" என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள். " ( மத். 5:11 )
எதிர்ப்பும் துன்பமும் தேவனுடைய ஊழியத்தில் இன்றியமையாதவை. இவைகளை தேவ மனுஷன் பொறுமையோடு நேர்மையாய் ஏற்றுக்கொள்ளவேண்டும். இந்த காரியங்களை ஏற்க மறுப்பவர்கள் எச்சரிக்கப்பட்டு அவர்கள் வழிகளிலே விடப்படுகின்றனர். இதனால் அவர்களுக்கு வரக்கூடிய சிலாக்கியத்தை இழந்து இரட்சிப்படைய மாட்டார்கள். நமது இரட்சகரான இயேசு தமது ஊழியகாலத்திலே பெற்ற எதிர்ப்புகளும் பாடுகளும் நமக்கு ஓர் பாடமாக வைக்கப்பட்டுள்ளது. அவரைப்போல நாமும் பாடுகளையும் எதிர்ப்பையும் அவர் ஊழியத்திலே அனுபவிக்கவே தேவன் விரும்புகிறார். ஒருவன் கிறிஸ்தவனாக இருந்தால் அவன் பாடு பட வேண்டும். அனுதினமும் தன் சிலுவையை ( பாடுகளை ) சுமந்து திரிய வேண்டும். ( பிலி. 1: 29 - 30 , 1 கொரி. 4: 11 - 13, ரோ. 8: 17 - 18 )