kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்?
நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்? [2 vote(s)]

தேவனுடைய கிருபை
50.0%
கற்பனைகளின்படி நடத்தல்
0.0%
தேவகிருபையும் கற்பனைகளின்படி நடப்பதும்
50.0%
இவற்றில் எதுவுமில்லை/பதில்தர விரும்பவில்லை
0.0%


Executive

Status: Offline
Posts: 425
Date:
நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்?


bereans wrote:
//இதை வாசித்து விட்டு ப‌ல‌ர் இன்று கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இப்ப‌டியாக‌ ப‌ழைய‌ ஏற்பாட்டில் உள்ள‌ க‌ட்ட‌ளைக‌ள் (க‌ற்ப‌னைகள்) அனைத்தையும் பின்ப‌ற்ற‌ வேண்டும் என்று பொய் போத‌னைக‌ளை த‌ந்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.//

கற்பனைகளின்படி நடவாவிட்டாலும், கிருபையினால் நித்தியஜீவனைச் சுதந்தரித்துவிடலாம் எனச் சொன்னால்கூட அதை ஒரு புரிந்துகொள்தலாக எடுத்துக்கொள்ளலாம். ஆனால், பழைய ஏற்பாட்டு கற்பனைகளைப் போதிப்பதைப் பொய்ப்போதகம் எனக் கூறினால் நீங்கள் ஏதோவொரு வஞ்சக ஆவியின் வசம் வசமாக சிக்கிக்கொண்டதாகத்தான் தோன்றுகிறது.

ஏனெனில், நித்தியஜீவனை சுதந்தரிக்க எந்தக் கற்பனைகளைக் கைக்கொள்ளவேண்டும் எனும் கேள்வி எழும்போது பழைய ஏற்பாட்டுக் கற்பனைகளைத்தான் இயேசு எடுத்துரைத்தார் (மத்தேயு 19:18,19; லூக்கா 10:25-18). உங்கள் கூற்றின்படி பார்த்தால் இயேசுவும் பொய்ப்போதகர்தான். எனவே உங்கள் கூற்றை மறுபரிசீலனை செய்யுங்கள்.

bereans wrote:
//இயேசு கிறிஸ்துவின் ப‌லிக்கு பிற‌கு ம‌ரித்த‌வ‌ர்க‌ளிலிருந்து மாத்திர‌மே அவ‌ரின் சரீரமான "ச‌பைக்கு" தேர்வு நடக்கிறது,//

உங்கள் மேலான ஆராய்ச்சி மூலம் நீங்கள் கண்டுபிடித்த இவ்விஷயம் பற்றி நான் எதுவும் சொல்வதற்கில்லை. ஆனால் சபைக்கு தேர்வு நடக்கிற காலத்தில் மற்றவர்கள் கற்பனைகளின்படி நடப்பது பற்றி நினைக்கவேண்டியதில்லை என வேதாகமம் கூறவில்லையே! யாரயிருந்தாலும் கற்பனைகளின்படி நடப்பதைத்தான் வேதாகமம் ஊக்குவிக்கிறது.

bereans wrote:
//ப‌வுல் சொன்ன‌து எந்த‌ வித‌த்திலும் த‌வ‌று இல்லை, அவ‌ர் சொன்ன‌து தேவ‌னின் கிருபையினால் அனைவ‌ரும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் ஆளுகையில் நித்திய‌ ஜீவ‌னை பெறுவார்க‌ள் என்ப‌தே.//

எபிரெயர் 8-10-ல், ஆடு மாடு பலியிடுதல் மற்றும் சடங்காச்சாரங்கள் தேவையில்லை என்றுதான் கூறப்பட்டுள்ளதேயன்றி, நீதி நியாயம் சம்பந்தமான கற்பனைகள் தேவையில்லை எனக் கூறப்படவில்லை. மேலும் புதிய உடன்படிக்கையில், தமது கற்பனைகளை இருதயத்தில் எழுதுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

கிருபையால் உயிர்த்தெழுகிற அனைவரும் நித்திய ஜீவனைப் பெறுவார்கள் என்பது உண்மையெனில், நித்திய ஜீவனைச் சுதந்தரிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என இயேசு ஏன் கூறவேண்டும்? பவுல் ஏன் இவ்வாறு கூறவேண்டும்?

ரோமர் 2:6-9 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை.

யூதருக்கும் அதே பலன்தான், கிரேக்கருக்கும் அதே பலன்தான். அதாவது உலக மக்கள் அனைவருக்கும் ஒரே பலன்தான். இதில் பட்சபாதமே கிடையாது. சபை, உலகம் என்ற வேறுபாடெல்லாம் கிடையாது.

இத்தனை தெளிவாக வேதாகமம் போதித்துள்ள போதிலும்: கிருபை மட்டும் போதும், நித்திய ஜீவனை சுதந்தரித்துவிடலம் என நீங்கள் சொல்வதைப் பார்க்கும்போது உங்கள்மீது பரிதாபம்தான் உண்டாகிறது.

bereans wrote:
//உயிர்த்தெழுத‌ல் ந‌ட‌க்க‌வேண்டும் என்றால் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட‌வேண்டும் என்றே அர்த்த‌ம் ஆகிற‌து.//

பாவங்கள் மன்னிக்கப்பட்டபின் ஏன் ஒருசிலரைப் பார்த்து “அக்கிரமச்செய்கைக்காரரே” என ஏன் கூறவேண்டும்? பாவங்களை மன்னித்து உயிர்த்தெழச்செய்துவிட்டு, பின்பு அவர்களைப் பார்த்து அக்கிரமச்செய்கைக்காரரே எனக்கூறுவதில் என்ன “Logic" இருக்கிறது. ஒருவனின் பாவங்களை தேவன் மன்னிக்கையில் அவற்றை தமது முதுகுக்குப் பின்னாலும் சமுத்திரத்தின் ஆழத்திலும் அல்லாவா போடுவார் என வேதாகமம் கூறுகிறது?

அன்பினால் அவர்களின் பாவத்தை மன்னித்து மறந்தவர், “என்னைவிட்டு அகன்றுபோங்கள்” என அன்பில்லாமல் கூறுவதாக அல்லவா அவ்வசனத்தில் காணப்படுகிறது? அவ்வசனபகுதியை நன்றாகப் படித்துப் பாருங்கள்.

மத்தேயு 7:21-23 பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

1000 வருட யுகத்தில், பூமியானது கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும் என்கிறீர்கள். அப்படியிருக்க, அநேகர் மேற்கூறியவிதமாகக் கேள்விகேட்க அவசியமென்ன? இவர்கள் எப்படி கர்த்தரை அறியாதிருந்தார்கள்?

எனது அனுமானம் என்னவெனில், இவர்களெல்லாம் 1000 வருட ராஜ்யத்தின் பிரஜைகளாகாமல் நேரடியாக வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வருவார்கள் என்பதே. பரலோகத்தில் அவர்களுக்குப் பங்கு கிடைக்காததால் அவர்கள் மேற்கூறியவிதமாக கேட்பார்கள் என்பது சரியல்ல. பரலோக ராஜ்யத்தில் பங்கு கிடைக்காததால்தான் அவர்கள் மேற்கூறிய கேள்விகளைக் கேட்பார்கள். ஏனெனில் வசனம் 21-ல் பரலோக ராஜ்யத்தைக் குறித்துதான் இயேசு கூறுகிறாரேயன்றி, பரலோகத்தைப் பற்றி கூறவில்லை.

அவர்கள் 1000 வருட ராஜ்யத்தின் பிரஜைகளாக இருந்திருந்தால், நிச்சயம் கர்த்தரை அறிகிற அறிவைப் பெற்றிருப்பார்கள்; பூமியில் இருந்த நாட்களில் தாங்கள் “அக்கிரமங்கள்” செய்ததை  உணரவும் செய்திருப்பார்கள். மேலும், உங்கள் கொள்கைப்படி “அக்கிரமங்கள்” செய்த அவர்களுக்குக்கூட நித்தியஜீவன் உண்டு என்பதை அறிந்து, அவர்கள் மிகுந்த சந்தோஷமாகத்தான் இருப்பார்கள். ஆனால் இயேசு சொல்வதோ முற்றிலும் மாறானதாக உள்ளது.

எனவே, அவர்கள் 1000 வருட ராஜ்யத்தின் பிரஜையாகாமால் நேரடியாக வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குச் செல்வார்கள் என்பதே என் கருத்து. வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்பின்போது அவர்கள் அக்கினிக் கடலில் தள்ளப்பட நியாயந்தீர்க்கப்படுவார்கள். கர்த்தரை அறிகிற அறிவைப் பெறாத அவர்கள், தங்களுக்கு அளிக்கப்பட்ட தீர்ப்பு நியாயமல்ல என்று சொல்லி, தாங்கள் அற்புதம் செய்ததையும் பிசாசுகளைத் துரத்தியதையும் தீர்க்கதரிசனம் உரைத்ததையும் சொல்லி வாதம் செய்வார்கள். அப்போது இயேசு அவர்களைப் பார்த்து “அக்கிரமச்செய்கைக்காரரே” என்று சொல்வார். இதுதான் நடக்கப்போகிற காரியம்.

எனவே உயிர்த்தெழுதல் நடக்கும்போது எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டிருக்க வேண்டும் என்ற அவசியமில்லை சகோ.பெரியன்ஸ் அவர்களே!

இக்கருத்துக்கு ஆதரவான மற்றொரு வேதபகுதிதான் மத்தேயு 25:36-41 வசனங்கள்.

அப்பகுதியில் கூறப்பட்டுள்ள நன்மை செய்யாதவர்களாகிய வெள்ளாட்டுப் பிரிவினர்களும் 1000 வருட ராஜ்யத்தின் பிரஜைகளாகியிருக்க மாட்டார்கள் என்பதே எனது அனுமானம்.

bereans wrote:
//நீதிமான் ஒருவ‌னாகிலும் இல்லை என்று வ‌ச‌ன‌ம் சொல்லுவ‌தால், ப‌ர‌லோக‌ம் செல்ல‌ எத்தனை பேர் த‌ங்க‌ளின் கைக‌ளை கால்க‌ளைம் க‌ண்க‌ளை, பிற‌ உறுப்புக‌ளை வெட்டி போட்டிருக்கிறார்க‌ள் என்று சொல்ல‌ முடியுமா?//

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை என்று வேதாகமம் சொன்னதை சொல்லிச் சொல்லி நாம் அநீதி செய்வதை நியாயப்படுத்துகிறீர்கள். வேதவசனத்தை மிகவும் கவனமாகக் கையாளுங்கள் சகோதரரே! நீதிமான் ஒருவனாகிலும் இல்லை எனும் வசனம் எந்த “context"-ல் கூறப்பட்டது என்பதை ஆராய்ந்தறியுங்கள்.

நீதிமான் ஒருவனாகிலும் இல்லை எனும் வசனத்தின் கருத்தை அப்படியே எடுத்துக் கொண்டால், பல வசனங்கள் நீதிமான்களைக் குறித்துக் கூறுவதும், தேவன் பல மனிதரை நீதிமான் என சாட்சி கூறுவதும் பொய்யாகிவிடுமே. இருபக்க வசனங்களையும் நிதானித்து முடிவெடுங்கள். மாறாக, ஒருபக்க வசனங்களையே மீண்டும் மீண்டும் சொல்லாதீர்கள்.

இடறலான உறுப்புகளை வெட்டச்சொன்னது இயேசு. அதைக் குறித்து என்னால் விளக்கம் தரமுடியும். ஆனால் உங்கள் கேள்வி, விளக்கம் பெறுகிற நோக்கமாயிராமல் வாதம் செய்கிற நோக்கமாயுள்ளதால் உங்கள் கேள்வியை இயேசுவிடமே கேளுங்கள்.

bereans wrote:
//இயேசு கிறிஸ்துவின் இர‌த்த‌ம் சிந்துத‌லும் அதினால் உண்டாகும் ம‌க‌த்துவ‌மான‌ காரிய‌ங்க‌ளை த‌விர‌, "பொய் சொல்லாதே, திருடாதே, விப‌ச்சார‌ம் செய்யாதே, இச்சியாதே" இப்ப‌டியான‌ போத‌னைக‌ள் இன்று எந்த‌ ம‌த‌த்தில் இல்லை என்று சொல்லுங்க‌ள். இத்த‌கைய‌ க‌ற்ப‌னைக‌ள் எல்லா ம‌த‌த்தின‌ரிட‌த்திலும் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டுகிற‌தே!!//

உங்கள் இக்கூற்றிற்கும் நம் வாதத்திற்கும் சம்பந்தம் எதுவுமில்லை.

bereans wrote:
//ந‌ற்செய்தி என்றால் அனைவ‌ருக்கும் நித்திய‌ ஜீவ‌ன் தான்//

அப்படியென்றால் நித்தியஜீவனைச் சுதந்தரிக்கவேண்டுமெனில் அதைச் செய், இதைச் செய் என இயேசுவும் அப்போஸ்தலும் கூறியது சும்மா நேரப்போக்குக்காக என்கிறீர்களா? அல்லது உங்களைப்போல் விவரம் தெரியாமல் சொல்லிவிட்டார்கள் என்கிறீர்களா? அல்லது அவர்கள் சொன்னது பொய் என்கிறீர்களா?

bereans wrote:
//ந‌ர‌க‌ம் இருக்கிற‌து என்று நீங்க‌ள் மிர‌ட்டினாலும், பாவ‌ம் செய்வ‌து குறைய‌வில்லை. கிறிஸ்துவின் போத‌னைக‌ளை அப்ப‌டியே சொல்லுவோமே.//

நரகத்தைப் பற்றி சொல்லி நான் யாரையும் மிரட்டவில்லை. நற்கிரியைகள் செய்யாவிடில் நித்திய ஜீவன் கிடையாது என எச்சரிக்க மட்டுமே செய்கிறேன். கிறிஸ்துவின்/அப்போஸ்தலரின் போதனையும் இதுதான். ஆதாரம் கேட்டால் ஏராளமான வசனங்களை என்னால் தரமுடியும்.

soulsolution wrote:
//நான் "நான் பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று கதறுகிறேன்.//

இயேசு சொன்ன அருமையான உதாரணங்களை எப்படியெல்லாம் தவறாகப் புரிந்துகொள்கிறோம் சகோ.ஆத்துமா அவர்களே!

ஒவ்வொரு நாளும் பாவம் செய்துகொண்டு "நான் பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று கதறிக்கொண்டிருந்தால் போதும், நித்திய ஜீவனைப் பெற்றுவிடலாம் என்ற அர்த்தத்தில் இயேசு அந்த உதாரணத்தைச் சொல்லவில்லை.

அந்த அர்த்தத்தில் இயேசு சொல்லியிருந்தால், பின்வரும் வசனங்களை வேதாகமத்திலிருந்து எடுத்துவிட வேண்டியதுதான்.

நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

நீதிமொழிகள் 29:1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்.

இவ்வசனங்கள் வேதாகமத்தில் உண்டு என நீங்கள் ஒத்துக்கொண்டால, இவ்வசனங்களுக்கு முதலில் விளக்கம் சொல்லிவிட்டு, பின்னர் ஆயக்காரனின் ஜெபம் பற்றிய விளக்கத்தைச் சொல்லுங்கள்.

bereans wrote:
//"எவன்" ஒருவனாவது  வேதவாக்கியத்தின்படி விசுவாசமாக இருக்கிறான் என்று காண்பியுங்கள்!!//

யார் விசுவாசமாக இருக்கிறார், யார் விசுவாசமாக இல்லை என்பதை ஆராய்வது என் வேலையல்ல. விசுவாசிக்கும்படியும் கற்பனைகளின்படி நடக்கும்படியும் போதிப்பது மட்டுமே என் வேலை. ஆனாலும், உங்களுக்காக ஒரு தகவல். மனுஷகுமாரன் வரும்போது விசுவாசத்தைக் காண்பாரோ என இயேசு ஒரு கேள்வியைக் கேட்டுள்ளார். இக்கேள்வியின்படி பார்த்தால் கடைசிநாட்களில் மெய்யான விசுவாசிகளைக் காண்பது அரிதுதான் என நாம் அறியலாம். எனவே நீங்களும் நானும் மெய்யான விசுவாசியாக நடக்கப் பிரயாசப்படுவதுதான் முக்கியமேயொழிய யார் விசுவாசமாக இருக்கிறார் எனக் கேள்வி கேட்பது அவசியமில்லை.

bereans wrote:
//த‌ங்க‌ளின் ப‌தில் ப‌குதி முழுவ‌தும் த‌ங்க‌ளின் சுய‌ கிரியைக‌ளை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌வே இருக்கிற‌தே!!//

ஆம், நிச்சயமாக. ஏனெனில் நம் கிரியைகளை ஆராய்ந்து சரிபடுத்துவதுதான் நம் வேலை. உங்களை உய்த்து ஆராய்ந்து சோதித்தறியுங்கள் என செப்பனியா 2:2 கூறுகிறது. பிதாவின் சித்தப்படி செய்கிறவன்தான் பரலோகராஜ்யம் பிரவேசிப்பான் என வசனம் சொல்கிறதேயன்றி, இயேசுவை நோக்கி கர்த்தாவே கர்த்தாவே எனச் சொல்கிறவனோ, அல்லது தேவனின் கிருபையை மீண்டும் மீண்டும் சொல்கிறவனோ பரலோக ராஜ்யம் பிரவேசிப்பான் என வேதாகமம் கூறவில்லை.

பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் எனக் கூறிய ஆயக்காரன் (கடந்தகால பாவங்கள் மன்னிக்கப்பட்டு) நீதிமானாக்கப்பட்டது மெய்தான். ஆனால், அவனுங்கூட பிதாவின் சித்தப்படி செய்தால்தான் பரலோகராஜ்யம் பிரவேசிப்பான் என்பதே உண்மை.

நம் மேல் தேவன் கிருபையாயிருப்பதென்பது, தேவன் நம்மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துகிறது. அதை நாம் சொன்னாலும் சொல்லாவிட்டாலும் நிச்சயம் அக்கிருபை எல்லோருக்கும் உண்டு. ஆனால் நாம் தேவன்மீது வைத்துள்ள அன்பை வெளிப்படுத்துவது நம் கிரியைகளே. எனவேதான் அதைக் குறித்து மீண்டும் மீண்டும் சொல்கிறேன்.

என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள் என்றுதான் இயேசு சொல்லியுள்ளாரேயொழிய, தேவனின் கிருபையை சொல்லிக்கொண்டேயிருங்கள் என இயேசு சொல்லவில்லை (யோவான் 14:15).

soulsolution wrote:
//வேதாகமம் படிக்கத்தெரியாதவர்களுக்கு மனசாட்சி.

படிப்பவர்களுக்கு கற்பனைகள்.

இது இரண்டில் எது எளிது என்று தீர்மானியுங்கள். அறியாதவர்களை தேவன் மனசாட்சியின்படியே நியாயந்தீர்க்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே.//


எது எளிது என்பதைத் தீர்மானித்து செயல்படும்படி நான் படித்த வேதாகமம் எனக்குக் கூறவில்லை. தேவனின் கட்டளைகளைச் சொல்லி போதிக்கும்படிதான் எனக்கு வேதாகமம் கூறுகிறது. அதைத்தான் நான் செய்கிறேன்.

உங்கள் இருவரின் பல கூற்றுகளுக்கு தனித்தனியே ஓரளவு பதில் தந்துவிட்டேன். நீங்கள்தான் எனது பல கூற்றுகளுக்குப் பதில் தரவில்லை.


-- Edited by anbu57 on Thursday 11th of March 2010 07:58:59 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//எரேமியா 29:11. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

இந்த‌ குறிப்பிட்ட‌ வ‌ச‌ன‌த்தை ம‌ற்ற‌ ஆங்கிள‌ மொழிப்பெய‌ர்ப்புக‌ளில் வாசிக்க‌லாம்:

New International Version (NIV)

11 For I know the plans I have for you," declares the LORD, "plans to prosper you and not to harm you, plans to give you hope and a future.
.....
இப்ப‌டி யெகோவா தேவ‌ன் ம‌னித‌ர்க‌ளுக்கு வைத்திருக்கும் திட்ட‌ம் அவ‌ர்க‌ளின் அழிவிற்க‌ல்ல என்று இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் சொல்லுகிற‌து.//


உங்களது இப்பதிவைப் படிக்காமலேயே எனது முந்தின பதிவைப் பதித்துவிட்டேன்.

அன்பான சகோதரரே! வசனத்தின் சரியான மொழிபெயர்ப்பைத் தர அதிக சிரத்தை எடுத்துள்ளீர்கள், நல்லது. ஆனால், அவ்வசனத்தை ஒட்டியுள்ள பகுதியை முழுமையாகப் படித்துப்பாருங்கள்.

இஸ்ரவேலர் பாபிலோனுக்கு சிறைப்பட்டுப்போய் துயரத்தில் இருக்கையில், எரேமியா மூலம் சில ஆறுதலின் வார்த்தைகளை தேவன் கூறினார். அவை வசனம் 4-14 வரை காணப்படுகின்றன.

“பொய்யான தீர்க்கதரிசிகளின் சொல்லைக் கேட்டு, பாபிலோனிலிருந்து நான் உங்களை உடனடியாக விடுவித்துவிடுவேன் என நம்பிக்கொண்டிராமல், வீடுகளைக் கட்டி குடியிருந்து எப்போதும்போல் வாழுங்கள்; குறிப்பிட்ட காலமான 70 வருஷம் நிறைவேறினபின்பு, பாபிலோனிலிருந்து உங்களை விடுவித்து, இஸ்ரவேல் தேசத்திற்குக் கொண்டுவருவேன்” என எரேமியா தீர்க்கதரிசி மூலம் தேவன் வாக்களித்தார். அப்போதுதான் நீங்கள் குறிப்பிட்ட வசனத்தைத் தேவன் கூறினார்.

அதாவது இஸ்ரவேலரை மீண்டும் இஸ்ரவேல் தேசத்தில் குடியமர்த்தவிருக்கும் தமது திட்டத்தைக் கூறினார். இதற்கும் நம் விவாதத்திற்கும் நேரடியான சம்பந்தம் இல்லாவிடினும், தேவனின் திட்டங்கள் எதுவும் மனிதனின் அழிவிற்கானது அல்ல என்பதைச் சொல்வதற்காக இதைக் குறிப்பிட்டுள்ளீர்கள்.

தேவனின் திட்டங்கள் எதுவும் மனிதனின் அழிவிற்கானது அல்ல என்பது மெய்தான். ஆனால் அத்திட்டனுள் வருபவர்களுக்குத்தான் அத்திட்டத்தின் பலன் கிடைக்கும். நீங்கள் குறிப்பிட்டுள்ள வசனத்தையடுத்துள்ள வசனத்தில் தேவன் கூறுவதை சற்று கவனியுங்கள்.

எரேமியா 29:13 உங்கள் முழு இருதயத்தோடும் என்னைத் தேடினீர்களானால், என்னைத் தேடுகையில் கண்டுபிடிப்பீர்கள்.

ஆம், தேவனைத் தேடினால்தான் அவரைக் கண்டுபிடிக்க முடியும். தேடாவிட்டால் காணமுடியாது. தேவனைத் தேடாமல், “தேவன் கிருபையுள்ளவர், அவர் எல்லாவற்றையும் பார்த்துக்கொள்வார்” என்றிருந்தால், அவரைக் காணவும் முடியாது, அவர் நமக்கு வைத்துள்ள ஆசீர்வாதங்களைப் பெறவும் முடியாது. பின்வரும் வசனம் கூறுவதையும் கவனியுங்கள்.

ஏசாயா 55:6,7 கர்த்தரைக் கண்டடையத்தக்க சமயத்தில் அவரைத் தேடுங்கள்; அவர் சமீபமாயிருக்கையில் அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். துன்மார்க்கன் தன் வழியையும், அக்கிரமக்காரன் தன் நினைவுகளையும் விட்டு, கர்த்தரிடத்தில் திரும்பக்கடவன்; அவர் அவன்மேல் மனதுருகுவார்; நம்முடைய தேவனிடத்திற்கே திரும்பக்கடவன்; அவர் மன்னிக்கிறதற்குத் தயை பெருத்திருக்கிறார்.

நம் துன்மார்க்க வழியைவிட்டுத் திரும்பி, தேவன் காட்டுகிற நல்வழியில் நடப்பதுதான் மெய்யாகவே தேவனைக் காணுதலாகும். துன்மார்க்கத்தைவிட்டுத் திரும்பி தேவனிடம் வருபவர்களை மன்னிக்க அவர் தயை பெருத்திருக்கிறார். ஆனால், துன்மார்க்கத்தைவிட்டு வராதவர்களுக்கு ... ?

பவுல் கூறுவதை சற்று கவனியுங்கள்.

ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்.

ஆம், தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குத்தான்
(தேவனின் திட்டங்கள் உட்பட) சகலமும் நன்மைக்கேதுவானது.

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

இத்திரியில் என்னோடுகூட பங்குகொண்ட சகோ.பெரியன்ஸ் மற்றும் சகோ.ஆத்துமா அவர்களுக்கு என் நன்றியைத் தெரிவிக்கிறேன். இந்நாட்களில் பல கிறிஸ்தவர்களும் ஊழியர்களும் நித்தியஜீவனைக் குறித்து சிந்தியாமலும் பேசாமலும் இருக்கையில், பெரியன்ஸ் மற்றும் ஆத்துமா இருவரும் தங்கள் கருத்தை உற்சாகத்தோடு பகிர்ந்து கொண்டதை மனதாரப் பாராட்டுகிறேன். அவர்களின் பல கருத்துக்கள் எனது கருத்தோடு இசைவாக இல்லாதிருந்தபோதிலும், பல வேதவசனங்களையும் கருத்துக்களையும் நான் பதிவதற்கு அவை தூண்டுகோலாக இருந்தன. இதற்காக தேவனை நான் துதிக்கிறேன்.

இன்றில்லாவிட்டாலும் என்றேனும் ஒரு நாள் இத்திரியில் பதியப்பட்டுள்ள வசனங்களும் கருத்துக்களும் ஒருசிலருக்காவது பயனுள்ளதாக இருக்கும் என நிச்சயமாக நான் நம்புகிறேன்.

வேதாகமத்தில் ஒரு வசனம் உண்டு. மனந்திரும்புகிற ஒரேயொரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்பதே அவ்வசனம் (லூக்கா 15:7).

இடுக்கமான வழியைக் கண்டுபிடிப்பவர்களே சிலராக இருப்பதாலும், கண்டுபிடித்த வழியில் நடக்கிறவர்கள் மிகச்சிலராக இருப்பதாலும்தான், ஒரு பாவி மனந்திரும்பினால்கூட பரலோகத்தில் அது மிகுந்த சந்தோஷத்தைத் தருகிறது.

எனவே நித்திய ஜீவனைக் குறித்த விஷயங்களில் ஆர்வமுள்ளவர்கள் மிகச் சிலராகத்தான் இருப்பார்கள். அந்த மிகச்சிலருக்கு இத்திரியில் பதியப்பட்டுள்ள கருத்துக்கள் நிச்சயம் பயனுள்ளதாக இருக்கும்.

இத்திரியின் கடைசி பதிவாக நினைத்து இப்பதிவை நான் பதிக்கிறேன். ஆயினும் தேவனுக்குச் சித்தமானால் மீண்டும் பதிவேன்.

தொடர்ந்து நான் பதியப்போவது வேதவசனங்கள் மட்டுமே. இவ்வசனங்கள் மூலம் தேவன் கிரியை செய்வார் என விசுவாசிக்கிறேன்.

மத்தேயு 5:3,10 ஆவியில் எளிமையுள்ளவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது.

மத்தேயு 18:8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

மத்தேயு 19:17 அதற்கு இயேசு: ... நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்.

மத்தேயு 25:46 அந்தப்படி, (நற்கிரியைகள் செய்யாத அநீதிமான்களாகிய) இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், (நற்கிரியைகள் செய்த) நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள்.

லூக்கா 10:25-28 அப்பொழுது நியாயசாஸ்திரி ஒருவன் எழுந்திருந்து, அவரைச் சோதிக்கும்படி: போதகரே, நித்திய ஜீவனைச் சுதந்தரித்துக்கொள்ளும்படிக்கு நான் என்ன செய்யவேண்டும் என்று கேட்டான். அதற்கு அவர்: நியாயப்பிரமாணத்தில் என்ன எழுதியிருக்கிறது? நீ வாசித்திருக்கிறது என்ன என்றார்.
அவன் பிரதியுத்தரமாக: உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும் உன் முழு ஆத்துமாவோடும் உன் முழுப் பலத்தோடும் உன் முழுச்சிந்தையோடும் அன்புகூர்ந்து, உன்னிடத்தில் அன்புகூருவதுபோலப் பிறனிடத்திலும் அன்புகூருவாயாக என்று எழுதியிருக்கிறது என்றான்.
அவர் அவனை நோக்கி: நிதானமாய் உத்தரவு சொன்னாய்; அப்படியே செய், அப்பொழுது பிழைப்பாய் என்றார்.

யோவான் 5:24  என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு;

மத்தேயு 7:21  பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.

மாற்கு 10:15 எவனாகிலும் சிறு பிள்ளையைப்போல் தேவனுடைய ராஜ்யத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், அவன் அதில் பிரவேசிப்பதில்லையென்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன்.

யோவான் 6:40 குமாரனைக் கண்டு, அவரிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் நித்தியஜீவனை அடைவதும், நான் அவனைக் கடைசிநாளில் எழுப்புவதும், என்னை அனுப்பினவருடைய சித்தமாயிருக்கிறது.

யோவான் 6:63 ஆவியே உயிர்ப்பிக்கிறது, மாம்சமானது ஒன்றுக்கும் உதவாது; நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது.

லூக்கா 11:28 தேவனுடைய வார்த்தையைக் கேட்டு, அதைக் காத்துக்கொள்ளுகிறவர்களே அதிக பாக்கியவான்கள்.

யோவான் 12:25 தன் ஜீவனைச் சிநேகிக்கிறவன் அதை இழந்துபோவான்; இந்த உலகத்தில் தன் ஜீவனை வெறுக்கிறவனோ அதை நித்திய ஜீவகாலமாய்க் காத்துக்கொள்ளுவான்.

யோவான் 12:48-50  என்னைத் தள்ளி என் வார்த்தைகளை ஏற்றுக்கொள்ளாதவனை நியாயந்தீர்க்கிறதொன்றிருக்கிறது; நான் சொன்ன வசனமே அவனைக் கடைசிநாளில் நியாயந்தீர்க்கும்.  நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார். அவருடைய கட்டளை நித்திய ஜீவனாயிருக்கிறதென்று அறிவேன்; ஆகையால் நான் பேசுகிறவைகளைப் பிதா எனக்குச் சொன்னபடியே பேசுகிறேன்.

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

கலாத்தியர் 5:19-23 மாம்சத்தின் கிரியைகள் வெளியரங்கமாயிருக்கின்றன; அவையாவன: விபசாரம், வேசித்தனம், அசுத்தம், காமவிகாரம், விக்கிரகாராதனை, பில்லிசூனியம், பகைகள், விரோதங்கள், வைராக்கியங்கள், கோபங்கள், சண்டைகள், பிரிவினைகள், மார்க்கபேதங்கள், பொறாமைகள், கொலைகள், வெறிகள், களியாட்டுகள் முதலானவைகளே; இப்படிப்பட்டவைகளைச் செய்கிறவர்கள் தேவனுடைய ராஜ்யத்தைச் சுதந்தரிப்பதில்லையென்று முன்னே நான் சொன்னதுபோல இப்பொழுதும் உங்களுக்குச் சொல்லுகிறேன்.
ஆவியின் கனியோ, அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம்; இப்படிப்பட்டவைகளுக்கு விரோதமான பிரமாணம் ஒன்றுமில்லை.

1 கொரி. 7:19 விருத்தசேதனமும் ஒன்றுமில்லை, விருத்தசேதனமில்லாமையும் ஒன்றுமில்லை; தேவனுடைய கற்பனைகளைக் கைக்கொள்ளுகிறதே காரியம்.

2 தீமோ. 3:16,17 வேதவாக்கியங்களெல்லாம் தேவஆவியினால் அருளப்பட்டிருக்கிறது; தேவனுடைய மனுஷன் தேறினவனாகவும், எந்த நற்கிரியையுஞ் செய்யத் தகுதியுள்ளவனாகவும் இருக்கும்படியாக, அவைகள் உபதேசத்துக்கும், கடிந்துகொள்ளுதலுக்கும், சீர்திருத்தலுக்கும், நீதியைப் படிப்பிக்குதலுக்கும் பிரயோஜனமுள்ளவைகளாயிருக்கிறது.

மத்தேயு 7:24-27 ஆகையால், நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதியும், அது விழவில்லை; ஏனென்றால், அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது.
நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக்கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணலின்மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்து, அந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது.

யோவான் 8:47 தேவனால் உண்டானவன் தேவனுடைய வசனங்களுக்குச் செவிகொடுக்கிறான்; நீங்கள் தேவனால் உண்டாயிராதபடியினால் செவிகொடாமலிருக்கிறீர்கள்.

மத்தேயு 21:43 ஆகையால், தேவனுடைய ராஜ்யம் உங்களிடத்திலிருந்து நீக்கப்பட்டு, அதற்கேற்ற கனிகளைத் தருகிற ஜனங்களுக்குக் கொடுக்கப்படும்.

அப்போஸ்தலர் 13:46 அப்பொழுது பவுலும் பர்னபாவும் தைரியங்கொண்டு அவர்களை நோக்கி: முதலாவது உங்களுக்கே தேவவசனத்தைச் சொல்லவேண்டியதாயிருந்தது; நீங்களோ அதைத் தள்ளி, உங்களை நித்தியஜீவனுக்கு அபாத்திரராகத் தீர்த்துக் கொள்ளுகிறபடியினால், இதோ, நாங்கள் புறஜாதியாரிடத்தில் போகிறோம் ... என்றார்கள்.

தீத்து 3:4-10 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.
இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:


அதிக சிரத்தை எடுத்து  மற்றவர்களையும் உங்களைப்போல ஒரு பரிசுத்தவானாக, உத்தம நீதிமானாக மாற்றும் முயற்சியில் அநேக வசனங்களை பதித்துள்ளீர்கள். இவையெல்லாமே நாம் ஏற்கனவே விவாதித்ததுதான். சபைக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களை உலகத்துக்குப் போதித்து உலகத்தை இப்போதே மாற்றும் உங்கள் தோல்வி முயற்சி தொடரட்டும். மொத்தமாக எத்தனை பேரை நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்கியுள்ளீர்கள் என்று மட்டும் பெயர், செல்போன் எண் சகிதம் அறிவித்தீர்கள் என்றால் ஒரு நீதிமானை சந்திக்க உதவியாயிருக்கும்.

/
/வேதாகமத்தில் ஒரு வசனம் உண்டு. மனந்திரும்புகிற ஒரேயொரு பாவியினிமித்தம் பரலோகத்தில் மிகுந்த சந்தோஷம் உண்டாகும் என்பதே அவ்வசனம் (லூக்கா 15:7).//

அன்பு அவர்களே, மேற்கண்ட வசனத்தைக்கூட சரிவர புரிந்து கொள்ளவில்லை நீங்கள். மனந்திரும்புகிற ஒரே ஒரு பாவி இந்த மனுக்குலம் மட்டுமே. இது யாரோ ஒரு பாவியல்ல மனந்திரும்ப அவசியமுள்ள 'ஒரே பாவி' மனிதன் மட்டுமே. ஏனென்றால் மனிதனுக்கு மட்டுமே பாவம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  மற்ற சிருஷ்டிகள் பாவம் செய்ய முடியாது.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் மனந்திரும்பாத கோடா கோடி பாவிகளின் நிமித்தம் பரலோகத்தில் மஹா துக்கம் உண்டாகுமோ?

மனந்திரும்புகிற ஒரே ஒரு பாவி என்ற பதத்தை உங்கள் அர்த்தப்படி எடுத்துக்கொண்டால் முழு உலகத்திலும் ஒரே ஒரு பாவிமட்டும்தான் மனந்திரும்புவான் என்று அர்த்தமாகும். அது நான் தான் என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியப்படமாட்டோம்.

தீத்து 3:4-10 நம்முடைய இரட்சகராகிய தேவனுடைய தயையும் மனுஷர்மேலுள்ள அன்பும் பிரசன்னமானபோது, நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக்கத்தின்படியே, மறுஜென்ம முழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.
தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரராகத்தக்கதாக, அவர் நமது இரட்சகராகிய இயேசுகிறிஸ்து மூலமாய், அந்தப் பரிசுத்தஆவியை நம்மேல் சம்பூரணமாய்ப் பொழிந்தருளினார்.

இந்த வார்த்தை உண்மையுள்ளது; தேவனிடத்தில் விசுவாசமானவர்கள் நற்கிரியைகளைச் செய்ய ஜாக்கிரதையாயிருக்கும்படி நீ இவைகளைக்குறித்துத் திட்டமாய்ப் போதிக்கவேண்டுமென்று விரும்புகிறேன்; இவைகளே நன்மையும் மனுஷருக்குப் பிரயோஜனமுமானவைகள்.
புத்தியீனமான தர்க்கங்களையும், வம்சவரலாறுகளையும், சண்டைகளையும், நியாயப்பிரமாணத்தைக்குறித்து உண்டாகிற வாக்குவாதங்களையும் விட்டு விலகு; அவைகள் அப்பிரயோஜனமும் வீணுமாயிருக்கும்.
வேதப்புரட்டனாயிருக்கிற ஒருவனுக்கு நீ இரண்டொருதரம் புத்தி சொன்னபின்பு அவனைவிட்டு விலகு. அப்படிப்பட்டவன் நிலைதவறி, தன்னிலேதானே ஆக்கினைத்தீர்ப்புடையவனாய்ப் பாவஞ்செய்கிறவனென்று அறிந்திருக்கிறாயே.



-- Edited by soulsolution on Thursday 11th of March 2010 09:04:10 PM

-- Edited by soulsolution on Thursday 11th of March 2010 09:10:02 PM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்கள் ஒரு யூதனோ என்கிற அளவிற்கு பழைய ஏற்பாட்டு கட்டளைகளுக்கு பரிந்து பேசியிருக்கிறீர்கள். அப்படி என்றால் விருத்தசேதனத்திலிருந்து கட்டளை கடைப்பிடிப்பை வைத்துக்கொள்ளலாமே!! பழைய ஏற்பாட்டு கட்டளைகள் யாருக்கு கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற விஷயத்தை முதலில் புரிந்துக்கொள்ளுங்கள். ஏன் அதில் சொல்லப்பட்டது போல் கண்ணுக்கு கண் போன்றவற்றையும் பின்பற்றிவீர்களோ!!

"நீங்கள் ஏதோவொரு வஞ்சக ஆவியின் வசம் வசமாக சிக்கிக்கொண்டதாகத்தான் தோன்றுகிறது."  பொய்யையும் பொய்யான போதனைகளை போதிப்பவர்களும் (பழைய ஏற்பாடு கட்டளைகளில் சிலது, அதாவது நம்மால் பின் பற்ற முடிந்தால் அது தேவை என்று வேற் பிரித்து போதிப்பவர்கள்) வேண்டும் என்றால் வஞ்சக ஆவியின் வசம் இருக்கலாம். பழைய ஏற்பாட்டின் சில கட்டளைகளை பின் பற்ற சொல்லி மறைமுகமாக தங்களை யூதன் என்று பிரகடபப்படுத்துவோருக்கு மத்தியில் நிச்சயமாக நான் எந்த வஞ்சக ஆவியின் கட்டுப்பாட்டில் இல்லை என்று சொல்லுவேன்.

"மனுஷக்குமாரன் வரும் போது விசுவாசத்தை காண்பாரோ" என்கிற வசனம் ஒரு தீர்க்கதரிசன வசனம்!! இது நிறைவேறியே ஆகும். ஏனென்றால் இது மனிதனின் வார்த்தைகள் அல்ல, கிறிஸ்துவின் வார்த்தைகள். இதை மாற்ற இன்று கோடி கண்க்கில் "ஊழியர்கள்" என்று கிளம்பியிருந்தாலும் மாற்ற முடியாது. மாற வேண்டியவர்களுக்கு அல்லது முன்குறிக்கப்பட்டவர்களுக்கு இப்படி "ஊழியர்கள்" தேவை இல்லை. (உம் பவுல்.) விசுவாச‌ம் இல்லாத ஒரு உல‌க‌த்தை தான் இயேசு கிறிஸ்து சொல்லியிருக்கிறாரே, அப்ப‌டி என்றால் உங்க‌ளை போல் "ஊழிய‌ர்க‌ள்" அதை மாற்ற‌ விரும்புகிறீர்க‌ளா!! விசுவாச‌ம் தான் இருக்காது ஆனால் கோடா கோடி பெய‌ர் கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் ஊழிய‌ர்க‌ளும் விசுவாச‌ம் என்றால் என்ன‌வென்று தெரியாம‌ல் இருப்பார்க‌ள். அதை தான் வேத‌ம் சொல்லுகிற‌து, "அந்நாளில் ஏழு ஸ்திரீக‌ள் ஒரே புருஷ‌னைப் பிடித்து நாங்க‌ள் எங்க‌ள் சொந்த‌ ஆகார‌த்தை புசித்து, எங்க‌ள் சொந்த‌ வ‌ஸ்திர‌த்தை உடுப்போம், எங்க‌ள் நிந்தை நீங்கும்ப‌டிக்கு உன் பேர் மாத்திர‌ம் எங்க‌ளுக்கு விள‌ங்க‌ட்டும்" ஏசா. 4:1

இந்த‌ 7ஸ்திரீக‌ளின் கால‌ம் தொட‌ங்கி விட்ட‌து. ஆக‌வே தான் இயேசு கிறிஸ்து என்கிற‌ ஒரே புருஷ‌ரை வைத்துக்கொண்டு ச‌பைக‌ள் (ஸ்திரீக‌ள்) இந்த‌ அள‌விற்கு த‌ங்க‌ளின் சொந்த‌ ஆகார‌ம் (கோட்பாடுக‌ள், போத‌னைக‌ள், ப‌ர‌லோக‌ம் ந‌ர‌க‌ம் விஸிட் உட்ப‌ட‌) புசித்து, சொந்த‌ வ‌ஸ்திர‌ம் (சுய‌ நீதி, கிரிய‌க்ளை போதிப்ப‌து, கிருபையை த‌ள்ளி விடுத‌ல் உட்ப‌ட‌) உடுத்தி, த‌ங்க‌ளின் போத‌னைக‌ளை யாரும் த‌வ‌றாக‌ சொல்லி விட‌க்கூடாது என்கிற‌தினால் "கிறிஸ்த‌வ‌ர்க‌ள்" என்கிற‌ பேர் மாத்திர‌மே வைத்துக்கொண்டு உலாவுகிறார்க‌ள்!!

ச‌கோ அன்பு:
"மேலும் புதிய உடன்படிக்கையில், தமது கற்பனைகளை இருதயத்தில் எழுதுவார் என்றும் கூறப்பட்டுள்ளது."

அதை முழுவ‌துமாக‌ வாசித்தீர்க‌ளென்றால், அது முந்தைய‌ க‌ற்ப‌னை போல் இருக்காது என்கிற‌ வார்த்தையும் அதில் வ‌ரும்.

"ரோமர் 2:6-9 தேவன் அவனவனுடைய கிரியைகளுக்குத்தக்கதாய் அவனவனுக்குப் பலனளிப்பார். சோர்ந்துபோகாமல் நற்கிரியைகளைச் செய்து, மகிமையையும் கனத்தையும் அழியாமையையும் தேடுகிறவர்களுக்கு நித்தியஜீவனை அளிப்பார். சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ உக்கிரகோபாக்கினை வரும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும். தேவனிடத்தில் பட்சபாதமில்லை."

உக்கிர‌கோபாக்கினையை "நித்திய‌ஜீவ‌ன் கிடைக்காது" "இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் கிடைக்கும்" போன்று அர்த்த‌ம் கொண்டிருக்கிறீர்க‌ள். ஐயா, வ‌ச‌ன‌த்தை ந‌ன்றாக‌ நீங்க‌ள் வாசித்து பாருங்க‌ள், நித்திய‌ ஜீவ‌ன் அவ‌ர்க‌ளுக்கு இல்லை என்று எங்கு சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து!! "சண்டைக்காரராயிருந்து, சத்தியத்திற்குக் கீழ்ப்படியாமல், அநியாயத்திற்குக் கீழ்ப்படிந்திருக்கிறவர்களுக்கோ" இவ‌ர்க‌ள் தான் தேவ‌னுடைய‌ இராஜிய‌த்தில் நீதியை க‌ற்றுக்கொள்வார்க‌ள். நித்திய‌ ஜீவ‌ன் என்ப‌தே அந்த‌ 1000 ஆண்டுக‌ள் நியாய‌த்தீர்ப்புக்கு பிற‌கு தான்.

ம‌த். 7:21-23 தாங்க‌ள் ச‌ரிவ‌ர‌ புரியாத‌த‌ன் விளைவு தான் பாவ‌ங்க‌ளோடு ம‌னுஷ‌ன் உயிர்த்தெழுவான் என்கிற‌ மாதிரியான‌ அறிக்கை!! வ‌ச‌ன‌ம் சொல்லுவ‌து போல் பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ர‌ண‌மாக‌ தான் இருக்க‌ முடியுமே த‌விர உயிர்த்தெழுத‌லாக‌ இருக்க‌ முடியாது. வ‌ச‌ன‌ம் இதை தான் சொல்லுகிற‌து ம‌ற்ற‌ப‌டி போத‌னைக‌ள் ப‌ல‌வித‌மாக இருக்கிற‌து.

இப்பொழுது ஊழிய‌ர்க‌ள் என்கிற‌ "பெரிய பொறுப்பில்" இருப்ப‌வ‌ர்க‌ள் பரலோகம் போகாமல் இதே பூமியில் உயிர்தெழுந்து வ‌ரும் போது ந‌ட‌க்கும் ச‌ம்பாஷ‌னை தான். அத‌ன் பிற‌கு தான் அவ‌ர்க‌ள் "ஒன்றான‌ மெய் தேவ‌னையும் அவ‌ரின் குமார‌னான‌ கிறிஸ்துவையும்" அறிந்து (நீதியை க‌ற்றுக்கொள்வார்க‌ள்) நித்திய‌ஜீவ‌னை பெறுவார்க‌ள். "அக்கிர‌ம‌செய்கைக்கார‌ர்க‌ள்" என்ப‌து உயிர்த்தெழுந்த‌ பிற‌கு உள்ள‌ நிலை இல்லை, உயிர்த்தெழுத‌லுக்கு முன்பு அவ‌ர்க‌ள் இருந்த‌ நிலையை தான் அங்கு சொல்ல‌ப் ப‌டுகிற‌து! "அக்கினிக்க‌ட‌லில்" தூக்கி எறிய‌ப்ப‌டுகிற‌தை தான் நியாய‌த்தீர்ப்பு என்று நினைத்துக்கொண்டு இருப்ப‌து தாங்க‌ள் தேவ‌னை எவ்வாறு தெரிந்திருக்கிறீர்க‌ள் என்று வெளிப்ப‌டுத்துகிற‌து!!

ச‌கோ அன்பு:
"உங்கள் இக்கூற்றிற்கும் நம் வாதத்திற்கும் சம்பந்தம் எதுவுமில்லை."

ஏன் சம்பந்தம் எதுவுமில்லை, தாங்க‌ள் அடிக்க‌டி காண்பிக்கும் மத். 25ல் செம்ம‌றி ஆடு உவ‌மையில் (நான் அதை உவ‌மையாக‌ க‌ருதுவ‌தால்) இப்ப‌டி ப‌ட்ட‌ ந‌ல்ல‌ கிரியைக‌ள் செய்தால் தான் ப‌ர‌லோக‌த்திற்கு போவார்க‌ள் என்று மாத்திர‌மே சொல்ல‌ப்ப‌ட்டிருக்கிற‌து. அந்த‌ ப‌குதியில் உங்க‌ளை போதிக்க‌வும் சொல்ல‌வில்லை, கிறிஸ்துவை பின் ப‌ற்ற‌வும் சொல்ல‌ப்ப‌ட‌வில்லையே!! அப்ப‌டி என்றால் த‌ங்க‌ளின் "என்ன‌த்தின் ப‌டி" மற்ற மதத்தினர் இவைகளை செய்பவர்களாக இருப்பதினால் அவ‌ர்க‌ளும் ஏன் ப‌ர‌லோக‌ம் (செம்ம‌றியாடாக‌ இருந்து) வ‌ர‌க்கூடாது!! இந்த‌ ப‌குதியில் தான் நித்திய‌ ஜீவ‌னை பெற‌ "ஊழிய‌மோ" "போத‌னையோ" "கிறிஸ்துவை அறிவிப்ப‌தோ" போன்ற‌ எதுவுமே இல்லாம‌ல் "நித்திய‌ ஜீவ‌ன்" பெற‌ முடியுமே!!

ச‌கோ அன்பு:
"அல்லது அவர்கள் சொன்னது பொய் என்கிறீர்களா?"

அவ‌ர்க‌ள் பொழுது போக‌வில்லை என்றோ அல்ல‌து பொய்யோ சொல்ல‌வில்லை!! இவைக‌ளை க‌டைப்பிடிக்கும் போது, உயிர்த்தெழுத‌லின் போது அவ‌ர்க‌ளுக்கு எளிதாக‌ அனைத்தும் விள‌ங்கும். (த‌ய‌வு செய்து ம‌த். 10:15; 11:24ஐ வாசித்து பாருங்க‌ள்). நித்திய‌ ஜீவ‌னை பெற‌ இதெல்லாம் செய்யுங்க‌ள் என்று சொன்ன‌வ‌ர்க‌ள், இதை எல்லாம் செய்யாம‌ல் போனால் "அக்கினி க‌ட‌லில் வெள்ளாடுக‌ளாக‌ தூக்கி வீச‌ப்ப‌டுவீர்க‌ள்" என்று அவ‌ர்க‌ள் சொல்லாத‌தை தான் இன்று ப‌ல‌ர் பொழுதுபோகாம‌லோ அல்ல‌து பொய்யாக‌ சொல்லி வ‌ருகிறார்க‌ளோ என்று தோன்றுகிற‌து!!

அப்ப‌டி என்றால், "ந‌ம‌க்கு பாவ்மில்லை என்போமானால் ந‌ம்மை நாமே வ‌ஞ்சிக்கிற‌வ‌ர்க‌ளாக‌ இருப்போம், ச‌த்திய‌ம் ந‌ம‌க்குள் இராது" 1 யோவான் 1:8ஐ த‌ங்க‌ளின் வேத‌த்திலிருந்து நீக்கி விட்டீர்க‌ளோ!!

"நான் சிறுக‌வும், அவ‌ர் பெறுக‌வும்" போன்ற‌ யோவான் ஸ்னான‌க‌னின் அறிக்கையை போல் இல்லாம‌ல், த‌ங்க‌ளின் கிரியைக‌ளின் மேல் த‌ங்க‌ளுக்கு அவ்வுள‌வு ந‌ம்பிக்கையா! கிரியை ஒன்றுக்கும் உத‌வாது என்ப‌து தான் வேத‌ம் சொல்லுகிற‌தே!!

ச‌கோ அன்பு"
"எது எளிது என்பதைத் தீர்மானித்து செயல்படும்படி நான் படித்த வேதாகமம் எனக்குக் கூறவில்லை."

ப‌ன்றிக‌ளுக்கு முன்னால் முத்துக்க‌ளை போடாதீர்க‌ள் என்று வேத‌ம் தான் சொல்லுகிற‌து

இன்னும் தொட‌ரும்..



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

பரலோக இராஜியம் என்றால் எங்கோ இருக்கிறது, தேவனுடைய இராஜியம் என்றால் அது எங்கோ இருக்கிறது என்று இன்னும் இவற்றுக்கு வித்தியாசம் அல்லது இவை என்ன என்று அறியதவர்கள் சொல்லும் கருத்தையே தங்களும் சொல்லியிருக்கிறீர்கள் சகோ அன்பு அவர்களே. பிறரை நியாயம் தீர்க்க கூடாது என்று சொல்லி உங்களின் பதிவுகளில் எனக்கும் நியாயம் தீர்க்க தெரியும் என்று வெளிப்படுகிறதே!!

தயவு செய்து பழைய ஏற்பாட்டையும் புதிய ஏற்பாட்டையும் போட்டு குழப்பிக்கொண்டு பதில்களை தராதீர்கள்! பழைய ஏற்பாடு நமக்கு பின் பற்ற அல்ல மாறாக அது நமக்கு திருஷ்டாந்தரமாக வைக்கப்பட்ட ஒரு பகுதியே!! அது யூதர்களுக்கு பின் பற்ற கொடுக்கப்பட்டது. நமக்கோ அதிலிருந்து தீர்க்கதரிசனங்கள் மாத்திரமே இருக்கிறது. நடந்தேறிய சம்பவங்களை நமக்கு என்று நினைத்து போதிக்காதீர்கள்.

"நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."

யாரும் இதை மறுக்கவில்லை, ஆனால் இந்த மனிதர்கள் பாவம் செய்துக்கொண்டே தான் இருப்பார்கள் என்பதால் தான் பாவ நிவார்ன பலி எல்லா வருடமும் நடந்தது. ஏதோ ஒரு முறை பாவ அறிக்கை செய்து முடித்த பின் மீண்டும் நாம் பாவம் செய்வதில்லை என்று சொல்லுவது சுய மேன்மை பாராட்டுவதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.


நீதிமொழிகள் 29:1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."

இதையே சொல்லிக்கொண்டிருந்தீர்களானால், ஏழு எழுபது முறை மன்னிப்பது போன்ற கர்த்தரின் வார்த்தைகளை வேதத்திலிருந்து எடுத்து விட்டு போதியுங்கள்!!

கற்பனைகளை கைக்கொள்வது, அதை குறித்து மேன்மை பாராட்டுவது வேறு. நீங்கள் இரண்டாவது வகையை போதித்து வருகிறீர்களே!!


ரோமர் 8:28 அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக்கிறோம்

"அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்கள்" என்றால் சுய நீதியை பாராட்டுபவர்கள அல்ல என்று உங்களுக்கு இந்த வசனம் சொல்லுவது புரியவில்லையா!!

இயேசு கிறிஸ்து போதித்த நற்கிரியைகளை செய்யாத புறமதத்தினரும் இருக்கிறார்களே! அவர்களுக்கு எப்படி என்றால் அது என் கவலை இல்லை என்று மழுப்பலாக பதில் தருகிறீர்களே! நீங்கள் போதித்து வரும் இந்த கற்பனைகள் அடிபடை மனித சட்டங்களே!! இது எல்லா மதத்தினருக்கும் பொருந்தும். இதில் நீங்க‌ள் கிறிஸ்த‌வ‌ராக‌ இருந்துக்கொண்டு மேன்மை பாராட்டுகிறீர்க‌ள், அவ்வ‌ள‌வே!!

இறுதியாக‌,

மாற்கு 10:26. அவர்கள் பின்னும் அதிகமாய் ஆச்சரியப்பட்டு: அப்படியானால் யார் இரட்சிக்கப்படக்கூடும் என்று தங்களுக்குளே சொல்லிக்கொண்டார்கள்.

27. இயேசு அவர்களைப் பார்த்து: மனுஷரால் இது கூடாததுதான்; தேவனால் இது கூடாததல்ல; தேவனாலே எல்லாம் கூடும் என்றார்.

உங்க‌ளின் கிரியைக‌ளை மேன்மை பாராட்டி ஒரு பிர‌யோஜ‌ன‌மும் இல்லை, இது (இரட்சிப்பு, இரட்சிக்கப்படுவது) ம‌னுஷ‌ரால் கூடாத‌ காரிய‌ம், இது தேவ‌ன் ஒருவ‌ரால் மாத்திர‌மே ஆன‌ காரிய‌ம்.!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

நித்திய ஜீவனைப் பெற தேவனுடைய கிருபையே அவசியம். பாவமன்னிப்பு கிருபையால்தான் உண்டானது. ஒருவன் ஒரு கொலையைச் செய்துவிட்டு அதற்கு ஈடாக "நான் ஆயிரம் பேருக்கு அன்னதானம் செய்கிறேன், இலவச மருத்துவமனை கட்டுகிறேன்...." போன்ற எத்தனை "நற்கிரியைகளை"ச் செய்ய ஒப்புக்கொண்டாலும் இந்த உலக தண்டனைச் சட்டங்களே ஏற்றுக்கொள்ளாது, கொலைக்கான தண்டனையை அனுபவித்தே தீரவேண்டும்.

நாமெல்லாரும் பாவிகளானதால் நமக்குத்தேவை பாவமன்னிப்பு. அதை கிறிஸ்து ஏற்கனவே சம்பாதித்து வைத்துவிட்டார். அவர் நமக்கு மாத்திரமல்ல அவர் சர்வலோகத்தின் பாவங்களை சுமந்து தீர்த்தார் என்றுதான் வசனம் சொல்கிறது.

பாபிலோனிய சபைக்கோட்பாடுகளில் ஒன்றுதான் நீங்கள் போதிக்கும் கிரியைகளினால் நீதிமானாகும் விஷயம். வேதத்தை யார் புரட்டுகிறார்கள் என்பதை நாம் அறியத்தான் போகிறோம். ஒரிரு தடவை புத்தி சொல்லிவிட்டுத்தான் உங்கள் தளத்தைவிட்டு விலகினேன் என்பதை மனதில் கொள்க. ஆனால் உங்கள் கிரியைக் கோட்பாட்டில் உள்ள வைராக்கியத்தில் மீண்டும் இங்கு வந்தீர்கள். துன்மார்க்கன் கண்டிப்பாக தண்டிக்கப்பட்டே ஆகவேண்டும், அதுவும் மரணதண்டனை, என்று உங்கள் சகோதரர் மேல் நீங்கள் அன்பில்லாதவராக இருக்கிறபடியால்,

1 யோவான் 3:14 நாம் சகோதரரிடத்தில் அன்புகூருகிறபடியால், மரணத்தைவிட்டு நீங்கி ஜீவனுக்குட்பட்டிருக்கிறோமென்று அறிந்திருக்கிறோம்; சகோதரனிடத்தில் அன்புகூராதவன் மரணத்திலே நிலைகொண்டிருக்கிறான். தன் சகோதரனைப் பகைக்கிற எவனும் மனுஷ கொலைபாதகனாயிருக்கிறான்; மனுஷ கொலைபாதகனெவனோ அவனுக்குள் நித்தியஜீவன் நிலைத்திராது என்று அறிவீர்கள்.

என்ற வசனத்தின்படி நீங்கள்தான் மனுஷ கொலைபாதகனாகயிருக்கிறீர்கள்.

உலகத்தில் உள்ள எல்லா சகோதர, சகோதரிகளும் நித்திய ஜீவனை அடைவார்கள் என்ற மாபெரும் நற்செய்தியை நாங்கள் புரிந்துகொண்டதால் பரலோகத்தில் (ஆவிக்குரிய மண்டலத்தில்) களிப்புண்டாயிருக்கும், அந்தக் களிப்பில் நாங்கள் மஹா சந்தோஷமாக இருக்கிறோம். ஒருவரும் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடைவார்கள் என்ற செய்தி தேவ அன்பின் அகல, ஆழ, உயரங்களை அறிந்து நாங்கள் எங்களை இன்னும் தாழ்த்துகிறோம். இந்த பூரண நற்செய்தி தேவ அன்பில் நிறைந்திருக்கிற பலருக்கு ஒரு மாபெரும் விடுதலையைத் தரும் என்று நாங்கள் நம்புவதால்தான் இந்த இரகசியத்தை அறிவதற்கு தேவன் நியமித்திருக்கிற யாருக்கேனும் சென்று சேரும் என்ற விசுவாசத்தில் இதை பகிர்ந்துகொள்கிறோம்.

தேவனுடைய் கிருபையை விருதாவாக்கும் உங்கள் "கிரியையினால் நீதிமானாகுதல்" கோட்பாட்டிற்கு நீங்கள்தான் பதில் சொல்லவேண்டிவரும். மேலும் உங்கள் பதிவுகளிலிருந்து நீங்கள் யெகோவா சாட்சிகளின் அநேக காரியங்களில் ஒத்துப்போகிறீர்கள். அவர்களும் எல்லாரும் உயிர்த்தெழமாட்டார்கள், யெகோவா சாட்சிகளும், யெகோவா சாட்சிகளினால் போதிக்கப்படாத மற்றவர்கள் மாத்திரம் உயிர்த்தெழுவார்கள் என்றுதானே போதிக்கிறார்கள். அர்மகெதான் யுத்தம் இனிமேல்தான் நடக்கும், அதில் யெகோவாதேவனை அறியாத மற்றவர்ளெல்லாரும் அழிக்கப்படுவார்கள் என்று மிகவும் ஆவலாய் எதிர்பார்த்துக்கொண்டிருக்கிறார்கள். தேவன் அவர்கள் முகத்தில் பூரணமாய் கரியைப் பூசுவாராக. இவர்கள்தான் மனுஷ கொலைபாதகர்ள் அதனால்தான் சத்தியம் இவர்களுக்குள் இல்லை.

அன்பு அவர்களே,


"இதைக்குறித்து நீங்கள் ஆச்சரியப்படவேண்டாம்; ஏனென்றால் பிரேதக்குழிகளிலுள்ள அனைவரும் அவருடைய சத்தத்தைக் கேட்குங்காலம் வரும்; அப்பொழுது, நன்மை செய்தவர்கள் ஜீவனை அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும், தீமை செய்தவர்கள் ஆக்கினையை(போதிக்கப்பட்டு அவர்களும் ஜீவனை) அடையும்படி எழுந்திருக்கிறவர்களாகவும் புறப்படுவார்கள்." யோவான் 5:28,29.

ஆனால் நீங்கள் கட்டாயம் ஆச்சரியப்படுவீர்கள், ஏனென்றால் உங்களுக்கு முன்பாக ஆயக்காரரும், வேசிகளும் ராஜ்ஜியத்தில் இருப்பார்கள். அதைக் கண்டு உங்களுக்குத்தான் அழுகையும், பற்கடிப்பும் இருக்கும். நீங்கள் ஏற்றுக்கொண்ட ஒருசில காரியங்களில் ஊறிப்போய் கண் செருகிப்போய் இருக்கிறீர்கள்.

உங்கள் பதிவுகளுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறேன். துன்மார்கனுக்கு தண்டனை என்ற கண்ணாடியை மட்டும் போட்டுவிட்டு வேதம் வாசிக்கிறீர்கள் ஆகவேதான் அந்த வசனங்கள் மட்டும் உங்களுக்குத் தென்படுகிறது. தேவனுடைய அன்பு என்பது எந்தவித நிபந்தனையும் இல்லாதது. அப்படி நிபந்தனை போட்டால் என்னைப்பொறுத்தவரை அது அன்பே கிடையாது. அதனால்தான் உங்களைப் பகைக்கிறவர்களை சிநேகியுங்கள் என்றார் இயேசு. அந்த நிபந்தனையற்ற அன்புதான் எல்லாருக்கும் ஜீவனளிக்கிறது.

பெரேயன்ஸ் எழுதியதுபோல "பாவத்தின் சம்பளம் மரணமே" அன்றி உயிர்தெழுதல் நிச்சயமாக இல்லை. ஒருவன் பாவத்தோடு உயிர்த்தெழவே முடியாது என்பதற்கு இந்த வசனமே போதும். பாவமில்லாமல் உயிர்த்தெழுபவனுக்கு தண்டனையும் கொடுக்க முடியாது. ஆகவேதான் ஒரேதரம் மரிப்பது பின்பு நியாயத்தீர்ப்படைந்து ஜீவனை சுதந்தரிப்பதும் மனுஷனுக்கு நியமிக்கப்பட்டுள்ளது. இந்த நியமனத்தை யாராலுமே மாற்ற முடியாது. ஒரேதரம் மரிப்பதும் என்றுதான் வேதம் சொல்கிறது. நீங்கள்தான் வெள்ளை சிங்காசன நியாத்தீர்ப்பில் எல்லாரும் 'விசாரிக்கப்பட்டு' (அது என்ன விசாரணையோ?) மீண்டும் ஒரு மரணதண்டனை அடைவார்கள் என்று வேத வசனத்துக்குப் புறம்பாக போதிக்கிறீர்கள்.(புரட்டுகிறீர்கள்)

எனக்குத்தெரிந்து பாவத்தின் சம்பளம் உயிர்த்தெழுதல் என்று வாதிடும் முதல் ஆள் நீங்கள்தான்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//சகோ அன்பு அவர்கள் ஒரு யூதனோ என்கிற அளவிற்கு பழைய ஏற்பாட்டு கட்டளைகளுக்கு பரிந்து பேசியிருக்கிறீர்கள்.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

இத்திரியில் எனது பதிவுகள் எல்லாவற்றையும் கவனமாகப் படித்துப் பாருங்கள். குறிப்பாக, சிவப்பு எழுத்துக்களில் பதிக்கப்பட்ட வசனங்களைப் படித்துப்பாருங்கள். அவற்றில் ஏதாவது பழையஏற்பாட்டு வசனங்கள் உள்ளதா எனப் பாருங்கள். நீதிமொழிகளின் 2 வசனம் தவிர மற்றெல்லா வசனங்களும் புதியஏற்பாட்டு வசனங்களாகத்தான் இருக்கும். அவற்றிலும் பெரும்பாலானவை இயேசு சொன்னதாகத்தான் இருக்கும்.

இயேசுதான் பழையஏற்பாட்டு கட்டளைகளில் சிலவற்றைக் கூறியுள்ளார். அவற்றை நான் "just relay" செய்துள்ளேன். அப்படியிருக்க நான் பழையஏற்பாட்டுக் கற்பனைகளைச் சொல்லி பொய்ப்போதகம் பண்ணுவதாகவோ, அல்லது ஒரு யூதனைப் போல் பழையஏற்பாட்டுக் கட்டளைகளுக்கு நான் பரிந்து பேசுவதாகவோ நீங்கள் கூறினால், அக்கூற்றுகள் இயேசுவுக்குத்தான் முதலாவதாகப் பொருந்தும் என்பதை அறியுங்கள். இயேசுவின் போதனையையே பொய்ப்போதகம் என சொல்லுமளவு ஒரு “Doctrine" மீது உங்களுக்கு வைராக்கியம் இருப்பதால்தான் நீங்கள் ஏதோ வஞ்சக ஆவியின் பிடியில் சிக்கிக்கொண்டிருப்பதாகத் தோன்றுவதாகக் கூறினேன். மீண்டும் உங்கள் கூற்றுக்களை மறுபரிசீலனை செய்ய வேண்டுகிறேன்.

soulsoution wrote:
//அதிக சிரத்தை எடுத்து  மற்றவர்களையும் உங்களைப்போல ஒரு பரிசுத்தவானாக, உத்தம நீதிமானாக மாற்றும் முயற்சியில் அநேக வசனங்களை பதித்துள்ளீர்கள்.//

அப்படியல்ல சகோ.ஆத்துமா அவர்களே! என்னையும் உங்களையும் நியாயந்தீர்ப்பவர் கர்த்தர் ஒருவரே. இதெல்லாம் உங்களுக்கு நன்றாகத் தெரியும்தான். ஆனாலும் என்னைக் கிண்டல் பண்ணும் விதமாக இப்படி எழுதியுள்ளீர்கள்.

என்னைப் பொறுத்தவரை, நித்திய ஜீவனைப் பெறுவது பற்றிய வேதாகம போதனைகளை மற்றவர்களோடு பகிர்ந்து கொள்கிறேன், போதிக்கிறேன், அவ்வளவே. யாரையும் மாற்றுவது என் வேலையல்ல. வசனமெனும் விதையை விதைப்பது, அல்லது நீர்ப் பாய்ச்சுவது மட்டுமே என் வேலை (1 கொரி. 3:6). விளையச்செய்பவர் கர்த்தரே. தற்போது விளைச்சல் இல்லை என்பதற்காக நான் கன்னத்தில் கையை வைத்துக்கொண்டு கவலைப்படவேண்டியதில்லை. ஒரு இடத்தில் விளைச்சல் இல்லை என்றால், பவுலைப் போல் அடுத்த இடத்திற்குச் செல்லவேண்டியதுதான். அதைத்தான் நான் செய்கிறேன். எனது வேலைக்கு தேவன் கூலியைத் தருவார் என 1 கொரி. 3:8 கூறுகிறது.

soulsoution wrote:
//சபைக்குக் கொடுக்கப்பட்ட வசனங்களை உலகத்துக்குப் போதித்து உலகத்தை இப்போதே மாற்றும் உங்கள் தோல்வி முயற்சி தொடரட்டும். மொத்தமாக எத்தனை பேரை நித்திய ஜீவனுக்குத் தகுதியாக்கியுள்ளீர்கள் என்று மட்டும் பெயர், செல்போன் எண் சகிதம் அறிவித்தீர்கள் என்றால் ஒரு நீதிமானை சந்திக்க உதவியாயிருக்கும்.//

முயற்சி தோல்வியா வெற்றியா என்பது பற்றி நான் நினைக்கவில்லை. நீங்கள்தான் அதைக் குறித்து எப்போதும் கவலைப்படுகிறீர்கள்.

ஏற்கனவே சொன்னதுபோல் யாரையும் நம்மால் நியாயந்தீர்க்க இயலாது. எனவே என் முயற்சியால் நித்திய ஜீவனுக்குத் தகுதியானவரை என்னால் கண்டுபிடிக்க இயலாது. அதை அறிய ரொம்ப ஆவலாக இருந்தால் just நியாயத்தீர்ப்பு நாள் வரை பொறுத்திருங்கள்.

soulsoution wrote:
//அன்பு அவர்களே, மேற்கண்ட வசனத்தைக்கூட சரிவர புரிந்து கொள்ளவில்லை நீங்கள். மனந்திரும்புகிற ஒரே ஒரு பாவி இந்த மனுக்குலம் மட்டுமே. இது யாரோ ஒரு பாவியல்ல மனந்திரும்ப அவசியமுள்ள 'ஒரே பாவி' மனிதன் மட்டுமே. ஏனென்றால் மனிதனுக்கு மட்டுமே பாவம் செய்ய வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது.  மற்ற சிருஷ்டிகள் பாவம் செய்ய முடியாது.

உங்கள் கூற்றுப்படி பார்த்தால் மனந்திரும்பாத கோடா கோடி பாவிகளின் நிமித்தம் பரலோகத்தில் மஹா துக்கம் உண்டாகுமோ?

மனந்திரும்புகிற ஒரே ஒரு பாவி என்ற பதத்தை உங்கள் அர்த்தப்படி எடுத்துக்கொண்டால் முழு உலகத்திலும் ஒரே ஒரு பாவிமட்டும்தான் மனந்திரும்புவான் என்று அர்த்தமாகும். அது நான் தான் என்று நீங்கள் சொன்னாலும் ஆச்சரியப்படமாட்டோம்.//


உங்கள் பார்வையில் நான் வசனத்தைச் சரிவர புரிந்து கொள்ளாதவனாக எப்படித் தோன்றுகிறேனோ அதேபோல் எனது பார்வையில் நீங்கள் வசனத்தைச் சரிவர புரிந்து கொள்ளாதவராகத் தோன்றுகிறீர்கள். நம்மில் யார் வசனத்தைச் சரிவர புரிந்து கொண்டுள்ளோம் என்பதை அறிய நியாயத்தீர்ப்பு நாள் வரை காத்திருப்போம்.

சகோ.ஆத்துமா அவர்களே! நீங்களுங்கூட நான் ஏதோ நியாயப்பிரமாணத்தை போதிக்க முற்படுவதாகக் கருதுகிறீர்கள். இவ்விஷயத்தில் சகோ.பெரியன்ஸ் அவர்களுக்கு நான் சொன்னதைப் படியுங்கள்.

நம் மூவரின் விவாதத்தின் மூலம் நாம் ஒருவருக்கொருவர் சமரசமாகாவிடினும், பல வேதவசனங்களும் அவற்றைச் சார்ந்த கருத்துக்களும் இத்திரியில் இடம்பெற நம் விவாதம் உதவியது. மனிதனின் பிரதான பந்தயப்பொருளான நித்திய ஜீவனைக் குறித்த விவாதத்தில் நீங்கள் வாஞ்சையோடு கலந்துகொண்டதை மீண்டும் மனதார பாராட்டுகிறேன்.

இவ்விவாதத்தைப் படிக்கிற சிலருக்கு இது வீணான விவாதமாகத் தோன்றக்கூடும். ஆனால் நான் அப்படி நினைக்கவில்லை. ஏனெனில் நம் கருத்துக்கள் கிரியை செய்கிறதோ இல்லையோ, ஆனால் அவற்றோடு இணைக்கப்பட்ட வசனங்கள் நிச்சயமாக கிரியை செய்யும்.

சகோ.பெரியன்ஸ் அவர்களின் நீண்ட பதிவின் விஷயங்களுக்கு தனித்தனியே பதில்தர வாஞ்சையுண்டு. ஆயினும் நான் குறிப்பிட்டிருந்த பழையஏற்பாட்டு வசனங்களைக் குறித்த அவரது கருத்துக்களுக்கு மட்டும் இப்போது பதில்தருகிறேன்.

bereans wrote:
//"நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்."

யாரும் இதை மறுக்கவில்லை, ஆனால் இந்த மனிதர்கள் பாவம் செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்பதால்தான் பாவநிவாரண பலி எல்லா வருடமும் நடந்தது. ஏதோ ஒரு முறை பாவ அறிக்கை செய்து முடித்த பின் மீண்டும் நாம் பாவம் செய்வதில்லை என்று சொல்லுவது சுய மேன்மை பாராட்டுவதே அன்றி வேறு ஒன்றும் இல்லை.//

இந்த மனிதர்கள் எப்போதும் பாவம் செய்துகொண்டேதான் இருப்பார்கள் என்பது மெய்யெனில், நீதி. 28:13 வசனம் வேதாகமத்தில் பதியப்பட அவசியமில்லை.

பாவத்தை அறிக்கைசெய்து விட்டுவிட்ட தாவீது இரக்கம் பெறவில்லையா? பின்வரும் வசனத்தைப் படியுங்கள்.

1 இராஜாக்கள் 15:5  தாவீது ஏத்தியனாகிய உரியாவின் சங்கதி ஒன்றுதவிர கர்த்தர் தனக்குக் கட்டளையிட்டதிலே தான் உயிரோடிருந்த நாளெல்லாம் ஒன்றையும் விட்டு விலகாமல், அவர் பார்வைக்குச் செம்மையானதைச் செய்துவந்தான்.

பாவத்தை விட்டுவிட மனதில்லாதவர்கள்தான், “நீதிமான் ஒருவனாகிலும் இல்லை”, “பாவியாகிய என்மேல் கிருபையாயிரும்” போன்ற வசனங்களை மீண்டும் மீண்டும் சொல்லி தங்கள் எண்ணத்தை நியாயப்படுத்துவார்கள்.

தாவீதைப் போல், யோபுவைப் போல், சகரியாவைப் போல், ஆபேலைப் போல் நாமும் ஏன் நீதிமானாக நடக்க முயலக்கூடாது, தேவனின் பாராட்டைப் பெறக்கூடாது என்ற வாஞ்சையோடு முயற்சி செய்தால், பலவீனரான நம்மை தமது பரிசுத்த ஆவியைக் கொண்டு தேவன் பலப்படுத்தி, சோதனைகளை மேற்கொள்ள உதவி செய்வார்.

ஆம், வாஞ்சையும் முயற்சியும் உள்ளவன் எவனோ அவனுக்குப் பரிசுத்த ஆவி கொடுக்கப்படும். மாறாக, இது நமக்கு சம்பந்தமில்லாதது என ஒரு தாலந்தைப் பெற்ற ஊழியக்காரனைப்போல் (மத்தேயு 25:26) முயற்சியும் வாஞ்சையும் இல்லாதிருந்தால் இருக்கின்ற கொஞ்சநஞ்ச பரிசுத்தஆவியும் எடுத்துக்கொள்ளப்பட்டுவிடும்.

நான் மீண்டும் பாவம் செய்வதில்லை என என் பதிவுகளில் ஒரு இடத்திலும் நான் கூறவில்லை. நான் மீண்டும் பாவஞ்செய்யாதிருக்க வாஞ்சிப்பதோடு அதற்காக தேவனை நோக்கி வேண்டி, பின்வரும் வசனங்கள் கூறுகிற பிரகாரம் பூரணத்தை நோக்கிச் செல்கிறேன். இதை சுயமேன்மை என நீங்கள் கருதுவது உங்கள் விருப்பம். தேவன் என் இருதயத்தை அறிவார், அது எனக்குப் போதும். மனுஷரைப் பிரியப்படுத்துவதும் சமரசம் செய்வதும் என்னால் இயலாது.

2 கொரி. 7:1 இப்படிப்பட்ட வாக்குத்தத்தங்கள் நமக்கு உண்டாயிருக்கிறபடியினால், பிரியமானவர்களே, மாம்சத்திலும் ஆவியிலும் உண்டான எல்லா அசுசியும் நீங்க, நம்மைச் சுத்திகரித்துக்கொண்டு, பரிசுத்தமாகுதலைத் தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்.

எபேசியர் 4:11-13 மேலும் நாம் அனைவரும் தேவனுடைய குமாரனைப் பற்றும் விசுவாசத்திலும் அறிவிலும் ஒருமைப்பட்டவர்களாகி, கிறிஸ்துவினுடைய நிறைவான வளர்ச்சியின் அளவுக்குத்தக்க பூரணபுருஷராகும்வரைக்கும், பரிசுத்தவான்கள் சீர்பொருந்தும்பொருட்டு, சுவிசேஷ ஊழியத்தின் வேலைக்காகவும், கிறிஸ்துவின் சரீரமாகிய சபையானது பக்திவிருத்தி அடைவதற்காகவும், அவர், சிலரை அப்போஸ்தலராகவும், சிலரைத் தீர்க்கதரிசிகளாகவும், சிலரைச் சுவிசேஷகராகவும், சிலரை மேய்ப்பராகவும் போதகராகவும் ஏற்படுத்தினார்.

கொலோசெயர் 3:9,10 ஒருவருக்கொருவர் பொய் சொல்லாதிருங்கள்; பழைய மனுஷனையும் அவன் செய்கைகளையும் களைந்துபோட்டு, தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.

எபிரெயர் 6:1,2 ஆகையால், கிறிஸ்துவைப்பற்றிச் சொல்லிய மூல உபதேச வசனங்களை நாம் விட்டு, செத்த கிரியைகளுக்கு நீங்கலாகும் மனந்திரும்புதல், தேவன்பேரில் வைக்கும் விசுவாசம், ஸ்நானங்களுக்கடுத்த உபதேசம், கைகளை வைக்குதல், மரித்தோரின் உயிர்த்தெழுதல், நித்திய நியாயத்தீர்ப்பு என்பவைகளாகிய அஸ்திபாரத்தை மறுபடியும் போடாமல், பூரணராகும்படி கடந்துபோவோமாக.

யாக்கோபு 1:25 சுயாதீனப்பிரமாணமாகிய பூரணப்பிரமாணத்தை உற்றுப்பார்த்து, அதிலே நிலைத்திருக்கிறவனே கேட்கிறதை மறக்கிறவனாயிராமல், அதற்கேற்ற கிரியை செய்கிறவனாயிருந்து, தன் செய்கையில் பாக்கியவானாயிருப்பான்.


இப்படிப்பட்ட அருமையான வசனங்களைப் பதிவதற்கு வாய்ப்பளித்த உங்களுக்கு நன்றி. ஆனால் நீங்கள் ஒரே வரியில் இதெல்லாம் சபைக்கு கொடுக்கப்பட்ட வசனங்கள் எனக் கூறிவிடுவீர்கள்.

bereans wrote:
//நீதிமொழிகள் 29:1 அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன் சகாயமின்றிச் சடிதியில் நாசமடைவான்."

இதையே சொல்லிக்கொண்டிருந்தீர்களானால், ஏழு எழுபது முறை மன்னிப்பது போன்ற கர்த்தரின் வார்த்தைகளை வேதத்திலிருந்து எடுத்து விட்டு போதியுங்கள்!!//


ஏழு எழுபது முறை மன்னிப்பது என்பது நாம் கடைப்பிடிக்கும்படி கொடுக்கப்பட்ட கட்டளை. அதை தேவனுக்குரியதாக்கி தேவனுக்கு போதனை செய்ய முயலாதீர்கள். பழி வாங்குதல் எனக்குரியது எனக் கூறிய தேவனுக்கு, ஒருவனை மன்னிக்கவும் உரிமையுள்ளது, தண்டிக்கவும் உரிமையுள்ளது. எனவே, அடிக்கடி கடிந்துகொள்ளப்படும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவனை சகாயமின்றி சடிதியில் நாசமாக்குவது தேவனின் காரியம். அதில் நீங்களும் நானும் தலையிட உரிமையில்லை.

இயேசு கற்றுத்தந்த ஜெபத்தில் ஒரு வரி:

மத்தேயு 6:12 எங்கள் கடனாளிகளுக்கு நாங்கள் மன்னிக்கிறதுபோல எங்கள் கடன்களை எங்களுக்கு மன்னியும்.

தேவன் எப்போது மன்னிப்பார் என்பதைப் பார்த்தீர்களா? நம் கடனாளிக்கு நாம் மன்னியாதவரை தேவனின் மன்னிப்பை நாம் எதிர்பார்க்க இயலாது.

பரமண்டல ஜெபத்தை ஒவ்வொரு முறையும் கூறும்போது, இதை நாம் அறிக்கையிடுகிறோம். எனவே ஜாக்கிரதையாயிருப்போம்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

மத்தேயு 12:31,32 எந்தப் பாவமும் எந்தத் தூஷணமும் மனுஷருக்கு மன்னிக்கப்படும்; ஆவியானவருக்கு விரோதமான தூஷணமோ மனுஷருக்கு மன்னிக்கப்படுவதில்லை. எவனாகிலும் மனுஷகுமாரனுக்கு விரோதமான வார்த்தை சொன்னால் அது அவனுக்கு மன்னிக்கப்படும்; எவனாகிலும் பரிசுத்த ஆவிக்கு விரோதமாகப் பேசினால் அது இம்மையிலும் மறுமையிலும் அவனுக்கு மன்னிக்கப்படுவதில்லை.


பரிசுத்தஆவிக்கு விரோதமான தூஷணம் மறுமையில்கூட மன்னிக்கப்படுவதில்லை என இயேசு சொல்கிறாரே, அவ்வாறெனில் பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணம் சொன்னவன் உயிர்த்தெழும்போது, அவனது பாவம் மன்னிக்கப்படாமல்தானே உயிர்த்தெழுவான்? எல்லா பாவமும் மன்னிக்கப்பட்டால்தான் உயிர்த்தெழ முடியும் எனக் கூறுகிற நீங்கள், இக்கேள்விக்கு என்ன பதில் தரப்போகிறீர்கள்?

யாக்கோபு 2:13 இரக்கஞ்செய்யாதவனுக்கு இரக்கமில்லாத நியாயத்தீர்ப்புக் கிடைக்கும்; நியாயத்தீர்ப்புக்குமுன்பாக இரக்கம் மேன்மைபாராட்டும்.

இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் என்ன எனும் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தீர்கள். தேவகிருபையே நமக்கு நித்திய ஜீவன் என வசனம் கூறுகிறது. அந்த தேவகிருபையை அல்லது இரக்கத்தை நாம் இழந்து போனால் ... ? நித்திய ஜீவனையும் இழக்கவேண்டியதுதான்.

இயேசுவின் போதனைகளை அப்படியே எடுத்துரைத்த என்னை, பொய்ப்போதகன் என்றும் பழையஏற்பாட்டு போதனைகளுக்கு சிபாரிசு செய்பவன் என்றும் சகோ.பெரியன்ஸ் கருதுவதால், அக்கருத்தை அவர் மாற்றிக்கொள்ளும்வரை அவரது மற்ற கருத்துக்களுக்குப் பதில்தர எனக்கு மனதில்லை. எனவே தற்போதைக்கு இத்திரியில் எனது விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்.


-- Edited by anbu57 on Friday 12th of March 2010 10:50:21 AM

-- Edited by anbu57 on Monday 15th of March 2010 08:04:31 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

அன்பு அவர்களே,

இனியும் நீங்கள் இந்த விவாதத்தில் கலந்துகொள்ளாதபோதிலும் இதை வாசிப்பீர்கள் என்றெண்ணி எழுதுகிறேன்.
ஒரு விஷயத்தை நீங்கள் புரிந்துகொள்ளவே இல்லை என்பது வருத்தமளிக்கிறது. நாங்கள் ஏதோ எல்லாரையும் பாவம் செய்யத் தூண்டுவது போலவும், யாரும் நற்கிரியைகளே செய்ய வேண்டாமென்று போதிப்பதுபோலவும் ஒரு மாயத்தோற்றத்தை உண்டாக்கி பதில் பதித்துக்கொண்டிருக்கிறீர்கள். நாங்கள் ஒரு போதும் அப்படி எழுதியது கிடையாது. நாங்கள் சொல்வதெல்லாம் நம்முடைய முயற்சியால் ஒருபோதும் நித்தியஜீவனை அடைய முடியாது என்பதே. அப்படி ஏதாவது ஒரு வாய்ப்பு உண்மையிலேயே இருக்குமானால் கிறிஸ்து மரித்தது, எழுந்தது வீணாயிருக்கும். சரீர முயற்சி அற்ப பிரயோஜனமுள்ளது; அதனால் எந்தப் பயனுமில்லை.
மனந்திரும்புகிற ஒரே பாவி (The Only Sinner)   மனிதனே. வேதத்தை ஆராயச்சொன்னது இதனால்தான்.

தங்களது மேலான கருத்துக்களையும் வாதங்களையும் பதித்தமைக்கு நன்றி!

தேவன் உங்களோடிருப்பாராக!!


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

இயேசு கிறிஸ்து "நித்திய‌ ஜீவ‌னுக்குள் பிர‌வேசிக்க‌ அந்த‌ இளைஞ‌னிட‌ம் கட்டளைகளை பின் பற்ற சொன்னது அந்த இளைஞன் ஒரு யூதன் என்கிறபடியே" அவரின் சிலுவை மரணம் அந்த கட்டளைகளை நிறைவு செய்து விட்டார். ஆகவே தான் "எழுத்தோ கொல்லும் (பழைய ஏற்பாட்டு கட்டளைகள்), ஆவியோ உயிர்ப்பிக்கும் (தேவனின் கிருபை ஆவியான கிறிஸ்துவின் மூலமாக). இப்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியை நிறைவேற்றிய பிறகு இன்னும் கட்டளைகள் கட்டளைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லையே!! இதை சொல்லுவதால் நான் வஞ்சக ஆவியின் பிடியில் இருப்பதாக தாங்கள் எழுதியது எந்த விதத்தில் நியாயம் என்று விளக்க கடமைப்பட்டுளீர்கள்.

அப்படி பார்த்தால் தங்களின் கோட்பாடுகளை பின்பற்றாத எவருமே இதே நிலையில் தானே இருக்க வேண்டும்!?

மேலும், சகோ சோல் சொல்யூஷன் சொன்னது போல், எங்களது ஒரு பதிலாவது, நாங்கள் அனைவரும் பாவம் செய்யுங்கள் என்று சொன்னதில்லையே, மாறாக தேவனின் இலவச ஈவை மாத்திரமே எடுத்து சொல்லியிருக்கிறோம். இதில் என்ன தவறு என்று எனக்கு புரியவில்லை!! நீங்கள் மனித முயற்சியை போதிக்கிறீர்கள், நாங்களோ தேவனின் கிருபையை போதிக்கிறோம். பவுலுக்கு அந்த அழைப்பு இல்லாதிருந்தால் அவன் ஒரு வைராக்கியமுள்ள யூதனாகவே தான் இருந்திருப்பான். அவனின் எந்த "நற்கிரியைகள்" அவனை கிறிஸ்துவினிடத்தில் கூட்டி சேர்த்தது என்று சொல்ல முடியுமா?

தாங்கள் தங்களின் கோட்பாடுகளில் எந்த அளவிற்கு வைராக்கியம் கொண்டிருக்கிறீர்களோ, அதை விட அதிக வைராக்கியம் என‌க்கு தேவ‌ அன்பு மீது இருக்கிறது, ஏனென்றால் "அன்பு திர‌ளான‌ பாவ‌ங்க‌ளை மூடும்" என்ப‌து தான் வ‌ச‌ன‌மே த‌விர‌, அன்பு பாவிக‌ளை "நித்திய‌ அக்கினிக்குள்" த‌ள்ளி விடும் என்று இல்லை. பாவ‌ங்க‌ள் மூட‌ப்ப‌ட்டாலோ அல்ல‌து ம‌ன்னிக்க‌ப்பட்டாலொழிய‌ உயிர்த்தெழுத‌ல் கிடையாது. இந்த‌ பாவ‌ ம‌ன்னிப்பு இல‌வ‌ச‌மாக‌ கிறிஸ்து "உல‌க‌த்தில் இருக்கும் ஒவ்வொருவ‌ருக்காக‌வும்" ச‌ம்பாதித்து விட்டார். இதை விசுவ‌சிப்ப‌வ‌ர்க‌ள் தான் ப‌ர‌லோக‌ இராஜிய‌த்திற்கு வாஞ்சிக்கிறார்க‌ள், இதை விசுவ‌சியாத‌வ‌ர்க‌ள், இதை விசுவ‌சிக்கும் ஒரு கால‌ம் வ‌ரும், அதுவே "நியாய‌த்தீர்ப்பு".

நான் கேட்ட‌ ப‌ல‌ கேள்விக‌ள் இன்னும் ப‌தில் பெறாம‌ல் இருக்கிற‌தே? குறிப்பாக‌, 1 யோவான் 1:8, ம‌த்.வில் சொல்ல‌ப்ப‌ட்ட‌ சோதோம் கோமாரா நியாய‌த்தீர்ப்பு போன்ற‌வ‌ற்றிருக்கு தாங்க‌ள் ப‌தில் த‌ர‌வில்லை.

மேலும் "ஆக்கினை" "இர‌க்க‌மில்லாத‌ நியாய‌த்தீர்ப்பு" போன்ற‌ த‌மிழ் வார்த்தைக‌ளை வைத்துக்கொண்டு இவை எல்லாம் அக்கினி க‌ட‌லில் த‌ள்ள‌ப்ப‌டுவ‌தாக‌ க‌ருத‌ வேண்டிய‌தில்லை.

மேலும் ம‌ன்ந்திரும்ப‌ அவ‌சிய‌ம் உள்ள‌ ஒருவ‌ன் என்றால் அது இந்த‌ முழு "ம‌னித‌க்குல‌ம்" தான். ஒரு த‌னிப்ப‌ட்ட‌ ம‌னித‌ன் அல்ல‌. ஏனென்ற‌ல் தேவ‌னின் சிருஷ்ட்டிப்பின் பாவ‌த்தின் கீழ் வ‌ந்த‌வ‌ன் ம‌னித‌ன் ஒருவ‌னே. இந்த‌ ம‌ன‌ந்திரும்புத‌ல் இல்லாம‌ல் ப‌ல‌க்கோடி ஜ‌ன‌ங்க‌ள் ம‌ரித்து போய் விட்டார்க‌ள், ம‌ரித்துக்கொண்டிருக்கிறார்க‌ள், இவ‌ர்க‌ள் எல்லோரும் கூட‌ இர‌ட்சிக்க‌ப்ப‌டும் ப‌டியாக‌ தான் தேவ‌னின் திட்ட‌ம் இருக்கிற‌து.

ஆக‌ மொத்த‌தில் வேத‌ம் எல்லோருடைய‌ இர‌ட்சிப்பை தான் போதிக்கிற‌து, அந்த‌ இர‌ட்சிப்பு "சுய‌ நீதிமான்க‌ளாக‌ தோன்றும் ந‌ற்கிரியைக‌ளினால்" அல்ல‌ மாறாக‌ தேவ‌னின் இல‌வ‌ச‌ ஈவான‌ "கிருபையினால்" மாத்திர‌மே ச‌ம்ப‌விக்கும். இதை எழுதுவ‌தால், எல்லோரும் பாவ‌ம் செய்யுங்க‌ள் என்று நாங்க‌ள் யாருக்கும் இட‌ற‌ல் உண்டாக்க‌வில்லை. இது அவ‌ர் அவ‌ர் புரிந்துக்கொள்ளும் த‌ன்மையில் இருக்கிற‌து. தேவ‌ அன்பின் ஆழ‌ம், அக‌ள‌ம், நீள‌ம், உய‌ர‌த்தை ருசி பார்த்தீர்க‌ளென்றால் எங்க‌ளை குறை கூற‌ உங்க‌ளுக்கு ம‌ன‌ம் வ‌ராது.    அன்ட்ன்ட்

"இரக்கமில்லாத நியாயத்தீர்ப்பு என்றால் என்ன எனும் ஒரு கேள்வியைக் கேட்டிருந்தீர்கள். தேவகிருபையே நமக்கு நித்திய ஜீவன் என வசனம் கூறுகிறது. அந்த தேவகிருபையை அல்லது இரக்கத்தை நாம் இழந்து போனால் ... ? நித்திய ஜீவனையும் இழக்கவேண்டியதுதான்."

த‌ங்க‌ளின் கோட்பாட்டை தினிக்கும் முய‌ற்சி இந்த‌ வ‌ச‌ன‌த்திற்கு தாங்க‌ள் த‌ந்திருக்கும் இந்த‌ விள‌க்க‌ம். மேலும் தேவ‌கிருபையே ந‌ம‌க்கு நித்திய‌ ஜீவ‌ன் த‌ருகிற‌து என்று தாங்க‌ளே இதில் ப‌திந்திருக்கிறீர்க‌ளே!!

கிருபை உங்க‌ளுட‌ன் இருக்க‌ட்டும். ந‌ன்றி!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//இயேசு கிறிஸ்து "நித்திய‌ ஜீவ‌னுக்குள் பிர‌வேசிக்க‌ அந்த‌ இளைஞ‌னிட‌ம் கட்டளைகளை பின் பற்ற சொன்னது அந்த இளைஞன் ஒரு யூதன் என்கிறபடியே" அவரின் சிலுவை மரணம் அந்த கட்டளைகளை நிறைவு செய்து விட்டார். ஆகவே தான் "எழுத்தோ கொல்லும் (பழைய ஏற்பாட்டு கட்டளைகள்), ஆவியோ உயிர்ப்பிக்கும் (தேவனின் கிருபை ஆவியான கிறிஸ்துவின் மூலமாக). இப்படி இயேசு கிறிஸ்து சிலுவையில் பலியை நிறைவேற்றிய பிறகு இன்னும் கட்டளைகள் கட்டளைகள் என்று சொல்லிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லையே!! இதை சொல்லுவதால் நான் வஞ்சக ஆவியின் பிடியில் இருப்பதாக தாங்கள் எழுதியது எந்த விதத்தில் நியாயம் என்று விளக்க கடமைப்பட்டுளீர்கள்.//

"விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்” எனக் கூறுவதால், இப்பதிவைத் தருகிறேன்.

ஒரு வாலிபனிடம் பழையஏற்பாட்டு கட்டளைகளை சொன்ன இயேசு, மேலும் பல கட்டளைகளையும் கூறியுள்ளார். அக்கட்டளைகள் யாவும் இயேசு இவ்வுலகில் வாழ்ந்த 3 1/2 வருட காலத்துக்கு மட்டுந்தான் என நீங்கள் கூறினால் அதற்கான வசன ஆதாரம் கொடுங்கள். மாறாக, வேறு சில வசனங்களைத் தவறாகப் புரிந்துகொண்டு, இயேசுவின் கட்டளைகள் அவரது மரணத்தோடு நிறைவுபெற்றுவிட்டது, நிருபக் கட்டளைகள் சபைக்கு மட்டுந்தான் என நீங்கள் சொல்வதால்தான் “நீங்கள் வஞ்சக ஆவியின் பிடிக்குள் சிக்கியுள்ளதாக” கூறுகிறேன்.

நான் ஏற்கனவே சொன்ன வசனத்தை மீண்டும் உங்கள் மேலான கவனத்திற்கு வைக்கிறேன்.

மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இவ்வசனத்தை இயேசு எவர்களுக்குச் சொன்னதாக நீங்கள் கருதுகிறீர்களோ “அவர்களுக்குச்” சொன்னதாகவே வைத்துக்கொள்வோம்.

ஒருவனும் நீதிமான் இல்லை என்பதால் அந்த “அவர்களிடம்” நிச்சயம் தப்பிதங்கள் இருக்கும். அப்படிப்பட்ட “அவர்களில்” சிலர், பிறரது தப்பிதங்களை மன்னிக்கவில்லையெனில், தேவன் “அவர்களின்” தப்பிதங்களை மன்னிக்க மாட்டார் என்பது நிச்சயம் (இயேசுவின் மேற்கூறிய வசனப்படி). அவ்வறெனில் அவர்கள் எவ்வாறு உயிர்த்தெழ முடியும்? பாவங்கள் மன்னிக்கப்பட்டால்தான் உயிர்த்தெழமுடியும் என நீங்கள் கூறுவதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்.

அடுத்து, பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது என இயேசு தெளிவாகக் கூறியுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள். அவ்வாறெனில், பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணம் சொன்னவன் எவ்வாறு உயிர்த்தெழமுடியும்?

இவ்விரு கேள்விகளுக்கும் பதில் சொல்லுங்கள். அதன்பின் மற்றதைப் பார்க்கலாம்.


-- Edited by anbu57 on Monday 15th of March 2010 08:05:29 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அன்பு அவர்களே,

 நான் ப்திந்ததாக அன்பு எழுதிகிறார்:
"இயேசுவின் கட்டளைகள் அவரது மரணத்தோடு நிறைவுபெற்றுவிட்டது,"

 நான் கட்டளை என்று சொன்னது இயேசு சொன்ன போதனைகளை அல்ல மாறாக யூதர்கள் பின்பற்றிய பழைய ஏற்பாட்டு கட்டளைகளை மட்டுமே!! இயேசுவின் சிலுவை மரணம் அவைகளில் இருந்து இயேசுவின் சீஷர்களுக்கு விடுதலை கொடுத்தது. எந்த வசனத்தையும் நாங்கள் தப்பாக புரிந்துக்கொள்ளவில்லை, இது உங்களின் குற்றசாட்டு மட்டுமே!! சுலபமான ஒரு சில பழைய ஏற்பாட்டு கட்டளைகளை பிடித்துக்கொண்டு மற்றவை தேவை இல்லை என்று போதிப்பவர்கள் எந்த ஆவீயின் கீழ் இருக்கிறார்களோ!! இயேசு போதித்தவைகளை யாரும் பின் பற்ற கூடாது என்று ஒரு போதும் நாங்கள் போதிக்கவில்லை. அப்படி ஒரு தோற்றத்தை நீங்களே உருவாக்கி அதற்கு எங்களை குற்றம் சுமத்தி வருகிறீர்கள்!! எல்லா மதங்களும் போதிக்கும் "கிரியைகளை" நாங்கள் போதிக்காமல் "கிருபையை" நாங்கள் போதிக்கிறோம். அப்படி என்றால் "கிரியைகளை" போதிக்கும் நீங்கள் தானே மற்ற மதத்தின் அதே ஆவியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!!

 

யார் எந்த‌ ஆவியில் இருக்கிறார்க‌ள் என்று அவ‌ர் அவ‌ர் பின் ப‌ற்றும் கோட்பாடுக‌ளினார் தீர்ப்பிட‌ வேண்டாம். இயேசு கிறிஸ்துவை மாம்ச‌த்தில் வ‌ந்த‌வ‌ர் என்று அறிக்கை செய்யாத‌ எவ‌னும் தான் தேவ‌ ஆவியை பெறாத‌வ‌ன் என்று வேதம் சொல்லுகிற‌து. வேத‌த்தை வாசித்து ஆறாய்ந்து பிற‌கு யாரிட‌ம் எந்த‌ ஆவி இருக்கிற‌து என்று தீர்ப்பிடுங்க‌ள்!!

 

அன்பு எழுதுகிறார்:
" அவ்வறெனில் அவர்கள் எவ்வாறு உயிர்த்தெழ முடியும்? பாவங்கள் மன்னிக்கப்பட்டால்தான் உயிர்த்தெழமுடியும் என நீங்கள் கூறுவதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்."

 

நாங்க‌ள் தான் தொட‌க்க‌ முத‌ல் சொல்லிக்கொண்டு வ‌ருகிறோமே!! உயிர்த்தெழுத‌ல் என்றால் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டால் தான் என்று. முழு உலகத்தின் பாவ‌ங்க‌ளையும் தான் இயேசு கிறிஸ்து த‌ன் மீது சும‌ந்த‌தினால் அந்த‌ பாவ‌ங்க‌ளிலிருந்து தேவனின் கிருபை கிறிஸ்துவின் மூல‌மாக ம‌ன்னிப்ப‌ளிக்கிற‌தே. உங்க‌ளுக்கு தான் கிரியைக‌ளினால் தான் பாவ‌ங்க‌ளிலிருந்து ம‌ன்னிப்பு என்று போத‌னை, எங்க‌ளுக்கு வேத‌ம் தேவ‌னின் கிருபையை தான் வ‌ழியுறுத்துகிற‌து, ம‌னித‌னின் கிரியைக‌ள் அல்ல‌, ஏனென்றால் இந்த‌ கிரியைகளுக்கு மேன்மை பாராட்டி ஒன்றுக்கும் இல்லை என்கிற‌து வேத‌ம். த‌ய‌வு செய்து தீத்து 3:5,6ஐ வாசித்து உங்க‌ளின் "கிரியை" போத‌னையை ம‌றுப‌ரிசிலினை செய்யுங்க‌ள்!!

 

அன்பு கேட்கிறார்:
"அடுத்து, பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணம் இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படாது என இயேசு தெளிவாகக் கூறியுள்ளதையும் நீங்கள் அறிவீர்கள். அவ்வாறெனில், பரிசுத்தஆவிக்கு விரோதமாக தூஷணம் சொன்னவன் எவ்வாறு உயிர்த்தெழமுடியும்?"

 

இத‌ற்கு நீண்ட‌ விள‌க்க‌ம் தேவை ப‌டுகிற‌து. இதற்கு த‌ங்க‌ளின் "கிரியைக‌ள்" போத‌னைக்கும் ச‌ம்ப‌ந்த‌மே இல்லை. இதை வேண்டும் என்றால் வேற் திரியில் விவாதிக்க‌லாம், ஏனென்றால் இதில் "ப‌ரிசுத்த‌ ஆவி" என்று ஆவிக்குரிய‌ விஷ‌ய‌ம் இருக்கிற‌து!!



-- Edited by bereans on Saturday 13th of March 2010 07:29:57 AM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//எல்லா மதங்களும் போதிக்கும் "கிரியைகளை" நாங்கள் போதிக்காமல் "கிருபையை" நாங்கள் போதிக்கிறோம். அப்படி என்றால் "கிரியைகளை" போதிக்கும் நீங்கள் தானே மற்ற மதத்தின் அதே ஆவியில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்!!.//

இதற்கு மேல் நான் விவாதித்தால், “எல்லா மதங்களும்தான் கடவுளை வழிபடுகின்றனவே, எனவே நீங்கள் மற்ற மதத்தின் ஆவியில் இருக்கிறீர்கள்” என்று சொன்னாலும் சொல்வீர்கள். கிரியையைக் குறித்த வசனங்கள் எல்லாவற்றையும் வேதாகமத்திலிருந்து மட்டுமே நான் எடுத்து சொல்லியிருக்கையில், நீங்கள் விகல்பமாக மற்ற மதத்தின் கிரியைகளை நான் சொல்வதாகக் கூறுவது என்னை அல்ல, நான் தந்துள்ள வசனங்கள் அடங்கிய வேதாகமத்தையும் அதைத் தந்த யெகோவா தேவனையும்.

போதும் சகோதரரே! இத்தோடு நிறுத்திக் கொள்கிறேன். ஒரு வேதவசனத்தைத் தந்து அதன் அடிப்படையில் எனது கேள்வியை நான் எழுப்பியிருக்கையில், நான் குறிப்பிட்டுள்ள வசனத்தைப் புறக்கணித்துவிட்டு, எனது கேள்வியை மட்டும் எடுத்துப்போட்டு, அதற்கு வழக்கமான உங்கள் பதிலையே தந்தால், நான் எத்தனை கேள்விகள்தான் கேட்டு என்ன பயன்?

anbu57 wrote:
//மத்தேயு 6:14,15 மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னித்தால், உங்கள் பரமபிதா உங்களுக்கும் மன்னிப்பார். மனுஷருடைய தப்பிதங்களை நீங்கள் அவர்களுக்கு மன்னியாதிருந்தால், உங்கள் பிதா உங்கள் தப்பிதங்களையும் மன்னியாதிருப்பார்.

இவ்வசனத்தை இயேசு எவர்களுக்குச் சொன்னதாக நீங்கள் கருதுகிறீர்களோ “அவர்களுக்குச்” சொன்னதாகவே வைத்துக்கொள்வோம்.

ஒருவனும் நீதிமான் இல்லை என்பதால் அந்த “அவர்களிடம்” நிச்சயம் தப்பிதங்கள் இருக்கும். அப்படிப்பட்ட “அவர்களில்” சிலர், பிறரது தப்பிதங்களை மன்னிக்கவில்லையெனில், தேவன் “அவர்களின்” தப்பிதங்களை மன்னிக்க மாட்டார் என்பது நிச்சயம் (இயேசுவின் மேற்கூறிய வசனப்படி). அவ்வாறெனில் அவர்கள் எவ்வாறு உயிர்த்தெழ முடியும்? பாவங்கள் மன்னிக்கப்பட்டால்தான் உயிர்த்தெழமுடியும் என நீங்கள் கூறுவதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்.//


bereans wrote:
//அன்பு எழுதுகிறார்:
"அவ்வாறெனில் அவர்கள் எவ்வாறு உயிர்த்தெழ முடியும்? பாவங்கள் மன்னிக்கப்பட்டால்தான் உயிர்த்தெழமுடியும் என நீங்கள் கூறுவதால் இக்கேள்வியைக் கேட்கிறேன்."

நாங்க‌ள் தான் தொட‌க்க‌ முத‌ல் சொல்லிக்கொண்டு வ‌ருகிறோமே!! உயிர்த்தெழுத‌ல் என்றால் பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டால் தான் என்று. முழு உலகத்தின் பாவ‌ங்க‌ளையும் தான் இயேசு கிறிஸ்து த‌ன் மீது சும‌ந்த‌தினால் அந்த‌ பாவ‌ங்க‌ளிலிருந்து தேவனின் கிருபை கிறிஸ்துவின் மூல‌மாக ம‌ன்னிப்ப‌ளிக்கிற‌தே. உங்க‌ளுக்கு தான் கிரியைக‌ளினால் தான் பாவ‌ங்க‌ளிலிருந்து ம‌ன்னிப்பு என்று போத‌னை, எங்க‌ளுக்கு வேத‌ம் தேவ‌னின் கிருபையை தான் வ‌ழியுறுத்துகிற‌து, ம‌னித‌னின் கிரியைக‌ள் அல்ல‌, ஏனென்றால் இந்த‌ கிரியைகளுக்கு மேன்மை பாராட்டி ஒன்றுக்கும் இல்லை என்கிற‌து வேத‌ம். த‌ய‌வு செய்து தீத்து 3:5,6ஐ வாசித்து உங்க‌ளின் "கிரியை" போத‌னையை ம‌றுப‌ரிசிலினை செய்யுங்க‌ள்!!//

இத்திரியில் இறுதியாக ஒன்றைச் சொல்கிறேன். நித்திய ஜீவனைப் பெற கிருபை தேவையில்லை என நான் ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால் கிரியை இல்லாவிடில், கிருபையை இழக்கவேண்டி வரும் என்று தகுந்த வசனஆதாரத்துடன்தான் கூறியுள்ளேன். உதாரணத்திற்கு மேலே கூறியுள்ள மத்தேயு 6:14,15-ஐ எடுத்துக் கொள்ளலாம்.

சகோ.பெரியன்ஸ் அவர்களே! எனது இப்பதிவிற்கு நீங்கள் என்ன பதில் தந்தாலும், அதற்கு நான் பதில் தரப்போவதில்லை.



-- Edited by anbu57 on Monday 15th of March 2010 08:07:08 PM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

 கோபம் விவாதங்களை கெடுத்து விடும். எல்லா மதங்களும் "ஒரே கடவுளையா பின் பற்றுகின்றன" அப்படி நான் சொல்லாததை ஏன் கற்பனை செய்து எழுதுகிறீர்கள். ஆனால் எல்லா மதங்களும் ஒரே "நற்கிரியைகளை" தானே போதிக்கின்றன. எதை ஒப்பீட்டு பேசினேன் என்பதை கவனிக்க வேண்டுமே!!

நாம் அனைவருமே இங்கு வேத வசனத்தை கொண்டு தான் விவாதிக்கிறோம்! ஏன் நாங்கள் கேட்ட தீத்து 3:5,6க்கு மாத்திரம் பதில் எழுதவில்லையே! நற்கிரியைகள் அல்லது கிரியைகள் செய்வது என்பது பொதுவாக மனிதனாக மாற செய்யப்படும் போதனைகளே! மேலும் நாங்கள் யாரும் இயேசு அல்லது யெகோவா தேவன் சொன்ன வார்த்தைகளுக்கு கீழ் படிய வேண்டாம் என்று சொல்லவில்லை! "அப்பாலே போ சாத்தானே!" என்று பேதுருவிடம் சொன்ன வசனமும் இயேசு கிறிஸ்து சொன்னது தானே! அது பேதுருவிற்கு மாத்திரமே அந்த நேரத்தில் பொருந்தியது! அதை போய் இன்றும் பேசிக்கொண்டிருப்பதில் அர்த்தம் இல்லையே. ஆக வசனம் எல்லாமே தேவனிடத்திலிருந்து வந்தாலும், அது யாருக்கு பொருந்துகிறது என்றும் பார்க்க வேண்டுமே!!  இதை எழுதுவதால் என்னமோ நாங்கள் வசனங்களுக்கு கீழ்படியாதது போல் எடுத்து சொல்லுகிறீர்களே!!

மத். 5:14,15ல் சொல்லப்பட்டதை விளக்க வேண்டும் என்றால், ஒருவன் தன் பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கிறான் என்றால் முதலில் அவன் தன் அயலானின் பாவங்களை மன்னித்திருக்க வேண்டும் என்று தான் அர்த்தம் ஆகிறது. இந்த வசனத்திற்கும் "நித்தியஜீவனுக்கு அடுத்த கிரியைகள்" கொண்ட அர்த்தத்தை நீங்களாக தான் சேர்த்து கொள்கிறீர்கள். இந்த வசனம் நித்தியஜீவன் பெற நீங்கள் மற்றவர்களை மன்னிக்க வேண்டும் என்று சொல்லவில்லையே. இது தங்களின் கோட்ப்பாட்டை இந்த வசனத்தின் மீது தினித்து அர்த்தம் கொடுத்துள்ளீர்கள். மரித்து உயிர்த்தெழ அவனின் இந்த கிரியைகள் அல்ல, மாறாக தேவனின் கிருபை கிறிஸ்துவின் பலியினால் வெளிப்படுகிறது. ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பது போல் (ஆதாம் யார் என்று தெரிந்து மரித்திருந்தாலும் சரி தெரியாமல் மரித்திருந்தாலும் சரி), கிறிஸ்துவிற்கு எல்லோரும் (கிறிஸ்துவை தெரிந்திருந்தாலும் ச‌ரி தெரியாத‌வ‌னாக‌ இருந்தாலும் ச‌ரி) உயிர்த்தெழுவார்க‌ள்" என்கிற‌ வ‌ச‌ன‌த்தை ந‌ம்புவீர்க‌ளென்றால், இந்த‌ அனைவ‌ரின் (அப்ப‌டி என்றால் எல்லோரும் எல்லோரும் என்றால் ஒருவ‌னும் மிச்ச‌ம் இல்லாம‌ல், ALL) உயிர்த்தெழுத‌லுக்கு பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்டிருந்தால் தான் முடியும். இந்த‌ அடிப்ப‌டையை முத‌லில் உண‌ருங்க‌ள்! கிறிஸ்துவை தெரியாம‌ல் ம‌ரித்த‌வ‌ர்க‌ள் தாங்க‌ள் சொல்லும் இந்த‌ கிரியைக‌ளை ஒரு போதும் பின் ப‌ற்றியிருக்க‌ மாட்டார்க‌ளே! அப்ப‌டி என்றால் இந்த‌ வ‌ச‌ன‌ம் என்ன‌ பொய் வ‌ச‌ன‌மா!

வேத‌ வ‌ச‌ன‌ம் கைக‌ளில் வ‌ந்த‌ பிற‌கு (அதாவ‌து சுமார் 300 வ‌ருட‌ங்க‌ள் முன் த‌மிழில்) தானே இந்த‌ "கிரியைக‌ளை" போதிக்க‌ முடிந்த‌து, அத‌ற்கு முன் இற‌ந்த‌வ‌ர்க‌ள் எல்லாம் உயிர்த்தெழ‌ முடியாதா (த‌ங்க‌ளின் கோட்பாட்டின் அடிப்ப‌டையில் கேட்க்கிறேன்)? இதை நாங்க‌ள் கேட்டால் அதை க‌வ‌னிப்ப‌து த‌ங்க‌ளின் வேலை இல்லை என்று சொல்லி விடுகிறீர்க‌ள்! ஆக, வ‌ச‌ன‌ம் தெரிந்தாலும் ச‌ரி தெரியாம‌ல் இருந்தாலும் ச‌ரி, தேவ‌ கிருபை ப‌ட்ச‌பாத‌ம் இன்றி அனைவ‌ரின் மேலும் செய‌ல் ப‌டுகிற‌து என்று நாங்க‌ள் போதிப்ப‌து எப்ப‌டி த‌வ‌றாகிற‌து?

ப‌தில் த‌ர‌ப்போவ‌தில்லை என்று உங்க‌ளின் முடிவையே ம‌றுப‌ரிசீல‌னை செய்ய‌ சொல்லுகிறேன்! விவாத‌ம் என்றால் எல்லாம் இருக்கும், க‌ள‌த்தில் இருந்து விடுப‌டுவ‌து அழ‌கில்லையே!!

நீங்க‌ள் போதிப்ப‌து போல் நாங்க‌ள் ந‌ற்கிரியை செய்யுங்க‌ள் என்று வேற்ப‌டுத்தி போதிப‌த்தில்லை தான், ஆனால் அத‌ற்காக‌ ந‌ற்கிரியைக‌ள் செய்யாம‌ல் எல்லோரும் முடிந்த‌ம்ம‌ட்டும் பாவ‌ம் செய்யுங்க‌ள் என்றும் நாஙள் ஒரு போதும் சொல்லுவதில்லை. ஏனென்றால் ம‌னுஷ‌ரால் கூடாத‌ (இர‌ட்சிப்பிற்கு அடுத்த‌ கிரியைக‌ள்) தேவ‌னால் கூடும் (அவ‌ரின் கிருபையால்) என்ப‌தில் எங்க‌ளுக்கு மாற்று க‌ருத்து இல்லை.



-- Edited by bereans on Saturday 13th of March 2010 06:10:34 PM

__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

அப்போஸ்தலர் 15:11 கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் கிருபையிலே அவர்கள் இரட்சிக்கப்படுகிறது எப்படியோ, அப்படியே நாமும் இரட்சிக்கப்படுவோமென்று நம்பியிருக்கிறோமே என்றான்.

இதே கிருபையால் தான் நாங்கள் இரட்சிக்கப்படுவோம் என்கிற நம்பிக்கை எங்களுக்கும் இருக்கிறது. இதே கிருபையால் தான் உலகத்தார் இரட்சிக்கப்படுவார்கள் என்கிற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது. இதே நம்பிக்கையை தான் வசனமும் தருகிறது.


அப்போஸ்தலர் 20:24 ஆகிலும் அவைகளில் ஒன்றையுங்குறித்துக் கவலைப்படேன்; என் பிராணனையும் நான் அருமையாக எண்ணேன்; என் ஓட்டத்தைச் சந்தோஷத்தோடே முடிக்கவும், தேவனுடைய கிருபையின் சுவிசேஷத்தைப் பிரசங்கம்பண்ணும்படிக்கு நான் கர்த்தராகிய இயேசுவினிடத்தில் பெற்ற ஊழியத்தை நிறைவேற்றவுமே விரும்புகிறேன்.

இதே கிருபையின் ஊழியத்தை தான் நாங்களும் பிரசங்கித்து வருகிறோம். ஆகவே நாங்கள் இதை பிரசங்கிப்பதால் வஞ்சகத்தின் ஆவியின் பிடியில் இருக்கிறோம் என்கிற குற்றச்சாட்டு உண்மை என்றால், என்னை பின் பற்றுங்கள் நான் கிறிஸ்துவை பின் பற்றுகிறேன் என்று சொன்ன பவுலும் எங்களை போல் எங்களுக்கு முன் மாதிரியாக அதே ஆவியில் தான் இருப்பதாக இந்த வசனம் கான்பிக்கிறது.

ரோமர் 3:24 இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;

கிருபையினால் இலவசமாக நீதீமானாக்கப்படுவீர்கள், இதற்கும் கிரியைகளுக்கும் சம்பந்தமே இல்லை.

ரோமர் 4: 3. வேதவாக்கியம் என்ன சொல்லுகிறது? ஆபிரகாம் தேவனை விசுவாசித்தான், அது அவனுக்கு நீதியாக எண்ணப்பட்டது என்று சொல்லுகிறது. 4. கிரியை செய்கிறவனுக்கு வருகிற கூலி கிருபையென்றெண்ணப்படாமல், கடனென்றெண்ணப்படும். 5. ஒருவன் கிரியை செய்யாமல் பாவியை நீதிமானாக்குகிறவரிடத்தில் விசுவாசம் வைக்கிறவனாயிருந்தால், அவனுடைய விசுவாசமே அவனுக்கு நீதியாக எண்ணப்படும். 6. அந்தப்படி, கிரியைகளில்லாமல் தேவனாலே நீதிமானென்றெண்ணப்படுகிற மனுஷனுடைய பாக்கியத்தைக் காண்பிக்கும் பொருட்டு;

ரோமர் 5:2 அவர்மூலமாய் நாம் இந்தக் கிருபையில் பிரவேசிக்கும் சிலாக்கியத்தை விசுவாசத்தினால் பெற்று நிலைகொண்டிருந்து, தேவமகிமையை அடைவோமென்கிற நம்பிக்கையினாலே மேன்மைபாராட்டுகிறோம்.

ரோமர் 5:20 மேலும், மீறுதல் பெருகும்படிக்கு நியாயப்பிரமாணம் வந்தது;  அப்படியிருந்தும், பாவம் பெருகின இடத்தில் கிருபை அதிகமாய்ப் பெருகிற்று. 21 ஆதலால் பாவம் மரணத்துக்கு ஏதுவாக ஆண்டுகொண்டதுபோல, கிருபையானது நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மூலமாய் நீதியினாலே நித்தியஜீவனுக்கு ஏதுவாக ஆண்டுகொண்டது.

 

ரோமர் 6:14 நீங்கள் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால், பாவம் உங்களை மேற்கொள்ளமாட்டாது.

இப்படி அப்போஸ்தலர் சொல்லுவதால், உடனே இவர் இயேசு கிறிஸ்து சொல்லியதற்கு கீழ்படியாமல் "யேகோவா தேவனின்" வார்த்தைகளை மதிக்கவில்லை என்று இல்லை. ஏனென்றால் இவரே பரிசுத்த ஆவியின் வல்லமையினால் தான் இதை எழுதியிருக்கிறார். இதை நாங்கள் சொன்னால் வஞ்சிக்கும் ஆவியின் வசம் இருக்கிறோம் என்று எழுதுகிறீர்களே! என்ன நியாயம்!?

ரோமர் 6:15 இதினால் என்ன? நாம் நியாயப்பிரமாணத்திற்குக் கீழ்ப்பட்டிராமல் கிருபைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறபடியால் பாவஞ்செய்யலாமா? கூடாதே.

இதையும் நாங்கள் சொல்லுகிறோமே, நீங்கள் நியாயப்பிரமானத்திற்கு கீழ்ப்படவில்லை தான் ஆனால் அதற்காக பாவம் செய்யுங்கள் என்று நாங்கள் ஒரு போதும் போதிக்கவில்லை, மாறாக நாங்கள் இப்படி சொல்லுவதால் எல்லோரும் பாவம் செய்ய துனிவார்கள் என்று நீங்கள் உட்பட, இந்த விஷயத்தை புரியாமல் எங்கள் மேல் குற்றம் சுமத்தி வருகிறீர்களே! என்ன நியாயம்?!

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

பாவம் கிரியைகளினால் வருவது, அது நம்மை மரணத்திற்கு தான் கொண்டு போகிறது. ஆனால் கிருபையோ நம்மை நித்தியஜீவனுக்கு கொண்டு போகிறது என்கிறது வசனம்!!


I கொரிந்தியர் 15:10 ஆகிலும் நான் இருக்கிறது தேவகிருபையினாலே இருக்கிறேன்; அவர் எனக்கு அருளிய கிருபை விருதாவாயிருக்கவில்லை; அவர்களெல்லாரிலும் நான் அதிகமாய்ப் பிரயாசப்பட்டேன், ஆகிலும் நான் அல்ல, என்னுடனே இருக்கிற தேவகிருபையே அப்படிச் செய்தது.

இதை தான் நாங்களும் பின் பற்ற பிரயாசிக்கிறோம். நாங்கள் செய்யும் கிரியைகளை அல்ல மாறாக அவரின் கிருபையே இதை செய்ய சாத்தியமாக்குகிறது என்று! நாம் செய்யும் இல்லை நாம் செய்தால் தான் ஆகும் என்கிற அளவிற்கு பேச எங்களுக்கு கண்டிப்பாக துனிச்சல் இல்லை, அப்படி செய்யவில்லை என்றால் அதில் தவறேதும் இல்லை!!

II கொரிந்தியர் 9:8 மேலும், நீங்கள் எல்லாவற்றிலும் எப்பொழுதும் சம்பூரணமுடையவர்களாயும், சகலவித நற்கிரியைகளிலும் பெருகுகிறவர்களாயுமிருக்கும்படியாக, தேவன் உங்களிடத்தில் சகலவித கிருபையையும் பெருகச்செய்ய வல்லவராயிருக்கிறார்.

நீங்கள் நற்கிரியை செய்ய வேண்டுமென்றாலும் கூட அது ஏதோ தங்களின் சொந்த முயற்சியால் வந்தது என்று மேன்மை பாராட்ட அவசியமே இல்லை, ஏனென்றால் நாம் செய்யும் நற்கிரியைகளே அவரின் கிருபையினால் தான் என்பதே உண்மை!!

கலாத்தியர் 1:15 அப்படியிருந்தும், நான் என் தாயின் வயிற்றிலிருந்தது முதல், என்னைப் பிரித்தெடுத்து, தம்முடைய கிருபையினால் அழைத்த தேவன்,

பவுல் செய்யாத கிரியைகளை விடவா!! அப்படி இருந்தும் அதை எல்லாம் விட்டு விட்டு "கிருபையின் சுவிசேஷம்" சொல்ல விசேஷ கிருபையால் "அழைக்கப்பட்டார்" என்றே அவர் எழுதுகிறார்!!

கலாத்தியர் 2:21 நான் தேவனுடைய கிருபையை விருதாவாக்குகிறதில்லை; நீதியானது நியாயப்பிரமாணத்தினாலே வருமானால், கிறிஸ்து மரித்தது வீணாயிருக்குமே.

சுய நீதியை மேன்மை என்று நினைப்பவர்கள் இதை அவசியம் வாசிக்கனும்!! ஐயா நான் செய்யும் கிரியை தான் என்னை நித்தியஜீவனுக்குள் நடத்துகிறது என்றால், கிறிஸ்து மரித்ததே வீண் என்கிறார் அப்போஸ்தலர். வேதத்திலிருந்து இதை சொன்னாலும், இவர்கள் வஞ்சிக்கும் ஆவியிடம் இருக்கிறார்கள் என்கிற குற்றச்சாட்டு!!

கலாத்தியர் 5:4 நியாயப்பிரமாணத்தினால் நீதிமான்களாக விரும்புகிற நீங்கள் யாவரும் கிறிஸ்துவைவிட்டுப் பிரிந்து கிருபையினின்று விழுந்தீர்கள்.

நியாயப்பிரமானத்தையே தாரக மந்திரமாக வைத்திருப்போர்களே, சுய நீதியினால், தாங்கள் செய்யும் கிரியைகளினால் நீதிமான்களாக விரும்புகிறவர்கள் யாவரும் கிறிஸ்துவை விட்டு பிரிந்தவர்கள், கிருபையினிறு விழுந்தீர்கள் என்கிறார் அப்போஸ்தலர்! நாங்கள் எழுதுவதை நம்பாதாவர்கள் இதையாவது விசுவசிக்கிலாமே!!

எபேசியர் 1:7 அவருடைய கிருபையின் ஐசுவரியத்தின்படியே, இவருடைய இரத்தத்தினாலே பாவமன்னிப்பாகிய மீட்பு இவருக்குள் நமக்கு உண்டாயிருக்கிறது.


எபேசியர் 2:8 கிருபையினாலே விசுவாசத்தைக்கொண்டு இரட்சிக்கப்பட்டீர்கள்; இது உங்களால் உண்டானதல்ல, இது தேவனுடைய ஈவு;

தேவன் தருகிற இலவசமானதை ஒதுக்கிவிட்டு, இதை எல்லாம் என்னால் என் கிரியைகளினால் சம்பாதிக்க முடியும் என்று போதிப்பவர்கள் மத்தியில் நாங்கள் இந்த வேத வார்த்தைகளை நம்பி இருப்பது எந்த விதத்திலும் தவறு இல்லை. கணவுகள் காட்சிகள் பார்த்து "கண்டதை" பிதற்றும் கூட்டத்தின் மத்தியில் நாங்கள் சரிவர தான் அறிக்கை செய்துவருகிறோம், என்பதற்கு இந்த வசனங்களே போதுமானதாக இருக்கிறாது!!


எபேசியர் 3:8 பரிசுத்தவான்களெல்லாரிலும் சிறியவனாகிய நான் கிறிஸ்துவினுடைய அளவற்ற ஐசுவரியத்தைப் புறஜாதிகளிடத்தில் சுவிசேஷமாய் அறிவிக்கிறதற்காக இந்தக் கிருபை எனக்கு அளிக்கப்பட்டிருக்கிறது.

பார்த்தீர்களா பவுலின் தாழ்ச்சியை. மகிமை அடைந்த கிறிஸ்துவே தனக்கு தரிசனம் தந்து அழைத்த போதுக்கூட, தன்னை மிகவும் சிறியவனாக‌ சொல்லுகிறாரே, இவர் எங்கே, இன்று தங்களையே பரிசுத்தவான்கள் என்று சொல்லிக்கொண்டிருக்கும் கூட்டம் எங்கே!!


II தீமோத்தேயு 1:9 அவர் நம்முடைய கிரியைகளின்படி நம்மை இரட்சிக்காமல், தம்முடைய தீர்மானத்தின்படியும், ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படியும், நம்மை இரட்சித்து, பரிசுத்த அழைப்பினாலே அழைத்தார்.

கிரியைகளை மேன்மைப்படுத்துவோர்களே!! இந்த இரட்சிப்பு என்பது ஏதோ இன்று செய்யும் கிரியைகளினால் உண்டாகாமல் "ஆதிகாலமுதல் கிறிஸ்து இயேசுவுக்குள் நமக்கு அருளப்பட்ட கிருபையின்படி" என்றே சொல்லப்பட்டிருக்கிறது.

வேதத்தில் ஒரு வசனமாவது, கிருபை என்பது எதற்கு உதவாவது, நீங்கள் கிரியைகள் செய்தால் அன்றி நித்தியஜீவனுக்குள் பிரவேசிக்க முடியாது. அதாவது இப்படி ஒரு போதனை உண்டு என்றால், வசனம் மாறி, தேவனால் கூடாது (கிருபை) ஆனால் மனுஷரால் எல்லாம் ஆகும் (கிரியைகளினால்) என்கிறா ஒரு தேவ தூஷனம் தான் மிஞ்சும். இது தான் வஞ்சிக்கும் ஆவியின் செயலே அன்றி, தேவனை மகிமை படுத்தும் படியாக அவரின் கிருபையை மேன்மைப்படுத்துவதால் எந்த வஞ்சகத்தில் இல்லை.!!

II தீமோத்தேயு 2:1 ஆதலால், என் குமாரனே, நீ கிறிஸ்து இயேசுவிலுள்ள கிருபையில் பலப்படு.

"கிரியைகளில் பலப்படு" என்று பவுல் போதித்திருக்கலாமே!! அப்படி என்றால் பவுல் கிறிஸ்துவின் கட்டளைகளை செய்யக்கூடாது என்றா போதிக்கிறார்! பவுல் எந்த ஆவியில் இதை எல்லாம் எழுதுகிறார்?!

தீத்து 2:11 ஏனெனில் எல்லா மனுஷருக்கும் இரட்சிப்பை அளிக்கத்தக்க தேவகிருபையானது பிரசன்னமாகி,

மீண்டும் கிருபையே அதுவும் "எல்லா மனுஷரை இரட்சிக்கும்படியாக" கிருபை தான் பிரசன்னமாகிறதே அன்றி மனிதர்களின் கிரியைகள் அல்ல. "நாம் மன்னென்று அவர் அறிந்திருக்கிறாரே" அப்படி என்றால் நம் கிரியைகள் எம்மாத்திரம்!!

தீத்து 3:6 தமது கிருபையினாலே நாம் நீதிமான்களாக்கப்பட்டு, நித்திய ஜீவனுண்டாகும் என்கிற நம்பிக்கையின்படி சுதந்தரமாகத்தக்கதாக,

நமக்கு ஜீவன் (நித்திய ஜீவன் தான்) உண்டாகும்படி நம்பியிருக்க சொல்ல் படுவது அவரின் கிருபையையே தவிர, நமது கிரியைகளை அல்ல என்பதே இந்த வசனம் சொல்லுகிறது!!

எபிரெயர் 8:12 ஏனெனில் நான் அவர்கள் அநியாயங்களைக் கிருபையாய் மன்னித்து, அவர்கள் பாவங்களையும் அக்கிரமங்களையும் இனி நினையாமலிருப்பேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்.

யாக்கோபு 4:6 அவர் அதிகமான கிருபையை அளிக்கிறாரே. ஆதலால் தேவன் பெருமையுள்ளவர்களுக்கு எதிர்த்து நிற்கிறார், தாழ்மையுள்ளவர்களுக்கோ கிருபை அளிக்கிறாரென்று சொல்லியிருக்கிறது.

இப்ப‌டி எத்துனை வ‌ச‌ன‌ங்க‌ள் எழுதினாலும், கிரியைக‌ளினால் தான் நித்திய‌ ஜீவ‌ன் என்று ஒரே தீர்மான‌த்தில் இருந்துக்கொண்டு இருந்தோமென்றால் எப்ப‌டி? அப்போஸ்த‌ல‌ர் எழுதிய "கிருபை"யை தான் நான் எழுதியிருந்தேன்? இதில் என்ன‌ த‌வ‌று இருக்கிற‌து? என் கிரியைக‌ளை அறிவிப்ப‌தினால் ஏதோ நான் என் கிரியைக‌ளினால என்னை மேன்மை பாராட்ட‌ முடியுமே அன்றி, தேவ‌னின் இல‌வ‌ச‌ ஈவான‌ கிருபையை புரிந்துக்கொள்ள் முடியாது? ந‌ம்மை தாழ்த்துவோமே!! நான் அல்ல‌ அவ‌ரே பெருக‌ட்டும்! என் கிரியைக‌ள் அல்ல‌, அவ‌ரின் கிருபையே என்னை ஆளுகை செய்ய‌ட்டும்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
«First  <  1 2 | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard