" இந்த ஊழியம் குற்றப்படாதபடிக்கு நாங்கள் யாதொன்றிலும் இடறல் உண்டாக்காமல், எவ்விதத்திலேயும் எங்களை தேவ ஊழியக்காரர்களாக விளங்கப்பண்ணுகிறோம். " ( 2 கொரி. 6:3 )
தேவனுடைய ஊழியத்தில் நாம் முழு முயற்சியுடன் செய்து தேவ ஆசீர்வாதத்தையும் தயவையும் பெற்றவர்களாக இருக்கும் போது சில சமயங்களில் நாம் கைவிடப்பட்டவர்களைப்போலவும், இருள் நம்மை சூழ்ந்து கொண்டது போலவும் காணப்படும்.
நம் உடன் ஊழியர்களும் நாம் தேவ கிருபையினின்று மறக்கப்பட்டவர்களாக கருதக்கூடும்.
இப்படிப்பட்ட ஓர் சூழ்நிலை நமக்கு அவசியமானதே.
இது நம் விசுவாசத்தை பலப்படுத்தக் கூடியதாக உள்ளது.
அதோடு இப்பட்ப்பட்டதோர் இருளான நிலையிலே தேவனிடம் நம்பிக்கை கொண்டு தேவ ஊழியம் எவ்விதத்திலும் தடைபடாமல் துக்கப்பட்டவர்கள் என்றாலும் சந்தோஷமுள்ளவர்களாக, கனத்திலும் கனவீனத்திலு, துர்கீர்த்தியிலும் நற்கீர்த்தியிலும், தேவ ஊழியத்தை மேன்மையாகக் கருதி சகலத்தையும் தேவ சித்தத்தின்படி ஊழியம் தடைபடாமல் செய்ய வேண்டும்.