" நீங்கள் ஒன்றிலும் குறைவுள்ளவர்களாயிராமல் பூரணராயும், நிறைவுள்ளவர்களாயும் இருக்கும்படி பொறுமையானது பூரண கிரியை செய்யக் கடவது. " ( யாக். 1:4 )
பொறுமை ஒருவருக்குள் வளர்க்கப்படாவிட்டால் தேவ கிருபையிலே நாம் முன்னேறுவது கூடாததாகும். சத்தியத்தின் மூலமாக நாம் பெறக் கூடிய தேவ கிருபை கிறிஸ்தவ ஜீவியத்தில் மிக அவசியமானது. மனிதனுடைய குறைவை பூரணப்படுத்துவது உபத்திரவங்களில் பொறுமையே. இதன் மூலமே தெய்வீக நிலையையும் பெற முடியும். இது கோபத்திற்கு தாமதமாகவும், இரக்கத்தில் ஐசுவரியமுமானது. மேலும் இது சத்தியமும், நீதியுமான பாதையில் ஒருவரை நடக்கச்செய்து, தன் பெலவீனங்களை உணர்ந்து பிறனுடைய குறைவுகளில் அனுதாபம் காட்டச் செய்யும். சோதனைகள் நமக்கு விசுவாசத்தின் பரீட்சையானபடியால், இவைகளை பொறுமையுடன் சகிப்பது அவசியமானது. எனவே பொறுமையை வளர்க்க பரீட்சை நமக்குத் தேவை. ( ரோ. 5: 3 - 4, எபி. 10: 35 - 36 )