" அன்பானது பிறனுக்குப் பொல்லாங்கு செய்யாது. ஆதலால் அன்பு நியாய பிரமாணத்தின் நிறைவேறுதலாயிருக்கிறது. ( ரோ. 13: 10 )
புதிய உடன்படிக்கைக்குள்ளான ஒவ்வொருவரும் தங்கள் இருதயங்களிலே அன்பின் பிரமாணத்திற்கு ஒத்ததான இரக்கம், சாந்தம், நல்லொழுக்கம் யாவும் உள்ளவர்களாக காணப்படவேண்டும்.
இக்குண லட்சணங்கள் இல்லாதவர்கள், தேவனுடைய பிள்ளைகள் என்றோ அல்லது அவர் குமாரனுடன் ஆட்சி செய்யக்கூடியவர்கள் என்றோ தங்களைக் கருத இயலாது.
தங்கள் இருதயங்களிலே சகோதர அன்பும், மனத்தாழ்மையும் உள்ளவர்களாயிருந்து அயலானிடத்திலும் இந்த அன்பை காண்பிக்காதவர்கள், தேவ ஆவி இவர்களிடம் இல்லாதவர்களாகவும், தங்கள் பலியைப் பூரணமாக செலுத்தக் கூடாதவர்களாகவும் காணப்படுவார்கள்.
இவர்கள் குறிக்கப்பட்ட காலத்தில் தங்கள் மன மேட்டிமையினாலும் தற்புகழ்ச்சியினாலும் தேவ ஆவியை இழந்து தங்கள் பலியின் ஜீவியத்தில் விழுந்து போவார்கள்.