"ஜீவக்காலமெல்லாம் மரணபயத்தினாலே அடிமைத்தனத்திற்குள்ளானவர்கள் யாவரையும் விடுதலைப்பண்ணும்படிக்கு அப்படி ஆனார்" எபி 2:15
மரண பயம்!! இன்று யார் மரண பயம் இல்லாதவர்களாக இருக்கிறார்கள் என்று சொல்ல முடியுமா? வெளியில் போகும் போதும் வரும் போதும் தேவனிடத்தில் சுகமாக காத்துக்கொள்ளும் படிக்கு ஜெபித்து செல்லும் ஒவ்வொருவரும் நிச்சயமாக மரண பயத்தில் இருக்கிறார்கள் என்றே அர்த்தமாகிறது.
ஆனால் இந்த வசனம் என்ன சொல்லுகிறது? மரணம் என்பது ஒரு எஜ்மானனாக இருந்து, அருகிற ஒவ்வொரு மனிதனையும் தனக்கு அடிமையாக்கி விடுகிறது, அதாவது வருகிற ஒவ்வொரு மனிதனும் தேவ நியதியின் படி மரித்தே ஆக வேண்டும். மனிதர்களுக்கு (கவனிக்கவும் கிறிஸ்தவர்களுக்கு மாத்திரம் அல்ல) நியமிக்கப்பட்ட இந்த மரணம் என்கிற அடிமைத்தனத்திலிருந்து விடுதலை அளிக்கவே இயேசு கிறிஸ்துவின் உன்னதமான பலி. பிதாவாகிய தேவனின் ஏக குமாரனாக இருந்தவர் மாம்சத்தில் இயேசு என்று வந்து இந்த பூமியில் மரணத்திற்கு அடிமையாக இருந்த மனிதர்களை அந்த மரணத்திலிருந்து விடுவிக்கவே வந்தார். ஆனால் கிறிஸ்தவர்களின் கோட்பாடு என்னவோ வித்தியாசமாக இருக்கிறது. ஆவியில் மரித்த மனிதனை விடுவிக்கவே இயேசு கிறிஸ்து மரித்தார் என்கிற மாதிரியான கோட்பாட்டை பிரசங்கித்து வருகிறார்கள்!!
வசனம் தெளிவாக இருக்கிறது. அவர் "யாவரையும்" விடுதலைப்பண்ணும்படிக்கு அப்படி ஆனார். அப்படி ஆனார் என்றால், அந்த உன்னதமான பரலோகத்தை விட்டு விட்டு தேவனின் கட்டளை நிறைவேற்றி, மரித்துக்கொண்டிருக்கும் மனிதகுலத்தை விடுவிக்க தானும் ஒரு மனிதனாக பிறந்தார். ஆகவே இனி மரணமே இல்லை என்று போதிக்கவில்லை, மரணம் இருக்கிறது, ஆனால் அந்த மரணத்திலிருந்து விடுதலை என்கிற ஒரு நிச்சயம் இருக்கிறது. என்றென்றைக்கும் மரித்திருக்கும் நிலை மாறி, அந்த மரணத்திலிருந்து விடுதலையாகும் ஒரு நாள் வருகிறது. அதை தான் பவுல், "மரணமே உன் கூர் எங்கே, பாதாளமே உன் ஜெயம் எங்கே" என்று 1 கொரி 15ல் கேட்கிறார். ஒரு பவுலை போலோ அல்லது யோவானை போலோ அல்லது அந்த வரிசையில் கொஞ்சமாவது இருந்தால், ஒரு வேலை அவர்களை போல், பரலோக நிச்சயம் என்று நாம் சொல்லக்கூடும். நம் நிலை நமக்கே தெரியும். நாம் எப்படி என்றும் நமக்கு தெரியும். மரணம் என்றால் பயம் தான், ஆனால் அந்த மரணத்திலிருந்து விடுவிக்கப்படுவோம் என்பது நமக்கு நிச்சயமாக ஒரு நற்செய்தியே.