நாம் நீதியிலே நிலைத்திருக்க அனுதினமும், ஒவ்வொரு மணி நேரமும் அவருடைய வார்த்தைகளுக்கு கீழ்படிவதன் மூலம் தேவனுடைய அன்பிலே நிலைத்திருக்க வேண்டும்.
நாம் சந்தோஷமான நேரங்களில் மட்டுமல்ல உபத்திரவங்களிலும், துன்பங்களிலும், வியாதியிலும், சகல நிந்தைகளிலும் கூட கிறிஸ்துவின் மூலம் நமக்கு போதித்த பிரமாண அன்பிலே உண்மையுள்ள இருதயத்தோடு நிலைத்திருக்க வேண்டும்.
உயர்வானாலும், தாழ்வானாலும் நம்முடைய கிறிஸ்து இயேசுவிலுள்ள தேவனுடைய அன்பை விட்டு நம்மை பிரிக்கமாட்டாதென்று பவுல் சொன்ன வார்த்தைகளை நினைவு கூற வேண்டும்.
அவருடைய வசனத்தைக் கைக்கொள்ளுகிறவனிடத்தில் தேவ அன்பு மெய்யகவே பூரணப்பட்டிருக்கும்.