" கர்த்தருக்கு காத்திருக்கிறவர்களே நீங்கள் எல்லோரும் திடமனதாயிருங்கள். அவர் உங்கள் இருதயத்தை ஸ்திரப்படுத்துவார். " ( சங். 31:24 )
தேவனுடைய பிள்ளைகள் தங்கள் நெருக்கமான பாதையில் மிக துன்பங்களையும், சோதனைகளையும் அனுபவித்து ஜீவிக்கும் போது சாத்தான் அவர்களை அதைரியப்படுத்தி, இப்பாதையில் நப்பது பிரயோஜனமற்றது என்று உணர்த்துவது போல சில சந்தர்ப்பங்களில் காணப்படும்.
இச்சந்தர்ப்பங்களில் இவர்கள் என்ன செய்ய வேண்டும் ?
நம்முடைய இரட்சகரான இயேசுவை நாம் முன் மாதிரியாகக் கொண்டு, பிதாவின் முகத்தைத் தேடி மன்றாடி அவர் நடத்துதலுக்காகக் காத்திருப்பது அவசியமானது.
உலகம் நம்மை நிந்தித்து பல பொய்யான காரியங்களைக் குற்றமாகப் பேசினாலும் நாம் தைரியமாகத் தேவனுடைய நடத்துதலுக்காகக் காத்திருப்பதே மேலானது.
அவரே நம்மை ஸ்திரப்படுத்தவும், பலப்படுத்தவும், ஆதரிக்கவும் உதவுபவராயிருக்கிறார்.
உயிர்த்தெழுதலில் நித்திய ஜீவனைப் பெற இதுவே நம் சிந்தையாக இருக்க வேண்டும். ( சங். 27:14, 33: 18 - 22 )