" உன் வார்த்தையினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய் அல்லது உன் வார்த்தையினாலே குற்றவாளி என்று தீர்கப்படுவாய். " ( மத். 12:37 )
நம் வாயிலிருந்து புறப்படும் சகல வார்த்தைகளும் ஓர் புத்தகத்தின் விசேஷ அட்டவணைப் போலவே தேவனால் கருதப்படுகிறது.
நம்முடைய வார்த்தைகள் கலகத்திற்கு உரியதாகவோ அல்லது துரோகமானதாகவோ அல்லது அர்ப்பமானதாகவோ அல்லது அன்பில்லாததாகவோ, நன்றியில்லாததாகவோ, பரிசுத்தமில்லாமல் அசுத்தமாக இருக்குமேயானால், " இருதயத்தின் நிறைவால் வாய் பேசும் " என்ற வசனத்தின் மூலமாக நம் இருதயமும் நியாயம் தீர்க்கப்படும்.
பூரணமற்றவர்களாகிய நாம் வார்த்தையிலும், கிரியையிலும் பூரணராக இருக்க முடியாது.
எவ்வளவாக நாம் வார்த்தையிலும், கிரியையிலும் பூரணராக இருக்க விரும்பினாலும் சில சந்தர்ப்பங்களில் நாம் தவறிவிடுகிறோம்.
ஆனாலும் நம் வார்த்தைகளையும், வழியையும் எல்லா விழிப்புடன் விசுவாசத்திலே காக்கப்பட நாம் அதிகமாக பிரயாசப்பட வேண்டும்.