வரப்போகும் காரியங்களை அறிவிக்கும் கிறிஸ்தவ மண்டல குறிக்காரர்களே (கள்ளத்தீர்க்கதரிசிகளே). உங்களில் யாருக்கும் தேவன் தான் செய்ய போகும் காரியத்தை வெளிப்படுத்தவில்லையா? சுமார் 2 இலட்ச்சம் உயிர்களை எடுத்துக்கொண்ட ஹெயிட்டி பூகம்பத்தை பற்றி எந்த ஒரு கள்ள தீர்க்கதரிசியும் குறி சொல்லவில்லையே? என்ன ஆச்சரியம்!! அதிலும் வந்த பிறகு கூட நான் இதை அந்த சபையில் போன வருஷம் ஜனவரி மாதமே பேசியிருந்தேன் போன்ற அறிவிப்புகளும் கானவில்லையே?
எல்லாவற்றையும் தேவன் தங்களுக்கு வெளிப்படுத்துகிறார் போன்ற அபத்தங்களை சொல்லி பணம் பார்க்கும் இந்த கள்ள தீர்க்கதரிசிகள் இந்த முறை என்ன பதில் வைத்திருக்கிறார்களோ!! கிறிஸ்தவ சமுதாயமே, தீர்க்கதரிசனம் என்றால் தேவனின் வார்த்தைகள் மாத்திரமே! அது தேவ திட்டங்களின் வெளிப்பாடு மாத்திரமே. அது ஏது ஒவ்வொரு வருடமும் புது வருஷத்தில் உறைக்கப்படும் காரியங்கள் இல்லை. தேவனின் தீர்க்கதரிசனங்கள் வேதத்தைல் முழுமையாக எழுதப்பட்டு விட்டது, இனி சொல்லப்படுபவைகள் எல்லாம் கள்ள தீர்க்கதரிசினங்களே!!
இந்த கள்ள தீர்க்கதரிசிகள் இதை குறுந்தட்டில் பதிந்து இந்த வருடத்திற்கான தீர்க்கதரிசனம் என்று சொல்லி சில குறி சொல்லுத்தலை அதில் வைத்து பணம் பார்க்கும் ஓநாய்கள். இவர்களிடம் இருந்து ஜாக்கிரதையாக இருப்பதையே வேதம் சொல்லுகிறது.
ஹெயிட்டியின் இவ்வுளவு பெரிய அழிவை இந்த ஒரு தீர்க்கதரிசியும் Claim பன்னவில்லையே!! ஆச்சரியம் ஆனால் உண்மை!! ஒரு வேளை நான் இதை எழுதி முடிப்பதர்குள் ஏதோ ஒர் செய்தியில் யாரோ ஒரு கள்ளத்தீர்க்கதரிசி, "இந்த பூகம்பத்தை குறித்து தேவன் எனக்கு போன வருஷம் ஆகஸ்ட் மாதமே வெளிப்படுத்தினார், அதை நான் என் சபையிடம் சொல்லியிருக்கிறேன்" என்கிற விதமான காரியங்கள் வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கு இல்லை!!
"கேப்பையில் நெய் வடியுதுன்னா கேக்குறவனுக்கு புத்தி எங்க போச்சு"என்ற கிராமிய பழமொழியிலுள்ள ஞானம் கூட இன்றைய வேதம் வாசிக்கும் கிறிஸ்தவ சமுதாயத்திற்கு இல்லை என்பது வருந்தத்தக்கது. ஆனாலும் அவருடைய வருகையின் பிரசன்னத்தால் இந்த அறியாமை இருள் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக்கொண்டிருப்பதையும் வேதத்தை ஆராய்பவர்கள் மட்டுமே உணரமுடியும்.
அதே இடத்தில் இன்னொரு பூகம்பமும் வந்தது என்று செய்தி!