" கிருபையும் சத்தியமும் உன்னை விட்டு விலகாதிருப்பதாக. நீ அவைகளை உன் கழுத்திலே பூண்டு அவைகளை உன் இருதயமான பலகையில் எழுது. " ( நீதி. 3:3 )
அன்பின் பிரமாணத்தில் நீதி முதல் ஸ்தானம் வகித்தாலும் அது அதன் முடிவு அல்ல.
அன்பின் மூலமாகவே நாம் இரக்கத்தையும், மன்னிப்பையும் அதிகமாக காண்பிக்க முடியும்.
கிருபை அல்லது இரக்கத்தின் மூலமாகவே நாம் தெய்வீக அன்பையும் வெளிப்படுத்த முடியும்.
நம் அனுதின வாழ்க்கையிலே பூரணமற்றவர்களாக இருப்பவர்களிடத்தில் அவர்கள் நன்றியில்லதவர்களாகக் காணப்பட்டாலும் நீதியோடு கூடிய இரக்கம் உள்ளவர்களாகவும், அன்புள்ளவர்களாகவும், தயாள குணமுள்ளவர்களாகவும், ஜீவிக்க நாம் பிரயாசப்பட வேண்டும்.
இதன் மூலமாகவே நாம் தேவனுடைய பிள்ளைகள் என்று விளங்க முடியும். ( 2 கொரி. 3: 2 - 3 )