" எல்லா காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள். " ( நீதி. 4:23 )
பாவம் பல வகைகளில் தீமையை விளைவிக்கக் கூடியது என்று நாம் ஒத்துக்கொள்வது மட்டும் போதாது.
இது தேவனாலே தடை செய்யப்பட்டதால் இவைகளை நாம் செய்யாதபடி தவிர்க்க முயற்சிப்பது அவசியம்.
அதோடு கூட தேவனால் அங்கீகரிக்கப்படாத சகல காரியங்களையும் உலக் இச்சைகளையும் நம் இருதயங்களிலிருந்து முற்றிலும் அகற்றி விடுவதே நலமானது.
கிறிஸ்துவின் நாமத்திலே அழைக்கப்பட்டோருக்குத் தங்கள் இருதயத்திலும், ஜீவியத்திலும் விசேஷமாக சிந்தனையிலும் தங்களை சுத்திகரித்துக் கொள்வதற்கு இது அவசியம்.
இதை தீர்க்கமாக புரிந்து கொள்ளாதவர்கள் வெளிப்படையான சில தீய செயல்களுக்கு தங்களை விலக்கிக் கொண்டாலும் தேவனால் தடை செய்யப்பட்ட சில காரியங்களில் ரகசியமாக தங்களை உட்படுத்துவதுண்டு.
இதினிமத்தமே சகல காவலோடும் நம் இருதயத்தைக் காத்துக்கொள்ள எச்சரிக்கப்படுகிறோம்.