மனிதனுடைய வாழ்க்கை புசிப்பதிலும், உடுப்பதிலும் அல்லது அவன் சுதந்தரித்திருக்கும் ஐசுவரியத்திலும் இல்லை.
ஆனால் அவன் பூரண வாழ்க்கை ஓர் உச்ச நிலையை அடைய தேவனுடைய வாயினால் போதிக்கப்பட்ட வார்த்தைகளைக் கொண்டு அதன்படி நடப்பதே மேலானது.
இவைகளிலுள்ள எச்சரிப்பும், உற்சாகமும் அநேக வாக்குத்தத்தங்களும் ஒருவனை நாளுக்கு நாள் ஆவியில் வளரச் செய்து கிறிஸ்துவோடு அவர் இராஜ்யத்தில் ஆட்சி செய்யும் சிலாக்கியத்தை பெறச் செய்யும்.
இவ்வசனத்தை உணர்ந்த ஒவ்வொருவரும் கிறிஸ்துவின் சீஷர்களாக இருந்து வசனத்தின் பேரில் பசிதாகமுள்ளவர்களாக தங்கள் ஜீவனை காத்து நடப்பது மேலானது.