" அவருடைய வசனத்தை கைக்கொள்ளுகிறவனிடத்தில் அன்பு மெய்யாகவே பூரணப்பட்டிருக்கும். " ( 1 யோ. 2:5 )
கீழ்படிதல் நமக்கு கொடுக்கப்பட்ட பரீட்சை.
நாம் எந்த அளவில் தேவனுடைய வார்த்தைகளைக் கைக்கொண்டு ஜீவிக்கிறோமோ அந்த அளவுக்கு தேவனுடைய அன்பு நம்மில் பூரணப்படும்.
கிறிஸ்துவின் சிந்தை நம்மில் காணப்படுமேயானால் தேவ ஆவி நம்மை வழிநடத்தி நம்முடைய சக்திக்கு ஏற்றவாறு நாம் அவருடைய வழிகளிலே நல்ல காரியங்களை செய்ய உதவும்.
இந்த வழிகளில் நம் ஜீவியம் நாளுக்கு நாள் முன்னேற்றம் அடைய வேண்டும்.
கிறிஸ்துவின் சரீரத்திலே இணைக்கப்பட எழுப்பப்படும் நாள் வரை நாம் பூரணராக காணப்படாதிருந்தாலும் தேவனிடம் நாம் நெருங்கிய தொடர்பு கொண்டு அவர் அன்பில் நிலைத்திருக்கத் தக்கதாக ஆவியிலும், சிந்தையிலும் எப்பொழுதும் ஜெபத்திலே தரித்திருக்க வேண்டும்.