kovaibereans

Members Login
Username 
 
Password 
    Remember Me  
Post Info TOPIC: சங். 68:18


Moderator

Status: Offline
Posts: 1735
Date:
சங். 68:18


பரிசுத்த வேதாகமம் எப்படி சில வசனங்களை மாற்றி அச்சிட்டிருக்கிறது என்பதையும் அறிந்துக்கொள்வோம். இதை வாசித்து தான் இத்துனை நாட்கள் நம் ஊழியர்கள் (!!), சுவிசேஷகர்கள்(!!), தேவ ஆவியை பெற்றவர்கள் (!!) என்றவர்கள் பிரசங்கித்தார்களோ! தேவ ஆவி அவர்களிடம் வேறு மொழிப்பெயர்ப்புகளை பார்ப்பது பாவம் என்று சொல்லியிருக்கிறாரோ!!

பரிசுத்த வேதாகமத்தில் சங். 68:18
"தேவரீர் உன்னதத்திற்கு ஏறி சிறைப்பட்டவர்களைச் சிறையாக்கிக் கொண்டுபோனீர்; தேவனாகிய கர்த்தர் மனுஷருக்குள் வாசம்பண்ணும் பொருட்டு, துரோகிகளாகிய மனுஷர்களுக்காகவும் வரங்களை பெற்றுக்கொண்டீர்"

கிங் ஜேம்ஸ் மொழிப்பெயர்ப்பு சங். 68:18
"Thou hast ascended on high, thou hast led captivity captive: thou hast received gifts for men; yea, for the rebellious also, that the LORD God might dwell among them."


WBTC மொழிப்பெர்யப்பு சங். 68:18
"உயர்ந்த மலையில் அவர் ஏறினார். சிறைப்பட்டோரின் கூட்டத்தை அவர் வ‌ழிந‌ட‌த்தினார். எதிராக‌த் திரும்பின‌வ‌ர்க‌ள் உட்ப‌ட‌ ம‌னித‌ர்க‌ளிட‌மிருந்து அவ‌ர் ப‌ரிசுக‌ளை ஏற்றார். தேவ‌னாகிய‌ க‌ர்த்த‌ர் அங்கு வ‌சிப்ப‌த‌ற்கு ஏறிச்சென்றார்."

Psalm 68:18 (New International Version)

 18 When you ascended on high,
       you led captives in your train;
       you received gifts from men,
       even from [a] the rebellious—
       that you, O LORD God, might dwell there.


Psalm 68:18 (The Message)

You climbed to the High Place, captives in tow,
      your arms full of booty from rebels,
   And now you sit there in state,
      God, sovereign God!

Psalm 68:18 (New Living Translation)

 18 When you ascended to the heights,
      you led a crowd of captives.
   You received gifts from the people,
      even from those who rebelled against you.
      Now the Lord God will live among us there.


Psalm 68:18 (Holman Christian Standard Bible)
18 You ascended to the heights, taking away captives;
    You received gifts from [a] people,
    even from the rebellious,
    so that the LORD God might live [there].


இப்ப‌டியாக‌ "ம‌னித‌ர்க‌ளிட‌மிருந்து" பெற்றுக்கொண்டார் என்ப‌த‌ற்கும் "ம‌னித‌ர்க‌ளுக்காக‌" பெற்றுக்கொண்டார் என்ப‌த‌ற்கு வித்தியாச‌ம் நிச்ச‌ய‌ம் உண்டு. ப‌ரிசுத்த‌ வேதாக‌ம் மாத்திர‌ம் வாசித்தால் போது, அற்ப‌ புத்தியை கொண்டு ஆராய்ந்து என்ன‌த்தை சொல்ல‌ வ‌ருகிறீர்க‌ள் என்கிற‌வ‌ர்க‌ள் இத‌ற்கு என்ன‌ ப‌தில் வைத்திருக்கிறார்க‌ள்!!



__________________
சத்தியத்தையும் அறிவீர்கள்; சத்தியம் உங்களை விடுதலையாக்கும். யோவான் 8:32
Page 1 of 1  sorted by
 
Quick Reply

Please log in to post quick replies.



Create your own FREE Forum
Report Abuse
Powered by ActiveBoard