமல்ல அது தேவ தூஷணமும் கூட.

இதைவிடுத்து 'நித்திய ஜீவனுக்கு' தகுதியாக, மற்றவர்களைத் தகுதிப்படுத்த தேவன் மதியீனமான மனிதனைச் சார்ந்திருக்கவில்லை.

இந்த வசனங்களை மேற்கோள் காட்டினால் இல்லை, அது அவர் சித்தமாக இருந்தாலும் அது ஒருபோதும் நடக்காது, எல்லாரையும் அவர் மீட்டாலும் எல்லாரும் அதைத்தக்கவைத்துக்கொள்வது இல்லை என்கிறீர்கள்.

//எனவே நம் பாவங்களுக்கு சாத்தான் மட்டுமே காரணமல்ல, நாமுங்கூட காரணம்தான் எனும் உண்மையை முதலாவது நீங்கள் அறியவேண்டும். இவ்வுண்மையை அறியாததால்தான், சாத்தான் கட்டப்பட்ட நிலையில் இருக்கிற 1000 வருட ராஜ்யத்தில் பாவம் இருக்கமுடியாது என நீங்கள் எண்ணுகிறீர்கள்.//

என்று பதித்துள்ளீர்கள். பாவம் இருந்தால் அது தேவராஜ்ஜியமே அல்ல. இதில் இரண்டுகருத்துக்கள் இருக்க முடியாது.

ஏதேனில் ஏதோ சர்ப்பம் தேவனுக்குத் தெரியாமல் நுழைந்து அவரது திட்டத்தை சீர்குலைத்துவிட்டதாக நம்பினால் தேவன் careless ஆக இருந்துவிட்டாரோ? 
சர்ப்பம் பொய் சொல்லி வஞ்சிக்க வேண்டும், அதனால் மனுக்குலம் பாவத்தில் விழ வேண்டும், அதற்குப் பரிகாரமாக தேவன் கிறிஸ்துவை அனுப்பி அவரது அன்பின் மேன்மையை மனிதன் உணரச்செய்யவேண்டும் என்பது முன் தீர்மானிக்கப்பட்டதாகும்.

//அனைவரும் பாவம் செய்யத்தான் வேண்டும் என ஏன் கூறுகிறீர்கள்? சாத்தானின் வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில்கூட, பலர் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையக்கூடிய பரிசுத்தவான்களாக இருக்கும்போது (வெளி. 20:6), சாத்தானின் வஞ்சகம் இல்லாத ராஜ்யத்தில் ஏராளமானோர் பரிசுத்தவான்களாக மாறுவார்கள் என்பதுதானே உண்மையாயிருக்க முடியும்?//

இதற்கும் உங்கள் வசனத்தின் மூலமாகவே என்னால் பதில் அளிக்க முடியும். சாத்தானின் வஞ்சகம் நிறைந்த இவ்வுலகில் பலர் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கடையக்கூடிய பரிசுத்தவான்களாக இருப்பது உண்மை. ஆனால் இவர்கள் யாவரும் தேவனால் முன்பே தெரிந்துகொள்ளப்பட்ட சிறு மந்தை என்பதி நினைவில் கொள்க. ஏதோ சந்தர்ப்பவசத்தால் நடைபெறும் காரியமல்ல இது. சிலரை அவர் தன்னுடைய குமாரனுடைய சாயலுக்கு ஒப்பாக மாற்றுகிறார். இந்த யுகத்தில் இது நிறைவடைய வேண்டும். அதே போல 

"எப்படியெனில், மற்ற மனுஷரும், என்னுடைய நாமம் தரிக்கப்படும் சகல ஜாதிகளும், கர்த்தரைத் தேடும்படிக்கு, இதற்குப்பின்பு திரும்பிவந்து, விழுந்துபோன தாவீதின் கூடாரத்தை மறுமடியும் எடுப்பித்து, அதிலே பழுதாய்ப்போனவைகளை மறுபடியும் சீர்படுத்தி, அதைச் செவ்வையாக நிறுத்துவேன் என்று இவைகளையெல்லாஞ்செய்கிற கர்த்தர் சொல்லுகிறார் என்று எழுதியிருக்கிறது. உலகத்தோற்றமுதல் தேவனுக்குத் தம்முடைய கிரியைகளெல்லாம் தெரிந்திருக்கிறது." அப் 15: 16,17,18.
என்று வசனம் சொல்கிறது.
தேவனுக்குத் தம்முடைய கிரியைகள் தெரியாது என்று வாதிடுகிறீர்கள்.(அதாவது யார் இப்போது ஏற்றுக்கொள்வார்கள், மனிதன் எடுக்கப்போகும் முடிவுகள் போன்றவை)

விஷயம் ரொம்ப சிம்பிள் சகோதரரே,

முதல் ஆதாமினால் பாவமும் மரணமும் எல்லாரையும் ஆண்டுகொண்டது.
இரண்டாம் ஆதாமாகிய தேவகுமாரனாம் கிறிஸ்துவால் பாவமன்னிப்பும் நித்திய ஜீவனும் ஆண்டுகொள்ளும்.

இதற்கு மிஞ்சி எண்ணுவதுதான் தேவனைப் பரிகாசம் செய்வது. அதை நீங்கள்தான் செவ்வனே செய்துகொண்டுவருகிறீர்கள். ஆக மொத்தத்தில் உங்கள் கூற்று,
"தேவனால் எல்லாரையும் இரட்சிக்க முடியாது, அதற்கு தேவன் மனிதனைத்தான் முழுக்க முழுக்க சார்ந்திருக்கிறார்"(குறிப்பாக உங்கள் போன்ற கிரியைகளை சார்த்து இருப்பவர்களை)"என்பதுதானே.

இதைவிட ஒரு தேவதூஷணம் இருக்க முடியாது. சுயமேன்மையைத் தேடுகிற இன்றைய கிறிஸ்தவ ஊழியர்களுக்கும்(?) உங்களுக்கும் பெரிய வித்தியாசங்கள் இல்லை.

-- Edited by soulsolution on Tuesday 9th of March 2010 10:07:59 AM


-- Edited by soulsolution on Tuesday 9th of March 2010 10:42:05 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Senior Member

Status: Offline
Posts: 165
Date:

சகோதரர்கள் என்னை மன்னிக்கவும்!
 
இடையில் பதியப்பட்ட என்னுடைய பதிவு தாங்களின் விவாத தொடர்ச்சியை பாதிப்பதுபோல் இருந்ததால் நிக்கிவிட்டேன்!
 
இந்த பதிவை பார்க்க விரும்புகிறவர்கள் இங்கு சொடுக்கி பார்த்துகொள்ளலாம்.
 
 
தவறுதலுக்கு மீண்டும் மன்னிக்கவும்.    
 


-- Edited by RAAJ on Tuesday 9th of March 2010 03:19:20 PM

__________________
நீதியின் பாதையில் ஜீவன் உண்டு; அந்தப் பாதையில் மரணம் இல்லை 
www.lord.activeboard.com


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//யாரையும் தனிப்பட்ட முறையில் பரியாசம் செய்வது நோக்கம் இல்லை.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே! தனிப்பட்ட பரியாசத்தைக் கூட ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் “சூப்பரான தேவதிட்டம்” என்று சொல்லி தேவதிட்டம் பரிகசிக்கப்படும்விதமான “comment" -ஐத்தான் ஏற்கமுடியவில்லை.

இத்திரியின் முதல் பதிவில் நான் குறிப்பிட்டுள்ள 3 வசனங்களுக்கும் நீங்களும் விளக்கம் தரவில்லை, சகோ.ஆத்துமா-வும் விளக்கம் தரவில்லை. மாறாக, உங்கள் சொந்த வாக்கியங்களையே மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள்.

soulsolution wrote:
//மேலும் அந்த ராஜ்ஜியத்திலும் ஒருவன் பாவம் செய்ய ஏதுவாக இருந்தால் அனைவருமே பாவம் செய்யவும் நிச்சயம் கூடும்.

ஆக அனைவருக்கும் இன்னொரு மரணம்..........

சூப்பரான தேவ திட்டம்தான்.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே! ஏசாயா 65:20-ன் விளக்கம், இன்னும் உங்களுக்கு வெளிப்படவில்லை என்கிறீர்கள். அப்படியிருக்கையில், அவ்வசனத்தின் அடிப்படையில் நான் எழுப்பின கேள்விக்கு, சகோ.ஆத்துமா ஏன் மேற்கூறிய விதமாக பதில் தரவேண்டும்?

நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான் என ஏசாயா 65:20 தெளிவாகக் கூறுகிறது. அவ்வசனத்தில் “அங்கே” எனும் வார்த்தை, கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தைத்தான் குறிக்கிறது என நான் 100-க்கு 100 நம்புகிறேன். எனவே, கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தில்தான் “நூறு வயதுள்ளவனாகிய பாவி சபிக்கப்படுவான்” என ஏசாயா 65:20 கூறுவதாக நான் கருதுகிறேன். இதன் அடிப்படையில்தான் எனது கேள்வியையும் எழுப்பியுள்ளேன். ஆனால் நீங்களும் சகோ.ஆத்துமா-வும் என் கேள்விக்குப் பதில்தராமல் வேறு ஏதேதோ எழுதி வருகிறீர்கள்.

bereans wrote:
//அவரின் அன்பின் ஆழம், அகளம், நீளம் உயரம் இன்னதென்று அந்த அன்பின் வழியாகவே நாங்கள் தேவனின் திட்டத்தை பார்க்கிறோம், ஆனால் மற்ற கிறிஸ்தவர்களோ (தாங்கள் உட்படத்தான்), தண்டிப்பது, நித்திய அக்கினியில் போட்டு சாத்தானிடம் தன் பிள்ளைகளை ஒப்பு கொடுக்கும் ஒரு கொடுரமான பிதாவாக தான் பார்க்கிறீர்கள்,//

தேவ அன்பின் வழியாகவே தேவனின் திட்டத்தை நீங்கள் மட்டுமல்ல, நானும்தான் பார்க்கிறேன். கூடவே நீதிபரராகிய தேவன், பாவத்திற்கான தண்டனையையும் நியமித்துள்ளதை நீங்கள் ஏன் பார்க்க மறுக்கிறீர்கள்?

பாவம் செய்த மனிதனை நித்திய அக்கினியில் போட்டு அழிப்பதை ஏன் கொடூரம் என்கிறீர்கள்? அக்கினி எப்படி தன்னில் போடப்படும் பொருளை எரித்து அழித்துவிடுமோ, அதேபோல்தான் தேவனின் இறுதி நியாயத்தீர்ப்பு வரை பாவத்திலேயே நீடித்திருப்பவனை தேவன் அழிப்பார். இதில் கொடூரம் என்ன இருக்கிறது?

நித்திய நித்தியமாக வாதித்துக்கொண்டே இருப்பதுதான் கொடூரம். அவ்விதமாக வேதாகமமும் சொல்லவில்லை, நானும் சொல்லவில்லை.

நித்திய ஜீவனை சுதந்தரிப்பதற்கு தேவன் கிருபையாய் தந்த வாய்ப்பைப் பயன்படுத்தாமல், நித்திய ஜீவனை இழந்து மரணமடையப் போகிறோமே என்கிற எண்ணத்தால் வரக்கூடிய வேதனைதான் மனந்திரும்பாத பாவிக்கு தேவன் நியமித்த தண்டனை.

வாதையில்லாத மரணம் ஒரு தண்டனையா என சிலர் கேட்கலாம். நிச்சயமாக தண்டனைதான்.

அதிகபட்சம் 100 வயதிற்குள் மரித்தேயாக வேண்டிய இந்த ஜீவனைப் போக்குகிறதான தூக்குத்தண்டனை என்பது, இவ்வுலகின் பார்வையில் அதிகபட்ச தண்டனையாக இருக்கும்போது, மரணமே இல்லாமல் நித்திய நித்தியமாக வாழும் வாய்ப்பை இழக்கச் செய்து, நிரந்தர மரணத்தைக் கொடுப்பது எத்தனை பெரிய தண்டனையாக இருக்கும்? 

bereans wrote:
//அனைவருக்கும் இரட்சிப்பு உண்டு என்று நாங்கள் தருகிற வசனங்களுக்கு தங்களிடமிருந்து பதில் இல்லையே!!//

நீங்கள் தந்த எல்லா வசனங்களுக்கும் பதில் தந்தாகிவிட்டது என்றே நான் நம்புகிறேன். நான் பதில்தராத ஏதேனும் வசனம் இருந்தால் சொல்லுங்கள்.

நீங்கள் சொல்கிற வசனங்களில் உங்கள் புரிந்துகொள்தலும் எனது புரிந்துகொள்தலும் ஒத்து வராததால்தான் நாம் விவாதித்துக்கொண்டே இருக்கிறோம்.

bereans wrote:
//நம் இருதயத்தில் அவர் தண்டிப்பவராகத் தெரிந்தால் அப்படியே தான் நமக்கு புரியவும் செய்யும்.//

தேவன் பாவியைத் தண்டிப்பார் என வேதாகமம் கூறும்போது, அவர் தண்டிப்பவராகத் தெரிவதில் என்ன தவறு?

bereans wrote:
//நாங்கள் சொல்லும் அனைத்துமே பொய் என்கிற கண்ணோட்டத்தில் பார்த்தால் எப்படி?!//

அப்படியொரு கண்ணோட்டத்தில் நான் ஒருபோதும் பார்க்கவில்லை. வசனங்களை புரிந்துகொள்வதில்தான் நம்மிடையே வேறுபாடு உள்ளதேயன்றி, நீங்கள் வேண்டுமென்றே பொய் சொல்வதாக நான் ஒருபோதும் கருதவில்லை.

உண்மையில், பல வசனங்களில் நீங்கள் தந்துள்ள விளக்கங்கள் எனக்கு மிகுந்த பயனுள்ளவைகளாக இருந்துள்ளன. ஒருசில விஷயங்களில் மட்டுமே நம் புரிந்துகொள்தல்கள் வேறுபடுகின்றன. ஆனால், நாம் வேறுபடும் அந்த சில விஷயங்கள் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்தவைகளாக இருப்பதால்தான் நான் வாதத்தை முடிக்க மனதில்லாமல் மீண்டும் மீண்டும் தொடர்ந்து கொண்டே இருக்கிறேன்.

இத்திரியில் மட்டுமின்றி பல திரிகளில் எனக்கு நீங்கள் பதில்தர வேண்டிய பல கேள்விகளும் வசனங்களும் உள்ளன. தயவுசெய்து அவற்றைப் படித்துப் பார்த்து தவறாமல் பதில் தாருங்கள்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தில் அத்தனை பேரும் நீதிமான்களாகத்தான் இருப்பார்கள் என சாதிக்கிற சகோ.பெரியன்ஸ்-ம் சகோ.ஆத்துமாவும், இத்திரியின் முதல் பதிவில் நான் தந்துள்ள 3 வசனங்களுக்கு இன்னமும் விளக்கம் தரவில்லை.

சகோ,பெரியன்ஸ் மற்றும் சகோ.ஆத்துமா அடிக்கடி குறிப்பிடுகிற வசனம்:

ஏசாயா 11:9 என் பரிசுத்த பர்வதமெங்கும் தீங்குசெய்வாருமில்லை; கேடுசெய்வாருமில்லை; சமுத்திரம் ஜலத்தினால் நிறைந்திருக்கிறதுபோல், பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.

இவ்வசனத்தின் அடிப்படையில்தான், கிறிஸ்துவின் 1000 வருட ராஜ்யத்தில் பாவிகள் இருக்கமாட்டார்கள் என்கின்றனர். ஆனால், இவ்வசனத்திற்கு சற்று முந்தின வசனமான 4-ம் வசனம் கூறுவதென்ன?

ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ள சம்பவம், இயேசு பூமியை நியாயத்தீர்ப்பு செய்கிற நாளில் (அதாவது 1000 வருட ராஜ்யத்தில்) நடைபெறுகிற ஒரு சம்பவமே. அந்நாளில் (அல்லது ராஜ்யத்தில்) நீதியைக் கற்றுக் கொடுக்கும் பணி ஒருபுறம் நடந்தாலும், கூடவே துன்மார்க்கரை சங்கரிக்கும் பணியும் நடக்கும். அவ்வாறு துன்மார்க்கர் அனைவரையும் சங்கரித்த பின்பு, மீதி இருக்கிற எல்லா ஜனங்களும் தேவனை அறிகிற அறிவை உடையவர்களாக இருப்பார்கள். அதைத்தான் 9-ம் வசனம் கூறுகிறது.

1000 வருட ராஜ்யத்தின் துவக்கத்திலேயே எல்லோரும் கர்த்தரை அறிகிற அறிவைப் பெற்றுவிடமாட்டார்கள். கிறிஸ்துவின் ராஜ்யமாகிய அத்தேசம், ஏசாயா 26:10 கூறுகிறபடி நீதியுள்ள தேசமாகத்தான் இருக்கும். அதாவது அத்தேசத்தின் ஆட்சி நீதியுள்ள ஆட்சியாக இருக்கும்.

இன்றைய மனிதர்களின் ஆட்சி எதுவுமே நீதியுள்ள ஆட்சி அல்ல என்பதை நாம் நன்கறிவோம். இந்த ஆட்சிகளில், தவறு செய்யாத பலர் தண்டிக்கப்படுவதுமுண்டு; தவறு செய்கிற பலர் தண்டிக்கப்படாமல் போவதுமுண்டு. ஆனால், நீதிபரராகிய கிறிஸ்துவின் ஆட்சியில், குற்றமற்றவர்கள் தண்டிக்கப்படவும் மாட்டார்கள், குற்றவாளிகள் தண்டிக்கப்படாமல் விடப்படவும் மாட்டார்கள். இவ்விதமாக நீதியுள்ள அந்த தேசத்திலும், அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாமல் போகிற சிலர் உண்டு என ஏசாயா 26:10 தெளிவாகக் கூறுகிறது.

எனவே, கிறிஸ்துவின் 1000 வருட ஆட்சியிலும் பாவிகள் உண்டு என்பதே உண்மை. அந்தப் பாவிகளை அல்லது துன்மார்க்கரை இயேசு தமது வாயின் சுவாசத்தால் சங்கரிப்பார் என ஏசாயா 11:4 கூறுகிறது. இவ்விதமாக சங்கரித்து, துன்மார்க்கர் யாவரும் அகற்றப்பட்டபின், பூமியானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும்.


-- Edited by anbu57 on Tuesday 9th of March 2010 03:56:22 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

ஏசாயா 65:20 அங்கே இனி அற்ப ஆயுசுள்ள பாலகனும், தன் நாட்கள் பூரணமாகாத கிழவனும் உண்டாயிரார்கள்; நூறு வயதுசென்று மரிக்கிறவனும் வாலிபனென்று எண்ணப்படுவான், நூறு வயதுள்ளவனாகிய பாவியோ சபிக்கப்படுவான்.

ஏசாயா 11:4 நீதியின்படி ஏழைகளை நியாயம் விசாரித்து, யதார்த்தத்தின்படி பூமியிலுள்ள சிறுமையானவர்களுக்குத் தீர்ப்புச்செய்து, பூமியைத் தமது வாக்கின் கோலால் அடித்து, தமது வாயின் சுவாசத்தால் துன்மார்க்கரைச் சங்கரிப்பார்.

ஏசாயா 26:9,10 உம்முடைய நியாயத்தீர்ப்புகள் பூமியிலே நடக்கும்போது பூச்சக்கரத்துக்குடிகள் நீதியைக் கற்றுக்கொள்வார்கள். துன்மார்க்கனுக்குத் தயைசெய்தாலும் நீதியைக் கற்றுக்கொள்ளான்; நீதியுள்ள தேசத்திலும் அவன் அநியாயஞ்செய்து கர்த்தருடைய மகத்துவத்தைக் கவனியாதேபோகிறா
ன்.

மேற்கண்ட வசனங்களுக்கு நீங்களே பதில் சொல்லுங்களேன். நூறு வயது சென்று மரிக்கிறவன் எப்படி வாலிபன் என்று அழைக்கப்படுவான். அவன் ஏன் மரிக்கவேண்டும்? நூறுவயதுள்ள பாவிக்குக் கிடைக்கும் சாபம் என்ன?

ஏழைகளும், சிறுமையானவர்களும் இருக்கப்போகும் ராஜ்ஜியம் எப்படி தேவராஜ்ஜியம் ஆகும்?  அங்கும் துன்மார்க்கர் இருந்து மற்றவர்களுக்குத் தீங்கு செய்வார்களா? கொலை, கொள்ளை, இன்னபிற காரியங்கள் நடக்குமா? அல்லது அவ்வாறு யோசிக்கும்போதே சங்கரித்துவிடுவாரா? அங்கும் தன் சக மனிதர்களால் துன்பப்படப்போகிறவர்கள் அதை முதலில் தேவனுடைய ஆட்சி என்று முதலில் ஒப்புக்கொள்வார்களா? இந்த வசனம் 1000வருடத்தில் என்று திட்டவட்டமாகக் கூற முடியுமா?

பரிசுத்த பர்வதமென்றாலே 1000வருட ஆட்சியைத்தான் குறிக்கிறது. 'தீங்கு செய்வாரும், கேடுசெய்வாரும்' இருந்தால் அது சாத்தானின் ராஜ்ஜியமாகும். (இப்போது இருப்பதுபோல்).  1000வருடத்தில் தொடங்கும் அடுத்த யுகம் படிப்படியாக உயிர்தெழும் அனைவரும் நீதியைக் கற்றுக்கொண்டு, கர்த்தரை அறிகிற அறிவை அடைந்து நித்தியத்துக்கும் வாழ்வார்கள். ஒரு ஆள் பாக்கியில்லாமல்.

துன்மார்க்கர் சங்கரிக்கப்பட்ட பின்புதான் ஓனாய் ஆட்டுக்குட்டியோடே தங்குமா?அதற்கு முன் அது ஆட்டுக்குட்டியைச் சாப்பிடும், (வளரவே வளராத) ஒரு சிறு பையன் அவைகளை நடத்துவான். பால் மறந்த பிள்ளை கட்டுவிரியன் புற்றிலே தன் கையை வைக்கும் (இந்தப்பிள்ளையும் வளரவேயில்லை) ஒரு சில வசனங்களைப் பிடித்துக்கொண்டு விவாதித்தால் இப்படித்தான் விவாதம் போகும்.

எல்லாத்தீமைக்கும் தேவனே காரணம் என்று இன்னொரு திரியில் விளக்கியுள்ளேன். அதற்குப் பதிலாகத்தான் தீமையே இல்லாத ஒரு தேசத்தை தேவன் மனிதனுக்கு வாக்குப்பண்ணியுள்ளார்.

" சேனைகளின் கர்த்தர் சொல்லுகிறது என்னவென்றால்.... இப்போதும் நீ போய், அமலேக்கை மடங்கடித்து, அவனுக்கு உண்டான எல்லாவற்றையும் சங்கரித்து, அவன்மேல் இரக்கம் வைக்காமல், புருஷரையும், ஸ்த்ரீகளையும், பிள்ளைகளையும், குழந்தைகளையும் .... கொன்றுபோடக்கடவாய் என்கிறார் என்று சொன்னான்." 1சாமு15:2,3.

இப்படியெல்லாம் அவர் யாருக்கும் அங்கு செய்யமாட்டார் என்று நான் நம்புகிறேன்.

உங்கள் கூற்றுப்படியே 1000 வருட கிறிஸ்துவின் ஆட்சியிலும் துன்மார்க்கர் (அங்கு மட்டும் "கொஞ்சம் பேர்"என்று எப்படி ஒத்துக்கொள்கிறீர்களோ தெரியவில்லை). இருக்கட்டும். அவர்கள் நீங்கள் ஆவலாக இருக்கும் "இரண்டாம் மரணத்துக்குள்ளும்" போகட்டும். இப்போது அதைப் பற்றி என்ன? அதை உயிர்த்தெழுந்து பார்க்கத்தானே போகிறோம்.

துன்மார்க்கனுக்கு தயை செய்தாலும் கற்றுக்கொள்ளான் (அந்த உன்னத ராஜ்ஜியத்திலும்) என்று வாதாடும் நீங்கள் இப்போது ஏன் துன்மார்க்கரை நீதிமானாக்க (சுய நீதியால்) எத்தனப்படுகிறீர்கள்? உயிர்த்தெழுதல்தான் எல்லோருக்கும் உண்டே! எல்லாரும் எழுந்து கற்றுக்கொள்கிறார்கள் அல்லது கற்காமல் போகிறார்கள். அது அவருடைய பிரச்சனையாயிற்றே.

அன்பு என்று பெயர் வைத்துக்கொண்டு துன்மார்க்கரை சங்கரித்தே ஆக வேண்டும் என்று சூரசம்ஹார ஊழியம் செய்கிறீர்கள்.
"பாவிகளை இரட்சிக்க கிறிஸ்து இயேசு உலகத்தில் வந்தார்"
பாவிகள் என்றால் துன்மார்க்கர் என்று அர்த்தம்,
இரட்சிக்க என்றால் காப்பாற்ற என்று அர்த்தம்.
எதிலிருந்து காப்பாற்ற, மரணம் என்னும் ஒரு கொடூர தண்டனையிலிருந்து காப்பாற்ற.

காப்பாற்றி என்ன செய்ய, மீண்டும் இன்னொரு முறை மரணத்திற்கு ஒப்புக்கொடுத்து காப்பாற்றிய செயலை அர்த்தமற்றதாக்க......

வேதம் இப்படிச் சொல்லவில்லை.

எப்படி எல்லாரையும் கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டாரோ அதே போல் எல்லாரையும் கீழ்ப்படிதலுக்குள் கொண்டுவருவார். எப்படி எல்லாரையும் மரணத்துக்கு ஒப்புக்கொடுக்கிறாரோ அதே போல நித்திய ஜீவனுக்கு ஒப்புக்கொடுப்பார். ஏனென்றால் ஒரே முறை மரிப்பதும் பின்பு நீதியைக் கற்றுக்கொண்டு நித்திய ஜீவனை பெற்றுக்கொள்வதும் மனிதனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. மரணம் ஒரே முறைதான். உயிர்த்தெழுதலுக்குப்பின் மரணம் இல்லை. யாருக்கும்.

அப்படி 1000 வருட கிறிஸ்துவின் ராஜ்ஜியத்தில் ஒரு பாவி இருந்தாலும் அதற்கும் முழுப் பொறுப்பு தேவனுடையது. தன்னுடைய பிரஜையைக் காப்பாற்றத்தெரியாத ராஜா, ராஜா என்ற பட்டத்துக்கே தகுதியற்றவராவார்.


-- Edited by soulsolution on Tuesday 9th of March 2010 09:23:22 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard