ஜெயங்கொள்ளுகிறவன் எவனோ அவனுக்கு வெண்வஸ்திரம் தரிப்பிக்கப்ப்டும். ( வெளி. 3:5 )
உண்மை விசுவாசிகள் பாவத்தை மேற்கொண்டு விழிப்புள்ளவர்களாக உலக வழிகளிலே தங்களைக் காத்து, தங்கள் வஸ்திரங்களை கறைபடுத்தாது காத்துக்கொள்வர்.
பாவம் தங்களை கறைப்படுத்தி கிறிஸ்துவினிடமிருந்து தங்களை விலகிப்போக ஏதுவில்லாமல் அவருடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் தங்களுடைய வஸ்திரங்களை அவ்வப்போது சுத்திகரித்துக்கொள்வார்கள், இவர்கள் பாவத்தை வெறுத்து, தங்கள் வஸ்திரங்களை கறைப்படுத்தாமல் காத்துக் கொள்வதால் பொல்லாங்கன் இவர்களை அணுகமட்டான்.
இவை யாவும் இவர்கள் தங்கள் சித்தத்தை கிறிஸ்துவின் சித்தத்திற்கு ஒப்புக் கொடுத்து கிறிஸ்துவுக்குள் மரித்தவர்களாக ஜீவிப்பதால், இவர்கள் பாவத்தை நடப்பிக்க மாட்டார்கள்.