" என் ஜனங்களே நீங்கள் அவளுடைய பாவங்களுக்கு உட்படாமலும், அவளுக்கு நேரிடும் வாதைகளில் அகப்படாமலும் இருக்கும்படிக்கு அவளை விட்டு வெளியே வாருங்கள். " ( வெளி. 18:4 )
" என் ஜனம் " என்று அழைக்கப்படத் தகுதியுள்ள ஒவ்வொருவரும் தேவனுடைய சத்தத்திற்கு கீழ்படிந்து, பாபிலோனைவிட்டு வெளியேறுவார்கள்.
இவர்கள் அவருடைய சத்தத்தைக் கேட்டதினால் அவளுக்கு ஏற்படும் வாதையிலிருந்து காக்கப்படுவார்கள்.
இந்த சத்தத்தைக் கேட்டும் வெளியேறாதவர்கள் பதர்களைப்போல அக்கினிக்கு இரையாவார்கள்.
தேவனுடைய ஜனம் அவருடைய சத்தத்தை அறிவார்கள்.
பாபிலோன் குழப்பமுள்ளதான போதகங்களைப் போதித்து, உண்மை தேவனையும், அவர் குமாரனையும் அறியாமல் இருளிலே பல காரியங்களை தேவ போதகத்திற்கு மாறாக செய்து வருகின்றனர்.