" என் ஆத்துமாவே தேவன் உனக்கு நன்மை செய்தபடியால், நீ உன் இளைப்பாறுதலுக்குத் திரும்பு. " ( சங். 116: 7 )
ஒருவரின் கிறிஸ்தவ ஜீவியத்தில் ஆவிக்குரிய வளர்ச்சிக்கான சிந்தனைகளே அவனுக்குள் இருக்க வேண்டும்.
இந்த நல்லதோர் பயிற்சி அவனுக்குள் விதைக்கப்பட வேண்டும். சிந்தனையில் பயிற்சி என்று சொல்வது நம் மனம் ஓய்ந்திருக்கும் போது நமக்குள் எழும்பும் யோசனைகள்.
நாம் வாழ்க்கையிலே பல வேலைகளில் ஈடுபட்டிருக்கும் போது நம் சிந்தனைகள் அந்தந்த வேலைகளைப் பற்றினதாகவே இருக்கும்.
அப்படி இல்லாவிட்டால் நாம் அந்த வேலையை சரிவர செய்ய முடியாது.
ஆனால் நாம் இந்த வேலைகளிலிருந்து ஓய்ந்திடும்போது நம் சிந்தனைகளை வேறே பல உலகக் காரியங்களில் செலவிடாதபடி நம் இளைப்பாறுதலில் நம் சிந்தனைகள் யாவும் தேவனுக்கடுத்த காரியங்களில் ஈடுபடுத்தும் பயிற்சியைச் செய்து அவர் செய்த சகல ஈவுகளையும் நினைத்து நன்றி செலுத்த வேண்டும்.