" நீங்கள் உபவாசிக்கும் போது, மாயக்காரரைப் போல முக வாடலாய் இராதேயுங்கள். " ( ( மத். 6:16 )
மாமிச பலஹீனத்தால் ஆவியில் தளர்ச்சியுற்று பலவிதமான சோதனைகளாலும், உலக ஆசாபாசங்களாலும் சாத்தான் மூலம் வஞ்சிக்கப்படும் தேவனுடைய பிள்ளைகளுக்கு உபவாசம் மிக அவசியமானதுதான்.
ஏனென்றால் மாமிச தேக பலத்தையும், சக்தியையும் தளரச் செய்வது நம் சிந்தனைகளை அடக்கி வசப்படுத்தி தக்க வழியில் செல்ல இது அவசியமானது.
பெரும்பாலான கிறிஸ்தவர்கள் இப்படிப்பட்ட உபவாசத்தின் மூலம் பயன் பெற்றதுண்டு.
ஆனால் சகலரும் காணும்படி உபவாசிப்பதோ, ஜெபிப்பதோ கபடமானதும், தற்பெருமைக்குக் காரணமுமாயிருக்கும்.
இவர்கள் தேவ பக்தியின் வேஷதாரிகளாகக் காணப்படுவர்.
நெருக்கப்பட்டவர்களை விடுதலையாக்குவதும், சிறுமையானவனுக்கு சகாயம் செய்வதும் எதார்த்தமாக நடப்பதுமே எனக்குகந்த உபவாசம் என்று யெகோவா தேவன் , தீர்க்கன் ஏசாயா மூலம் தம் ஜனத்தை உணர்த்தினார்.