" என் கன்மலையும், கோட்டையும் நீரே, உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழி காட்டி என்னை நடத்தும். " ( சங். 31:3 )
கிறிஸ்தவ ஜீவியத்தின் சில படிப்பினைகளை நாம் தேவனிடம் பெற்றுக் கொண்ட பிறகு, அமைதியான வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நமக்குச் சாதகமாகவோ அல்லது எதிர் மாறாகவோ ஏற்படக்கூடும்.
இது தேவ சமூகத்தினின்று நம்மை வேறு நிலமைக்குள் நடத்தப்படக் கூடியதாகவும் காணப்படலாம்.
இச்சந்தர்ப்பங்களில் உண்மையான ஆவிக்குரிய இஸ்ரவேலர், முறுமுறுக்கவோ அல்லது முறையிடவோ கூடாது.
ஆனால் தேவ நடத்துதலை எதிர்பார்த்திருக்க வேண்டும்.
தெய்வீக வழி நடத்துதலை பகுத்தறிந்த பிறகு முன்னிருந்த நிலைமையைக்காட்டிலும் மோசமானதோர் ஜீவியம் நமக்கு ஏற்படுமேயானாலும் தேவனை குறை கூறாமல், அவர் நடத்துதலுக்கு நம்மை முற்றிலும் ஒப்புக் கொடுத்து அவர் பேரில் நம்பிக்கையும் விசுவாசமுள்ளவர்களாக நாம் சந்தோஷத்தோடு அவைகளை ஏற்று நடக்க பிரயாசப்பட வேண்டும்.