பிலிப்பியர் 2: 9. ஆதலால் தேவன் எல்லாவற்றிற்கும் மேலாக அவரை உயர்த்தி,
10. இயேசுவின் நாமத்தில் வானோர் பூதலத்தோர் பூமியின் கீழானோருடைய முழங்கால் யாவும் முடங்கும்படிக்கும்,
11. பிதாவாகிய தேவனுக்கு மகிமையாக இயேசுகிறிஸ்து கர்த்தரென்று நாவுகள் யாவும் அறிக்கைபண்ணும்படிக்கும், எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்குத் தந்தருளினார்.
இந்த வசனத்தில் எல்லா நாமத்திற்கும் மேலான நாமத்தை அவருக்கு தந்தருளினார் என்றால் யெகோவா தேவனுடைய நாமத்தை காட்டிலும உயர்வான நாமம் என்கிற அர்த்தமா? அப்படி என்றால் கீழ் கானும் வசனம் இதற்கு முறனாக இருக்கிறதே!
I கொரிந்தியர் 15 :"27. சகலத்தையும் அவருடைய பாதத்திற்குக் கீழ்ப்படுத்தினாரே; ஆகிலும் சகலமும் அவருக்குக் கீழ்ப்படுத்தப்பட்டதென்று சொல்லியிருக்கும் போது, சகலத்தையும் அவருக்குக் கீழ்ப்படுத்தினவர் கீழ்ப்படுத்தப்படவில்லையென்பது வெளியரங்கமாயிருக்கிறது.
இப்படியாக சர்வ வல்லமை உள்ள யெகோவா தேவனுக்கு இயேசு கிறிஸ்து என்கிற உன்னதமான தேவனுடைய குமாரன், வல்லமை உள்ள தேவன், கீழ் பட்டிருப்பார் என்று தானே வசனம் சொல்லுகிறது. ஆனால் வேத புரட்டர்கள், தாங்கள் தேவனிடத்தில் அனுதினமும் பேசுகிறோம் என்று, சொல்லிக்கொண்டு, எந்த ஆவியில் தான் தேவனும் இயேசு கிறிஸ்துவும் ஒருவரே என்று அறிக்கை செய்து வருகிறார்களோ!! அறைகுறை வேத அறிவை வைத்துக்கொண்டு, தங்களை முழு நேர ஊழியர்கள் என்று பிதற்றி கொண்டு, வீடுகள் தோறும் ஏமாந்து போகிறவர்களை ஏமாற்றி வருகிறார்களே!! என்ன துனிச்சலான தேவதூஷனம். இவர்களை குறித்து தான் பவுல் "ஓநாய்கள்" என்று எழுதியிருக்கிறார் என்பதை மறக்க வேண்டாம். ஆதி அப்போஸ்தலர்களின் போதனைகளை மறுத்து, இருண்ட காலங்களில் வேதத்தை புறட்டி சொல்லி கொடுத்த மனித போதனைகளையே இவர்களும் பிரசங்கித்து, இது தேவன் எங்களுக்கு தந்தது என்று துனிச்சலாக சற்றும் தேவனுக்கு பய்ப்படாதவர்களாகவே இன்னும் பிறர் உழைப்பில் வாழ்ந்து வருகிறார்களே!!
இப்படி பிறர் உழைப்பில் வாழ்ந்து தேவன் எங்களோடு பேசுகிறார் என்று சொல்லும் கள்ள உபதேசிகளுக்கு எச்சரிக்கையாக இருப்போம்.
இவர்களை குறித்து தான் "அங்கே அழுகையும், பற்கடிப்பும் உண்டாயிருக்கும்" என்கிறது வேதம்.