சோர்ந்து போகாமல் எப்பொழுதும் ஜெபம் பண்ண வேண்டும் என்பதைக் குறித்து அவர்களுக்கு ஓர் உவமையைச் சொன்னார். ( லூக். `18:1 )
நாம் தேவனிடத்தில் ஜெபத்தின் மூலம் நெருங்கி ஜீவிக்க சற்றும் பயப்படக் கூடாது. அவர் அதிக வேலையில் இருக்கிறார் என்றோ அல்லது நம்முடைய சிறு குறைகளைக் கேட்கமாட்டார் என்ற அச்சமோ நம்மில் சிறிதும் காணப்படக் கூடாது. இதை வலியுறுத்தவே நம்முடைய இரட்சகர் ஓர் விதவையின் உவமையைக் கூறி விவரித்தார். அந்த விதவை தன் காரியம் கேட்கப்படும் வரை அந்த நியாயாதிபதியை அலைக்களித்து, விடாது விண்ணப்பம் செய்து கொண்டே இருந்து, உத்தரவு பெற்றாள். அது போல நம் விசுவாசமும், விருப்பமும் ஜெபத்திலே காணப்பட வேண்டும். இவைக் கேட்கப்பட்டு ஏற்ற காலத்திலே பதிலளிக்கப்படும் என்ற விசுவாசம் அவசியம். பதில் தாமதித்தாலும் அதற்காகக் காத்திருந்து விடாமுயற்சியுடன் ஜெபிக்க வேண்டும். தேவ திட்டத்திலே குறிக்கப்பட்ட நேரங்கள் மிக முக்கியமானது. ஏற்ற வேளையிலே தேவன் பதிலளிப்பார். ( யோபு, 33:26; யாக். 5: 13 - 15 )