கூடுமானால் தெரிந்துகொள்ளப்பட்டவர்களையும் வஞ்சிக்கத்தக்க காரியங்கள் கடைசிநாட்களில் நடக்கும் என்று வாக்குத்தத்தம் பண்ணப்பட்டது நிறைவேறிவருகிறது. வஞ்சனை தற்போது இன்னும் நூதனமாகியுள்ள்து. தங்களை மற்ற கிறிஸ்தவ போதனைகளிலிருந்து வேறுபடுத்திக் காண்பித்துக்கொண்டு, கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவினால் உண்டான கிருபையை உதாசீனப்படுத்தி, சுய மேன்மையைத்தேடி தங்களுடைய நீதியினாலும், நற்கிரியைகளினாலும் மட்டுமே நித்தியஜீவனை சுதந்தரிக்கமுடியும் என்று போதித்துக்கொண்டு இருப்பவர்கள் குறித்து அதிக எச்சரிக்கையாக இருக்கவேண்டியுள்ளது.
வேதம் தெளிவாக சொல்வது, "பாவத்தின் சம்பளம் மரணம்; தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன்." ரோமர் 6:23
கிருபை என்பது நம் 'தகுதி'க்குக் கிடைப்பதல்ல. எப்படி மரணம் எல்லோருக்கும் 'தானாக' பலிக்கிறதோ (ஒருவரும் தப்பமுடியாது) அதே போல் நித்திய ஜீவனுக்கும் ஒருவரும் தப்ப(?) முடியாது.
அப்படியென்றால் யார் எப்படி வேண்டுமானாலும் வாழ்ந்துகொள்ளலாமா? என்று கேட்பது ஒரு பரிசேயத்தனமான கேள்வி. தங்களை தற்போது மஹாபரிசுத்தவான்களாக் எண்ணிக்கொண்டிருப்பவர்கள் இதை ஏற்றுக்கொள்ளவே மாட்டார்கள். "நான் அவ்வளவு மோசமில்லை, ஆனால் என்னைவிட மோசமானவன் தண்டிக்கப்படவேண்டும்" என்ற எண்ணம் தோன்றினால் அதுவும் அன்பின்மையையும், காழ்ப்புணர்வையுமே காண்பிக்கிறது. கடைசியில் வந்தவனுக்கும் அதே சம்பளமா? என்பது போல.
மேலும் இது முன்னமே தெரிந்திருந்தால் நான் இன்னும் பாவம் செய்திருப்பேனே என்று எண்ணினாலோ, அல்லது இனி நான் துணிகரமாக பாவம் செய்யலாம் என்று எண்ணினாலோ அது இதுவரை நாம் போட்ட வேஷத்தை வெளிக்கொணரும் காரியமாகவே இருக்கும். தண்டனைக்குப் பயந்து யாரும் 'யோக்யமாக' இருக்க முயல்வதை சரியான தீர்வாகக் கருத இயலாது.
நாம் வசனத்தில் தெளிவுள்ளவர்களாகவும், தேவதிட்டத்தை அறிந்தவர்களாகவும், அதிலுள்ள தெய்வீக அன்பின் ஆழத்தை உணர்ந்தவர்களாகவும் இருந்தால் நிச்சயம் நம்முடைய கேரக்டர் மேலும் உயருமேயன்றி வேறில்லை. மற்றவர்களிடம் நாம் செலுத்தும் அன்பு மேலிடும். நம்முடைய உடன் சகோதரர்களான முழு உலகமுமே எந்த ஆபத்திலும் இல்லை என்ற உணர்வு வரும்போது மட்டுமே தெய்வீக சமாதானம் நம்மை ஆட்கொள்ளும்.
குழந்தையை பாதிப்பாதியாக வெட்டச் சொல்வது போலித்தாய், ஆனால் போலித்தாயிடம் இருந்தாலும் குழந்தை உயிரோடு இருக்கட்டும் என்று கூறுவதே உண்மை அன்பு.
தள அன்பர்கள் தயவு கூர்ந்து முதலில் ஆத்துமா தலைப்பில் நான் பதித்துவரும் மனிதனுக்குள் ஆத்துமாவா? பகுதியை நிதானமாக வாசித்தறிய அறிவுறுத்தப்படுகிறார்கள். மிக நீளமான பதிவு என்பதால் பொறுமை மிகவும் அவசியம். பதித்து முடிந்தபின் அதை பிரின்ட் செய்து நீங்கள் ஆராயலாம். அலுவல் காரணமாக சிறிது சிறிதாகவே பதிக்க முடிகிறது. ஆனால் அதில் தெளிவடைந்தபின் உங்களுக்கு ஆத்துமா, மரணம் என்பவைகள் பற்றி எந்தவித சந்தேகமும் வராது. இது உத்தரவாதம். இது சம்பந்தமான எந்த கேள்விகள் இருந்தாலும் அதை ஆத்துமா விவாதப் பகுதியில் பதிக்கவும்.
"உம்முடைய இராஜ்ஜியம் வருவதாக"
-- Edited by soulsolution on Friday 29th of January 2010 09:51:18 AM
இந்தத் தளத்தில் பிதாவாகிய தேவனுக்கு எதிராகவோ, அவரது ஒரே பேறான குமாரனாகிய இயேசுகிறிஸ்துவுக்கு எதிராகவோ ஏதாவது பதித்திருந்தால் வசன ஆதாரத்துடன் சுட்டிக் காண்பிக்கவும்.
நாங்கள் வேதத்துக்கு எதிரான உபதேசங்களைத்தான் வெளிச்சம் போட்ட்டுக் காண்பிக்கிறோம். இன்னும் காண்பிப்போம்.
கோடி நபர்களில் ஒருவராவது இதில் தெளிவடைந்தால் எங்களுக்கு வெற்றியே.
சிங்கிளாகவரும் சிங்கங்கள் இதைப் புரிந்து கொள்ளும்.
கூட்டமாக வரும் பன்றிகளுக்கு இந்த முத்துக்களின் அருமை புரிய வாய்ப்பில்லை.
உலகில் நடைபெறும் அனைத்துக் காரியங்களும் தேவன் முன்கூட்டியே நியமித்தது என்று அறிந்தால் மிகவும் ஆச்சரியப்படுவோம்.
தேவனுடைய ஆதீனத்திலில்லாத எதுவுமே உலகில் நடப்பதில்லை. ஆகவேதான் எப்படி எல்லாரையும் மரணத்துக்குள்ளாக்க திட்டம் உள்ளதோ அதேபோல்தான் எல்லாரையும் ஜீவனுக்குள்ளாக்க திட்டம் உள்ளது.
நம் சிற்றறிவை வைத்துக்கொண்டு தேவனுடைய மகத்துவங்களை எடைபோட முடியாது. அவராலே கூடாதது ஒன்றுமில்லை என்றால் ஒன்றுமில்லை.
இதற்கு மிஞ்சி "அப்படியல்ல பிரதர் அவரால் பாவியை இரட்சிக்க முடியாது" என்று வாதிடுபவர்கள் ஒருவகையில் தேவதூஷணம் செய்கின்றனர்.