யந்னேயும், யம்பிரேயும் மோசேக்கு எதிர்த்து நின்றதுபோல இவர்களும் சத்தியத்துக்கு எதிர்த்து நிற்கிறார்கள்; இவர்கள் துர்ப்புத்தியுள்ள மனுஷர்கள், விசுவாசவிஷயத்தில் பரீட்சைக்கு நில்லாதவர்கள், ஆனாலும் இவர்கள் அதிகமாய்ப்பலப்படுவதில்லை; அவ்விருவருடைய மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட்டதுபோல, இவர்களுடைய மதிகேடும் வெளிப்படும்2தீமோ3:8,9.
ஏனென்றால் அவர்கள் ஆரோக்கியமான உபதேசத்தைப் பொறுக்க மனதில்லாமல், செவித்தினவுள்ளவர்களாகி, தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற போதகர்களைத் தங்களுக்குத் திரளாகச் சேர்த்துக்கொண்டு, சத்தியத்துக்குச் செவியை விலக்கி, கட்டுக்கதைகளுக்குச் சாய்ந்துபோகுங்காலம் வரும்.2தீமோ 4:3,4.
என்ற வசனங்கள் இவ்வளவு துல்லியமாக நிறைவேறுமென்று நமக்கே ஆச்சரியமாக உள்ளது. ஆரோக்கியமான வசனத்தைப் பொறுக்க மனதில்லாமல் செவித்தினவுள்ளவர்களாகி தங்கள் சுய இச்சைகளுக்கேற்ற கூட்டத்தைச் சேர்த்துக்கொண்டு (activeboardல் ) சத்தியத்துக்குச் செவியை விலக்கி கட்டுக்கதைகளுக்கு சாய்ந்தே விட்டார்கள். பாபிலோன் குழப்பத்தின் உச்சகட்டம் இவர்களது தளங்களில் தெளிவாகத் தெரிகிறது.
இவன்கள் மதிகேடு எல்லாருக்கும் வெளிப்பட தேவன் கிருபை செய்ததற்காகவும் அதற்கு வழிவகுத்த இந்த 'தள' சேவைகாகவும் நாம் நன்றியுள்ளவர்களாக இருக்கிறோம்.
ஒரு ஜோக்தான் ஞாபகம் வருகிறது.
ஒரு பைத்தியக்கார ஆஸ்பத்தரியில் ஏராளம் பைத்தியங்கள் இருந்தனவாம். ஏகப்பட்ட உத்திகள், பயிற்சிகளுக்குப் பின்பு அவர்கள் 'முன்னேற்றத்தை'ச் சோதிக்க ஒரு சிறிய டெஸ்ட் வைத்தார்களாம். அதன்படி எல்லோரையும் ஓரிடத்தில் கூட்டி அவர்களை சைக்கிள் பெடல் செய்யச் சொன்னார்களாம், அதாவது சைக்கிளே இல்லாமல். எல்லா பைத்தியங்களும் காலைச் சுழற்றி வேக வேகமாக பெடல் செய்தனராம். ஆனால் ஒருவர் மாத்திரம் பெடல் செய்யாமல் இருக்கவே டாக்டர்களுக்கு ஒரே மகிழ்ச்சி, ஒருவனாவது சரியாகிவிட்டானே என்று. எல்லாரையும் நிறுத்தச் சொல்லிவிட்டு இவனிடம் சென்று கேட்டார்களாம், ஏன் நீ மாத்திரம் பெடல் செய்யவில்லை என்று அதற்கு நம் 'ஜெயங்கொண்டான்' என்ன சொன்னான் தெரியுமா?
"பெடல் செய்ய நான் என்ன முட்டாளா? நான் இறக்கத்தில்தானே சென்றுகொண்டிருக்கிறேன்."
ஆக நாமும் ஏதோ கேள்வியெல்லாம் கேட்கிறார்களே ஏதோ கொஞ்சமாவது தலையில் இருக்கும் என்றெண்ணித்தான் இந்தத் தளத்தில் இந்த மேதாவிகளுக்கெல்லாம் பதில் கொடுத்துக்கொண்டிருந்தோம். ஆனால் இதெல்லாமே இறக்கத்தில் சைக்கிள் விடும் கேஸ்கள் என்று தெரிந்து அதிகம் வருத்தப்பட்டோம். "அவரவர்களுடைய 'தளங்களினாலே' அவர்களை அறிவீர்கள்."
இவர்களுடைய முழுநீள காமெடி தளங்களில் இவர்களுக்கு பதில் எழுதி தங்களுடைய பொன்னான நேரத்தை வீணடிப்பவர்களைக் குறித்துதான் அதிகம் கவலைப்பட வேண்டியுள்ளது.
-- Edited by soulsolution on Thursday 18th of February 2010 11:27:55 PM
அப்போஸ்தலர்களுக்கு விளங்காத பல காரியங்கள் 2ம் நூற்றாண்டு முதல் பலருக்கு விளங்க ஆரம்பித்து விட்டது (!) ஆகவே தான் மகா பாபிலோனான சபை கத்தோலிக்க சபை உருவானது. அன்று தொடங்கிய வெளிப்பாடுகளின் வரிசை இன்று வரை முடிந்தபாடில்லை. ஆட்கள் மாறுகிறார்கள் ஆனால் சரக்கு அதே தான்.
கிறிஸ்தவத்தில் நரகம் என்று வர்னித்தவர் அல்லது நரகத்தின் தந்தை என்று சொல்லப்போனால் அது டாண்டே என்கிற கத்தோலிக்கர். இவருக்கு வெளிப்பட்டது தான் உச்சக்கட்டம். இன்று வெளிப்பாடுகள் கிடைத்தவர்கள் எல்லாம் "பச்சா"க்கள் தான். இவரின் புத்தகங்களை படித்தால் மேலும் பல வெளிப்பாடுகள் கிடைக்கும். அதை தேவன் எனக்கு வெளிப்படுத்தினால் என்று சொல்லுவதில் சுலபமாக இருக்கும்.
யோபு என்கிற வேதத்தில் உள்ள புத்தகம் அநேக அரிவியல் விஷயங்களை விளக்குகிறது, பூமிக்கு கீழ் என்ன இருக்கிறது என்று அதில் ஒன்றுமே இல்லையே!! பாவம் யோபுவிடம் தொடங்கி பவுல் பேதுரு வரை தேவன் வெளிப்படுத்தாமல் போனது தேவன் பட்சபாதம் உள்ளவராக இருப்பதாலோ!! வேதத்தில் இடம்பெற்றவர்கள் அல்லது வேதத்தில் பெரும் பகுதிகளை எழுதிய இவர்களுக்கு தேவன் பாதாளங்களின் இரகசியங்களை வெளிப்படுத்தாது வேதனையான விஷயம் தான்!!
தேவன் குழப்பத்தின் தேவன் அல்ல என்று தான் வேதம் கூறுகிறது, ஆனால் நரகம், பாதளத்தை பற்றி போட்டி போட்டு கொண்டு இன்று வெளிப்பாடுகளை எழுதி வரும் நபர்களின் எண்ணிக்கை பெருகி விட்டதால் இந்த காரியங்களை வாசிக்கும் புறமதஸ்தர்கள் இவர்களின் தேவன் நிச்சயமாக குழப்பத்தின் தேவன் தான் என்று சொல்ல துனிவார்களே!! என்ன ஒரு வேதனையான விஷயம்!!
நரகம், மற்றும் பாதளத்தை குறித்தான வெளிப்பாடுகளின் தந்தையான டாண்டேயை குறித்து அறிந்துக்கொள்ளுங்கள்
இன்று தேவன் எங்களுக்கு வெளிப்படுத்தினார் என்று ஒரு கூட்டம், தேவன் என் அறையில் தோன்றி இவற்றை சொன்னார் என்று ஒரு கூட்டம், இந்த இடத்தில் தேவன் வருகிறார் என்று சொல்லும் ஒரு கூட்டம், மொத்தத்தில் இந்த கூட்டங்களில் சேர்ந்துக்கொண்டு கிறிஸ்தவத்தை அல்ல, தேவனுக்கு விரோதமான ஒரு விசுவாசத்தை கொடுத்து கிறிஸ்தவர்களை கெடுத்துக்கொண்டு வருகிறதை நாம் காணமுடிகிறது. (மத். 24:23 -26) (அவசியம் வேதத்தில் படியுங்கள்!!)
வேதத்தை ஆராயமல், எனக்கு கிடைத்தது தான் வெளிப்பாடுகள் என்றால், ஏன் பிற மதங்களில் அல்லது கிறிஸ்தவர்களிடம் இவர்கள் போதிக்க வேண்டும்? அனைவரும் விசுவசிக்க தக்க தங்களிடம் புத்தகங்கள் வைத்திருக்கிறார்களே! ஒவ்வொரு மொழியிலும் "அகராதி" என்கிற புத்தகம் வந்ததே, சுலபமாக ஒரு வார்த்தையின் அர்த்ததை புரிந்துக்கொள்ள தானே.
தமிழ் வேதாகமம் என்று சொல்லுக்கொண்டு "சமஸ்கிருத" வார்த்தைகள் கலந்த ஒரு புத்தகத்தை இவர்கள் அர்த்தம் தெரியாமல் புரிந்துக்கொண்டு அதன் மூலம் தேவன் வெளிப்படுத்தினார் என்பதை காட்டிலும் பெரிய காமேடி ஒன்றும் இல்லை.
கிறிஸ்தவர்களே, "விழிப்பாயிருங்கள்" என்று நம் எஜமானன கிறிஸ்து சொல்லி போயிருக்கிறார்கள், விழிப்பாயிருங்கள் என்றால், உபவாசம் இருந்து இரவு முழுவதும் தூங்காமல் இருப்பது அல்ல, மாறாக கள்ள போதகர்கள், கள்ள அப்போஸ்தலர்கள், தேவன் சொல்லாத ஒரு காரியத்தை வெளிப்பாடுகளாக பெறுபவர்கள், நான் தான் அப்போஸ்தலர் என்று சொல்லுபவர்கள், பொதுவாக மேட்டிமை பாராட்டுகிறவர்களை பார்த்து வேதத்துடன் அதை ஒப்பீட்டு பார்த்து எச்சரிக்கையாக இருப்பதை தான் "விழித்திருங்கள்" என்று சொல்லி சென்றுள்ளார்.
இன்று பெருவாரியான கிறிஸ்தவ ஊழியர்கள் (!!) சொல்லும் வெளிப்பாடுகள் தேவன் கற்பனைக்கும் அப்பாற்பட்டதாக இருக்கும் போல். ஆகவே தான் தேவன் அன்றே சொல்லி வைத்திருக்கிறார், "உங்கள் நினைவுகள் என் நினைவுகள் அல்ல" என்று. சத்திய வசனங்களை விசுவசியாமல் அந்த வசனங்களை தரிசித்தால் விசுவாசிப்போம் என்கிறபடியால் கொடிய வஞ்சகத்தை அவர்களுக்குள் தேவன் அனுப்ப சித்தம் கொண்டிருக்கிறார் என்பதை சற்றும் உணராதவர்கள் மென்மேலும் தங்களை மேன்மை படுத்தி வருகிறார்கள்!! இது எல்லாம் எங்கு போய் முடியுமோ!! தங்களை பவுல் என்றும், யோவான் என்றும், அப்போஸ்தலர்கள் என்றும் ஏன் இன்னும் சற்று உயர்த்தி இயேசு கிறிஸ்து என்று சொல்லும் காலமும் வருகிறது. தோமா கூட அவனின் செயலுக்கு மன்னிப்பு கேட்டார் ஆனால் இன்று வெளிப்பாடுகள் பெறுகிறவர்கள் எந்த ஆவியில் வெளிப்படுகள் பெறுகிறார்கள் என்று தெரியாததினால் தங்களையும் தங்கள் வெளிப்பாடுகளையும் மேன்மை பாராட்டி வருகிரார்கள்!!
விழிப்பாக இருப்போம். இந்த வெளிப்பாடுகள் சமாச்சாரம் எல்லாம் உங்களுக்கு பிறகு என்னை விசுவசிக்கும் ஒவ்வொரு மக்களுக்கும் தந்து தான் அவர்கள் மூலமாக நான் இரட்சிப்பை உண்டு பன்னுவேன் என்று எந்த வேதத்தில் தான் எழுதியிருக்கிறதோ!! கொப்டுமையாக இருக்கிறது.
அப்போஸ்தலர்களிடத்தில் இயேசு கிறிஸ்து இனி அவரின் இரண்டாம் வருகையின் போது தான் வருவேன் என்று சொன்னவர், இந்த காலத்தில் இத்துனை பேருகளுக்கு எப்படி தான் வந்து சொல்லி போகிறாரோ!!
சத்தியத்தில் பிரியம் வைய்யாமல் இது போன்ற தரிசனங்களை நம்புவோருக்கு தான் 2 தெச 2:11,12.