தேவனுடைய பிள்ளைகளுக்கு இது எவ்வளவு பெரிதான சிலாக்கியம்.
இவர்கள் தேவனை எந்நேரத்திலும், எவ்விடத்திலும் அவர் குமாரன் மூலம் ஜெபித்து, அவர் நம்மோடு இருக்கிறார் என்றும், நம் வேண்டுதல்களுக்கு பதிலளிப்பார் என்றும் தங்களது இருதயங்களில் விசுவாசித்தல் அவசியமானது.
அவருடைய பார்வையிலே ஒரு நாள் வேலையை செய்து முடித்து அவருடன் நெருங்கி சம்பாஷனையிலே ஈடுபடுவது எவ்வளவு மேலான சிலாக்கியம்.
இதன் மூலம் நம் சகல பாரங்களையும் அவரிடம் ஒப்படைக்கிறோம்.
ஆகிலும் உண்மையாக ஒருவர் தேவனை அறியாமலும், அவர் பிரமாணங்களைக் கைக்கொள்ளாமலும் ஜீவித்து ஜெபிப்பார்களானால் அந்த ஜெபம் கேட்கப்படாது.
கர்த்தருடைய கண்கள் நீதிமான்கள் மேல் நோக்கமாயிருக்கிறது. அவருடைய செவிகள் அவர்கள் வேண்டுதலுக்கு கவனமாயிருக்கிறது.