" ஒருவன் தன் நாவை அடக்காமல், தன் இருதயத்தை வஞ்சித்து தன்னை தேவ பக்தியுள்ளவன் என்று எண்ணினால் அவனுடைய தேவ பக்தி வீணாயிருக்கும். " ( யாக். 1 : 26 )
நாவு நம் இருதயத்தின் அகராதி.
ஏனென்றால் ஒருவரின் இருதயத்தின் நிறைவால் பேசுகிறது.
ஆதலால் அடக்கப்படாத (கட்டப்படாத) நாவு தன்னயமானவைகளையும், பகைமையானவைகளையும், கசப்பானவைகளையும், பெருமையானவைகளையும் பேசும்போது ஒருவர் உள்ளம் எதினால் நிறைந்திருக்கிறது என்பதை காண்கிறோம்.
அசுத்த இருதயமுள்ளவன் வாயில் அசுத்தமானதும், பரிசுத்தமில்லாததுமான வார்த்தைகளே வெளியாகும்.
இவர்களில் கிறிஸ்துவின் ஆவி பூரணமாக இல்லாததே காரணமாகும்.
தேவ பக்தியுள்ளவன் தன் இருதயத்தைக் காத்துக்கொள்ளவில்லை என்றால் அவன் பக்தி விருதா.
பரம வைத்தியர் இந்த இருதயத்தை கெடுக்கும் பாஷானத்தை நீக்க ஏற்ற மருந்தை தம் வசனத்தின் மூலம் கொடுத்திருக்கிறார்.
இதை கிரமப்படி உட்கொள்பவர்களின் இருதயம் தேவனுக்கேற்றதாக மாற்றப்பட முடியும்.