" சாந்த குணமுடையவர்களை நியாயத்திலே நடத்தி சாந்தகுணமுள்ளவர்களுக்குத் தமது வழியைப் போதிக்கிறார். " ( சங். 25:9 )
பரத்திலிருந்து வரும் ஞானத்தை பெறக்கூடியவர்களுக்கு இது ஓர் முக்கியமான ஏற்பாடாகும். ஞானத்திலே குறைவு பெற்றவர்கள் தங்களை முற்றிலுமாக உணரவேண்டும். இல்லையேல் பரிபூரணமாகவும், இலவசமாகவும் அருளப்படும் இந்த பரத்துக்குரிய ஞானத்தை விரும்பி ஒருவரும் பெற்றுக்கொள்ள முடியாது. திட ஆவியை பெற்ற ஒவ்வொருவருக்கும் இவ்விதமான அடக்கமுள்ள சிந்தை அவசியமானது. சாந்தகுணம் நம்மை சகல நல்லொழுக்கத்திலும் வழி நடத்தும். எந்த ஒரு காரியத்தையும் நியாயமாகவும், நேர்மையாகவும், பட்சபாதமின்றியும் செய்ய இது முக்கியமானது. சாந்தகுணமுள்ளவர்கள் பாக்கியவான்கள் அவர்கள் பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். சாந்தமும், அமைதலுமுள்ள இருதயமே தேவனுடைய பிள்ளைகளுக்கு அருளப்பட்ட அழியாத அலங்கரிப்பாயிருக்கிறது. எனவே பணிவு அல்லது அடக்கமே கிறிஸ்துவின் சிந்தையைப் பெற அவசியமானது. ( 1 பேது. 3: 4, 15; கலா. 5:22 - 23, 2 தீமோ. 2: 25 - 26 )