" ஆதலால் நான் நிச்சயமில்லாதவனாக ஓடேன், ஆகாயத்தை அடிக்கிறவனாக சிலம்பம் பண்ணேன். " ( 1 கொரி. 9:26 )
தேவனுடைய சித்தத்தைச் செய்ய முற்றிலும் பிரதிஷ்டை செய்து தன் முழு பெலத்துடன் தனக்கு அருளப்பட்ட வரத்தை உபயோகப்படுத்தத் தங்கள் சரீரத்தை ஒப்புக்கொடுத்தோருக்கு இது மிக பிரயோஜனமான வார்த்தை.
கிறிஸ்துவின் போர் வீரனாக தன்னை தத்தம் செய்து பிரதிஷ்டைக்குள் பிரவேசித்தவர்கள் நிச்சயமில்லாதவர்களாக ஓடாமல் சகல கஷ்ட ,நஷ்டங்களிலும் உறுதியுள்ள விசுவாசமுள்ளவர்களாக,
" நானும் என் வீட்டாரும் தேவனையே சேவிப்போம் "
என்ற வார்த்தையின் மூலம் தைரியமுள்ளவர்களாக நிச்சயத்துடன் ஓட வேண்டும்.
இவ்விதம் போர் வீரர்களாக தங்களை ஒப்புக்கொடுத்தோர், விசுவாசத்தின் நல்ல போராட்டத்தை இளைப்பறுதலின்றி மரணபரியந்தம் பின்வாங்காது ஓட வேண்டும்.
கொஞ்சம் ஓய்வெடுத்து, திடப்படுத்தி பின் ஓட்டத்தைத் தொடருவேன் என்றெண்ணாமல் தொடங்கிய ஓட்டத்தில் தொடர்ந்து ஓடி அப்போஸ்தலனான பவுலைப்போல நல்ல போராட்டத்தை போராடினேன், ஓட்டத்தை முடித்தேன் என்று ஒவ்வொரு கிறிஸ்துவின் சேவகனும் சொல்ல வேண்டும்.