kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்?
நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்? [2 vote(s)]

தேவனுடைய கிருபை
50.0%
கற்பனைகளின்படி நடத்தல்
0.0%
தேவகிருபையும் கற்பனைகளின்படி நடப்பதும்
50.0%
இவற்றில் எதுவுமில்லை/பதில்தர விரும்பவில்லை
0.0%


Executive

Status: Offline
Posts: 425
Date:
நித்திய ஜீவனைப் பெற எது அவசியம்?


நித்திய ஜீவனை சுதந்தரிக்க வேண்டுமெனில் கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என மத்தேயு 19:16 மற்றும் லூக்கா 10:25-28 வசனங்களில் இயேசு கூறுகிறார். ஆனால் பவுலின் பின்வரும் வசனம், இயேசுவின் கூற்றிற்கு மாறுபட்டதாகத் தோன்றுகிறது.

ரோமர் 6:23 பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபை வரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.

பவுலின் கூற்றுப்படி, கற்பனைகளைக் கைக்கொள்ளாவிட்டாலும் தேவனுடைய கிருபை வரத்தால் நித்திய ஜீவனை சுதந்தரித்துவிடமுடியுமா?

அல்லது இயேசுவின் கூற்றுப்படி, கிருபை இல்லாவிடினும் கற்பனைகளின்படி நடப்பதால் நித்திய ஜீவனை சுதந்தரித்துவிடமுடியுமா?

பதில் தெரிந்தவர்கள் பதியும்படி வேண்டுகிறேன்.


-- Edited by anbu57 on Monday 1st of March 2010 07:49:38 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே, மீண்டும் இங்கு எழுதுவதில் சந்தோஷம்.

இயேசு கிறிஸ்துவால் தெரிந்துக்கொள்ள‌ப்ப‌ட்ட‌ ப‌வுல் நிச்ச‌ய‌மாக‌ இயேசு கிறிஸ்துவின் க‌ருத்துக்கு மாறுப்ப‌ட்ட‌ க‌ருத்தை சொல்ல‌ முடியாது. நாம் புரிந்துக்கொள்ளுத‌லில் த‌வ‌றை வைத்து கொண்டு அவ‌ர்க‌ளை த‌வ‌று என்று சொல்ல‌ வேண்டாம்.

முத‌லாவ‌து நித்திய‌ஜீவ‌னுக்கும், சாவாமைக்கும் வித்தியாச‌ம் தெரிந்தால் தான் நாம் மேலே பேசுவ‌தில் அர்த்த‌ம் இருக்கும். இதை குறித்து ஏற்க‌ன‌வே இதே த‌ள‌த்தில் வேறு திரியில் த‌ந்தாகிவிட்ட‌து என்று த‌ங்க‌ளுக்கு நினைவு இருக்கும் என்றே நினைக்கிறேன்.

ச‌ரி நீங்க‌ள் த‌ந்திருக்கும் வ‌ச‌ன‌ங்க‌ள்:

1, மத்தேயு 19:16 மற்றும் லூக்கா 10:25-28ன் ப‌டி க‌ட்ட‌ளைக‌ளை கைக்கொண்டால் தான் நித்திய‌ஜீவ‌ன். இதில் த‌வ‌று ஒன்றும் இல்லையே. ஆனால் அந்த‌ க‌ட்ட‌ளைக‌ள் தான் என்ன‌வென்று பார்க்க‌வேண்டும். இயேசு கிறிஸ்து இதை யாரிட‌ம் சொல்லுகிறார் என்றும் பார்க்க‌ வேண்டும். இதை வாசித்து விட்டு ப‌ல‌ர் இன்று கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இப்ப‌டியாக‌ ப‌ழைய‌ ஏற்பாட்டில் உள்ள‌ க‌ட்ட‌ளைக‌ள் (க‌ற்ப‌னைகள்) அனைத்தையும் பின்ப‌ற்ற‌ வேண்டும் என்று பொய் போத‌னைக‌ளை த‌ந்துக்கொண்டிருக்கிறார்க‌ள். ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் ப‌லிக்கு பிற‌கு ம‌ரித்த‌வ‌ர்க‌ளிலிருந்து மாத்திர‌மே அவ‌ரின் சரீரமான "ச‌பைக்கு" தேர்வு நடக்கிறது, அதற்கு முன்பு இருந்தவர்கள் அனைவருமே அது தாவீதை போன்று "இருதயத்திற்கு பிரியமாக இருந்து நடனமாடி ஸ்தோதிரம் செய்தவனாக" இருந்தாலும் சரி, அல்ல சிங்த்தின் வாயையை கட்டிய தானியேலாக இருந்தாலும் சரி அனைவரும் இந்த பூமியில் உயிர்த்தெழுவார்கள். ஏற்கனவே அவர்களுக்கு கொடுக்கப்பட்டிருந்த கட்டளைகளின்படி வாழ்ந்தவர்கள் இந்த பூமியில் ஆளுகை பெறுவார்கள், மீதமானவர்கள் தேவன் பின்பு வைக்க போகும் "புதிய கற்பனைகளை" கைக்கொண்டு இந்த பூமியில் நித்திய ஜீவனை பெற்றவர்களாக இருக்க போகிறார்கள். இந்த புதிய கற்பனைகள் "முன்பு" கொடுதது போல் இல்லாமல் இருக்கும் என்று வேதம் சொல்லுகிறது (த‌ய‌வு செய்து எபிரேய‌ர் 8ம் அதிகார‌ம் தொடங்கி 10ம் அதிகார‌ம் ம‌ட்டும் தியானியுங்க‌ள்; காட்சிக‌ளை விசுவ‌சிக்கும் ந‌ண்ப‌ர்க‌ள் எபி 11:1ஐ தியானியுங்க‌ள்)

ப‌வுல் சொன்ன‌து எந்த‌ வித‌த்திலும் த‌வ‌று இல்லை, அவ‌ர் சொன்ன‌து தேவ‌னின் கிருபையினால் அனைவ‌ரும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் ஆளுகையில் நித்திய‌ ஜீவ‌னை பெறுவார்க‌ள் என்ப‌தே.

அனைவ‌ரும் உயிர்த்தெழுவார்க‌ள் என்ப‌தில் த‌ங்க‌ளுக்கு ந‌ம்பிக்கை இருக்கிற‌து, அப்ப‌டி என்றால் உயிர்த்தெழுந்து அவ‌ர்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள். அவ‌ர்க‌ள் உயிர்த்தெழுவ‌தே "பாவ‌ங்க‌ள் ம‌ண்ணிக்க‌ப்ப‌ட்ட‌தினால்" தான் என்று நினைவில் இருக்க‌ட்டும். மீண்டும் அவ‌ர்க‌ளை ம‌ர‌ண‌த்திற்கு உட்ப‌டுத்த‌ தேவ‌ன் எல்லாரையும் உயிர்த்தெழ‌ செய்ய‌ வேண்டிய‌ அவ‌விய‌ம் தான் என்ன‌?



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//மத்தேயு 19:16 மற்றும் லூக்கா 10:25-28ன் ப‌டி க‌ட்ட‌ளைக‌ளை கைக்கொண்டால் தான் நித்திய‌ஜீவ‌ன். இதில் த‌வ‌று ஒன்றும் இல்லையே. ஆனால் அந்த‌ க‌ட்ட‌ளைக‌ள் தான் என்ன‌வென்று பார்க்க‌வேண்டும். இயேசு கிறிஸ்து இதை யாரிட‌ம் சொல்லுகிறார் என்றும் பார்க்க‌ வேண்டும். இதை வாசித்து விட்டு ப‌ல‌ர் இன்று கிறிஸ்த‌வ‌ர்க‌ளும் இப்ப‌டியாக‌ ப‌ழைய‌ ஏற்பாட்டில் உள்ள‌ க‌ட்ட‌ளைக‌ள் (க‌ற்ப‌னைகள்) அனைத்தையும் பின்ப‌ற்ற‌ வேண்டும் என்று பொய் போத‌னைக‌ளை த‌ந்துக்கொண்டிருக்கிறார்க‌ள்.//

சகோ.பெரியன்ஸ் அவர்களே!

நித்திய ஜீவனை அடைய கற்பனைகளைக் கைக்கொள்ள வேண்டும் என்பதே எனது வாதம். “எந்தக் கற்பனைகளை” எனும் கேள்விக்கான பதிலை அப்புறம் பார்க்கலாம். இவ்வுலகில் கற்பனைகளைக் கைக்கொள்ள பிரயாசப்படாதவர்களும் நித்திய ஜீவனை அடைவார்கள் எனும் கருத்தை நீங்கள் கூறுவதால்தான் மத்தேயு 19:16 மற்றும் லூக்கா 10:25-28-ஐ மேற்கோள் காட்டியுள்ளேன்.

எபிரெயர் 8-10-ல் என்ன கூறப்பட்டுள்ளது? ஆடு மாடு பலியிடுதல் மற்றும் சடங்காச்சாரங்கள் தேவையில்லை என்றுதான் கூறப்பட்டுள்ளதேயன்றி, நீதி நியாயம் சம்பந்தமான கற்பனைகள் தேவையில்லை எனக் கூறப்படவில்லை. மேலும் புதிய உடன்படிக்கையில், தமது கற்பனைகளை இருதயத்தில் எழுதுவார் என்றும் கூறப்பட்டுள்ளது.

bereans wrote:
//மீதமானவர்கள் தேவன் பின்பு வைக்க போகும் "புதிய கற்பனைகளை" கைக்கொண்டு இந்த பூமியில் நித்திய ஜீவனை பெற்றவர்களாக இருக்க போகிறார்கள்.//

புதிய கற்பனைகள்” பற்றி எபிரெயர் புத்தகத்தில் கூறப்படவில்லை. புதிய உடன்படிக்கை பற்றி மட்டுமே கூறப்பட்டுள்ளது. “பழைய உடன்படிக்கை ஆடு மாடு ஆகியவற்றைப் பலியிடுவதை அடிப்படையாகக் கொண்டிருந்தது, புதிய உடன்படிக்கை இயேசுவின் பலியை அடிப்படையாகக் கொண்டது” எனும் உண்மையைத்தான் எபிரெயர் புத்தகம் கூறுகிறது.

மேலும் பழைய உடன்படிக்கையில் நீதி நியாயம் குறித்த கற்பனைகள் கட்டாயத்தப்பட்டன. ஆனால் புதிய உடன்படிக்கையில் கட்டாயத்தினால் அல்லாமல், மனமுவந்து அன்புக்குக் கீழ்ப்படிந்து கற்பனைகளைச் செய்யும்படி அவை இருதயத்தில் எழுதப்படும் எனக் கூறப்பட்டுள்ளது.

பழைய உடன்படிக்கை, புதிய உடன்படிக்கை எதுவானாலும் கற்பனைகளின்படி நடப்பதைப்பற்றித்தான் கூறுகின்றன.

bereans wrote:
//ப‌வுல் சொன்ன‌து எந்த‌ வித‌த்திலும் த‌வ‌று இல்லை, அவ‌ர் சொன்ன‌து தேவ‌னின் கிருபையினால் அனைவ‌ரும் உயிர்த்தெழுந்து கிறிஸ்துவின் ஆளுகையில் நித்திய‌ ஜீவ‌னை பெறுவார்க‌ள் என்ப‌தே.//

ஒரு வசனத்தைப் படிக்கையில் அதன் முன்/பின் பகுதிகளையும் படித்து தியானிப்பது அவசியம். ரோமர் 6:23-ஐ நீங்கள் குறிப்பிட்டபோது, நானுங்கூட அதன் முன்னாலுள்ள வசனத்தைப் படிக்கத்தவறியதால் சற்று குழப்பமடைந்துவிட்டேன். ரோமர் 6:23-ஐயும் அதன் முன் வசனத்தையும் சற்று படித்துப் பாருங்கள்.

ரோமர் 6:22,23 இப்பொழுது நீங்கள் பாவத்தினின்று விடுதலையாக்கப்பட்டு, தேவனுக்கு அடிமைகளானதினால், பரிசுத்தமாகுதல் உங்களுக்குக் கிடைக்கும் பலன், முடிவோ நித்தியஜீவன். பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

22-ஆம் வசனம் கூறுவதைக் கவனித்தீர்களா? பாவத்திலிருந்து விடுதலையாக்கப்பட்டு தேவனுக்கு அடிமைகளாகிறவர்களுக்குத்தான் 23-ஆம் வசனம் கூறுகிற நித்திய ஜீவன்.

ஒருவன் கிறிஸ்துவை ஏற்றுக்கொண்டு பாவமன்னிப்பு வேண்டும்போது, அவனிடம் கிறிஸ்துவினால் உண்டான கிருபை வேலைசெய்கிறது. எனவே அவன் பாவங்கள் மன்னிக்கப்பட்டு, பாவங்களிலிருந்து விடுதலையாக்கப்படுகிறான். அத்தோடு எல்லாம் முடிந்துவிடுவதில்லை. அவன் தேவனுக்கு அடிமையாக வேண்டும். அதாவது தேவன் சொல்கிற எல்லா கட்டளைகளுக்கும் கீழ்ப்படிய வேண்டும். அப்போது அவன் பரிசுத்தமாகி, முடிவில் நித்திய ஜீவனைப் பெறுவான். இதுதான் ரோமர் 6:22,23-ன் கருத்து.

bereans wrote:
//அனைவ‌ரும் உயிர்த்தெழுவார்க‌ள் என்ப‌தில் த‌ங்க‌ளுக்கு ந‌ம்பிக்கை இருக்கிற‌து, அப்ப‌டி என்றால் உயிர்த்தெழுந்து அவ‌ர்க‌ள் என்ன‌ செய்வார்க‌ள். அவ‌ர்க‌ள் உயிர்த்தெழுவ‌தே "பாவ‌ங்க‌ள் ம‌ன்னிக்க‌ப்ப‌ட்ட‌தினால்" தான் என்று நினைவில் இருக்க‌ட்டும். மீண்டும் அவ‌ர்க‌ளை ம‌ர‌ண‌த்திற்கு உட்ப‌டுத்த‌ தேவ‌ன் எல்லாரையும் உயிர்த்தெழ‌ செய்ய‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் தான் என்ன‌?//

அனைவரும் உயிர்தெழுவார்கள் என்றுதான் வசனம் கூறுகிறதேயன்றி அனைவரின் பாவங்களும் மன்னிக்கப்பட்டுத்தான் உயிர்த்தெழுவார்கள் என வசனம் கூறவில்லை.

ஆதாமின் பாவத்தால்தான் அனைவருக்கும் மரணம் வந்தது. “ஆதாமுக்குள் அனைவரும் மரித்ததைப்போல” என்றுதான் 1 கொரி. 15:22 கூறுகிறது. எனவே முதலாம் மரணம் என்பது, “அவரவர் செய்கிற பாவங்களுக்கான” மரணம் அல்ல.

கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்த்தெழுகையில் 2 காரியங்கள் நடக்கின்றன. 1. ஆதாமின் பாவம் மன்னிக்கப்படுதல். 2. கிறிஸ்துவிடம் வந்து அறிக்கையிடப்பட்ட பாவங்கள் மன்னிக்கப்படுதல். பின்வரும் வசனங்களைப் படியுங்கள்.

நீதிமொழிகள் 28:13 தன் பாவங்களை மறைக்கிறவன் வாழ்வடையமாட்டான்; அவைகளை அறிக்கை செய்து விட்டுவிடுகிறவனோ இரக்கம் பெறுவான்.

1 யோவான் 1:9 நம்முடைய பாவங்களை நாம் அறிக்கையிட்டால், பாவங்களை நமக்கு மன்னித்து எல்லா அநியாயத்தையும் நீக்கி நம்மைச் சுத்திகரிப்பதற்கு அவர் உண்மையும் நீதியும் உள்ளவராயிருக்கிறார்.

எனவே கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்த்தெழுகையில் ஆதாமின் பாவமும், அவரவர் பாவங்களில் “அறிக்கையிடப்பட்ட பாவங்களும்” மன்னிக்கப்பட்டிருக்கும். ஆதாமின் பாவத்தால் மரித்த ஒருவன், ஆதாமின் பாவம் மன்னிக்கப்பட்டாலே உயிர்த்தெழுதலுக்குத் தகுதியாகிவிடுவான்.

கிறிஸ்துவுக்குள் அனைவரும் உயிர்த்தெழுகையில், நீங்கள் சொல்கிறபடி அவர்களின் எல்லா பாவங்களும் மன்னிக்கப்பட்டிருந்தால், இறுதி நியாயத்தீர்ப்பின்போது இயேசு ஏன் பின்வருமாறு கூறவேண்டும்?

மத்தேயு 25:41-45 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.


இவ்வசனங்களைக் கவனமாகப் படித்து, விளக்கம் சொல்லுங்கள் சகோதரரே!

என் வாதத்திற்கு ஆதரவாக இன்னும் பல வசனங்களைச் சொல்லலாம்.

மத்தேயு 7:23 அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை; அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்றுபோங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன்.

பாவங்கள் மன்னிக்கப்பட்டு உயிர்த்தெழுந்தவர்களைப் பார்த்து, “அக்கிரமச்செய்கைக்காரரே” என இயேசு ஏன் கூறவேண்டும்?

மத்தேயு 18:8 உன் கையாவது உன் காலாவது உனக்கு இடறல் உண்டாக்கினால், அதைத் தறித்து எறிந்துபோடு; நீ இரண்டு கையுடையவனாய், அல்லது இரண்டு காலுடையவனாய் நித்திய அக்கினியிலே தள்ளப்படுவதைப்பார்க்கிலும், சப்பாணியாய், அல்லது ஊனனாய், நித்திய ஜீவனுக்குள் பிரவேசிப்பது உனக்கு நலமாயிருக்கும்.

எல்லோரும் உயிர்த்தெழுகையில் அவர்களின் அனைத்து பாவங்களும் மன்னிக்கப்படுமென்றால், இவ்வுலகில் பாவம் செய்வதற்குக் காரணமான உடலுறுப்புகளை ஏன் தறிக்கவேண்டும்?

அவ்வாறு தறிக்காமல் பாவஞ்செய்தவன், நித்திய ஜீவனுக்கு அனுமதிக்கப்படாமல், நித்திய அக்கினியில் தள்ளப்படுவான் என்றல்லவா வசனம் கூறுகிறது? அவ்வாறெனில் அவன் பாவம் மன்னிக்கப்படாத நிலையில் இருப்பான் என்றுதானே அர்த்தம்?


-- Edited by anbu57 on Friday 26th of February 2010 06:03:00 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

சகோ அன்பு அவர்களே,

 நாம் மாற்றி மாற்றி நமக்கு சாதகமான வசனங்களை கான்பித்து விவாதத்தை வேண்டும் என்றால் வளர்க்கலாம், ஆனால் நம் புரிந்துக்கொள்ளுதலை விட்டு கொடுப்பதில்லையே.

பாவத்தின் சம்பளம் மரணம் என்றால், பாவத்தோடு ஒரு மனிதன் எப்படி உயிர்த்தெழ முடியும். பாவம் மண்ணிக்கப்பட்டால் தானே உயிர்த்தெழுதல் நடக்க முடியும். இது நேரடியாக வசனமாக கொடுக்காமல் இருந்தாலும், கொடுக்கப்பட்ட வசனங்கள் மூலமாக புரிந்துக்கொள்ள வேண்டியதாக இருக்கிறது.

எடுத்துக்காட்டு,
 "இரத்தம் சிந்துதல் இல்லாமல் பாவ மன்னிப்பு இல்லை" , அவ‌ர் ந‌ம் பாவ‌ங்க‌ளுக்கு மாத்திர‌ம் அல்ல‌, ச‌ர்வ‌ லோக‌த்தின் பாவ‌ங்க‌ளையும் நிவ‌ர்த்தி செய்கிற‌ ப‌லியாயிருக்கிறார்" "எல்லா ம‌னித‌ர்க‌ளுக்காக‌வும் த‌ம்மை மீட்கும் பொருளாக‌ கொடுத்தார்" போன்ற‌ வ‌ச‌ன‌ங்க‌ள் வைத்து, உயிர்த்தெழுத‌ல் ந‌ட‌க்க‌ வேண்டும் என்றால் பாவ‌ங்க‌ள் ம‌ண்ணிக்க‌ ப‌ட‌ வேண்டும் என்றே அர்த்த‌ம் ஆகிற‌து. இல்லை என்றால் இயேசு கிறிஸ்து ச‌ர‌வ‌லோக‌த்திற்கும் ம‌ரித்த‌து வீனாக‌ இருக்குமே!!

மேலும் "அக்கிர‌ம‌ செய்கைக்கார‌ர்க‌ளே" உள்ள‌ வ‌ச‌ன‌ம் அவ‌ர்க‌ள் உயிர்த்தெழுந்த‌ பிற‌கு உள்ள‌ காரிய‌ம் அல்ல‌, மாறாக‌ அவ‌ர்க‌ள் இப்பொழுது செய்த‌ காரிய‌த்தின் கூலி கேட்கும் போது அவ‌ர்க‌ளுக்கு கிடைக்கும் ப‌தில் அது. ஏனென்றால்; இப்ப‌டி பிசாசுக‌ளை துற‌த்திய‌வ‌ர்க‌ள், இயேசு கிறிஸ்துவின் நாம‌த்தில் அற்புத‌ங்க‌ளை செய்த‌வ‌ர்க‌ள் (!!), ஊழிய‌ம் என்கிற‌ பெய‌ரின் ஊரை ஏமாற்றிய‌வ‌ர்க‌ள், இப்ப‌டி எல்ல்லோரும் ப‌ர‌லோக‌ ஆசையில் இருக்கிற‌வ‌ர்க‌ள். ஆனால் ப‌ர‌லோக‌ம் கிடைக்காம‌ல் இந்த‌ பூமியில் உயிர்த்தெழுந்த‌ பிற‌கு அவ‌ர்க‌ளிட‌ம் ந‌ட‌க்கும் ஒரு ச‌ம்பாஷ‌னை தான் இந்த‌ "அக்கிர‌ம‌ செய்கைக்கார‌ர்க‌ளே" வ‌ச‌ன‌ம். ப‌ற் க‌டிப்பு, அழுகை போன்ற‌வைக‌ள் இவ‌ர்க‌ளுக்கு தான் நேரிடும்.

ஒருவ‌ன் இயேசு கிறிஸ்துவின் ப‌லியை த‌னிப்ப‌ட்ட‌ முறையில் விசுவாசித்தால் தான் நித்திய‌ ஜீவ‌ன் என்றால், அதிக‌ப‌டியான‌ ம‌க்க‌ள் அதை இழ‌ந்து போவார்க‌ள். இயேசு கிறிஸ்து சிந்திய‌ இர‌த்த‌ம் வீனாகி போகும். அந்த‌ தேவ‌ தூத‌ன் அறிவித்த‌ ந‌ற்செய்தியான‌ "எல்லா ஜ‌ன‌த்திற்கும் சுவிசேஷ‌ம்" என்ப‌தெல்லாம் பொயாகி போகுமே. ஏனென்றால் இயேசு கிறிஸ்துவின் உன்ன‌த‌மான‌ இந்த‌ ப‌லியை தெரியாம‌லேயே ப‌ல‌ கோடி ம‌க்க‌ள் கூட்ட‌ம் ம‌ரித்திருக்கிற‌து. இவ‌ர்க‌ளுக்கு என்ன‌ நேரிடும் என்று கேட்டால், அத‌ற்கு "ந‌ர‌க‌த்தை ந‌ம்புவோர்" கூட்ட‌த்தாரிட‌ம் ப‌தில் இல்லையே!! ஆனால் "ந‌ர‌க‌ம்" என்று கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கும் ஒரு சில‌ வார்த்தைக‌ளை பிடித்துக்கொண்டு கிறிஸ்துவின் மேன்மையான‌ ப‌லியை கொச்சை ப‌டுத்துகிறார்க‌ள்!!

நீதிமான் ஒருவ‌னாகிலும் இல்லை என்று வ‌ச‌ன‌ம் சொல்லுவ‌தால், ப‌ர‌லோக‌ம் செல்ல‌ எத்துனை பேர் த‌ங்க‌ளின் கைக‌ளை கால்க‌ளைம் க‌ண்க‌ளை, பிற‌ உறுப்புக‌ளை வெட்டி போட்டிருக்கிறார்க‌ள் என்று சொல்ல‌ முடியுமா? அந்த‌ வ‌ச‌ன‌ம் எத‌ற்கு கொடுக்க‌ப்ப‌ட்டிருக்கிற‌து என்று புரிய‌வில்லையா? அப்ப‌டியே பிற‌னின் க‌ண‌க‌ளில் இருக்கும் துரும்பை எடுக்க‌ சொல்லும் முன்பு உங்க‌ள் க‌ண்க‌ளின் உத்த‌ர‌த்தை எடுத்து போட்டு என்று சொன்னால் மெய்யாலுமே ந‌ம் க‌ண்க‌ளில் இப்ப‌டி ப‌ட்ட‌து இருக்கிற‌து என்றா அர்த்த‌ம்?!

இயேசு கிறிஸ்துவின் இர‌த்த‌ம் சிந்துத‌லும் அதினால் உண்டாகும் ம‌க‌த்துவ‌மான‌ காரிய‌ங்க‌ளை த‌விர‌, "பொய் சொல்லாதே, திருடாதே, விப‌ச்சார‌ம் செய்யாதே, இச்சியாதே" இப்ப‌டியான‌ போத‌னைக‌ள் இன்று எந்த‌ ம‌த‌த்தில் இல்லை என்று சொல்லுங்க‌ள். இத்த‌கைய‌ க‌ற்ப‌னைக‌ள் எல்லா ம‌த‌த்தின‌ரிட‌த்திலும் பிர‌ச‌ங்கிக்க‌ப்ப‌டுகிற‌தே!! கிறீஸ்த‌வ‌த்திலேயெ இத்துனை குழ‌ப்ப‌ங்க‌ள் வைத்துக்கொண்டு இவ‌ர்க‌ள் ஊருக்கு ஊழிய‌ம் என்கிற‌ பெய‌ரில் உப‌தேச‌ம் செய்வ‌து தான் கொஞ்ச‌ம் ஓவ‌ராக‌ இருக்கிற‌து. இயேசு கிறிஸ்துவின் இர‌த்த‌ம் சிந்துத‌லினால் உண்டாகும் ப‌ய‌ன் கிறிஸ்தவ ஊழியர்களுக்கே தெரியாம‌ல் இவ‌ர்க‌ள் என்ன‌ ந‌ற்செய்தி சொல்லுகிறார்க‌ள். ந‌ர‌க‌ம் என்கிற‌ வார்த்தையை காண்பித்து ஆதியில் க‌த்தோலிக்க‌ ச‌பை எப்ப‌டி ச‌ம்பாதித்த‌தோ, அதையே இன்று காளான் போல் முழைத்த‌ குடிசை ச‌பையும் போதிக்கிற‌து. இது என்ன‌ ந‌ற்செய்தியா!?

ந‌ற்செய்தி என்றால் அனைவ‌ருக்கும் நித்திய‌ ஜீவ‌ன் தான். எல்லாருக்கும் தான் நித்திய‌ ஜீவ‌ன் இருக்கிற‌தே என்று யாரையும் பாவ‌ம் செய்யும்ப‌டியாக‌ நான் சொல்ல‌வில்லை. அல்ல‌து ந‌ர‌க‌ம் இருக்கிற‌து என்று நீங்க‌ள் மிர‌ட்டினாலும், பாவ‌ம் செய்வ‌து குறைய‌வில்லை.கிறிஸ்துவின் போத‌னைக‌ளை அப்ப‌டியே சொல்லுவோமே.!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது...." யோவான் 14:17

நாம்  என்னதான் தலைகீழாக நின்று நமது 'சத்தியங்களை' 'உலகத்திற்கு' போதித்தாலும் அது பெற்றுக்கொள்ள மாட்டாது. ஏனென்றால் இப்போதே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமே அல்ல. இப்போது ஆளுகைக்கு என்று தெரிந்துகொள்ளப்பட்ட சிறுமந்தைக்கு  மட்டுமே தேவன் 'பயிற்சி' கொடுத்துக் கொண்டிருக்கிறார். மேலும் புதிய ஏற்பாடு கற்பிப்பது வெறும் 'நீதிமானாக்' இருப்பது மட்டும் அல்ல; கிறிஸ்துவுக்கு ஒப்பான ஒரு பலியின் ஜீவியத்தைத்தான் அது வலியுறுத்துகிறது.

அன்பு அவர்கள் சொல்லும் நீதிநியாயங்களைக் காட்டிலும் அதிகமாக செய்யும் கிறிஸ்துவை அறியாக அநேகம் பெர் உண்டு. எல்லாரையும் அவரே கீழ்ப்படியாமைக்குள் அடைத்துப்போட்டார், சிருஷ்டி சுய இஷ்டத்தினாலே அல்ல அவராலேயே மாயைக்குக் கீழ்ப்பட்டிருக்கிறது என்று வசனங்கள் தெளிவாக இருக்கும் போது. நான் நம் இஷ்டப்படி சிருஷ்டியை அந்த மாயையிலிருந்து எப்படி வெளிக்கொண்டுவர முடியும்?

மேலும் கற்பனைகள் என்று எதைச்சொல்லுகிறார் என்றும் தெரியவில்லை. தேவனை அன்பு செய்; அயலானை அன்பு செய். இதுவே கற்பனைகளும் நியாயப்பிரமாணங்களுமாம் என்று கிறிஸ்து மிகச்சுருக்கமாக விளக்கிவிட்டார். அதைச் செய்வோமே.

"பாவத்தின் சம்பளம் மரணம்(நித்திய மரணம், தற்காலிக மரணம் அல்ல); தேவனுடைய கிருபை வரம்(Gift of Grace) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்."

கிருபை வரத்தை யாரும் பிரயாசப்பட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமென்றால் அப்படிச் செய்வதாகக் காண்பித்துக்கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்வதாகக் காண்பித்துக்கொள்பவர்கள்தான், "கடைசியில் வந்தவனுக்கும் அதே சம்பளமா?", "உம்முடைய நாமத்தினால் தீர்க்கதரிசனம்(சுவிசேஷம், கற்பனைகளைப் போதித்தல்) உரைத்தோமல்லவா?" எங்களுக்கு எதுவும் ஸ்பெஷல் கிடையாதா என்று அங்கலாய்ப்பார்கள் என்பது மட்டும்
நிச்சயம். "அக்கிரம செய்கைக்காரரே என்னை விட்டு அகன்று போங்கள்" என்பதே அவர்களுக்கு கிடைக்கப்போகும் பதில்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//"உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது...." யோவான் 14:17

நாம்  என்னதான் தலைகீழாக நின்று நமது 'சத்தியங்களை' 'உலகத்திற்கு' போதித்தாலும் அது பெற்றுக்கொள்ள மாட்டாது. ஏனென்றால் இப்போதே பெற்றுக்கொள்ள வேண்டும் என்று அவசியமே அல்ல.//


நீங்கள் சொல்கிற அந்த ‘உலகத்தில்’ யாரெல்லாம் அடக்கம் என்பதை நீங்கள் அறிவீர்களா?

நீங்கள் ‘உலகத்தில்’ இருக்கிறீர்களா, ‘உலகத்திற்கு’ வெளியே இருக்கிறீர்களா? ‘உலகத்திற்கு’ வெளியே இருக்கிறீர்களென்றால் எப்படி/எப்போது ‘உலகத்திற்கு’ வெளியே வந்தீர்கள்?

‘உலகம்’ சத்திய ஆவியானவரைக் காணாமலும் அறியாமலும் இருக்கிறபடியால்தான் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாதிருக்கிறது. ‘உலகத்திலுள்ள’ ஒருவன், எப்போது சத்திய ஆவியானவரைக் காணவும் அறியவும் வாஞ்சிக்கிறானோ அப்போதிலிருந்து அவனும் சத்திய ஆவியானவரைப் பெறத் தொடங்கிவிடுவான். இது வேதவாக்கு.

யோவான் 7:37,38 பண்டிகையின் கடைசிநாளாகிய பிரதான நாளிலே இயேசு நின்று, சத்தமிட்டு: ஒருவன் தாகமாயிருந்தால் என்னிடத்தில் வந்து, பானம்பண்ணக்கடவன். வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ, அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்றார்.

லூக்கா 11:10,13 கேட்கிறவன் எவனும் பெற்றுக்கொள்ளுகிறான்; தேடுகிறவன் கண்டடைகிறான்; தட்டுகிறவனுக்குத் திறக்கப்படும். பொல்லாதவர்களாகிய நீங்கள் உங்கள் பிள்ளைகளுக்கு நல்ல ஈவுகளைக் கொடுக்க அறிந்திருக்கும்போது, பரமபிதாவானவர் தம்மிடத்தில் வேண்டிக்கொள்ளுகிறவர்களுக்குப் பரிசுத்த ஆவியைக் கொடுப்பது அதிக நிச்சயம் அல்லவா?

இவ்வசனங்கள் உலகத்தானுக்கு, உலகத்தானல்லாதவனுக்கு என இயேசு பிரித்துச் சொல்லவில்லை. இயேசுவின்மீது விசுவாசமாயிருப்பவன் எவனாக இருந்தாலும் அவன் உள்ளத்திலிருந்து ஜீவத்தண்ணீருள்ள நதிகள் ஓடும் என்பதே வேதவாக்கு. அவ்வாறே வாஞ்சையோடு கேட்கிற எவனுக்கும் பிதா பரிசுத்த ஆவியை நிச்சயமாகக் கொடுப்பார் என்பதே வேதவாக்கு.

soulsolution wrote:
//மேலும் கற்பனைகள் என்று எதைச்சொல்லுகிறார் என்றும் தெரியவில்லை. தேவனை அன்பு செய்; அயலானை அன்பு செய். இதுவே கற்பனைகளும் நியாயப்பிரமாணங்களுமாம் என்று கிறிஸ்து மிகச்சுருக்கமாக விளக்கிவிட்டார். அதைச் செய்வோமே.//

இயேசு சுருக்கிச் சொன்ன 2 கற்பனைகளைக் கைக்கொண்டால் போதும் என நீங்கள் சொல்கிறீர்கள். இதை நான் மறுக்கவில்லை. ஆனால் 2 கற்பனைகளாகச் சுருக்கிச் சொன்ன அதே இயேசுதான் மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் பல கற்பனைகளைக் கூறியுள்ளார். அத்தோடு பின்வருமாறும் கூறியுள்ளார்.

மத்தேயு 5:19 இந்தக் கற்பனைகள் எல்லாவற்றிலும் சிறிதானதொன்றையாகிலும் மீறி, அவ்விதமாய் மனுஷருக்குப் போதிக்கிறவன் பரலோகராஜ்யத்தில் எல்லாரிலும் சிறியவன் என்னப்படுவான்; இவைகளைக் கைக்கொண்டு போதிக்கிறவனோ, பரலோகராஜ்யத்தில் பெரியவன் என்னப்படுவான்.

இயேசு சுருக்கிச் சொன்ன 2 கற்பனைகளை நீங்கள் தெரிந்துகொண்டீர்கள், அது உங்கள் விருப்பம். இயேசு விரிவாகச் சொன்ன கற்பனைகளை நான் தெரிந்து கொண்டேன். இது எனது விருப்பம். நான் இப்படிச் செய்யக்கூடாது, 2 கற்பனைகளைத்தான் தெரிந்துகொள்ள வேண்டும் என்று சொல்கிற வசனம் இருந்தால் சொல்லுங்கள். நானும் உங்கள் வழிக்கு வந்துவிடுகிறேன்.

soulsolution wrote:
//"பாவத்தின் சம்பளம் மரணம்(நித்திய மரணம், தற்காலிக மரணம் அல்ல); தேவனுடைய கிருபை வரம்(Gift of Grace) நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்.".//

அன்பான சகோதரரே! நீங்கள் சொல்வதுபோல் பாவத்தின் சம்பளம் நித்திய மரணமாக இருந்தால் நாம் யாருமே உயிர்த்தெழ முடியாதே? நம் பாவத்தைச் சுமந்த இயேசுவும்கூட உயிர்த்தெழுந்திருக்க முடியாதே?

பாவத்தின் சம்பளம் மரணம் என்று மட்டுந்தான் வசனம் கூறுகிறது. அதை தற்காலிக மரணமாக்குவதும் நித்திய மரணமாக்குவதும் தேவனின் கைகளில் உள்ளது.

ஆதாமின் பாவத்தின் சம்பளமாக நம் எல்லோர் மீதும் வந்த மரணத்தை, இயேசுவின் பாவநிவாரண பலியால் தேவன் அதை தற்காலிக மரணமாக்கினார். எனவேதான் ஆதாமுக்குள் மரிக்கிற நாம் அனைவரும் கிறிஸ்துவுக்குள் உயிர்ப்பிக்கப்படப்போகிறோம்.

நம் சுயபாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டினால், அப்பாவங்களும் நமக்கு மன்னிக்கப்படத்தான் செய்யும். ஆனால், தேவனுக்கு எதிர்த்து நின்று, அவரது வசனங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், நம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைப் பெறுவோம். அந்த மரணத்திலிருந்து நாம் மீண்டும் உயிர்த்தெழமுடியாதபடி தேவன் அதை நித்திய மரணமாக்கிவிடுவார். இதைத்தான் 2-ம் மரணம் என வெளிப்படுத்தல் புத்தகம் கூறுகிறது.

soulsolution wrote:
//கிருபை வரத்தை யாரும் பிரயாசப்பட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லை. வேண்டுமென்றால் அப்படிச் செய்வதாகக் காண்பித்துக்கொள்ளலாம். ஆனால் அப்படிச் செய்வதாகக் காண்பித்துக்கொள்பவர்கள்தான், "கடைசியில் வந்தவனுக்கும் அதே சம்பளமா?", "உம்முடைய நாமத்தினால் தீர்க்கதரிசனம்(சுவிசேஷம், கற்பனைகளைப் போதித்தல்) உரைத்தோமல்லவா?" எங்களுக்கு எதுவும் ஸ்பெஷல் கிடையாதா என்று அங்கலாய்ப்பார்கள் என்பது மட்டும்
நிச்சயம்.//


கிருபை வரத்தை யாரும் பிரயாசப்பட்டு சம்பாதிக்க வேண்டிய அவசியமில்லைதான். ஆனால் அக்கிருபை எவ்விஷயத்தில் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும். ஆதாமின் பாவத்தால் வந்த மரணத்திலிருந்து நம்மை விடுவிப்பதுதான் அக்கிருபை. இக்கிருபையைப் பெற நாம் எதுவும் செய்யவேண்டியதில்லைதான். நம் பாவங்களிலிருந்து மன்னிப்பு பெறுவதற்கு, நம் பாவங்களை உணர்ந்து அறிக்கையிட்டால் மட்டும் போதாது; பாவங்களை விட்டுவிடவும் வேண்டும். அதாவது தீமைகளைச் செய்யாமல் நன்மைகளைச் செய்யவேண்டும்.

மாறாக, நன்மை செய்யத்தவறினால், இரக்கமில்லாதவனுக்கு இரக்கமில்லா நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என வசனம் கூறுகிறபடிதான் நடக்கும்.

//“கடைசியில் வந்தவனுக்கும் அதே சம்பளமா?”// உங்களின் இக்கூற்று சம்பந்தமான உதாரணத்தை நீங்கள் தவறாகப் புரிந்துகொண்டுள்ளீர்கள். இயேசு சொன்ன அந்த உதாரணத்தில் (மத்தேயு 20:1-16) காலை முதல் மாலை வரை வந்த ஊழியக்காரர்கள் அனைவருமே வேலை செய்தவர்கள்தான் (கிரியை உள்ளவர்கள்). அதாவது யாருமே வேலை செய்யாதவர்கள் அல்ல. ஒருவன் அதிக நேரம் வேலை செய்தான், மற்றொருவன் மிகக் குறைந்த நேரம் வேலை செய்தான், இதுதான் அவர்களிடையே வித்தியாசம்.

எல்லோருக்கும் ஆரம்பத்தில் பேசப்பட்ட கூலி கொடுக்கப்பட்டது. வேலை செய்யாமல் கூலி இல்லை என்பதை தாங்கள் அறிவீர்கள். (No Work, No Pay). இக்கொள்கைப்படிதான் அவர்களுக்குக் கூலி கொடுக்கப்பட்டதேயன்றி, வேலை செய்யாத யாருக்கும் அங்கு கூலி கொடுக்கப்பட்டதாக வசனம் கூறவில்லை.

இவ்வுதாரணத்தின் கருத்தென்ன?

நம்மில் சிலர் இள வயதிலேயே மனந்திரும்பி தேவனின் கற்பனைகளைக் கைக்கொண்டிருக்கலாம்; சிலர் வயதான காலத்தில்கூட மனந்திரும்பி கற்பனைகளைக் கைக்கொள்ளலாம். ஆனால் எந்த வயதில் மனந்திரும்பினாலும், ஒரே கூலியாக நித்திய ஜீவன் கொடுக்கப்படும் என்பதே அவ்வுதாரணத்தின் கருத்தாக நான் புரிந்துகொண்டது. இக்கருத்தில் ஒருவேளை சற்று மாறுபாடு இருக்கலாம். ஆனால் நீங்கள் நினைக்கிற கருத்தாக நிச்சயம் இருக்காது என என்னால் உறுதியாகச் சொல்லமுடியும்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"உலகம் அந்த சத்திய ஆவியானவரைக் காணாமலும், அறியாமலும் இருக்கிறபடியால் அவரைப் பெற்றுக்கொள்ள மாட்டாது...." யோவான் 14:17

உலகம் சத்தியத்தைப் பெற்றுக்கொள்ளவே மாட்டாது; சத்தியம் உலகத்திற்கு அல்லவே அல்ல. அப்படியிருக்கும் பட்சம் அது ஒரு மாபெரும் தோல்வியாகும்.

நான் உலகத்தில் இருக்கிறேனா? நீங்கள் மாபெரும் நீதிமானாக, வாழும் கிறிஸ்துவாக இருக்கிறீர்களா இல்லையா என்பது நமக்கே தெரியும். நான் வேதத்தை ஆராய்ந்து அறிய முயலும் ஒரு மனிதன் அவ்வளவே. என்னுடைய கருத்துக்களை சுதந்திரமாக வசன ஆதாரங்களுடன் பதித்துக்கொண்டிருக்கிறேன்.

உயிர்தெழுதல்தான் கிறிஸ்துவினால் உண்டான கிருபை வரம்.  புதிய ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள காரியங்கள் 'புதுசிருஷ்டி' க்கான, சபைக்கான இயல்புகள். அதில் உள்ள ஒன்றும் உலகத்திற்குப் பொருந்தாது. உலகத்திலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட சபைக்கான காரியங்களை கைக்கொள்ள உலகத்தைப் பணிக்கமுடியாது. சபை வேறு, உலகம் வேறு, உலகம், இப்போதுள்ள இப்பொல்லாத பிரபஞ்சம் எப்படி இருக்கும் என்று தேவன் தீர்மானித்தபடிதான் இருக்கிறது.

நித்திய ஜீவனை யாரும் சுயநீதியினால் வந்த கிரியைகளினால் சுதந்தரிக்க முடியாது. அது எல்லார்மேலும் 'தானாகவே' பலிக்கும். அதுதான் தேவனுடைய அன்பு. அதனுடைய அகல, ஆழ, நீள, உயரத்தை அறியாததனால்தான் நித்திய ஜீவனை சுதந்தரிக்க பாவிகளாகிய நாம் கடும்பிரயாசப்படுகிறோம்(அநாவசியமாக).

கிருபையை விருதாவாக எண்ணுகிறவர்கள்தான் இன்னும் நியாயப்பிரமாணத்தைப் போதிக்கும் கள்ள சகோதரர்களாக இருக்கிறார்கள். பரிசுத்தவானாய் ஜீவிப்பது வேறு, நன்மை செய்து தன்னை 'நீதிமானாய்' காண்பிப்பது வேறு. அதைத்தான் அந்தப் பணக்கார இளைஞன் சொன்னதைக் கேட்டு இயேசு "உன்னுடையதை எல்லாம் விற்று தரித்திரருக்குக் கொடுத்துவிட்டு என்னைப் பின் செல்" என்றபோது பின்வாங்கிப்போனான். இன்றைக்கும் நியாயப்பிரமாணங்களைக் கைக்கொள்ளச் சொல்லும் யாரிடம் வேண்டுமானாலும் இதைச் சொல்லித்தான் பாருங்களேன். ஒருவன் கூட முன்வரமாட்டான். எதையாவது சொல்லி சமாளிப்பானேதவிர த்ன்னுடையதை விற்று தரித்திரருக்கு சத்தியமாகத் தரமாட்டான். தரித்திரர் மேல் கரிசனையுள்ளவன் தனக்கென்று எதுவுமே வைத்திருக்கக் கூடாது.

மாம்சமாகிய யாவர்மேலும் என் ஆவியை ஊற்றுவேன் என்ற வசனம் அவன் கேட்டாலும், கேட்காவிட்டாலும் ஊற்றப்படும், அப்போது பூமி கர்த்தரை அறிகிற அறிவினால் நிறைந்திருக்கும். இப்போதல்ல. இப்போது உலக ஆவியில் நிறைந்திருக்கும் ஜனங்கள் அப்போது பரிசுத்த ஆவியில் நிறைந்திருப்பார்கள். அன்பு கோலோச்சும். அதுவே தேவனுடைய இராஜ்ஜியம். துளிகூட குற்றம் குறைவில்லாத ஆதாமின் ஆதி நிலைக்கு எல்லா மனிதர்களும் மாறும் காலம் வரும். வரப்போகும் ஆயிரம் வருட ஆட்சியில் இவையெல்லாம் சம்பவிக்கும்.

எல்லாரும் இரட்சிக்கப்படவும் (கவனிக்க முதலில் இரட்சிப்பு) கர்த்தரை அறிகிற அறிவை அடையவும்(கீழ்ப்படிதல்) அவர் சித்தமுள்ளவராய் இருக்கிறபடியால். அவரது இந்த சித்தம் பூரணமாய் நிறைவேறும். அப்போது சாத்தானே இல்லாத நிலையில் கீழ்ப்படிபவர்களைப் பார்த்துதான் இப்போது 'கீழ்ப்படிவதாக' எண்ணிக்கொண்டிருப்பவர்கள் கேட்பார்கள், "நாங்கள் அப்போதே கீழ்ப்படிந்தோமே, இவர்கள் கடைசியில் வந்து இப்போதுதானே கீழ்ப்படிகிறார்கள் இவர்களுக்கும் நித்திய ஜீவனா(அதே கூலியா?) என்று அங்கலாய்ப்பார்கள்.

உயிர்த்தெழுதலுக்குப் பின் மனிதனுக்கு ஒரே ஒரு வாய்ப்புதான் உள்ளது அது ஜீவனை நித்தியமாக கிருபையாக பெற்றுக்கொள்ளும் வாய்ப்பு. வேறு எந்த வாய்ப்பையும் தெரிந்துகொள்ள அவனுக்கு வாய்ப்பே இல்லை. ஒருவனும் கெட்டுப்போவது(செத்துப்போவது) தேவனுடைய சித்தமல்ல.

அன்பு அவர்கள் "நான் அதைக்கைக்கொள்கிறேன்; இதைக்கைக்கொள்கிறேன். நான் அவனைப் போல இல்லை..." என்கிறார்.

நான் "நான் பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று கதறுகிறேன்.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//தேவனை அன்பு செய்; அயலானை அன்பு செய். இதுவே கற்பனைகளும் நியாயப்பிரமாணங்களுமாம் என்று கிறிஸ்து மிகச்சுருக்கமாக விளக்கிவிட்டார். அதைச் செய்வோமே.//

//நான் "நான் பாவி என்மேல் இரக்கமாயிரும்" என்று கதறுகிறேன்.//


அன்பான சகோதரரே! நியாயப்பிரமாணங்களும் தீர்க்கதரிசனங்களும் அடங்கிய 2 பிரதான கற்பனைகளைக் கைக்கொள்வதாக கூறுகிறீர்கள். ஆனால் உங்களை பாவி என்றும் கூறுகிறீர்கள். இது எப்படி சகோதரரே?

தேவனிடம் அன்பு கூருகிற நீங்கள் அவரது குமாரனாகிய இயேசுவிடமும் அன்புகூரத்தான் செய்வீர்கள். இயேசுவிடம் அன்பு கூர்ந்தால், பின்வரும் வசனத்தின்படி அவரது கற்பனைகளைக் கைக்கொள்வீர்கள்.

யோவான் 14:15 நீங்கள் என்னிடத்தில் அன்பாயிருந்தால் என் கற்பனைகளைக் கைக்கொள்ளுங்கள்.

பின்வரும் வசனங்களையும் படியுங்கள்.

1 யோவான் 2:3,4 அவருடைய கற்பனைகளை நாம் கைக்கொள்ளுகிறவர்களானால், அவரை அறிந்திருக்கிறோமென்பதை அதினால் அறிவோம். அவரை அறிந்திருக்கிறேனென்று சொல்லியும், அவருடைய கற்பனைகளைக் கைக்கொள்ளாதவன் பொய்யனாயிருக்கிறான், அவனுக்குள் சத்தியமில்லை.

இனியும், இயேசுவின் கற்பனைகள் வேண்டாம், அவற்றைக் கைக்கொள்ளவும் வேண்டாம்; கிருபை மட்டும் போதும் என்றுதான் சொல்லப்போகிறீர்களா?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"வேதவாக்கியம் சொல்லுகிறபடி என்னிடத்தில் விசுவாசமாயிருக்கிறவன் எவனோ,"

"எவன்" ஒருவனாவது  வேதவாக்கியத்தின்படி விசுவாசமாக இருக்கிறான் என்று கான்பியுங்கள்!! இயேசு கிறிஸ்து யார் என்றே தெரியாதவர்கள் சபை நடத்தி வரும்போது, அவர்கள் காண்பிக்கும் விசுவாசம் மாத்திரம் எப்படி உண்மையானதாக இருக்க முடியும்!! இவர்களை உலகத்தார் என்று சொல்லுவதில் ஒரு தவறும் இல்லை, ஏனென்றால் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு இயேசு கிறிஸ்து ஒரு கடவுள் என்பது போல் தான் சபையில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கான நிலை. இவர்களே உலகத்தார்!!

தாங்கள் குறிப்பிட்ட வசனத்தில் படி வாஞ்சையோடு கேட்கட்டும், ஆனால் எதை கேட்க்கிறோம் என்கிற அறிவு இல்லாமல் கேட்பதினால் எதை பெற்றுக்கொள்கிறோம் என்று கூட தெரியாமல் இருக்கிறார்களே!! ஒவ்வொரு சபையிலும் ஒவ்வொரு கோட்பாடுகளை சொல்லிக்கொடுத்து, கேட்க சொன்னால் யார் எதை தான் கேட்பது. முதலாவது தேவன் யார், கிறிஸ்து யார் பரிசுத்த ஆவி என்றால் என்ன என்று தெரியாதவர்கள் வான்ஞ்சையோடு (!!) எதை கேட்பார்கள்?

இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை "கொலை செய்யாதிருப்பாயாக" என்பது, ஆனால் இயேசு கிறிஸ்து சொன்னதோ, "தன் சகோதரனை நியாயம் இல்லாமல் கோபித்துக்கொள்பவன நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்" என்று (மத். 5:21,22). இரண்டுமே கட்டளைகள் அல்லது நீங்கள் எழுதியது போல் கற்பனைகள் தான், இதிலிருந்து எதை தாங்கள் பின் பற்றுகிறீர்கள்!! அப்படி என்றால் தாங்கள் கோபம் கொண்டதே இல்லையா? அல்லது தாங்கள் கோபம் கொண்டால் அது "நியாயமான" கோபம் என்று தீர்மானித்து அந்த கோபம் சரிதான் என்று முடிவு செய்கிறீர்களா? கோபிப்பதையே கொலைக்கு ஒப்பீட்டு பேசுகிறார் இயேசு கிறிஸ்து, சரி இதை பின் பற்றலாம என்றால் சிலர் அப்படி என்றால் கொபித்துக்கொள்ள கூடாது, ஆனால் கொலை செய்யலாமா? என்று கேட்க்கிறார்களே!!

இயேசு கிறிஸ்து மத் 5,6,7ல் உள்ள கட்டளைகளை இன்று கிறிஸ்தவர்கள அல்லாதவர்களும் தான் பின் பற்றுகிறார்களே, நீங்கள் மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்? அப்படி என்றால் செயலின் படி எல்லாரும் ஒன்று தானே!! ஆனால் இது உங்களின் செயல்களானதில்லை, அவரின் இலவச ஈவு என்று சொல்லியிருக்கிறதே. கிறிஸ்துவை தெரியாதவர்கள் இதே செயல்கள் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் பேய் பிடித்தவர்கள், பிசாசு பிடித்தவர்கள் என்று ஒதுக்கப்படுகிறார்கள், அதே செய்லகளை கிறிஸ்தவன் என்று செய்தால் பரிசுத்த ஆவியினால் செய்கிறவனா? என்ன நியாயம் இது?

நித்தியமான மரணம் தற்காலீகமான மரணமாக மாறிய பிறகு தான் மரணத்தை நித்திரைக்கு ஒப்பீட்டு இயேசு கிறிஸ்துவும் சரி அப்போஸ்தலர்களும் சரி சொல்லியிருக்கிறார்க‌ள். ப‌ழைய‌ ஏற்பாட்டில் ஒரு சில‌ர் இந்த‌ இர‌க‌சிய‌த்தை தெரிந்திருந்தார்க‌ள், அவ்வ‌ள‌வே.

"நம் சுயபாவங்களை அறிக்கையிட்டு மன்னிப்பு வேண்டினால், அப்பாவங்களும் நமக்கு மன்னிக்கப்படத்தான் செய்யும். ஆனால், தேவனுக்கு எதிர்த்து நின்று, அவரது வசனங்களுக்குக் கீழ்ப்படிய மறுத்தால், நம் பாவத்தின் சம்பளமாகிய மரணத்தைப் பெறுவோம். அந்த மரணத்திலிருந்து நாம் மீண்டும் உயிர்த்தெழமுடியாதபடி தேவன் அதை நித்திய மரணமாக்கிவிடுவார். இதைத்தான் 2-ம் மரணம் என வெளிப்படுத்தல் புத்தகம் கூறுகிறது."

உங்களுக்கு மாத்திர‌மில்லை, உல‌க‌த்தில் இருக்குக்ம் ஒவ்வொருத்த‌ருக்காக‌வும் இயேசு கிறிஸ்து ம‌ரண‌த்தை ருசி பார்த்திருப்ப‌தால், உல‌கில் இருப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் உயிர்த்தெழுவார்க‌ள். பாவ‌ம் இல்லாவிட்டால் தான் உயிர்த்தெழுத‌ல் இருக்க‌ முடியுமே த‌விர, பாவ‌த்தோடு அல்ல‌, ஏனென்றால் பாவ‌ம் ம‌ர‌ண‌த்தை தான் கொண்டு வ‌ர‌ முடியுமே த‌விர‌ உயிர்த்தெழுத‌லை அல்ல‌. மேலும் இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்ப‌தை குறித்து வெளிப்ப‌டுத்தின‌ புஸ்த‌க‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து என்ன‌வென்றால், "அப்பொழுது ம‌ர‌ண‌மும் பாதாள‌மும் அக்கினிக்க‌ட‌லிலே த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ன‌, இது இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம்." வெளி. 20:14. இத‌ற்கு மாறாக‌ தாங்க‌ள் எழுதிய‌து போல், வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு கீழ்ப‌டியாத‌வ‌ர்க‌ளுக்கு இது என்று எங்கு எழுதியிருக்கிற‌து (வெளிப்ப‌டுத்த‌ல் புத்த‌க‌த்தில்)!! ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்த்தெழ‌வே, கிறிஸ்து இர‌த்த‌ம் சிந்தினார் என்றும் விசுவ‌சித்து, உயிர்த்தெழ‌முடியாத‌ப‌டி தேவ‌ன் ம‌ர‌ண‌த்தை மாற்றுவார் என்றும் போதிக்கிறீர்க‌ளே ? எப்ப‌டி?

கிருபை என்ப‌து ஆதாமின் பாவ‌த்தினால் வ‌ரும் ம‌ர‌ண‌ம்த்திற்கு தான்!! அனைவ‌ருக்கும் வ‌ரும் ம‌ர‌ண‌மும் ஆதாமின் பாவ‌த்தினால் தானே அன்றி அவ‌ர் அவ‌ர் செய்யும் த‌னிப்ப‌ட்ட‌ பாவ‌த்தினால் அல்ல‌, ஏனென்றால் பாவ‌ம் செய்யும் ச‌ரீர‌த்தை பெற்ற‌தே ஆதாமினால் தானே!! கிருபை என்ப‌தே இந்த‌ ம‌ர‌ண‌த்திலிருந்து உயிர்த்தெழ‌வே.

"மாறாக, நன்மை செய்யத்தவறினால், இரக்கமில்லாதவனுக்கு இரக்கமில்லா நியாயத்தீர்ப்பு கிடைக்கும் என வசனம் கூறுகிறபடிதான் நடக்கும்."

ந‌ன்மை செய்வ‌தில் கிறிஸ்த‌வ‌ர்க‌ளை காட்டிலும் தேவ‌ன் யார் என்று தெரியாத‌வ‌ர்க‌ள் அதிக‌ ந‌ன்மை செய்கிறார்க‌ளே!! இது கிரியைக‌ளினால் உண்டான‌த‌ல்ல‌ என்கிற‌து தேவ‌ வ‌ச‌ன‌ம்!! இர‌க்க‌மில்லா நியாய‌த்தீர்ப்பு என்றால் என்ன‌?

த‌ங்க‌ளின் ப‌தில் ப‌குதி முழுவ‌து த‌ங்க‌ளின் சுய‌ கிரியைக‌ளை வெளிப்ப‌டுத்துவ‌தாக‌வே இருக்கிற‌தே!! ச‌கோ சோல் சொல்யூஷ‌ன் சொல்லியிருக்கும் "கடைசியில் வந்தவனுக்கும் அதே சம்பளமா" ப‌தில் இன்னும் தெளிவாக‌ இருக்கிற‌தே!!

கிரியைக‌ளை வேண்டாம் என்று சொல்ல‌வில்லை, அது ஒவ்வொரு ம‌னித‌னின் அடிப்ப‌டையாக‌ தான் இருக்க‌ வேண்டும், ஆனால் அதை ந‌ம்பிக்கொண்டு அதினால் தான் என‌க்கு ஜெய‌ம் என்கிற‌ போத‌னை தான் த‌வ‌று என்று சொல்லுகிறோம். ஏனென்றால் அனைவ‌ருக்கும் ஜெய‌த்தை கொடுக்கிற‌வ‌ர் ஒருவ‌ர் இருக்கிறார், அவ‌ரையே ந‌ம்புவோம், ஜெய‌மோ க‌ர்த்த‌ரால் வ‌ரும்!!

பின் குறிப்பு.
வெளி. 20:14ஐ எழுதிவிட்டு, 15ஐ சொல்லாம‌ல் போனால் தாங்க‌ள் நிச்ச‌ய‌மாக‌ அதை கேட்பீர்க‌ள். ஜீவ‌ப்புஸ்த‌க‌ம் என்று ஒன்று த‌னியாக‌ இல்லை என்ப‌தை முத‌லில் சொல்லிவிடுகிறேன். ம‌னித‌ர்க‌ளோ, இர‌ட்சிக்க‌ப்ப‌ட்டு தேவ‌ அறிவில் வ‌ள‌ர்ந்து என்றென்றும் வாழ‌வே ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ஆனால் "சாத்தானோ" எல்லா க‌ண்க‌ளும் பார்க்கும் ப‌டியாக‌ சாம்பாலாக்குவேன் (எசே. 28:18) என்று ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன் அவ‌ன் ஒருவ‌னே. ஆக‌வே தான் ஜீவ‌ப்புஸ்த‌க‌த்தில் பெய‌ர் இல்லாத‌ அவ‌ன் நித்திய‌ அழிவிற்கு ஒப்பான‌ அக்கினி க‌ட‌லில் த‌ள்ள‌ப்ப‌ட்டான் என்கிற‌து வ‌ச‌ன‌ம். அக்கினியில் போட்டால் சாம்பாலாக‌ தான் ஆவோம் என்று இந்த‌ இர‌ண்டு வ‌ச‌ன‌ங்க‌ளே போதும். இன்றைய‌ "காட்சியாள‌ர்க‌ள்" பார்த்து எழுதுவ‌து போல், அக்கினியில் என்றென்றும் எரிந்துக்கொண்டேஏஏஏஏஏஏஏஏஏஎ இருக்க‌ முடியாது.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//"எவன்" ஒருவனாவது வேதவாக்கியத்தின்படி விசுவாசமாக இருக்கிறான் என்று காண்பியுங்கள்!! இயேசு கிறிஸ்து யார் என்றே தெரியாதவர்கள் சபை நடத்தி வரும்போது, அவர்கள் காண்பிக்கும் விசுவாசம் மாத்திரம் எப்படி உண்மையானதாக இருக்க முடியும்!! இவர்களை உலகத்தார் என்று சொல்லுவதில் ஒரு தவறும் இல்லை, ஏனென்றால் கிறிஸ்துவை அறியாதவர்களுக்கு இயேசு கிறிஸ்து ஒரு கடவுள் என்பது போல் தான் சபையில் இருக்கிறோம் என்று சொல்லிக்கொண்டு இருப்பவர்களுக்கான நிலை. இவர்களே உலகத்தார்!!//

வேதவாக்கியத்தின்படி நீங்கள் விசுவாசிக்கவில்லையா? நான் விசுவாசிக்கவில்லையா?

விசுவாசிப்பவர்களுக்கு வேதம் தந்த வாக்கைத்தான் நான் கூறுகிறேன். நீங்கள் விசுவாசியாதவர்களைப் பற்றி சொல்கிறீர்கள். அவர்கள் உலகத்தார்தான் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் இன்று உலகத்தாராக இருக்கிற அவர்களில் யாராக இருந்தாலும், என்றேனும் ஒருநாள் வேதம் சொல்கிறபிரகாரமாக விசுவாசித்தால், பரிசுத்தஆவியை வாஞ்சையோடு வேண்டினால் அவர்களுக்குப் பரிசுத்தஆவி கொடுக்கப்படும் எனும் வேதவாக்கைத்தான் நான் சொல்கிறேன். அதை நாம் போதிக்கவேண்டும் என்றும் சொல்கிறேன்.

எல்லோரும் சரியில்லை சரியில்லை என்று சொல்லி அங்கலாய்ப்பதைவிட, எது சரியென அறிந்தவர்கள் அதைப் போதிப்பது நல்லதுதானே?

bereans wrote:
//இஸ்ராயேல் மக்களுக்கு கொடுக்கப்பட்ட கட்டளை "கொலை செய்யாதிருப்பாயாக" என்பது, ஆனால் இயேசு கிறிஸ்து சொன்னதோ, "தன் சகோதரனை நியாயம் இல்லாமல் கோபித்துக்கொள்பவன நியாயத்தீர்ப்புக்கு ஏதுவாயிருப்பான்" என்று (மத். 5:21,22). இரண்டுமே கட்டளைகள் அல்லது நீங்கள் எழுதியது போல் கற்பனைகள் தான், இதிலிருந்து எதை தாங்கள் பின்
பற்றுகிறீர்கள்!!//


நீங்களும் நானும் எதைப் பின்பற்றுகிறோம், எதைப் பின்பற்றவில்லை என்பது முக்கியமல்ல. எதைப் பின்பற்ற வேண்டுமென வேதம் போதிக்கிறது என்பதுதான் முக்கியம். கோபம் கொள்ளாதே என இயேசு சொன்னால் அதற்குக் கீழ்ப்படிய பிரயாசப்படுவதுதான் நம் கடமையேயொழிய, கோபப்படாமல் யாராலும் இருக்கமுடியுமா, அவர் கோபப்படுகிறாரா, இவர் கோபப்படுகிறாரா எனக் கேள்வி கேட்பது நமக்குத் தேவையில்லை.

bereans wrote:
//கோபிப்பதையே கொலைக்கு ஒப்பீட்டு பேசுகிறார் இயேசு கிறிஸ்து, சரி இதை பின் பற்றலாம் என்றால், சிலர் அப்படி என்றால் கோபித்துக்கொள்ள கூடாது, ஆனால் கொலை செய்யலாமா? என்று கேட்கிறார்களே!!//

கேள்வி கேட்பவர்களுக்கு நம்மால் இயன்ற பதிலைச் சொன்னால் போதும். யார் யாரோ ஏடாகூடமாகக் கேள்விகேட்பதால் இயேசுவின் கட்டளை சரியில்லை, அல்லது அது தேவையில்லை எனக் கூறிவிட முடியுமா?

bereans wrote:
//இயேசு கிறிஸ்து மத் 5,6,7ல் உள்ள கட்டளைகளை இன்று கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களும் தான் பின்பற்றுகிறார்களே, நீங்கள் மட்டும் எப்படி வித்தியாசப்படுகிறீர்கள்? அப்படி என்றால் செயலின்படி எல்லாரும் ஒன்று தானே!!//

ஆம், நிச்சயமாக அப்படித்தான். மத்தேயு 5,6,7 அதிகாரங்களில் உள்ள கட்டளைகளைப் பின்பற்றுகிற மற்றவர்களைவிட, நாம் (கிறிஸ்தவர்கள்) அல்லது நான் உசத்தி என நான் ஒருபோதும் கூறவில்லை. இது சம்பந்தமாக பவுல் கூறியுள்ளதை ஏற்கனவே பலமுறை நான் எடுத்துரைத்துள்ளேன்.

ரோமர் 2:9,10 முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் பொல்லாங்குசெய்கிற எந்த மனுஷ ஆத்துமாவுக்கும் உபத்திரவமும் வியாகுலமும் உண்டாகும். முன்பு யூதரிலும் பின்பு கிரேக்கரிலும் எவன் நன்மைசெய்கிறானோ அவனுக்கு மகிமையும் கனமும் சமாதானமும் உண்டாகும்.

(இவ்விரு வசனங்களில் பவுல் கூறுவதை நாம் மிகமிக உன்னிப்பாகக் கவனிக்க வேண்டும்; குறிப்பாக, இவ்வசனங்களில் “கிருபை” பற்றி எதுவும் கூறாததை நன்றாகக் கவனிக்க வேண்டும்)

11-13 தேவனிடத்தில் பட்சபாதமில்லை. எவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணமில்லாமல் கெட்டுப்போவார்கள்; எவர்கள் நியாயப்பிரமாணத்துக்குட்பட்டவர்களாய்ப் பாவஞ்செய்கிறார்களோ, அவர்கள் நியாயப்பிரமாணத்தினாலே ஆக்கினைத்தீர்ப்படைவார்கள். நியாயப்பிரமாணத்தைக் கேட்கிறவர்கள் தேவனுக்கு முன்பாக நீதிமான்களல்ல, நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறவர்களே நீதிமான்களாக்கப்படுவார்கள்.

(கவனிக்கவும்: நாம் நீதியைச் செய்தால்தான், நம் பழைய பாவங்கள் நீக்கப்பட்டு நீதிமான்களாக்கப்படுவோம்)

14-15 அன்றியும் நியாயப்பிரமாணமில்லாத புறஜாதிகள் சுபாவமாய் நியாயப்பிரமாணத்தின்படி செய்கிறபோது, நியாயப்பிரமாணமில்லாத அவர்கள் தங்களுக்குத் தாங்களே நியாயப்பிரமாணமாயிருக்கிறார்கள். அவர்களுடைய மனச்சாட்சியும் கூடச் சாட்சியிடுகிறதினாலும், குற்றமுண்டு குற்றமில்லையென்று அவர்களுடைய சிந்தனைகள் ஒன்றையொன்று தீர்க்கிறதினாலும், நியாயப்பிரமாணத்திற்கேற்ற கிரியை தங்கள் இருதயங்களில் எழுதியிருக்கிறதென்று காண்பிக்கிறார்கள்.

(கிறிஸ்தவர்கள் அல்லாதவர்களைக் குறித்த உங்கள் கேள்விக்கு இவ்வசனங்களில் பவுல் தெளிவான பதிலைத் தந்துள்ளார்)

16 என் சுவிசேஷத்தின்படியே, தேவன் இயேசுகிறிஸ்துவைக்கொண்டு மனுஷருடைய அந்தரங்கங்களைக்குறித்து நியாயத்தீர்ப்புக்கொடுக்கும் நாளிலே இது விளங்கும்.

(ஆம், இவ்விஷயங்கள் தற்போது உங்களுக்குப் புரியாவிட்டாலும், நியாயத்தீர்ப்பு நாளில் நிச்சயம் புரியும்)

bereans wrote:
//ஆனால் இது உங்களின் செயல்களானதில்லை, அவரின் இலவச ஈவு என்று சொல்லியிருக்கிறதே.//

மேலே 11-13 வசனங்களைப் படியுங்கள். எதற்கு இலவச ஈவு என்பதை அறியாததால்தான், கிரியை தேவையில்லை என மீண்டும் மீண்டும் சொல்கிறீர்கள். ஆதாமின் பாவம், மற்றும் நம் பழைய பாவங்களுக்கு மட்டுந்தான் இலவச ஈவு. நாம் வேண்டுமென்றே தெரிந்து செய்யப்போகிற பாவங்களுக்கு அல்ல.

பாவத்தை அறிக்கையிட்டு, விட்டுவிடுகிறவனே இரக்கம் (கிருபை) பெறுவான். அடிக்கடி கடிந்துகொள்ளப்பட்டும் தன் பிடரியைக் கடினப்படுத்துகிறவன சகாயமின்றி (கிருபையின்றி) சடிதியில் நாசமடைவான்.

bereans wrote:
//கிறிஸ்துவை தெரியாதவர்கள் இதே செயல்கள் செய்கிறார்கள் ஆனால் அவர்கள் பேய் பிடித்தவர்கள், பிசாசு பிடித்தவர்கள் என்று ஒதுக்கப்படுகிறார்கள், அதே செயல்களை கிறிஸ்தவன் என்று செய்தால் பரிசுத்த ஆவியினால் செய்கிறவனா? என்ன நியாயம் இது?//

நீங்கள் சொல்கிறபடி நான் ஒருபோதும் செய்யவில்லை. எனவே இக்கூற்றுகள் எனக்குரியதல்ல.

bereans wrote:
//உங்களுக்கு மாத்திர‌மில்லை, உல‌க‌த்தில் இருக்கும் ஒவ்வொருத்த‌ருக்காக‌வும் இயேசு கிறிஸ்து ம‌ரண‌த்தை ருசி பார்த்திருப்ப‌தால், உல‌கில் இருப்ப‌வ‌ர்க‌ள் அனைவ‌ரும் உயிர்த்தெழுவார்க‌ள். பாவ‌ம் இல்லாவிட்டால் தான் உயிர்த்தெழுத‌ல் இருக்க‌ முடியுமே த‌விர, பாவ‌த்தோடு அல்ல‌, ஏனென்றால் பாவ‌ம் ம‌ர‌ண‌த்தை தான் கொண்டு வ‌ர‌ முடியுமே த‌விர‌ உயிர்த்தெழுத‌லை அல்ல‌//

எல்லோருக்கும் உயிர்த்தெழுதல் உண்டு என எத்தனையோ முறை சொல்லிவிட்டேன். ஆனால் உயிர்த்தெழுதலுக்குப் பின்தான் நியாயத்தீர்ப்பு. அந்த நியாயத்தீர்ப்பில்தான், நாம் தேவனுக்கு எதிர்த்து நின்று செய்த பாவங்கள் யாவும் விசாரிக்கப்படும்.

பாவம் இல்லாவிட்டால்தான் உயிர்த்தெழமுடியும் என வசனம் எதுவும் கூறவில்லை. லாசரு போன்ற பலர் இப்பூமியில் உயிரோடெழுப்பப்பட்டுள்ளனர். அவர்கள் பாவம் இல்லாமல்தான் உயிர்த்தெழுந்தனர் எனக் கூறமுடியுமா? பாவமில்லாமல் அவர்கள் உயிர்தெழுந்திருந்தால், ஏன் மீண்டும் மரித்தனர்? அவர்கள் மீண்டும் பாவம் செய்தனர் எனக் கூறுவீர்களோ?

bereans wrote:
//இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம் என்ப‌தைக் குறித்து வெளிப்ப‌டுத்தின‌ புஸ்த‌க‌த்தில் சொல்ல‌ப்ப‌ட்ட‌து என்ன‌வென்றால், "அப்பொழுது ம‌ர‌ண‌மும் பாதாள‌மும் அக்கினிக்க‌ட‌லிலே த‌ள்ள‌ப்ப‌ட்ட‌ன‌, இது இர‌ண்டாம் ம‌ர‌ண‌ம்." வெளி. 20:14. இத‌ற்கு மாறாக‌ தாங்க‌ள் எழுதிய‌து போல், வ‌ச‌ன‌ங்க‌ளுக்கு கீழ்ப‌டியாத‌வ‌ர்க‌ளுக்கு இது என்று எங்கு எழுதியிருக்கிற‌து (வெளிப்ப‌டுத்த‌ல் புத்த‌க‌த்தில்)!!//

வெளி. 20:6 முதலாம் உயிர்த்தெழுதலுக்குப் பங்குள்ளவன் பாக்கியவானும் பரிசுத்தவானுமாயிருக்கிறான்; இவர்கள்மேல் இரண்டாம் மரணத்திற்கு அதிகாரமில்லை;

ஒரு பிரிவினர்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரமில்லை எனும்போது அப்பிரிவில் இல்லாத மற்றவர்கள்மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் உண்டு என்பது புரியவில்லையா?

வெளி. 20:14-ஐ மட்டும் வைத்து இதுதான் 2-ம் மரணம் என்கிறீர்களே, அதற்கு முந்தின/பிந்தின வசனங்கள் 2-ம் மரணத்தில் சேராது என எப்படி முடிவுசெய்தீர்கள்?

வெளி. 20:13-15 சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள். அப்பொழுது மரணமும் பாதாளமும் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டன. இது இரண்டாம் மரணம். ஜீவபுஸ்தகத்திலே எழுதப்பட்டவனாகக் காணப்படாதவனெவனோ அவன் அக்கினிக்கடலிலே தள்ளப்பட்டான்.

1000 வருட அரசாட்சியின் நியாயத்தீர்ப்புக்குப் பிறகுதான் இவ்வசனங்கள் கூறுகிற நியாயத்தீர்ப்பு. இந்த நியாயத்தீர்ப்பில்தான் அவரவர் கிரியைக்கான பலன் (அதாவது நித்திய ஜீவனா, அல்லது நித்திய மரணமா எனும் பலன்) கொடுக்கப்படும்.

அவரவர் கிரியைகளின்படி அவரவர் பலன் பெறுகையில் ஜீவபுஸ்தகத்தில் பேர் எழுதப்படாதவனுக்கு 2-ம் மரணம் எனும் நியாயத்தீர்ப்பு வழங்கப்படும். யாரெல்லாம் ஜீவபுஸ்தகத்தில் பேர் எழுதப்படாதவர்கள் என்பதை பின்வரும் வசனம் கூறுகிறது.

வெளி. 21:8 பயப்படுகிறவர்களும், அவிசுவாசிகளும், அருவருப்பானவர்களும், கொலைபாதகரும், விபசாரக்காரரும், சூனியக்காரரும், விக்கிரகாராதனைக்காரரும், பொய்யர் அனைவரும் இரண்டாம் மரணமாகிய அக்கினியும் கந்தகமும் எரிகிற கடலிலே பங்கடைவார்கள்.

இவ்வசனத்தைக் காட்டினால், வெளி. 21:4-ல் இனி மரணமில்லை எனக் கூறப்பட்டுள்ளதே என்பீர்கள். அவ்வசனம் நீதிமான்களுக்கானதாகும் என நான் சொன்னாலும் அதை ஏற்கமாட்டீர்கள்.

இறுதியாக இயேசுவின் பின்வரும் வசனத்தின் கருத்தைச் சொல்கிறேன். அதையாவது உங்களால் ஏற்கமுடிகிறதா எனக் கூறுங்கள்.

மத்தேயு 10:28 ஆத்துமாவைக் கொல்ல வல்லவர்களாயிராமல், சரீரத்தை மாத்திரம் கொல்லுகிறவர்களுக்கு நீங்கள் பயப்படவேண்டாம்; ஆத்துமாவையும் சரீரத்தையும் நரகத்திலே அழிக்க வல்லவருக்கே பயப்படுங்கள்.

இவ்வசனத்தில் இயேசு சொல்கிற சரீர மரணம்தான் பூமிக்குரிய மரணம். இம்மரணம் எல்லோருக்கும் உண்டு. இதைத்தான் முதலாம் மரணம் என நான் சொல்கிறேன். இம்மரணத்தின்போது சரீரம் அழிகிறது; ஆனால் ஆத்துமா (அல்லது ஜீவன்) தேவனிடம் செல்கிறது (பிரசங்கி 12:7).

X  X  X  X  X  X

அந்த ஆத்துமா அல்லது ஜீவனை நரகத்தில் தள்ளி அழிக்க வல்லவர் தேவன் மட்டுமே (லூக்கா 12:5; மத்தேயு 10:28).

ஆனால் ஆத்துமாவை (அல்லது ஜீவனை) சாத்தான் நரகத்திலே காலங் காலமாக வாதித்துக் கொண்டிருக்கிறான் என்றும் நித்திய நித்தியமாக வாதிப்பான் என்றும் சிலர் தரிசனத்திலும் சொப்பனத்திலும் கண்டு சொல்கிறார்கள்.

பாவம்செய்த மனிதரின் ஆத்துமாவை (அல்லது ஜீவனை) தண்டிக்க அதிகாரமும் வல்லமையுள்ளவர் பரிசுத்த தேவன் மட்டுமே. மனிதனை நியாயத்தீர்ப்பு செய்யும் அதிகாரத்தை, பரிசுத்த இயேசுவைக் கனம் பண்ணும்விதமாக, அவருக்குத் தேவன் கொடுத்துள்ளார் (யோவான் 5:22,27).

அப்படியிருக்க மனிதனின் ஆத்துமாவை (அல்லது) ஜீவனைத் தண்டிக்கும் அதிகாரத்தை பொய்யனாகிய சாத்தானுக்குத் தேவன் கொடுத்துள்ளதாகக் கூறுவதோ அல்லது அந்த அதிகாரம் சாத்தானுக்கு உள்ளது எனக் கூறுவதோ தேவதூஷணமாகும்.

அக்கிரமம் செய்த மனிதரைத் தண்டிக்கிற அதிகாரத்தை, அக்கிரமம் செய்த மற்றொருவனாகிய சாத்தானுக்குத் தேவன் கொடுத்துள்ளதாகக் கூறுவது தேவநீதியை கேள்விக்குறியாக்குகிறது.

பாவஞ்செய்த தூதர்களைக் கட்டி, நரகத்தில் தள்ளி, நியாயத்தீர்ப்பு நாளுக்கென தேவன் வைத்துள்ளதாக 2 பேதுரு 2:4 கூறுகிறது. எனவே நரகத்தில் சாத்தானுக்கு எந்த வல்லமையும் அதிகாரமும் நிச்சயமாகக் கிடையாது.

அப்படியிருக்க, நரகத்தில் சாத்தானுக்கு வல்லமை இருப்பதைப் போலவும் அவன் மனித ஆத்துமாக்களை அங்கு வாதிப்பதைப் போலவும் சிலர் காண்கிற வெளிப்பாடுகள் அனைத்தும் நிச்சயமாகப் பொய் அல்லது சாத்தானின் வஞ்சகமே. இவ்வுண்மையை அவர்கள் உணர்ந்து, அம்மாதிரி வெளிப்பாடுகளை மீண்டும் சொல்லவேண்டாம் என அவர்களை எச்சரிக்கிறேன்.

X  X  X  X  X  X

மத்தேயு 10:28-ல் இயேசு கூறுகிற நரகம் என்பது எந்த இடம் என்பது நமக்கு முக்கியமல்ல. ஆனால் ஏதோ ஒரு இடத்தில் சிலர் அல்லது பலரது ஆத்துமாவை தேவன் அழிப்பார் என்பதுதான் முக்கியம்.

நம் பூமிக்குரிய மரணத்தின்போது தேவனிடம் சென்ற நம் எல்லோரது ஆவியும் இயேசுவின் 2-ம் வருகைக்குப்பின், மீண்டும் ஒரு சரீரத்தைப் பெற்று உயிர்ப்பிக்கப்படும். இவ்வாறு உயிர்ப்பிக்கப்பட்டவர்களில் ஒரு பிரிவினர் மீது 2-ம் மரணத்திற்கு அதிகாரம் கிடையாது. அதாவது அவர்களின் ஆத்துமாவை தேவன் நிச்சயமாக அழிக்கமாட்டார்.

மற்றவர்களில், ஒரு பிரிவினர் 1000 வருட அரசாட்சியில் நியாயந்தீர்க்கப்பட்டு நித்திய ஜீவனைப் பெறும் தகுதியைப் பெறுவார்கள். நித்திய ஜீவனுக்குத் தகுதிபெறாத மற்றவர்களின் ஆத்துமாவைத்தான் தேவன் நரகத்திலே அழிப்பார். இவ்வாறு தேவன் அவர்களை அழித்தபின்னர் அவர்கள் ஒருபோதும் உயிரடையமுடியாது. இதைத்தான் 2-ம் மரணம் என வெளி. கூறுகிறது.

இப்பொழுது நீங்கள் சொல்லுங்கள்: மத்தேயு 10:28-ல் இயேசு கூறுகிற “ஆத்துமாவைக் கொல்லுதல்” என்பதன் கருத்து என்ன?

bereans wrote:
//ஜீவ‌ப்புஸ்த‌க‌ம் என்று ஒன்று த‌னியாக‌ இல்லை என்ப‌தை முத‌லில் சொல்லிவிடுகிறேன். ம‌னித‌ர்க‌ளோ, இர‌ட்சிக்க‌ப்ப‌ட்டு தேவ‌ அறிவில் வ‌ள‌ர்ந்து என்றென்றும் வாழ‌வே ப‌டைக்க‌ப்ப‌ட்ட‌வ‌ர்க‌ள், ஆனால் "சாத்தானோ" எல்லா க‌ண்க‌ளும் பார்க்கும் ப‌டியாக‌ சாம்பாலாக்குவேன் (எசே. 28:18) என்று ச‌பிக்க‌ப்ப‌ட்ட‌வ‌ன் அவ‌ன் ஒருவ‌னே. ஆக‌வே தான் ஜீவ‌ப்புஸ்த‌க‌த்தில் பெய‌ர் இல்லாத‌ அவ‌ன் நித்திய‌ அழிவிற்கு ஒப்பான‌ அக்கினி க‌ட‌லில் த‌ள்ள‌ப்ப‌ட்டான் என்கிற‌து வ‌ச‌ன‌ம்.//

பிலிப்பியர் 4:3 அன்றியும், என் உத்தம கூட்டாளியே, அவர்களுக்கு உதவியாயிருக்கும்படி உன்னையும் வேண்டிக்கொள்ளுகிறேன்; அவர்கள் கிலேமெந்தோடும் மற்ற என் உடன்வேலையாட்களோடுங்கூடச் சுவிசேஷ விஷயத்தில் என்னோடேகூட மிகவும் பிரயாசப்பட்டார்கள், அவர்களுடைய நாமங்கள் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறது

எல்லோரது பெயரும் ஜீவபுஸ்தகத்தில் இருக்கிறதென்றால், ஏன் ஒரு சிலரை மட்டும் பவுல் இங்கு தனியாகக் குறிப்பிடவேண்டும்? வெளி. 3:5-ல் ஜீவபுஸ்தகத்திலிருந்து அவன் நாமத்தைக் கிறுக்கிப்போடாமல் என ஏன் கூறவேண்டும்? வெளி. 13:8-ஐப் படித்து அதற்கும் விளக்கம் சொல்லுங்கள்.


-- Edited by anbu57 on Sunday 7th of March 2010 11:40:06 AM

-- Edited by anbu57 on Sunday 7th of March 2010 11:42:02 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

"எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்." ரோமர் 3:23, 24.

இதைவிடத் தெளிவான விளக்கம் யாருக்குமே தேவைப்படாது என்று எண்ணுகிறேன்.

நான் 'பாவி' என்று சொன்னது  என்னை இந்த நிலைமையிலும் உயிர்த்தெழுதலுக்குக் தகுதியாக்கிய தேவ அன்பின் ஆழத்தை உணர்த்தவேயன்றி வேறில்லை. நமக்குப் பாவமில்லையென்போமானால் நம்மை நாமே வஞ்சிக்கிறவர்களாக இருப்போம். ஏனென்றால் நீதிமான் ஒருவனாகிலும் இல்லை.

ஏற்கனவே பாவத்தின் சம்பளமான மரணத்தில் இருக்கும் ஒருவனை மீண்டும் உயிரோடு எழுப்பி (அதற்காக தன் ஒரே பேறான குமாரனையே மரணத்திற்குட்படுத்தி) "ஏன்டா நீ பாவம் செய்தாய், போ இரண்டாம் மரணத்துக்கு" என்று சொல்லும் ஒரு அறிவுகெட்ட தேவனை நான் கற்பனை செய்துகூட பார்க்க முடியவில்லை.

எல்லாருக்கும் நித்திய ஜீவன் என்று வேதம் சொல்வதை ஜீரணிப்பதற்கு மகா தாழ்மை வேண்டும். மீண்டும் மீண்டும் அப்ப யார் எப்படி வேண்டுமானாலும் வாழலாமா என்று சிறுபிள்ளைத்தனமாகக் கேட்பது உண்மையில் கண்டனத்துக்குரியது. அப்படி யாரும் ஒருபோதும் சொல்லவில்லை.

சபை என்று தேவன் நியமித்திருக்கும் ஒரு சிறு மந்தையின், புது சிருஷ்டியின் தரத்துக்கு உயர மீண்டும் அவரது கிருபைதான் வேண்டுமேயன்றி சுயமுயற்சி அல்ல. ஆளுகைக்கு என்று தெரிந்து கொண்ட ஒரு கூட்டத்துக்கு (தேவத்துவத்துக்கு உயரும் தகுதி) தேவன் கொடுக்கும் பயிற்சியை எல்லாப் பிரஜைகளுமே கடைபிடிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது அழகல்ல. எல்லாரும் ஆளுகைக்கு தகுதியாக முடியாது. வேண்டுமென்றால் சுயதிருப்திக்காக் அத்தகைய பயிற்சிசெய்ய முயலலாம். இது எப்படியென்றால் சிறு பிள்ளைக்கு ஒரு இராணுவ வீரனின் உடை போட்டு அழகுவேண்டுமானால் பார்க்கலாம் ஆனால் போருக்கு அனுப்ப முடியாது. தேவன் தெரிந்துகொள்ளாதவர்களை சுயமுயற்சியினால் இதைச் செய்; அதைச் செய்யாதே என்று கட்டளை வேண்டுமானால் கொடுக்கலாம் ஆனால் அதை அவர்கள் கடைபிடிப்பார்களா, அதற்கான பலனான ஆளுகைக்கு தகுதியாவார்களா என்றால் நிச்சயமாக இல்லை.

ஒருவன் பாவங்கள் முற்றிலுமாக மன்னிக்கப்படுவதால்தான் உயித்தெழவே தகுதியாகிறான் என்ற ஒரு அடிப்படையான விஷயத்தைக்கூட ஏற்க மறுப்பவர்களுக்கு என்னதான் பதில் தரமுடியும்?

சமுத்திரம் தன்னுடையவைகளை ஒப்புவித்தது.... என்ற வசனம் ஆயிரவருட அரசாட்சியின் முடிவில்தான் என்று எந்த ஆதாரத்தில் சொல்கிறீர்கள்? வெளிப்படுத்தல் புத்தகத்தில் ஒரே காரியங்கள் மீண்டும் மீண்டும் வேறு வேறு சங்கேத மொழிகளில் எழுதப்பட்டுள்ளது. இது முடிந்தவுடன் அடுத்தது நடக்கும் என்பதல்ல. 

உதாரணத்துக்கு,

".... அப்பொழுது தேவனால் வானத்திலிருந்து அக்கினி இறங்கி அவர்களைப் பட்சித்துப் போட்டது" வெளி20:9
இவர்கள் யார்? இது எப்போது நடக்கிறது? இது அவர்களுக்கு முதல் மரணமா அல்லது இரண்டாம் மரணமா?

அதன் பின் வரும் 13ம் வசனம் இவ்வாறாகச் சொல்கிறது, "சமுத்திரம் தன்னிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தது; மரணமும் பாதாளமும் தங்களிலுள்ள மரித்தோரை ஒப்புவித்தன. யாவரும் தங்கள் தங்கள் கிரியைகளின்படியே நியாயத்தீர்ப்படைந்தார்கள்." 9ம் வசனத்தில் அக்கினியால் பட்சித்துப்போடப்பட்டவர்கள் மீண்டும் உயிர்த்தெழுகிறார்களா? அப்படியென்றால் 15ம் வசனத்தின் "அக்கினிக்கடல்" மூன்றாம் மரணமா?

"பின்பு, நான் புதிய வானத்தையும் புதிய பூமியையும் கண்டேன்; முந்தின வானமும், முந்தின பூமியும் ஒழிந்து போயின....... வெளி 21:1 என்று ஆரம்பிக்கும் வசனம் வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்குப் பின்னர் நடக்கும் காரியம் என்று நாம் யூகிக்க ஏதுவல்ல.

பின்பு என்று யோவான் எழுதியது அவரது தரிசனத்தின் வரிசையைக் குறிக்கிறதேயன்றி அது முடிந்தபின்பு இது நடக்கும் என்பதல்ல. இந்தக் காட்சி முடிந்தபின் இந்தக்காட்சியைப் பார்த்தேன் என்றுதான் அர்த்தமாகும். ஏனென்றால் புதிய எருசலேமாகிய பரிசுத்த நகரம் தேவனிடத்திலிருந்து இறங்கிவருதல் 21:2 என்பது 1000 வருட அரசாட்சியின் ஆரம்பத்தைத்தான் குறிக்கும். இதையேதான் மீண்டும் யோவான் காண்கிறார் (10ம்வசனம்). ஆக ஒரே சம்பவத்தை ரிபீட்டாக அவர் தரிசித்தார். அதற்காக பரிசுத்த நகரம் மீண்டும், மீண்டும் இறங்கி வருவதாக அர்த்தமில்லை.

Book of The Life of the Lamb    என்பது "ஆட்டுக்குட்டியானவருடைய வாழ்க்கையெனும் புத்தகம்" என்றிருக்க வேண்டும். அதை 'ஆட்டுக்குட்டியானவருடைய ஜீவ புத்தகம்'(Lamb's book of life) என்று பிழையாக மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

ஆக வெளிப்படுத்தல் புத்தகத்தை மேற்கோள்காட்டி விவாதிப்பதில் அதிக ஜாக்கிரதை வேண்டும். இன்னமும் வெளிச்சம் வரும்போது அதிக அர்த்தங்களை நாம் அறிந்துகொள்ளலாம்.

மத்தேயு 10:28 "அழிக்க வல்லவர்" என்ற பதத்தை வைத்துக்கொண்டு பலர் அல்லது சிலரை நிச்சயமாக அழிப்பார் என்று வாதாட முடியாது.

ஆளுகைக்கு என்று முன்குறிக்கப்பட்டவர்கள் மாத்திரமே பங்கு கொள்ளக்கூடிய சபை என்ற சிறு மந்தைக்குக் கொடுக்கப்பட்ட உபதேசங்களை கைக்கொள்ளச் சொல்லி மற்றவர்களுக்கு (உலகத்துக்கு) போதிப்பது ஒரு டைம் பாஸாக வேண்டுமானால் செய்யலாமே ஒழிய அதனால் ஒரு பலனும் இல்லை.

நித்திய ஜீவனுக்கு மனிதன் தன் சுயமுயற்சியால் த்குதி பெற முடியுமென்றால் கிறிஸ்து வரவேண்டிய அவசியமேயில்லை. வேதம் இரண்டு விஷயங்களைத்தான் சொல்கிறது. ஒன்று பாவத்தின் சம்பளமான மரணம், இரண்டாவது கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்தியஜீவன்.

எப்படி எல்லாரும் ஆட்டோமேடிக்காக மரிக்கிறார்களோ (அவர்கள் கன்ட்ரோலில் ஒன்றுமே இல்லை) அதே போல எல்லாருமே ஆட்டோமேடிக்காக நித்திய ஜீவனை அடைவார்கள். அப்படி இல்லாவிட்டால் தேவன் தான் படைத்த மனிதனைக் காப்பாற்ற முடியாதவராகி, 'சர்வ வல்லவர்' என்ற பட்டத்தை இழந்து அதனால் தேவன் என்ற தகுதியையே இழந்துவிடுவார்.
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை.



-- Edited by soulsolution on Sunday 7th of March 2010 12:00:49 AM

__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//"எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்." ரோமர் 3:23, 24.

இதைவிடத் தெளிவான விளக்கம் யாருக்குமே தேவைப்படாது என்று எண்ணுகிறேன்.//


மத்தேயு 25:31-46 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள். மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.
அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள். பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள். பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.
அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.


இதைவிடத் தெளிவான விளக்கம் யாருக்குமே தேவைப்படாது என்று எண்ணுகிறேன்.

ஒருவேளை இன்னும் விளக்கம் தேவை என்பவர்கள், பின்வரும் வசனங்களையும் படிப்பார்களாக.

மத்தேயு 13:37-41  இயேசு பிரதியுத்தரமாக: நல்ல விதையை விதைக்கிறவன் மனுஷகுமாரன்; நிலம் உலகம்; நல்ல விதை ராஜ்யத்தின் புத்திரர்; களைகள் பொல்லாங்கனுடைய புத்திரர்;  அவைகளை விதைக்கிற சத்துரு பிசாசு; அறுப்பு உலகத்தின் முடிவு; அறுக்கிறவர்கள் தேவதூதர்கள். ஆதலால், களைகளைச் சேர்த்து அக்கினியால் சுட்டெரிக்கிறதுபோல, இவ்வுலகத்தின் முடிவிலே நடக்கும். மனுஷகுமாரன் தம்முடைய தூதர்களை அனுப்புவார்; அவர்கள் அவருடைய ராஜ்யத்தில் இருக்கிற சகல இடறல்களையும் அக்கிரமஞ் செய்கிறவர்களையும் சேர்த்து, அவர்களை அக்கினிச் சூளையிலே போடுவார்கள்; அங்கே அழுகையும் பற்கடிப்பும் உண்டாயிருக்கும். அப்பொழுது, நீதிமான்கள் தங்கள் பிதாவின் ராஜ்யத்திலே சூரியனைப்போலப் பிரகாசிப்பார்கள். கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.

கவனிக்கவும்: நிலம் என்பது உலகத்தைக் குறிக்கிறது, சபையை அல்ல.

என்னென்ன காரியங்களுக்கு கிருபை, என்னென்ன காரியங்களுக்கு கிரியை என வேதாகமம் வரையறுத்துள்ளது. அவற்றை ஏற்கனவே பலமுறை ஆங்காங்கே கூறியுள்ளேன். இன்னமும் அதைக் குறித்து அறியவிரும்புபவர்கள் கேட்டால் எடுத்துரைக்க ஆயத்தமாயுள்ளேன்.

soulsolution wrote:
//
அப்படி இல்லாவிட்டால் தேவன் தான் படைத்த மனிதனைக் காப்பாற்ற முடியாதவராகி, 'சர்வ வல்லவர்' என்ற பட்டத்தை இழந்து அதனால் தேவன் என்ற தகுதியையே இழந்துவிடுவார்.
தேவனால் கூடாதது ஒன்றுமில்லை.//

தேவன் மனிதனைக் காப்பாற்றவேண்டுமெனில், மனிதன் செய்யவேண்டிய சில காரியங்களைச் சொல்லியுள்ளார். அதைக் கேட்க மனமில்லாதவர்களை தேவன் காப்பாற்ற மாட்டார், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமுமில்லை, அவர்களைக் காப்பாற்றித்தான் “சர்வ வல்லவர்” எனும் தமது பட்டத்தை தக்கவைக்கவேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில்: அவர் கிருபையுள்ளவர், சர்வ வல்லவர் மட்டுமல்ல, அவர் நீதிபரருங்கூட.

கேட்கிறதற்குக் காதுள்ளவன் கேட்கக்கடவன்.


-- Edited by anbu57 on Sunday 7th of March 2010 06:19:52 AM

-- Edited by anbu57 on Sunday 7th of March 2010 06:21:42 AM

__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Executive

Status: Offline
Posts: 425
Date:

அன்பான சகோதரர்களே!

எனது இப்பதிவுக்கு முந்தின 2-வது பதிவில் சில திருத்தங்கள் செய்துள்ளேன்.

X  X  X  X  X  X

இக்குறிகளுக்கு இடையில் திருத்தப்பட்ட பகுதி உள்ளது. அதைப் படித்து கவனத்தில் கொள்ளுமாறு அன்புடன் வேண்டுகிறேன்.

எனது தவறுக்கும் அதனால் உண்டான அசெளகரியத்திற்கும் மன்னிக்கவும்.

நன்றி.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

ஆதாமிற்குள் எல்லோரும் மரிப்பது போல் கிறிஸ்துவிற்குள் எல்லோரும் உயிர்த்தெழுவார்கள் என்று நம்பிக்கை இருக்கிறது அல்லவா சகோ அன்பு அவர்களே,

அப்ப‌டி உயிர்த்தெழ‌ வேண்டும் என்றால் ந‌ம்மில் பாவ‌ம் இருக்க‌ கூடாது, ஏனென்றால் பாவ‌த்தின் ச‌ம்ப‌ள‌ம் ம‌ர‌ண‌மாக‌ மாத்திர‌மே இருக்க‌ முடியுமே த‌விர‌, உயிர்த்தெழுத‌லாக‌ இருக்க‌ முடியாது. ஆக‌ உயிர்த்தெழுத‌ல் ந‌ட‌க்கிற‌து என்றால் பாவ‌ம் ம‌ண்ணிக்க‌ப்ப‌ட்டு விட்ட‌து என்றே அர்த்த‌ம் ஆகிற‌து. பிற‌கு எத‌ற்கு 2ம் ம‌ர‌ண‌ம்? என்ன‌ லாஜிக்.இருக்கிற‌து? தேவ‌ன் குழ‌ப்ப‌த்தின் தேவ‌ன் அல்ல‌, ஆனால் உங்க‌ள் க‌ருத்தில் குழ‌ப்ப‌ம் இருக்கிற‌து.

நான் சொல்லுவ‌து, ஒரு ம‌ர‌ண‌மும் அத‌ன் பின் உய்ர்த்தெழுத‌லும், பாவ‌ம் போவ‌தான் தான் ச‌ம்ப‌விக்க‌ முடியும், அத‌ன் பின் நியாய‌த்தீர்ப்பின் நாட்க‌ளில் மீண்டும் ஆதாம் பாவ‌ம் செய்வ‌த‌ற்கு முந்திய‌ நிலையில் ம‌னித‌ன் உயிர்ப்பிக்க‌ப்ப‌டுவ‌தால் அவ‌னிட‌த்தில் பாவ‌ ச‌ரீர‌மோ, பாவ‌மோ இருக்க‌ வாய்ப்பே இல்லை, அவ‌ன் பாவ‌ம் செய்யாமால் இருப்ப‌தை அல்ல‌ மாறாக‌ தேவ‌ன் யார் என்று அறியாத‌தினால் தேவ‌ன் யார் என்று அறிந்துக்கொள்ள‌வே இந்த‌ நியாய‌த்தீர்ப்பே த‌விர‌, உயிர்த்தெழுந்த‌ ம‌னித‌னை , நீ முன்பு ம‌னித‌னாக‌ இருந்த‌ போது பாவ‌ம் செய்தாய், ஆக‌யால் நீ இர‌ண்டாம் ம‌ர‌ண‌த்திற்கு செல் என்று சொல்லுவ‌த‌ற்கு அல்ல‌, என்ப‌தே வேத‌ம் சொல்லி த‌ருகிற‌து. இங்கே அங்கே த‌ங்க‌ளின் க‌ருத்துக்கு சாத‌க‌மாக‌ "தோன்றும்" வ‌ச‌ன‌த்தை வைத்துக்கொண்டு மாத்திர‌ம் சொல்லுவ‌தில் என்ன‌ நியாய‌ம்? அப்ப‌டி என்றால் நாங்க‌ள் எடுத்த்து சொல்லும் வ‌ச‌ன‌த்திற்கு என்ன‌ ப‌தில் வைத்திருக்கிறீர்க‌ள். வேத‌த்தில் இல்லாத‌ ஒன்றான‌, ம‌னித‌னின் முய‌ற்சியை ந‌ம்பி தான் தேவ‌ன் ம‌னித‌னை இர‌ட்சிக்க‌ வ‌ல்ல‌வ‌ர் என்று சொல்லுவ‌து அப‌த்த‌ம், அவ‌ரின் "ச‌ர்வ‌ வ‌ல்ல‌மைத்த‌ன‌த்திற்கு" குறைச்ச‌ல் உண்டாக்குவ‌து போலுள்ள‌து.

ஒரு ப‌க்க‌ம் ஆதாமின் பாவத்திற்காக உயிர்த்தெழுத‌ல் இருக்கிற‌து என்று சொல்லி ம‌று ப‌க்க‌ம் உயிர்த்தெழ‌ச்செய்து மீண்டும் 2ம் ம‌ர‌ண‌த்தில் தள்ளுவ‌தற்கு தான் என்றால் ஏன் உயிர்த்தெழுத‌ல் தேவையாக‌ இருக்கிற‌து என்ப‌தை விள‌க்க‌ முடியுமா? இது எல்லாம் தேவ‌னின் ம‌கா பெரிதான‌ அந்த‌ அன்பை புரிந்துக்கொள்ளாத‌தினால் ஏற்ப‌டுகிற‌ விள‌க்க‌ங்க‌ளே த‌விர‌ வேற் ஒன்றும் இல்லை. தேவ‌ன் நீதிப‌ர‌ர் தான் ஆனால் அவ‌ரின் நீதியே "அன்பு" தானே. ஏழு எழுப‌து முறை ம‌ன்னிக்க‌ சொன்ன‌ தேவ‌ன், பாவ‌ங்க‌ளை ம‌ன்னித்து உயிர்த்தெழ‌ செய்து மீண்டும் அவ‌ர்க‌ள் முன்பு செய்த‌ பாவ‌த்தின் நிமித்த‌ம் 2ம் ம‌ர‌ன‌த்திற்கு த‌ள்ளிவிடுவார் என்றால் இது எந்த‌ வித‌மான‌ நியாய‌த்தீர்ப்பு.

தாங்க‌ள் தங்களின் கருத்துக்கு சாதகமாக தோன்றி அடிக்க‌டி சுட்டி காட்டும் ம‌த். 25:31 தொட‌ங்கும் வ‌ச‌ன‌ங்க‌ளில் ஒரு இட‌த்தில் கூட‌ கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள‌ சொன்ன‌ப்ப‌டியாக‌ இல்லையே. அங்கே சொல்ல‌ப்ப‌ட்ட‌வை எல்லாம் பொதுவாக‌ நீதியான‌ காரிய‌ங்க‌ளே. அதை தான் கிறிஸ்த‌வ‌ர்க‌ள் அல்லாத‌வ‌ர்க‌ள் பின் ப‌ற்றி வ‌ருகிறார்க‌ளே, பிற‌கு எத‌ற்கு வ‌ரிந்துக்க‌ட்டி கொண்டு அனைவ‌ருக்கும் "சுவிசேஷ‌ம்" சொல்ல‌ ஓட்ட‌ம். அவ‌ர்க‌ள் ஏற்க‌ன‌வே செய்து வ‌ருவ‌தை அவ‌ர்க‌ளிட‌ம் செய்ய‌ சொல்லுவ‌தில் என்ன‌ நியாய‌ம்? இந்த‌ ப‌குதிக‌ளில் உங்க‌ளை சுவிசேஷ‌ ப‌ணியும் செய்ய‌ சொல்ல‌வில்லையே. அப்புற‌ம் ஏன் அதை செய்து வ‌ருகிறீர்க‌ள்? கிறிஸ்துவை அறிவிக்க‌ சொல்ல‌ வில்லையே, ஏன் செய்கிறீர்க‌ள்? உவ‌மையில் ம‌னித‌ர்க‌ளை ஆடுக‌ளாக‌ சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் போது, அக்கினி சூளையை மாத்திர‌ம் அப்ப‌டியே அர்த்த‌ம் கொள்வ‌தில் என்ன‌ நியாய‌ம்? ஆடுகள் மாத்திர‌ம் ம‌னித‌ர்க‌ளாம் ஆனால் அக்கினி மாத்திர‌ம் அப்ப‌டியே அக்கினியாம், பிசாசு மாத்திர‌ம் அப்ப‌டியே பிசாசாம்? உவ‌மை என்றால் அதை உவ‌மையாக‌ விள‌க்குங்க‌ள்!!

ப‌ர‌லோக‌ம் செல்வ‌த‌ற்கும் ந‌ர‌க‌ம் செல்வ‌த‌ற்கு ம‌த். 25ம் அதிகார‌ம் தான் த‌குதி என்றால் யாரும் யாரையும் கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ள‌ சொல்ல‌ வேண்டிய‌ அவ‌சிய‌ம் இல்லையே!! த‌ய‌வு செய்து உவ‌மையை உவ‌மையாக‌ புரிந்துக்கொள்ளுங்க‌ள் அல்ல‌து அர்த்த‌ங்க‌ள் மாறி விடும்!!

மேலும் ம‌த். 13ல் சொல்ல‌ப்ப‌ட்ட‌ ச‌ம்பவ‌மும், 25ல் சொல்ல‌ப்ப‌ட்ட‌ ப‌குதியும் ஒரே கால‌த்தை சார்ந்த‌து அல்ல‌ என்ப‌தையும் புரிந்துக்கொள்ளுங்க‌ள். ம‌த் 25ல் வெள்ளை சிங்காச‌ன‌ நியாய‌த்தீர்ப்பை குறித்து இருக்கிற‌து, ம‌த் 13 உல‌க‌த்தின் முடிவை குறித்து சொல்லுகிற‌து. இர‌ண்டையும் ஜோடு வ‌ச‌ன‌ங்க‌ளாக‌ எடுத்துக்கொள்ள‌ முடியாதே.

தேவ‌னின் கிருபை எல்லா ம‌னுஷ‌ர்க‌ள் மேலும் இருக்கிறாது, அதை இத‌ற்கு தான் கிருபை, அத‌ற்கு கிருபை இல்லை என்று பிரித்து பார்க்க‌ முடியாது. தேவ‌ன் ப‌ட்ச‌பாத‌ம் இல்லாத‌வ‌ர். சுவிசேஷ‌ம் சொல்லுகிறோம் என்று இருப்ப‌வ‌ர்க‌ள் தான் அந்த‌ வித்தியாச‌த்தில் இருக்கிறார்க‌ள். அப்ப‌டியே ப‌ட்ச‌பாத‌ம் இல்லாத‌ தேவ‌ன் எல்லா ம‌னுஷ‌ர்களின் பாவ‌ங்க‌ளை மண்னித்து, எல்லோரையும் உயிர்த்தெழ‌ செய்து நித்திய‌ ஜீவ‌னை த‌ர‌ இருக்கிறார். ஐயோ நாங்க‌ள் இவ்வுள‌வு ஓடியும் எங்க‌ள் பேச்சை கேட்காத‌வ‌ர்க‌ளுக்கும் நித்திய‌ஜீவ‌னா என்கிற‌ போறாமையில் இருப்ப‌வ‌ர்க‌ளுக்கு இது ஏற்றுக்கொள்ள‌ ச‌ற்றே க‌டின‌ம் தான். ஏனென்றால் தேவ‌னின் கிருபைக்கு அல்லாம‌ல் த‌ங்க‌ளின் கிரியைக‌ளுக்கு இவ‌ர்க‌ள் முக்கிய‌த்துவ‌ம் த‌ருகிறார்க‌ள். ம‌னித‌னின் முய‌ற்சி தான் இர‌ட்சிப்பை கொண்டு வ‌ரும் என்றால் 4000 வ‌ருட‌ங்க‌ள் ம‌னித‌ர்க‌ள் ப‌ல‌ வித‌மான‌ ச‌ட்ட‌ங்க‌ளுக்கு (நியாய‌ப்பிர‌மான‌ங்க‌ள், ம‌ன‌சாட்சிக‌ள்) கீழ்ப‌டிந்தும் உயிர்த்தெழுத‌ல் ச‌ம்ப‌விப்ப‌து இயேசு கிறிஸ்துவின் உயிர்த்தெழுத‌லினாலே அன்றி இந்த‌ ம‌னித‌ர்க‌ள் நேர்மையாக‌ பின் ப‌ற்றின‌ சில‌ க‌ற்ப‌னைக‌ளினால் அல்ல‌!! அது எல்லாம் தோற்று போன‌தாக‌ ப‌வுல் எழுதுகிறார். அந்த‌ எழுத்தை எல்லாம் இயேசு கிறிஸ்து சிலுவையிலே அடித்து முடித்து விட்டார். ஆனால் எங்க‌ளுக்கு கிருபை தேவை இல்லை, அந்த‌ கிரியைக‌ளே தேவை என்று இன்று வ‌ரை "சுவிசேஷ‌மாக‌" சொல்லிக்கொண்டு தான் வ‌ருகிறார்க‌ள்.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Executive

Status: Offline
Posts: 425
Date:

bereans wrote:
//உவ‌மையில் ம‌னித‌ர்க‌ளை ஆடுக‌ளாக‌ சொல்ல‌ப்ப‌ட்டிருக்கும் போது, அக்கினி சூளையை மாத்திர‌ம் அப்ப‌டியே அர்த்த‌ம் கொள்வ‌தில் என்ன‌ நியாய‌ம்? ஆடுகள் மாத்திர‌ம் ம‌னித‌ர்க‌ளாம் ஆனால் அக்கினி மாத்திர‌ம் அப்ப‌டியே அக்கினியாம், பிசாசு மாத்திர‌ம் அப்ப‌டியே பிசாசாம்? உவ‌மை என்றால் அதை உவ‌மையாக‌ விள‌க்குங்க‌ள்!!//

இயேசுவின் இந்த தீர்க்கதரிசனத்தை வெறும் “உவமை” என நீங்கள் புரிந்துகொள்ளும் பட்சத்தில் உங்களிடம் விவாதம் செய்து பயனில்லை.

இயேசு சொன்னதை ஒவ்வொரு வசனமாக எடுத்துச்சொல்லி உங்களுக்கு விளக்க முயற்சிக்கிறேன்; அதன் பின்னும் அதை நீங்கள் உவமைதான் என்று சொன்னால் எனது விவாதத்தை நிறுத்திக் கொள்கிறேன்.

மத்தேயு 25:31,32 அன்றியும் மனுஷகுமாரன் தமது மகிமைபொருந்தினவராய்ச் சகல பரிசுத்த தூதரோடுங்கூட வரும்போது, தமது மகிமையுள்ள சிங்காசனத்தின்மேல் வீற்றிருப்பார். அப்பொழுது, சகல ஜனங்களும் அவருக்கு முன்பாகச் சேர்க்கப்படுவார்கள்.

இவ்வசனங்களில், இறுதி நியாயத்தீர்ப்பு நடப்பதற்கு முன் சகல ஜனங்களும் சேர்க்கப்படப்போவதை நேரடியாக இயேசு சொல்கிறார். இதில் உவமைக்கான எந்த வார்த்தைகளும் இல்லை.

32,33 மேய்ப்பனானவன் செம்மறியாடுகளையும் வெள்ளாடுகளையும் வெவ்வேறாகப் பிரிக்கிறதுபோல அவர்களை அவர் பிரித்து, செம்மறியாடுகளைத் தமது வலதுபக்கத்திலும், வெள்ளாடுகளைத் தமது இடதுபக்கத்திலும் நிறுத்துவார்.

ஜனங்களை மனுஷகுமாரன் எவ்விதமாகப் பிரிப்பார் என்பதற்கு மட்டும் மேய்ப்பன், ஆடு உவமையை இயேசு கூறுகிறார். மேய்ப்பன் ஆடுகளைப் பிரிப்பதுபோல, மனுஷகுமாரன் ஜனங்களைப் பிரிப்பார் என இயேசு தெளிவாகக் கூறியுள்ளார்.

மனுஷகுமாரன் தமது வலது பக்கத்திலும் இடது பக்கத்திலும் நிறுத்தப்போவது இரு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்ட மனிதர்களைத்தான் என்பதை புரிந்துகொள்வீர்கள் என நம்புகிறேன். ஒருவேளை புரிந்துகொள்ளமுடியாவிட்டாலும் அடுத்த வசனத்தைப் படிக்கையில் அதைத் தெளிவாகப் புரிந்துகொள்வீர்கள்.

34 அப்பொழுது, ராஜா தமது வலது பக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து: வாருங்கள் என் பிதாவினால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களே, உலகம் உண்டானது முதல் உங்களுக்காக ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற ராஜ்யத்தைச் சுதந்தரித்துக்கொள்ளுங்கள்.

இவ்வசனத்தில் உவமைக்கான எந்த வார்த்தையும் இல்லை என்பதை ஏற்றுக்கொள்வீர்கள் என நம்புகிறேன். மனுஷகுமாரன் என்பதற்குப் பதிலாக ராஜா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. அந்த இறுதி நியாயத்தீர்ப்பின்போது, இயேசுவானவர் சிங்காசனத்தில் வீற்றிருக்கும் ராஜாவாகத்தான் இருப்பார் என்பதால் ராஜா என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

35-40 பசியாயிருந்தேன், எனக்குப் போஜனங்கொடுத்தீர்கள்; தாகமாயிருந்தேன், என் தாகத்தைத் தீர்த்தீர்கள்; அந்நியனாயிருந்தேன், என்னைச் சேர்த்துக்கொண்டீர்கள்; வஸ்திரமில்லாதிருந்தேன், எனக்கு வஸ்திரங்கொடுத்தீர்கள்; வியாதியாயிருந்தேன், என்னை விசாரிக்க வந்தீர்கள்; காவலிலிருந்தேன், என்னைப் பார்க்கவந்தீர்கள் என்பார்.
அப்பொழுது, நீதிமான்கள் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, நாங்கள் எப்பொழுது உம்மைப் பசியுள்ளவராகக் கண்டு உமக்குப் போஜனங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மைத் தாகமுள்ளவராகக்கண்டு உம்முடைய தாகத்தைத் தீர்த்தோம்? எப்பொழுது உம்மை அந்நியராகக்கண்டு உம்மைச் சேர்த்துக்கொண்டோம்? எப்பொழுது உம்மை வஸ்திரமில்லாதவராகக் கண்டு உமக்கு வஸ்திரங்கொடுத்தோம்? எப்பொழுது உம்மை வியாதியுள்ளவராகவும் காவலிலிருக்கிறவராகவும் கண்டு, உம்மிடத்தில் வந்தோம் என்பார்கள்.
அதற்கு ராஜா பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவராகிய என் சகோதரரான இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்தீர்களோ, அதை எனக்கே செய்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.

மிகவும் சிறியவராகிய தமது சகோதரருக்கு செய்த நற்கிரியைகளை தமக்குச் செய்ததாக ஏற்றுக்கொண்டு, நற்கிரியைகளைச் செய்த அவர்களை நீதிமான்கள் என இயேசு அழைப்பதை இவ்வசனங்களில் பார்க்கிறோம்.

41 அப்பொழுது, இடதுபக்கத்தில் நிற்பவர்களைப் பார்த்து அவர்: சபிக்கப்பட்டவர்களே, என்னைவிட்டு, பிசாசுக்காகவும் அவன் தூதர்களுக்காகவும் ஆயத்தம்பண்ணப்பட்டிருக்கிற நித்திய அக்கினியிலே போங்கள்.

இடது பக்கத்தில் நின்ற அநீதிமான்களுக்கான நித்திய ஆக்கினையை இவ்வசனத்தில் இயேசு கூறுகிறார். இவ்வசனத்திலும் உவமை எனச் சொல்லப்படுவதற்கான எந்த வார்த்தையும் இல்லை.

இடதுபக்கம் நிற்பவர்கள் - அநீதிமான்களாகிய மனிதர்கள்; பிசாசு - பிசாசு; பிசாசின் தூதர்கள் - பிசாசின் தூதர்கள்; பிசாசுக்கும் அவன் தூதர்களுக்கும் ஆயத்தம் பண்ணப்பட்ட ஆக்கினைதான் நித்திய அக்கினி. இந்த அக்கினி எப்படிப்பட்டதாக இருக்கும் என்பதை நாம் மறுமைக்குச் சென்றபின்னர்தான் அறியமுடியும். ஆயினும் நித்திய அக்கினி என இயேசு கூறுவதால், அது ஒரு மனிதனின் ஆத்துமாவை நிரந்தரமாக அழிக்கக்கூடிய ஒன்றாக இருக்கும் என்று மட்டும் நாம் புரிந்துகொள்ளமுடியும்.

42-45 பசியாயிருந்தேன், நீங்கள் எனக்குப் போஜனங்கொடுக்கவில்லை; தாகமாயிருந்தேன், நீங்கள் என் தாகத்தைத் தீர்க்கவில்லை; அந்நியனாயிருந்தேன், நீங்கள் என்னைச் சேர்த்துக்கொள்ளவில்லை; வஸ்திரமில்லாதிருந்தேன், நீங்கள் எனக்கு வஸ்திரங்கொடுக்கவில்லை; வியாதியுள்ளவனாயும் காவலிலடைக்கப்பட்டவனாயும் இருந்தேன், நீங்கள் என்னை விசாரிக்க வரவில்லையென்பார்.
அப்பொழுது, அவர்களும் அவருக்குப் பிரதியுத்தரமாக: ஆண்டவரே, உம்மைப் பசியுள்ளவராகவும், தாகமுள்ளவராகவும், அந்நியராகவும், வஸ்திரமில்லாதவராகவும், வியாதிப்பட்டவராகவும், காவலிலடைக்கப்பட்டவராகவும் நாங்கள் எப்பொழுது கண்டு, உமக்கு உதவி செய்யாதிருந்தோம் என்பார்கள்.
அப்பொழுது அவர் அவர்களுக்குப் பிரதியுத்தரமாக: மிகவும் சிறியவர்களாகிய இவர்களில் ஒருவனுக்கு நீங்கள் எதைச் செய்யாதிருந்தீர்களோ, அதை எனக்கே செய்யாதிருந்தீர்கள் என்று மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்பார்.


இவர்கள் நற்கிரியைகளைச் செய்யாததால் அநீதிமான்கள் எனத் தீர்க்கப்பட்டு, நித்திய அக்கினிக்குள் செல்லவேண்டிய ஆக்கினையைப் பெறுவார்கள்.

46 அந்தப்படி, இவர்கள் நித்திய ஆக்கினையை அடையவும், நீதிமான்களோ நித்திய ஜீவனை அடையவும் போவார்கள் என்றார்.

இவ்வசனத்திலும் உவமைக்குரிய எந்த வார்த்தையும் இல்லை. எல்லா வார்த்தைகளும் நேரடியான வார்த்தைகளே.

இவ்வளவு தெளிவான தீர்க்கதரிசன அறிவிப்பை, இனியும் உவமை என்று சொல்வீர்களென்றால் நான் எதுவும் செய்யமுடியாது.

இதை உவமை என நினைத்துக்கொண்டு “TruthSeekers" ஆகிய நீங்கள் எவ்வளவு காலம் உண்மையைத் தேடினாலும், உண்மையைக் கண்டுகொள்ளவே முடியாது.

நித்திய ஜீவனை யார் பெறுவார்கள் என்பது பற்றிய உங்கள் அடிப்படைக் கருத்து தவறே என இத்தீர்க்கதரிசனம் தெளிவாகக் கூறுவதால், உவமை, அது, இது என எதையாவது சொல்லி உங்கள் தவறை ஒத்துக்கொள்ள மறுக்கிறீர்கள்.

உங்களின் மற்றொரு அடிப்படைக் கருத்தான, பாவம் இல்லாமல்தான் உயிர்த்தெழமுடியும் எனும் கருத்தும் தவறே என இத்தீர்க்கதரிசனம் தெளிவாகக் கூறுகிறது.

இத்தீர்க்கதரிசனத்தில் இயேசு கூறுகிறதான அநீதிமான்கள், இப்பூமியில் வாழ்ந்த நாட்களில்தான் நற்கிரியைகள் செய்யாதவர்கள். “நற்கிரியை செய்யாமை” எனும் பாவத்தைச் செய்த அவர்களுங்கூட 1 கொரி. 15:22-ன்படி உயிர்த்தெழவே செய்வார்கள்.

பாவத்தோடு எப்படி உயிர்த்தெழமுடியும் என மீண்டும் மீண்டும் என்னிடம் கேட்டுப்பயனில்லை.

மேலே இயேசு சொன்ன தீர்க்கதரிசனத்தின்படி, நற்கிரியை செய்யாதவர்களாகிய பாவிகள் எப்படி உயிர்த்தெழுந்து வெள்ளை சிங்காசன நியாயத்தீர்ப்புக்கு வந்தார்கள் என உங்களுக்குள்ளாகவே கேட்டு, அதற்கான பதிலை முதலாவது கண்டுபிடியுங்கள். அதன்பின் மற்றதைக் குறித்து பேசுவோம்.

bereans wrote:
//தேவ‌ன் நீதிப‌ர‌ர் தான் ஆனால் அவ‌ரின் நீதியே "அன்பு" தானே. ஏழு எழுப‌து முறை ம‌ன்னிக்க‌ சொன்ன‌ தேவ‌ன், பாவ‌ங்க‌ளை ம‌ன்னித்து உயிர்த்தெழ‌ செய்து மீண்டும் அவ‌ர்க‌ள் முன்பு செய்த‌ பாவ‌த்தின் நிமித்த‌ம் 2ம் ம‌ர‌ன‌த்திற்கு த‌ள்ளிவிடுவார் என்றால் இது எந்த‌ வித‌மான‌ நியாய‌த்தீர்ப்பு.//

பரிசுத்த ஆவிக்கு விரோதமாக தூஷணம் செய்தவனுக்கு இம்மையிலும் மறுமையிலும் மன்னிக்கப்படுவதில்லை என இயேசு சொல்லியுள்ளாரே, இவ்விஷயத்தில், தேவனின் “அன்பு” எனும் நீதி எங்கே போனது?


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

//தேவன் மனிதனைக் காப்பாற்றவேண்டுமெனில், மனிதன் செய்யவேண்டிய சில காரியங்களைச் சொல்லியுள்ளார். அதைக் கேட்க மனமில்லாதவர்களை தேவன் காப்பாற்ற மாட்டார், அவர்களைக் காப்பாற்ற வேண்டிய அவசியமுமில்லை, அவர்களைக் காப்பாற்றித்தான் “சர்வ வல்லவர்” எனும் தமது பட்டத்தை தக்கவைக்கவேண்டிய அவசியமுமில்லை. ஏனெனில்: அவர் கிருபையுள்ளவர், சர்வ வல்லவர் மட்டுமல்ல, அவர் நீதிபரருங்கூட.//


அன்பு அவர்களே, மனிதன் செய்யவேண்டிய 'சில' காரியங்களைச் சொல்லியுள்ளார் என்று நீங்களாக கற்பனை செய்து எழுதியிருக்கிறீர்கள். எந்த மனிதனுக்குச் சொன்னார்? எப்படிச் சொன்னார்? விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.
பழைய ஏற்பாட்டில் ஒரு சிறிய கூட்டமான இஸ்ரவேலுக்குச் சொன்ன காரியங்களை பொத்தாம் பொதுவாக 'மனிதனுக்கு' என்று எப்படி ஏற்பது? அவர் யாரென்றே அறியாத மனிதர்கள்தான் அதிகம். புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் எல்லா மனிதருக்கும் நீங்கள் சொன்ன 'சில' காரியங்கள் போய்ச் சேரவே இல்லையே. இன்றைக்கும் கிறிஸ்தவம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு பெருங்கூட்டத்துக்கே நீங்கள் சொன்ன 'சில' காரியங்கள் விளங்கவில்லை.

என்ன செய்ய வேண்டும் என்று கேள்விப்படாதவர்களைப் போய் ஏன் இதைச் செய்யவில்லை என்று கேட்டு அதற்கு 'நித்திய ஆக்கினை'யை தருமளவு நீங்கள் சொல்லும் தேவன் அநீதிபரர் அல்ல. சகோதரர் பெரேயன்ஸ் குறிப்பிட்டபடி வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுப்பது மாத்திரம் நித்திய ஜீவனுக்கு உத்தரவாதம் அளிக்காது. அதற்கு உத்தரவாதம் கிறிஸ்துவின் மூலமாய் வெளிப்பட்ட தேவ கிருபையே.

மறுபடியும் மனிதன் செய்ய வேண்டிய காரியம் என்று நீங்கள் வாதிடுவது வியப்பாக உள்ளது. முதல் மனிதனான ஆதாமுக்குச் தேவன் நேரடியாகச் சொன்ன ஒரு சிறிய காரியமான 'இந்த மரத்தின் கனியைப் புசிக்காதே' என்ற கட்டளையைக்கூட அவனால் கைக்கொள்ள முடியாத போது நீங்கள் எல்லா மனிதனையும் அதைச் செய், இதைச் செய்யாதே என்று ஒரு விளங்கிக்கொள்ள அரிதாக இருக்கிற புத்தகத்தின் மூலம் (வேதம்) சொல்லியிருக்கிறார் என்று மிகவும் பலவீனமாக வாதிடுகிறீர்கள். கேட்டால் அவர்களை அவர்கள் மனசாட்சியின் பிரமாணத்தின் மூலம் நியாயந்தீர்ப்பார் என்கிறீர்கள். அப்படி ஒரு பிரமாணம் சரியாக இருக்கும்பட்சம் அவர் எல்லாரையுமே மனசாட்சிப் பிரமாணத்தின் மூலம் நியாயந்தீர்க்கலாமே? இப்போது மனசாட்சி என்று ஒன்று இல்லாமலா போய்விட்டது?
அப்படி மனிதன் கைக்கொள்ள வேண்டிய காரியங்களைச் சொல்லியுள்ளார் என்று நீங்கள் நம்பினால் நீங்கள் ஏன் போய் சொல்கிறீர்கள்?


எப்படி மரணம் என்றால் நித்திய மரணமோ அதேபோல ஜீவன் என்றாலே நித்திய ஜீவன்தான். ஒரு முறை செய்த பாவத்துக்கு இரண்டுமுறை மரிப்பது கேலிக்கூத்தாகும். அப்படி நீங்கள் 'சுவிசேஷம்' சொல்லித்தான் எத்தனை பேர் நீதிமான்களாக ஆகியிருக்கிறார்கள்?

மனிதன் இப்படிக் கெட்டு, உருமாறி, தேவசுபாவத்தை இழந்து, தேவனை அறியாமல் இப்படி இருக்கவேண்டும் என்பது தேவ சித்தம். ஏனென்றால் அதன்பின் ஒரு மகத்தான தீர்வை, தேவராஜ்ஜியத்தை மனிதனுக்கு தேவன் வைத்திருக்கிறார். அதைப் புரிந்துகொள்ளாததினால்தான் இன்று இத்தகைய குழப்பங்கள். புதிய பூமி வருமுன் பழையது அகற்றப்பட வேண்டும்.

எங்கள் பகுதியில் புதிதாக 4 ட்ராக் ரோடு உருவாகிறது. பழைய ரோடு அடியோடு தோண்டப்பட்டு ஒருபக்கம் குவிந்துகிடக்கிறது, எங்கு பார்த்தாலும் ஒரே புழுதி, புதியரோடு போடுமிடத்தில் ஈரம், சகதி, கற்கள், தார், ஏராளமான பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள். இதனிடையே இயல்பாக நடைபெறும் காரியங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். வரப்போகும் அருமையான பெரும்பாதையான வழியைப் பற்றி சற்றேனும் அறியாதவர்கள். ஐயோ நல்ல ரோடு இப்படி நாசமாகிறதே என்றுதான் எண்ணுவார்கள். அதே போலத்தான் வரப்போகும் புதிய ராஜ்ஜியத்துக்கு அறிகுறிதான் தற்போதைய மோசமான நிலை.

The wise shall understand....



__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Executive

Status: Offline
Posts: 425
Date:

soulsolution wrote:
//மனிதன் செய்யவேண்டிய 'சில' காரியங்களைச் சொல்லியுள்ளார் என்று நீங்களாக கற்பனை செய்து எழுதியிருக்கிறீர்கள்//

வேதாகமத்தில் கூறப்பட்டுள்ள கற்பனைகளை நான் கற்பனை செய்து எழுதுவதாகக் கூறுகிறீர்கள். இதற்கு என்ன பதில் எழுதுவது என்பது என் கற்பனைக்கு எட்டவில்லை.

soulsolution wrote:
//எந்த மனிதனுக்குச் சொன்னார்? எப்படிச் சொன்னார்? விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.//

வேதாகமம் மூலம் சொன்னார். யாருடைய பார்வைக்கெல்லாம் அல்லது செவிகளுக்கெல்லாம் வேதாகமம் செல்கிறதோ அத்தனை பேருக்கும் சொன்னார்.

soulsolution wrote:
//பழைய ஏற்பாட்டில் ஒரு சிறிய கூட்டமான இஸ்ரவேலுக்குச் சொன்ன காரியங்களை பொத்தாம் பொதுவாக 'மனிதனுக்கு' என்று எப்படி ஏற்பது?//

ரோமர் 2:9-16-ஐ நன்கு படித்து தியானியுங்கள். புரியவில்லையென்றால் கேளுங்கள்.

soulsolution wrote:
//அவர் யாரென்றே அறியாத மனிதர்கள்தான் அதிகம். புதிய ஏற்பாட்டுக் காலத்திலும் எல்லா மனிதருக்கும் நீங்கள் சொன்ன 'சில' காரியங்கள் போய்ச் சேரவே இல்லையே. இன்றைக்கும் கிறிஸ்தவம் என்று தங்களை அழைத்துக்கொள்ளும் ஒரு பெருங்கூட்டத்துக்கே நீங்கள் சொன்ன 'சில' காரியங்கள் விளங்கவில்லை.//

மீண்டும் ரோமர் 2:9-16-ஐ படியுங்கள்.

soulsolution wrote:
//என்ன செய்ய வேண்டும் என்று கேள்விப்படாதவர்களைப் போய் ஏன் இதைச் செய்யவில்லை என்று கேட்டு அதற்கு 'நித்திய ஆக்கினை'யை தருமளவு நீங்கள் சொல்லும் தேவன் அநீதிபரர் அல்ல.//

மீண்டும் ரோமர் 2:9-16-ஐ படியுங்கள்.

soulsolution wrote:
//சகோதரர் பெரேயன்ஸ் குறிப்பிட்டபடி வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் கொடுப்பது மாத்திரம் நித்திய ஜீவனுக்கு உத்தரவாதம் அளிக்காது. அதற்கு உத்தரவாதம் கிறிஸ்துவின் மூலமாய் வெளிப்பட்ட தேவ கிருபையே.//

நற்கிரியைகள் மட்டும் எப்படி நித்தியஜீவனுக்கு உத்தரவாதம் அளிக்காதோ அப்படியே, கிருபை மட்டும் நித்தியஜீவனுக்கு உத்தரவாதம் அளிக்காது.

நீங்கள் "எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்" எனும்
ரோமர் 3:23,24 வசனங்களை உங்கள் வாதத்திற்கு ஆதாரமாகச் சொன்னால, மத்தேயு 25:31-46; 13:37-41 போன்ற ஏராளமான வசனங்களை எனது வாதத்திற்கு என்னால் சொல்லமுடியும்.

soulsolution wrote:
//முதல் மனிதனான ஆதாமுக்குச் தேவன் நேரடியாகச் சொன்ன ஒரு சிறிய காரியமான 'இந்த மரத்தின் கனியைப் புசிக்காதே' என்ற கட்டளையைக்கூட அவனால் கைக்கொள்ள முடியாத போது நீங்கள் எல்லா மனிதனையும் அதைச் செய், இதைச் செய்யாதே என்று ஒரு விளங்கிக்கொள்ள அரிதாக இருக்கிற புத்தகத்தின் மூலம் (வேதம்) சொல்லியிருக்கிறார் என்று மிகவும் பலவீனமாக வாதிடுகிறீர்கள்.//

முதல் மனிதனான ஆதாமுக்குச் தேவன் நேரடியாகச் சொன்ன ஒரு சிறிய காரியமான 'இந்த மரத்தின் கனியைப் புசிக்காதே' என்ற கட்டளையைக்கூட அவனால் கைக்கொள்ள முடியாத போது எல்லா மனிதனையும் அதைச் செய், இதைச் செய்யாதே என்று தேவன் சொன்னது எத்தனை பலவீனமானது என நீங்கள் கருதுகிறீர்களோ, அதே அளவுக்கு எனது வாதமும் பலவீனமானதுதான்.

soulsolution wrote:
//அவர்களை அவர்கள் மனசாட்சியின் பிரமாணத்தின் மூலம் நியாயந்தீர்ப்பார் என்கிறீர்கள். அப்படி ஒரு பிரமாணம் சரியாக இருக்கும்பட்சம் அவர் எல்லாரையுமே மனசாட்சிப் பிரமாணத்தின் மூலம் நியாயந்தீர்க்கலாமே? இப்போது மனசாட்சி என்று ஒன்று இல்லாமலா போய்விட்டது?//

இக்கேள்விக்கெல்லாம் ஏற்கனவே வேறு திரிகளில் உங்களுக்குப் பதில் சொல்லியுள்ளேன். ஆனால், அதை ஏற்க உங்களுக்கு மனதில்லை. எனவே தேவனிடமே இக்கேள்வியைக் கேளுங்கள்.

soulsolution wrote:
//ஒரு முறை செய்த பாவத்துக்கு இரண்டுமுறை மரிப்பது கேலிக்கூத்தாகும்.//

இப்படி நான் எழுதின வரியை, எனது பதிவுகளிலிருந்து மேற்கோள் எடுத்து காட்டுங்கள். அதன்பின் பதில் சொல்கிறேன்.

soulsolution wrote:
//மனிதன் இப்படிக் கெட்டு, உருமாறி, தேவசுபாவத்தை இழந்து, தேவனை அறியாமல் இப்படி இருக்கவேண்டும் என்பது தேவ சித்தம்.//

இது முழுக்க முழுக்க உங்கள் கற்பனை. வேத ஆதாரம் கிடையாது.

soulsolution wrote:
//எங்கள் பகுதியில் புதிதாக 4 ட்ராக் ரோடு உருவாகிறது. பழைய ரோடு அடியோடு தோண்டப்பட்டு ஒருபக்கம் குவிந்துகிடக்கிறது, எங்கு பார்த்தாலும் ஒரே புழுதி, புதியரோடு போடுமிடத்தில் ஈரம், சகதி, கற்கள், தார், ஏராளமான பொக்லைன் இயந்திரங்கள், லாரிகள். இதனிடையே இயல்பாக நடைபெறும் காரியங்கள் நிச்சயம் பாதிக்கப்படும். வரப்போகும் அருமையான பெரும்பாதையான வழியைப் பற்றி சற்றேனும் அறியாதவர்கள். ஐயோ நல்ல ரோடு இப்படி நாசமாகிறதே என்றுதான் எண்ணுவார்கள். அதே போலத்தான் வரப்போகும் புதிய ராஜ்ஜியத்துக்கு அறிகுறிதான் தற்போதைய மோசமான நிலை.//

கூரை ஏறி கோழி பிடிக்கத் தெரியாதவன் வானம் ஏறி வைகுண்டம் போனானாம்.

கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைஞ்சானாம்.

இருக்கிறதை விட்டுட்டு பறக்கிறதுக்கு ஆசைப்பட்டானாம்.

அன்பான சகோதரரே! நீங்கள் ஓர் உதாரணம் சொன்னதைப்போல் நானும் சில உதாரணம் சொல்லிப் பார்த்தேன். ஆனால், இந்த உதாரணங்களை எனது வாதத்தைப் புரியவைப்பதற்காகத் தரவில்லை. எனவே அவற்றை வைத்து நான் என்ன சொல்ல வருகிறேன்னு ரொம்ப சிந்திக்காதீங்க.

மிகமிகப் பொருத்தமான உதாரணங்கள் மூலம் வேதகாரியங்களைப் புரியவைக்க இயேசுவால் மட்டுமே முடியும் என நான் கருதுகிறேன்.

நீங்கள் சிரத்தையெடுத்து சொன்ன உதாரணத்திற்காக உங்களை நான் பாராட்டுகிறேன். ஆனால் அதை உங்கள் வாதத்திற்கு ஆதாரமாக என்னால் ஒத்துக்கொள்ள இயலாது என்பதை தெரிவிக்கிறேன்.


__________________
பூரண சற்குணத்தின் கட்டாகிய அன்பைத் தரித்துக்கொள்ளுங்கள்.


Senior Executive

Status: Offline
Posts: 1014
Date:

soulsolution wrote:
//எந்த மனிதனுக்குச் சொன்னார்? எப்படிச் சொன்னார்? விளக்க கடமைப்பட்டுள்ளீர்கள்.//

வேதாகமம் மூலம் சொன்னார். யாருடைய பார்வைக்கெல்லாம் அல்லது செவிகளுக்கெல்லாம் வேதாகமம் செல்கிறதோ அத்தனை பேருக்கும் சொன்னார்.


வேதாகமம் மூலம் உங்களுக்குச் சொன்னதாக நீங்கள் க்ருதுபவைகளை முதலில் நீங்கள் சந்தேகமற கடைபிடியுங்கள். இன்னும் ஒருவன் கூட வேதாகமத்தை முழுமையாக அறிந்தவன் என்று சொல்லிக்கொள்ளத் தகுதியில்லாத போது அது யாருடைய பார்வைக்கெல்லாம் அல்லது செவிகளுக்கெல்லாம் செல்கிறதோ அத்தனை பேருக்கும் சொன்னார் என்று சப்பை கட்டு கட்டுவதில் எந்த பயனும் இல்லை.

யாருடைய பார்வைக்கும் அது செல்லவில்லை. தங்களைப் போன்றவர்கள்தான் அதை அறிந்துகொண்டதாகக் கருதி அதை 'அத்தனை' பேருக்கும் கொண்டுபோக எத்தனித்து மகாதோல்வியடைகிறீர்கள்.

சும்மா பார்ப்பதால், கேட்பதால் அதை அறிய முடியாது. அதை ஆராய்ந்து பார்க்கத்தான் வேதமே கூறுகிறது. அதைச் செய்யத்தவறுவதால்தான் இத்தனை தப்பறைகள்.

ஆக உங்கள் கூற்றுப்படி,

வேதாகமம் படிக்கத்தெரியாதவர்களுக்கு மனசாட்சி.

படிப்பவர்களுக்கு கற்பனைகள்.

இது இரண்டில் எது எளிது என்று தீர்மானியுங்கள். அறியாதவர்களை தேவன் மனசாட்சியின்படியே நியாயந்தீர்க்கட்டும் என்று விட்டுவிட வேண்டியதுதானே.


__________________
காதுள்ளவன் கேட்கக்கடவன்


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

"அவர்கள் திருவசனத்திற்கு கீழ்ப்படியாதவர்களாக இடறுகிறார்கள், அதற்கென்றே நியமிக்கப்பட்டவர்களாயும் இருக்கிறார்கள்" 1 பேது 2:8

தேவனால் இப்படி "நியமிக்கப்பட்டிருப்பவர்களிடம்" தங்களின் கிரியைகளின் உபதேசம் செயல்ப்படுமா!! எவர் விசுவாசிக்க நியமிக்கப்பட்ட்ரிப்பார்களோ, அவர்கள் விசுவாசிக்கும்படி ஏதாவது ஒரு தருனத்தில் தேவன் அவர்களை மாற்றுவார். இன்றைய "ஊழியர்கள்" தங்களை தலைகீழாக நிறுத்தி "சுவிசேஷம்" சொன்னாலும் "விசுவாசிக்க நியமிக்க்கப்படாதவர்கள்" நிச்சயமாக கீழ்ப்படிய மாட்டார்கள் என்று வசனம் சொல்லுகிறது. அப்படி என்றால் சுவிசேஷம் சொல்ல கூடாதா என்கிற கேள்விக்கு உண்டான பதில், சுவிசேஷம் என்னவென்று தெரிந்துக்கொண்டு சொல்லலாம்!! கட்டுகதைகளையும் பாட்டிகதைகளையும், தரிசனங்களையும், தங்களை அப்போஸ்தலர்களுக்கு மேலாக உயர்த்திக்கொள்கிறவர்களும், "எழுதியதற்கு அதிகமாக என்னுவதும்" போன்றது சுவிசேஷம் இல்லை.

"நீங்களோ, உங்களை அந்தகாரத்தினின்று தம்முடைய ஆச்சரியமான ஒளியினிடத்திற்கு வரவழைத்தவருடைய புண்ணியங்களை அறிவிக்கும்படிக்கு தெரிந்துக்கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும்,  அவருக்கு சொந்தமான ஜனமாயும் இருக்கிறீர்கள்: 1 பேது 2:9

ஆக உங்களின் கிரியைகளினால் அல்லது சுய நீதியினால் அல்ல மாறாக "வரவழைத்தவருடைய" புண்ணியங்களை (அவர் தண்டிக்கிறவர், சுட்டு பொசுக்கிவிடுவார் என்று இஷ்டத்திற்கு சொல்லாமல்) அறிவிக்கும்படி தெரிந்துக்கொள்ளபட்ட சந்ததியாக இருப்பது தான் "ஊழியம்". இதை செய்யவும் அவர் தெரிந்துக்கொள்ள வேண்டுமே!!

ஆக உங்களின் கேள்விக்கு பதில், அவரின் தெரிந்துக்கொள்ளல் (கிருபை) இல்லாமல் உங்களின் கிரியை ஒன்றுக்கும் உதவாது என்பதே!! ஏனென்றால் கிரியை செய்பவர்கள் கிறிஸ்தவர்களை காட்டிலும் யோக்கியமாக பல கோடி பேர் இருக்கிறார்களே. இதற்கெல்லாம் தாங்கள் பதில் தருவதில்லையே!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32


Moderator

Status: Offline
Posts: 1735
Date:

எரேமியா 29:11. நீங்கள் எதிர்பார்த்திருக்கும் முடிவை உங்களுக்கு கொடுக்கும்படிக்கு நான் உங்கள்பேரில் நினைத்திருக்கிற நினைவுகளை அறிவேன் என்று கர்த்தர் சொல்லுகிறார்; அவைகள் தீமைக்கல்ல, சமாதானத்துக்கேதுவான நினைவுகளே.

இந்த‌ குறிப்பிட்ட‌ வ‌ச‌ன‌த்தை ம‌ற்ற‌ ஆங்கிள‌ மொழிப்பெய‌ர்ப்புக‌ளில் வாசிக்க‌லாம்:

New International Version (NIV)

11 For I know the plans I have for you," declares the LORD, "plans to prosper you and not to harm you, plans to give you hope and a future.

Holman Christian Standard Bible (HCSB)

11 For I know the plans I have for you" (A) —[this is] the LORD's declaration—"plans for [your] welfare, not for disaster, to give you a future and a hope.

English Standard Version (ESV)

11(A) For I know the plans I have for you, declares the LORD, plans for welfare[a] and not for evil,(B) to give you a future and a hope.

Darby Translation (DARBY)

11For I know the thoughts that I think toward you, saith Jehovah, thoughts of peace, and not of evil, to give you in your latter end a hope

Young's Literal Translation (YLT)

11For I have known the thoughts that I am thinking towards you -- an affirmation of Jehovah; thoughts of peace, and not of evil, to give to you posterity and hope.

இப்ப‌டி யெகோவா தேவ‌ன் ம‌னித‌ர்க‌ளுக்கு வைத்திருக்கும் திட்ட‌ம் அவ‌ர்க‌ளின் அழிவிற்க‌ள்ள என்று இந்த‌ வ‌ச‌ன‌ங்க‌ள் சொல்லுகிற‌து.



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
1 2  >  Last»  | Page of 2  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard