கிறிஸ்தவத்தின் எல்லா குழப்பங்களுக்கும் காரணம் வேதம் ஆத்துமா, மரணம் ஆகியவற்றைப் பற்றி என்ன கற்றுத்தருகிறது என்ற தெளிவின்மையாகும். மிகவும் அடிப்படை விஷயங்களான இவ்விரண்டிலும் தெளிவில்லாவிட்டால் அதன் பின் மனதில் திணிக்கப்படும் போதகங்கள் குழப்பத்தின் மேல் குழப்பத்தையே மிக நிச்சயமாக உருவாக்கும். மனிதன் யார்? தேவன் அவனை எவ்விதமாக உருவாக்கினார்? ஆத்துமாவுக்கு உண்மையான அர்த்தம் என்ன என்பதை விவாதிப்பதைக் காட்டிலும் வேதத்தை ஆராய்ந்து பெறப்பட்ட சத்தியங்களை உங்களோடு பகிர்ந்து கொள்வது நலமாகப்பட்டதால் இந்தப் பாடத்தை பதிக்கிறோம். இந்தப் பாடம் வேதத்துக்கு முற்றிலும் இசைவாக இருப்பதால் இதனுடைய ஆக்கியோன் நிச்சயமாக ஒரு வெளிச்சத்தின் பிள்ளையாக இருந்திருப்பார் என்பதில் சந்தேகமில்லை. இந்த ஏற்றகால சத்தியத்துக்கு தேவன் நம்மைப் பாத்திரராக எண்ணியபடியால் அவருக்கு கோடாகோடி ஸ்தோத்திரங்களையும், நன்றிகளையும் ஏறெடுக்கிறோம்.
சத்தியம் நம்மை எல்லாக் குழப்பங்களிலிருந்தும் விடுதலையாக்கட்டும். இது சற்று விரிவான பாடம் என்பதால் வாசகர்கள் மிகப் பொறுமையாக வாசிக்க அறிவுறுத்தப்படுகிறார்கள். இதைப் பற்றிய கருத்துக்களை தயவுசெய்து "ஆத்துமா" என்ற தலைப்பிலுள்ள விவாத பகுதியில் பதிக்க வேண்டிக்கொள்கிறேன். ஒரு விஷயத்தைப் பற்றிய பாடத்தில் தெளிவு ஏற்படும்போது அதைப் பற்றிய எந்தவித சந்தேகங்களும் வராத முடிவுக்கு வருவதே உண்மை விடுதலை.
இனி வேத பாடம்.....
மனிதன், ஆத்துமாவா? மனிதனுக்குள் ஆத்துமாவா?
"மனுஷனை நீர் நினைக்கிறதற்கும், மனுஷகுமாரனை நீர் விசாரிக்கிறதற்கும் அவன் எம்மாத்திரம் என்கிறேன். நீன் அவனை தேவதூதரிலும் சற்று சிறியவனாக்கினீர்; மகிமையினாலும், கனத்தினாலும் அவனை முடிசூட்டினீர். உமது கரத்தின் கிரியைகளின்மேல் அவனுக்கு ஆளுகைதந்து, சகலத்தையும் அவனுடைய பாதங்களுக்குக் கீழ்ப்படுத்தினீர். ஆடுமாடுகளெல்லாவறையும் காட்டுமிருகங்களையும், ஆகாயத்துப் பறவைகளையும், சமுத்திரத்து மச்சங்களையும் கடல்களில் சஞ்சரிக்கிறவைகளையும் அவனுடைய பாதங்களூக்குக் கீழ்ப்படுத்தினீர்." சங்.8:4 - 8.
ஒரு மனிதன் என்பவன் எவ்வளவு பாக்கியமானவனாக இருந்திருக்க வேண்டும்? ஏனெனில் இந்த வானத்தையும் பூமியையும் படைத்த பரம பிதா அவனைத் தம்மோடு ஒப்புரவாக்க தனது சொந்த குமாரனையே ஈடுபலியாகக் கொடுத்திருக்கிறார். பூமியில் தேவன் படைத்த சிருஷ்டிகள் படைப்புகளெல்லாவற்றிலும், மனிதனே உன்னதமானவன் என்பதை நாம் அறிந்தாக வேண்டும். அப்படியிருப்பினும், நம்முடைய நிதானம், நம்முடைய அறிவு, ஞானம் அனைத்தும் ஒரு எல்லைக்குள்கட்டுப்படுத்தி, அந்த வட்டத்திற்குள் வளைய வரும்படியாக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
தொடரும்...
-- Edited by soulsolution on Thursday 14th of January 2010 09:15:46 AM
-- Edited by soulsolution on Friday 15th of January 2010 02:08:09 PM
இவைகளெல்லாம் பத்தொன்பதாம் நூற்றாண்டின் வளர்ச்சி, பெருமையைச் சார்ந்ததாகும். பூர்வத்தில் உபயோகமற்றதாய் இருந்த பிராணிகள், பொருள்கள் கூட இன்றைக்கு விஞ்ஞான வளர்ச்சியின் மூலமாக பயன்படும் பொருளாக மாற்றிக் காண்பித்திருக்கிறது. அறிவியலின்படி எதிர்காலத்தில் அவை இன்னும் உயர்ந்த நிலைக்கு உயர்த்தப்படக்கூடும். இந்த பரிணாம வளர்ச்சி நாகரீகமடைந்த மக்கள் வாழும் தேசங்களுக்கு மட்டுமே பொருந்தும் என்று சொல்வதற்கில்லை. பொதுவாகப் பார்க்கும்பொழுது, எல்லா புறஜாதி மக்களும், காட்டுமிராண்டிகளும் கூட மனிதனைப் பற்றி நாகரீகமடைந்தவர்கள், நாகரீகமடையாதவர்கள் எல்லாருக்கும் ஒரே கருத்துதான் நிலவுகிறது. ஒரே வித்தியாசம் என்னவெனில் நாகரீகமடையாதவர்கள். மனித ஆரம்பத்தைக் குறித்து அறியாதிருக்கிறார்கள். இந்த சிந்தனை எல்லா புறஜாதியாரின் தத்துவத்திற்கும் தற்கால அறிவியலார் வகுத்த கொள்கைகளுக்கும் ஆதரவாய் இருக்கிறது. இந்தக் கருத்துகளை அவர்கள் வேற்றுமையான முறையில் விளக்குவதற்குக் காரணம் இவர்கள் அடிப்படையில் எதிர்கால வாழ்க்கையை நம்பிக்கையோடும் ஆவலோடும் எதிர்பார்த்திருப்பதேயாகும். விஞ்ஞான ரீதியில் காரண காரியத்தின் அடிப்படையிலேயே அவர்களுடைய பரிணாமக் கொள்கை அடிப்படையிலேயே ஒத்துவராதிருந்தும், தங்களுடைய மாயமான கருத்தை நியாயப்படுத்த முனைகிறார்கள். மனிதனுக்குள் இந்த ஜீவன் எப்படி தோன்றியிருக்க முடியும் என்பதற்கு சரியான விளக்கமில்லை.
அறிவியல் பார்வையில் மனிதன்
மனிதன் யார் என்ற கேள்விக்கு அறிவியல் பூர்வமாகவும், எளிய முறையில் சொல்ல வேண்டுமானால், அவன் ஒரு மிருகத்தைப் போலவே பிறந்திருந்தாலும் மிக உன்னத நிலைக்கு முன்னேறியிருப்பவன் என்று சொல்லலாம். மற்ற மிருகங்களைப் போலல்லாமல், மனித உடல் கூற்றில் அமைப்பிலேயே வேறுபாடு உண்டு. அந்த வகையில் பார்த்தோமேயானால் மிக உயர்ந்த பெருந்தன்மையான முன்னேற்றத்தைக் கண்டது மனிதனே. மனிதனுக்கும் தங்களைவிட கீழான மிருகத்திற்கும் மூளை அமைப்பில் ஒரே தோற்றம் காணப்பட்டாலும், மதிநுட்பம், நுண்ணறிவு ஆகியவற்றைப் பயிற்சியால் விலங்குகளை விட, மிக உன்னத முன்னேற்றம் அடைந்து வளர்ந்து கொண்டே செலவதால், கீழ்த்தரமான விலங்குகளைவிட மேன்மை நிலையை அடைவதுடன், அவைகளை ஆண்டு நடத்துகிற அரசனாகவும், எஜமானனுமாக இருக்கிறான். மனிதனுடைய மூச்சு, அல்லது ஜீவ ஆவி இவையனைத்தும் விலங்குகளுக்கு ஒத்தே இருக்கிறது. மனிதன் தன்னை உருவாக்கியவர்களிடமிருந்து சாயல், தோற்றம் ஆகியவற்றைப் பெற்றுக்கொண்டது போலவே மிருகங்களும், தங்கள் சாயல் தோற்றங்களை, தங்களை ஈன்ற விலங்குகளிடமிருந்து சுதந்தரித்துக் கொள்கின்றன.
அறிவியலின்படி ஒவ்வொரு மனிதனும் ஒரு ஆத்துமா அல்லது உணர்வுள்ள ஒரு ஜீவி. ஆனால் எதிர்காலத்தைப் பற்றியோ நித்திய வாழ்வைப்பற்றியோ அறிவியலில் இது சம்பந்தமாக எந்த ஒரு ஆலோசனையோ, முன்வடிவோ கிடையாது. எந்த அடிப்படையிலும் இதற்கு ஒரு முடிவையோ கருத்தையோ, விளக்கத்தையோ, காரணத்துடன் எடுத்துக் காட்ட முடியவில்லை. அறிவியல் எதிர்காலத்துக்குரிய எந்த நம்பிக்கையும் பரிணாமக் கொள்கையின் அடிப்படையில் நமக்கு தராவிட்டாலும், கடந்த காலத்தைத் தேட முடியும் என்று நம்புகிறது. இயற்கையின் நியமத்தை இறைவனாகக் கொண்ட பரிணாமவாத்த்தால் ஏற்கனவே நிறைவேற்றப்பட்ட செயல்பாடுகளில் அறிவியல் பெருமிதம் கொண்டிருக்கிறது. இதே இயற்கையின் விதியின்படியே ஒவ்வொரு செயல் பாடுகளும் நம்பிக்கையோடு முன்னேறி, படிப்படியாக தற்போதைய நிலையைக் காட்டிலும் மனுக்குலம் முழுவதும் மாபெரும் கடவுளுக்கு ஒப்பாவார்கள் என்று நம்பிக்கை கொண்டிருக்கிறது.
சில விஷயங்களில் மேற்சொன்ன இரண்டு கருத்துக்களையும் ஏற்றுக்கொண்டாலும், அவைகளில் சில அடிப்படையான கருத்துக்களை வேதாகமம் மறுத்துரைக்கின்றது. வேதாகமம் ஏனோ தானோவென்று கருத்துக் கூறாமல், தெய்வ வெளிப்பட்டை உள்ளதை உள்ளதென்றும், இல்லதை இல்லதென்றும் தெளிவாக வலியுருத்திச் சொல்வதோடு அதிகாரப் பூர்வமாகவும் சொல்கிறது; மனிதனுடைய துவக்கத்தையும், தற்கால நிலமையையும் கூறுகிறது. வேதாகமகப் பார்வை ஒன்றே திடமானது; சரியான பாரம்பரியக் கொள்கையும், சரியான அறிவியல் கொள்கையும் இதுவேயாகும். வேத கருத்து மனிதனுடைய பெருமையை தாழ்த்தவில்லை. அது, மனிதன் தனது சொந்த பரிணாமத்தினாலேயோ அல்லது கடவுளேயல்லாத இயற்கையின் நியமத்தினாலேயோ உண்டானவன் அல்ல என்று கூறுகிறது. முதல் மனிதனாகிய ஆதாமை தேவசாயலாக சிருஷ்டித்ததில் தேவனுக்கும் மகிமை, மனிதனுக்கும் பெருமை என்பது மனிதன் சிருஷ்டிப்பைப் பொறுத்த வரையில் வேதாகமப் பார்வையாகும். அந்த சாயலைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல் வீழ்ச்சிக்குள்ளானது மனிதனே. உடல், மன, ஒழுக்க வலுவிழந்து முடிவில் மரணத்திற்கு வழிநடத்துகிற பாவமே (கீழ்ப்படியாமை) இந்த வீழ்ச்சிக்கெல்லாம் அடிப்படைக் காரணம். மனிதன் வீழ்ச்சியடைந்து பாவத்தில் வாழ்ந்தாலும், மனிதனை பாவத்திலிருந்து மீட்பதற்காக ஒரு மீட்பரையும், மீட்பின் திட்டத்தையும், ஆயிரவருட அரசாட்சிக்காலத்தில் மனிதன் தான் முன்பிருந்த நிலைக்கு திரும்பவும் கொண்டுவருகிற ஏற்பாடும் தேவனுடைய தயாள குணத்தை வெளிப்படுத்துகிறது.
மனிதனுடைய இயல்பான சுபாவத்தைப் பற்றிப் படிக்கும்போது கிறிஸ்தவ மக்கள் மனதில் பல குழப்பங்கள் தோன்றுவதற்கு அடிப்படியான காரணம் என்னவெனில், வேதாகமக் கருத்தை சரிவரப் புரிந்துகொள்ளாததேயாகும். அவர்கள் பொதுவான மனுக்குலத்தையும் சபையையும் பிரித்து பார்க்க தவறிவிட்டார்கள். வேதாகமத்தில் கூறியிருக்கிற தற்போதுள்ள சுவிசேஷ யுகத்தில், மனிதர்கள் மத்தியிலிருந்து தேவன் தெரிந்துகொண்ட சிறுமந்தை, ஆவியின் சரீரத்தைக் எடுத்து தேவ சாயல் பெறுவதற்கு தகுதியுள்ளவர்களாக்குவதைக் குறித்து சரியாக புரிந்து கொள்ளத்தவறினதே குழப்பங்களுக்கெல்லாம் காரணம். "சத்திய வசனத்தை நிதானமாய்ப் பகுத்து" உணராமல் இருக்கிறார்கள்.
புதிய ஏற்பாட்டில் திருச்சபையாருக்கு மட்டுமே சொல்லப்பட்ட விஷயங்களையும் வாக்குத்தத்தங்களையும் அனைத்து மனுக்குலத்துக்கும் உரியது என்று எடுத்துக்கொள்கிறார்கள். அதுபோல் இழ்ந்ததை திரும்ப பெறுகிற நம்பிக்கை மனுக்குலத்திற்கு மட்டுமே உரியது. "மகா மேன்மையும் அருமையுமான வாக்குத்தத்தங்கள்" எல்லாம் மனுக்குலத்திற்குரியது அல்ல, சபைக்கு மட்டுமே உரியது. எனவே அப்.பவுல், "சரீரமானது பாவத்தினிமித்தம் மரித்ததாயும், ஆவியானது நீதியினிமித்தம் ஜீவனுள்ளதாயும் இருக்கும்: (ரோம 8:18) என்கிறார். இது திருச்சபையாருக்குத்தான் பொருந்துமேயல்லாமல், உலகத்தாருக்குப் பொருந்தாது. இந்த சுவிசேஷ யுகத்தில் திருச்சபையாருக்கு மாத்திரமே விசேஷ அழைப்பு கொடுக்கப்படுகிறது. இந்த அழைப்பு சகல மனுக்குலத்திற்கும் என்று தவறாக சிலர் வாதிடுகின்றனர். இந்த இடத்தில் "மரணமும்", "ஜீவனும்" சொல்லர்த்தமாக கூறப்படாமல் ஜீவிக்கும் நிலைமையையும், மரித்த நிலைமையையும் தொடர்புபடுத்திக் காண்பிக்க கூறப்பட்டதாகும். தேவகிருபையினால் விசுவாதஹ்தினால் நீதிமான்களாக்கப்பட்டவர்கள் அந்த நிலைமைக்கு வந்தவுடனேயே அவர்கள் மரண சாபத்திலிருந்து மீட்கப்பட்டவர்களாக கருதப்படுவார்கள். சாவுக்கினமான தங்கள் சரீரங்களை ஒப்புக்கொடுத்து தங்களையே ஜீவபலியாக த்த்தம் செய்பவர்களாகக் கருதப்படுவார்கள். இந்த பூமிக்குரிய விஷயங்களில் அவர்கள் தங்களை மரித்தவர்களாகக் கருதிக் கொள்வார்கள். இப்படிப்பட்டவர்கள் இனிமேல் மாம்சத்துக்குரியவர்கள் அல்ல, தேவனுடைய வாக்குத்தத்தங்களின் அடிப்படையில் புதிய சிருஷ்டியாக ஜெநிப்பிக்கப்பட்டவர்களாகிறார்கள். இப்படிப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்குக் கீழ்ப்படிகிறதனாலும், அவர்மேல் வைத்திருக்கிற விசுவாசத்தினாலும் நீதிமான்களாககப்பட்டு, பரிசுத்தமாக்கப்பட்ட விசுவாசிகள்(திருச்சபை) தெய்வீக நிலைப்பாட்டில் புதிய ஆவிக்குரிய ஜீவனைப் பெற்றுக்கொண்டவர்களாகிறார்கள். ஆனால் "மரணம்", "ஜீவன்" என்ற வார்த்தைகளின் பயன்பாடு உலக்த்தாருக்கு உரியதல்ல, ஏனெனில் உலகத்திற்கு மனித சுபாவத்தைத் தவிர வேறு எந்த சுபாவமும் கிடையாது. எந்தப் பொருளிலும் உலகம் மறுபடியும் ஜெநிப்பிக்கப்படப் போவதில்லை.
இன்னொரு வசனத்தையும் அடிக்கடி சபையாருக்குப் பதிலாக உலகத்தாருக்கு பயன்படுத்துகிறார்கள். "இந்த மகத்துவமுள்ள வல்லமை எங்களால் உண்டாயிராமல், தேவனால் உண்டாயிருக்கிறதென்று விளங்கும்படி, இந்தப் பொக்கிஷத்தை மட்பாண்டங்களில் பெற்றிருக்கிறோம்." (2 கொரி. 4:7)
இங்கு திருச்சபையாரை மட்டுமே பொக்கிஷமாகிய சிந்தையை, புதிய சுபாவத்தை உடையவர்கள் என்று குறிப்பிடப்படுகிறது. பொக்கிஷமாகிய இந்த புதிய சுபாவத்தை சாவுக்கேதுவான இந்த சாமான்ய மனித சரீரத்திலேயே பெற்றிருப்பதால் மண்பாண்டம் என்று குறிப்பிடுகிற விளக்கம் பொருத்தமானதே. இந்த விளக்கம் சபையாருக்கு மிகவும் பொருத்தமானது. மனுக்குலம் பரலோக பொக்கிஷத்தை பெற்றிருப்பதாகவும், இந்த மாமிச சரீரமாகிய மண்பாண்டத்தில் புதிய சுபாவமாகிய பொக்கிஷத்தை பெற்றிருப்பதாகவும் கூறுவது தவறு. உலகத்திற்கு ஒரே சுபாவம் கொடுக்கப்பட்டிருக்கிறது. அது மனித சுபாவமேயல்லாமல், புதிய சிருஷ்டியின் ஐஸ்வரியமான தெய்வீக சுபாவமல்ல. பிற்காலத்திலாவது அது அத்தகைய தேவ சுபாவத்தைப் பெறுமென்றும் சொல்வதற்கில்லை. இதற்கு நேர்மாறாக, மனுக்குலத்திற்குக் கொடுக்கப்படக்கூடிய உன்னதமான ஆசீர்வாதம் என்னவெனில், அவர்கள் பூரண மனித நிலையாகிய முந்தின சீருக்கு கொண்டுவரப்படுவதேயாகும். ஏதேனில் இழந்துபோன பரிபூரண மனுஷ சுபாவத்தை கல்வாரியில் மீட்டெடுப்பார்கள். அப். 3:19 - 23.
இதுபோலவே புதிய ஏற்பாட்டில் அநேக வசனங்கள் உலக ஜனங்களுக்கு பொருந்தாமல், புதிய ஆவிக்குரிய சுபாவத்திற்கு பரிசுத்த ஆவியானால் ஜெநிப்பிக்கப்பட்ட, அர்ப்பணம் செய்த திருச்சபையாருக்கு மட்டுமே பொருத்தமாயிருக்கிறது என்பதை அறியலாம். அப்போஸ்தலர்கள் ஒவ்வொரு நிருபத்திலும் ஒவ்வொரு விதமாக வாழ்த்துரை சொல்வதில் உள்ள கருத்தாழமான சொல்லாட்சியை ஆராய்ந்து பார்ப்பது அவசியம். அநேகம்பேர் இது உலக ஜனங்களுக்காகவும் எழுதப்பட்டது என்று நினைக்கின்றனர். அது தவறு. முற்றிலும் புதிய சிருஷ்டியாகிறவர்களாகிய பரிசுத்தவான்களுக்கே, விசுவாச வீட்டாராகிய திருச்சபையாருக்கே பொருந்தும்.
இந்த அதிகாரத்தில், "மனிதன் யார்" என்று செய்யப்படுகிற ஆராய்ச்சி பொதுவான உலக மனிதனைப் பற்றியே அல்லாமல் தேவனால் அழைக்கப்பட்டு தெரிந்துகொள்ளப்பட்டு, ஏற்கனவே ஆவியினால் ஜெனிப்பிக்கப்பட்ட, கிறிஸ்துவுக்குள்ளான புதிய சிருஷ்டிகள் இறுதிவரை உறுதியாய் விசுவாசத்தில் நிலைத்திருந்து முதலாம் உயிர்த்தெழுதலில் பங்கு பெறப் போகிறவர்களாகிய இவர்களைப் பற்றி அல்ல என்பதை அனைவரும் நினைவில் கொள்வது நல்லது. இவைகளுக்கு மாறாக நாம், முதல் மனிதனாகிய ஆதாமையும் அவனுடைய சந்த்ததியாரைப் பற்றியுமே இங்கு சிந்திக்கின்றோம். மனுக்குலத்தின் அங்கமாக நாம் யார்? நம்முடைய சுபாவம் என்ன என்பதையே அறிந்துகொள்ள ஆவலாய் இருக்கிறோம். இப்படியாக மனிதன் எதனால் விழுந்தான்? எதிலிருந்து எப்படி மீட்கப்பட்டான்? மனிதன் திரும்பவும் எந்த நிலைமைக்கு சீர்திருத்தப்படுவான்? என்பது போன்ற ஒன்றுக்கொன்று தொடர்புடைய காரியங்களை மிக நன்றாய் புரிந்து கொள்வதற்கே இந்த ஆராய்ச்சி.
"விலங்கு" என்ற சொல்லுக்கு என்ன விளக்கமோ, அதே விளக்கத்தையுடையவனாகிய மனிதனும், விலங்கும் ஜீவனும் உணர்வும் உள்ளவை என்ப்தைல் விஞ்ஞானத்திற்கும், வேதாகமத்திற்கும் வேறுபாடில்லை. மனிதன் விலங்கின் வகையாகக் கருதப்பட்டாலும், பூமியிலிலுள்ள மற்றெல்லாப் பிராணிகளுக்கும் அவன் அரசனாகவும், பிரதானமானவனாகவும் இருக்கிறான் என்பதை ஒப்புக்கொள்ளத் தடையில்லை. அறிவியல் சொல்லுகிற இந்த தர்க்க ரீதியான வாதங்களை வேதாகமம் தடையில்லாமல் ஏற்றுக்கொள்கிறது. இந்த அதிகாரத்தின் துவக்கத்தில் கொடுத்திருக்கிற வசனத்தை நன்கு கவனிக்கவும். இதில் மனிதன் தேவதூதருக்கு சற்று சிறியவனாகப் படைக்கப்பட்டு இருந்தாலும், பிராணிகள், பறவைகள் இவையெல்லாவற்றிலும் மேலாகவும், அவற்றை ஆளுகின்ற அரசனாகவும் தேவனுடைய பிரதிநிதியாகவும் ஏற்படுத்தப்பட்டான் என்று தாவீது கூறியிருக்கிறார்.
தெய்வீக சுபாவத்தின் சிறு பகுதி அல்லது பொறி ஒவ்வொரு மனிதனுக்கும் கொடுக்கப்பட்டதாக வேதாகமத்தில் நேர்முகமாகவோ, மறைமுகவாகவோ எந்த ஒரு சிறு குறிப்பும் கிடையாது. இதற்கு எவ்வித ஆதாரமும் கிடையாதிருப்பினும்,ஆதாரமில்லாத ஒன்றை ஒரு கொள்கையாக, ஒரு தத்துவமாக சித்தரிக்க முனைந்தவர்களுடைய வெறும் கற்பனையேயல்லாமல் வேறல்ல. இந்த ஆதாரமற்ற அடிப்படையற்ற முற்றிலும் கற்பனையான ஒரு தத்துவம், கடவுளிலிருந்து ஒரு பகுதி ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலேயே வழங்கப்படுகிறது என்பதே பிற்காலத்தில் தோன்றிய தப்பறையான உபதேசங்களுக்கெல்லாம் அடிப்படையாயிற்று. இந்தக் கொள்கை தேவனுடைய மகிமைக்கு இழுக்காகவும், அவருடைய குணலட்சணங்களான ஞானம், நீதி, அன்பு, வல்லமை இவைகளுக்கெல்லாம் முரண்பட்டதாகவும் இருக்கிறது.
இப்படிப்பட்ட தெய்வீக சுபாவம் ஒவ்வொரு மனிதனுக்கும் பிறப்பிலேயே கொடுக்கப்பட்டிருக்கிறது என்கிற தவறான தத்துவத்தின் காரணமாகவே, அப்படிப்பட்ட நித்திய எரிநரகக் கொள்கையும் தேவைப்பட்டது. மற்ற மிருகங்களைப் போலவே மனிதனும் படைக்கப்பட்டிருந்தால், மற்ற மிருகங்கள் சாவது போலவே இவர்களும் சாவார்கள். அப்படியில்லாமல் தெய்வீக சுபாவத்தின் ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்டதினால் இவர்கள் சாக முடியாது. அதனாலேயே இவர்களை நித்திய எரிநரகத்தில் அழிக்கவேண்டியதாய் உள்ளது.தேவன் நித்தியராய் இருப்பதுபோல தேவனிடமிருந்து ஒரு பகுதியைப் பெற்றுக்கொண்ட மனிதனும் நித்தியத்துக்கும் இருப்பான். இதனால் தாம் சிருஷ்டித்த ஒரு மனிதனை அவரே அழிக்க விரும்பினாலும் கூட அழிக்க முடியாத நிலையை அடைந்துவிட்டான். இதனால் சிருஷ்டிக்கப்பட்ட மனிதன் ஒருக்காலும் அழிக்கப்பட முடியாததால், அவன் எங்காவது ஒரு மூலையில் ஏதாவது ஒரு ரூபத்தில் இருந்துகொண்டே இருப்பான். அவர்கள் கொள்கையின்படியே பார்க்கப்போனால், விரல்விட்டு எண்ணக்கூடிய மிகச் சிலரே (சிறுமந்தை) பரிசுத்தவான்களாகவும், தேவனுக்குப் பிரியமானவர்களாகவும் இருப்பார்கள்; பரிசுத்தவான்களாகிய சிலர் ஆசீர்வதிக்கப்படுவதுபோல, பரிசுத்தமற்ற கோடாகோடிப்பேர் நித்திய எரிநரகத்தில் சதாகாலமும் வெந்து கொண்டிருப்பர். துன்மார்க்கர் பூமியிலிராதபடி அழிக்கப்படுவது எல்லா மனிதனுடைய விருப்பத்திற்கும், கடவுளுடைய மகிமைக்கு ஏதுவாகவும் அனைவராலும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாகவும் இருக்கும். அகில உலகத்திற்கும் சந்தோஷமும், சமாதானமும் உண்டாக இப்படி துன்மார்க்கர் சங்கரிக்கப்படுவதே நலமாயிருக்கும். எவரையும் படைக்கின்ற கடவுள் துன்மார்க்கராய்ப்போன, தன்னால் படைக்கப்பட்டவர்களையே அழிக்க திராணியற்றவர் என்பதே அவர்ளுடைய வாதம். இதற்குக் காரணம், அந்தக் கொள்கையின்படி படைக்கும்போதே அந்த தெய்வீகத் தன்மை ஒவ்வொரு மனிதனிடமும் கொடுக்கப்பட்டு விட்டது. இந்தத் தத்துவமும் கொள்கைகளும் தர்க்க ரீதியிலும், காரண காரிய அடிப்படையிலும் சத்தியத்திற்கு நேர் விரோதமான கொள்கை என்று நாம் நம்புகிறதை அனைவரும் அறிய வேண்டி விளக்கமாக் எடுத்துக் காண்பிக்கிறோம். இதற்கு சத்திய ஆதாரம் இல்லை என்பது மட்டுமல்ல, இது முற்றிலும் இருண்ட யுகத்தின் புராணக் கட்டுக்கதை. இவைகள் சத்தியத்திற்கொவ்வாத தப்பறையான கட்டுக்கதைகளென்பதை வேதாகமம் ஆணித்தரமாக எடுத்தியம்புகிறது.
-- Edited by soulsolution on Thursday 14th of January 2010 12:36:44 PM
-- Edited by soulsolution on Thursday 14th of January 2010 01:39:46 PM
வேதாகம அடிப்படையின்படி மனிதன் என்பவன் இரண்டு கூறுகளால் ஏற்பட்டவன். (1) உடல், (2) ஆவி இவையிரண்டும் சேர்ந்து ஆத்துமா என்கிற உயிருள்ள, உணரும் தன்மையையும், மனிதத்தன்மையை உண்டாக்குகின்றது. 'சரீரம்' என்பது அங்கங்களால் ஆன உடற்கூறு மட்டுமே. இது ஜீவனளிக்கக்கூடிய உயிருடனோ, உயிருள்ளதால் உண்டாகக்கூடிய உணர்வுடனோ நேரடியாகத் தொடர்பு ஏற்படாமல், உயிரும் உடலும் ஒன்று சேர்ந்த பின்னரே உணர்வுப்பூர்வமாக ஒவ்வொன்றையும் உணரமுடிகிறது, நுண்ணறிவு ஏற்படுகிறது. சரீரமில்லாமல் எந்த மனிதனும் உயிர்வாழ முடியாது என்ற போதிலும், வெறும் சரீரம் மாத்திரம் மனிதனாக முடியாது. அதுபோலவே ஜீவ ஆவி இல்லாவிடில் அவன் மனிதனாக வாழ முடியாதததுபோல வெறும் ஆவி மட்டுமே மனிதனாக முடியாது. பழைய ஏற்பாட்டில் வரக்கூடிய 'ஆவி' என்ற பதத்திற்கு எபிரேய சொல் 'ரூவாக்' (Ruach) என்பதாகும். இதற்கு அநேக அர்த்தங்கள் இருந்தாலும், பிரதானமாக் 'மூச்சு' என்பதே அதனுடைய முக்கிய பொருள். இதினிமித்தமாக ஜீவசுவாசம், ஜீவ ஆவி என்றெல்லாம் சொற்கள் தோன்றின. எனவே முதன்முதலில் உயிர்பெற்ற மனிதன், சுவாசத்தினால் தாங்கப்படுகிறான்.
இருந்தபோதிலும், 'ஜீவ ஆவி' என்பது வெறும் மூச்சு சம்பந்தமான பொருள் மட்டுமல்லாமல், கருத்தாழம் கொண்ட் ஒரு சொல். முதன்முதலாக ஒரு மனிதன் சுவாசிக்கின்ற ஜீவக் காற்றாகும். அந்தக் காற்றை மட்டும் அவன் சுவாசிக்காதிருந்தால் அவனுக்குள் ஜீவன் தோன்றாது. நாம் நமது தந்தையாரிடமிருந்து பெறுகின்ற ஜீவனின் கருவானது, தாய் மூலமாக போஷிப்பிக்கப்பட்டு வளர்ச்சி பெறுகின்றது. மிருக ஜீவன்கள் தங்கள் சுவாசத்தின் ஜீவனை எப்படி பெற்றோரிடமிருந்து பெறுகின்றனவோ அது போலல்லாமல், அதி அற்புதவிதமாக, மனிதர் தங்கள் ஜீவ சுவாசத்தைப் பெறுகிறார்கள் என்பது உண்மையல்ல. மனிதனுக்குக் கீழான நான்குகால் பிராணிகள், குதிரை, நாய் போன்றவை அதனுடைய ஆண்களால் ஜீவன் கொடுக்கப்பட்டு, பெண் இனத்தால் பெற்றெடுக்கப்பட்டு, பேணப்பட்டு வளர்ச்சி பெறுகின்றன. இத்தகைய மிருகங்களுக்கும் மனிதர்களுக்கும் பிறப்பால் பேதமில்லை. இவைகளுக்கிடையே ஒற்றுமை உள்ளதே அல்லாமல் வேற்றுமை இருப்பதாக வேதத்தில் எங்கும் சொல்லப்படவில்லை. மனிதன் தெய்வ சுபாவத்தில் ஒரு பகுதியைப் பெற்றிருக்கிறான், ஆதலால் அவன் விலங்குகளைவிட வேறுபட்டவன் என்பதெல்லாம் தப்பறையான கொள்கையும் மனிதனுடைய சொந்த கண்டுபிடிப்புமாகும். இவ்வுலகில் பிறந்த ஒவ்வொரு மனிதக் குழந்தையையும், தேவன் நேரடியாகப் படைத்தார் என்பது தவறான கொள்கையாகும். எப்படியெனில் வேதாகமம் மறுக்கிற கருத்தை இவர்கள் ஆதரிக்கின்றனர். அப்படி ஒவ்வொருவரையும் கடவுளே படைக்கிறார் என்ப்து உண்மையானால், பாவம், குழப்பம், அபூரணம் இவற்றுக்கெல்லாம் அவரே நேரடிக் காரணராகிவிடுவார். மாறாக "அவருடைய கிரியை உத்தமமானது" என்று வேதாகமம் விளம்புகிறது. (உபா 32:4). மனரீதியாகவும், உடல், ஒழுக்கரீதியாக குறைவுள்ள அங்ககீனங்களோ, பலவீனமோ, குறைபாடுள்ள எந்தப் பிறவியும் தேவனால் படைக்கப்பட்டதாய் இருக்க முடியாது. இவர்கள் பூரணமான ஆதாமின் விழுகைக்குப் பின்னால் பல காலமும், பல பாவங்களின் தொகுப்பினாலும் விபத்துகள் போல வந்து நேர்ந்த விபரீதப்பிறப்புகள். பரிபூரணமாக சிருஷ்டிக்கப்பட்ட ஆதாமை மட்டுமே தேவன் தனது பொறுப்பில் படைத்தார். தேவனே ஒவ்வொரு குழந்தையின் பிறப்புக்கும் பொறுப்பாளி என்பவர்கள், ஒவ்வொரு பிறவிக்கோளாருக்கும், அங்ககீனத்திற்கும், பைத்தியத்திற்கும் தேவனையே பொறுப்பாளியாக்குகிறார்கள். பிள்ளைகள் தங்கள் பெற்றோரிடமிருந்து அங்கக் குறைபாடுகளையோ, புண்ணியமோ, பழியோ, கெட்ட பழக்கங்களையோ, நற்குணங்களையோ, திறமைகளையோ சுதந்தரித்துக் கொள்கிறார்கள் என்று வேதாகமும் அறிவியலும் சரியாக எடுத்துரைக்கின்றது.
"இப்படியானால் ஒரே மனுஷனுடைய கீழ்ப்படியாமையினாலே பாவமும், பாவத்தினாலே மரணமும் உலகத்திலே பிரவேசித்ததுபோலவும், எல்லா மனுஷரும் பாவஞ்செய்தபடியால், மரணம் எல்லாருக்கும் வந்ததுபோலவும் இதுவுமாயிற்று." (ரோமர் 5:12) என அப்போஸ்தலரும் வெகு விளக்கமாக இக்கருத்தை எடுத்துரைக்கின்றார். இதே கருத்தை, "பிதாக்கள் திராட்சைக் காய்களைத் தின்றார்கள், பிள்ளைகளின் பற்கள் கூசிப்போயின" (எரேமி 31:29) என முற்காலத்திலேயே எரேமியா இந்த பலவீனத்தின் தொடர்ச்சியை எடுத்துக் காண்பிக்கின்றார். (எசேக் 18:2)
-- Edited by soulsolution on Friday 15th of January 2010 09:29:04 AM
நம்முடைய முதல் பெற்றோருக்கு தேவன் தம்முடைய சாகாமை வாய்ந்த ஜீவனில் ஒரு பகுதியை வழங்கியிருக்கக்கூடாதா? அந்த நித்திய ஜீவன் வழிவழியாக, தலைமுறை தலைமுறையாக அனைத்துலக மக்களூம் பெற்றிருக்க வாய்ப்பில்லையா? என்று சிலர் கேட்கலாம். இந்தக் கருத்தைப் பற்றி வேதாகமம் என்ன சொல்கிறது என்று கருத்தாய் கவனிப்போமாக. எல்லோருக்கும் கிடைக்கப்பெற்றிருக்கிற வேதாகமம் தவிர, வேறு பிரத்யேகமான எந்த வெளிப்பாடும் எவருக்கும் எக்காலத்திலும் தேவனால் வழங்கப்படவில்லை. எனவே நமக்கு என்ன தெரிய வேண்டுமோ அதை வேறுயாருக்கும் தனியாக வெளிப்படுத்தாமல், கொடுக்கப்பட வேண்டிய எல்லா விளக்கங்களும் வேதாகமத்திலேயே கொடுக்கப்பட்டுவிட்டன. ஆதியாகமத்தில் இதைப்பற்றி என்ன வாசிக்கிறோம்? மிருகங்கள், தாவரங்கள் ஆகியவற்றை அவர் சிருஷ்டித்ததை சுருக்கமாகச் சொல்லிவிட்டு, மனிதனைப் படைத்ததைமட்டும் வெகுவிளக்கமாகவும் துல்லியமாகவும் சொல்லியிருக்கிறார். மனித சிருஷ்டிப்பைப் பற்றி வெகு எளிமையாகவும், தெளிவான மொழியிலும் சொல்லப்பட்டுள்ளது. அப்படிச் சொல்லப்பட்ட பகுதியிலெங்கும் இப்படி சாகாமை வாய்ந்த தன்மையின் ஒரு பகுதி கொடுக்கப்பட்டதாக குறிப்பிடவில்லை. விலங்குகளைப் பார்க்கிலும் மனிதன் அவைகளை ஆண்டுகொள்பவனாக சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறான் என்பதில் விலங்கிலிருந்து மனிதன் வேறுபட அவனுக்கு சாகாமை கொடுக்கப்பட்டிருக்கிறது என்று எங்கும் குறிப்பிடப்படவில்லை. மனிதன் எல்லாவற்றிற்கும் மேலான உருவத்தில், மேலான சரீரத்துடன் காரண காரியத்தை சிந்திக்கக்கூடிய மிருகங்களுக்கில்லாத பகுத்தறியும் மூளையுடன் படைக்கப்பட்டான். சாமான்ய மிருகங்களுக்கெட்டாத தொலைநோக்குப் பார்வையுடையவனாக மனிதன் படைக்கப்பட்டான். இவைகளெல்லாம் இப்படி அருளப்பட்டிருப்பதால் மனிதன் மற்ற விலங்குகளுக்கு மேற்பட்டவனாகவும், ஆவியின் ரூபத்தில் இருக்கிற அவருடைய தேவ சாயல், தேவரூபம் உடையவனாக மாம்சத்தில் படைக்கப்பட்டான் என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இந்த 'ஆவி' என்ற வார்த்தைக்கு பொது மொழிபெயர்ப்புகளிலெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிற மூல எபிரேயச் சொல் "ரூவாக்" என்பதாகும். அதன் கிரேக்கச் சொல் "நியூமா" என்பதாகும். இதனை நாம் ஏற்கனவே குறிப்பிட்டிருந்தோம். ஆனாலும் தேவனுடைய கருத்தை உள்ளபடியே விளங்கிக் கொள்ள வேண்டுமானால் அதற்கு வேறு என்னென்ன அர்த்தங்கள் உள்ளன என்பதை புரிந்துகொள்ள வேண்டியது அவசியம். நாம் ஏற்கனவே பார்த்தபடி, "ஆவி" என்பது என்பதற்கு "காற்று" என்பது முதற்பொருளாகவும், அடுத்தபடியாக அது கண்ணில் காணமுடியாத வல்லமையையும் குறிக்கும். இதே சொல் தேவனைக் குறிப்பிடுகின்ற இடங்களில் அவருடைய வல்லமையையும், அவருடைய காணக்கூடாத தன்மையையும் குறிக்கும். தேவனுடைய செயல்பாட்டையும் ஆதிக்கத்தையும் விளக்குவதற்கு இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. ஆவி என்பது காணமுடியாத மனதின் திறனைக் காண்பிக்கிறது. ஏனெனில் அது தொட்டுணர முடியாமலும் காணக்கூடாமலும் இருக்கக்கூடிய சக்தி அல்லது வல்லமையைக் குறிக்கும். "வார்ததை"களும் காணக்கூடாதவையாயிருப்பினும் வல்லமை வாய்ந்தவைகளாகும். மின்சாரத்தைப் போலவே "ஜீவனும்" எல்லா முக்கியத்துவமும், எங்கும் வியாபித்திருக்கிறதாயும், காணமுடியாத தன்மையையும் குணங்களையும் உடையதாயுமிருக்கிறது. எனவே இப்பொழுது சொல்லப்பட்ட தன்மையையும் பொதுவாக விவரிக்க ஆவி என்ற சொல் உபயோகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் விளைவாக, வேதாகமம் நமது மனதின் ஆவி என்றும், காணமுடியாத நம்முடைய மனதின் வல்லமை என்றும், ஒரு மனிதனின் ஆவி என்றும், மனிதனின் மனவல்லமை என்றும், மனோசக்தி என்றும் கூறுகின்றது; ஜீவ ஆவி, ஜீவிக்கும் வல்லமை நமது உடல்களையும் எல்லா ஜீவிகளையும் இயக்குகின்றது. தேவ ஆவி அல்லது வல்லமையைப் பயன்படுத்தி தேவன் எல்லாவற்றையும் இயங்கச் செய்கிறார். ஞானமுள்ள மனமே ஞானத்தின் ஆவியாகும். அன்பென்ற குணத்தைத் தோற்றுவித்து, செயல்படுத்துகிற ஆவியே அன்பின் ஆவியாகும். தீமையான குணம், தீயசெயல்களை வெளிப்படுத்துகிற ஆவி தீய ஆவியாகும். சத்தியம் பயிற்றுவித்து, சத்திய வழியிலே முற்றும் முடிய நடத்துகிற ஆவி சத்திய ஆவியாகும். உலகம் பயிற்றுவித்து, உலக குணங்களால் செயல்படுத்தும் ஆவி உலக ஆவியாகும்.
இதுபோலவே, பரலோக ஜீவிகள் காணக்கூடாதவைகளாகவும், வல்லமையுடையவைகளாகவும், அறிவுக்கூர்மை உடையவைகளாகவும் இருப்பதால் அவை ஆவியின் ஜீவிகளாகக் கூறப்படுகின்றன. இது, நம் ஆண்டவராகிய இயேசு, "தேவன் ஆவியாயிருக்கிறார்" என்று குறிப்பிடுகிற பிதாவாகிய தேவனை மட்டும் குறிக்காதபடி, உயிர்த்தெழுதலுக்குப் பின் இருக்கிற கிறிஸ்துவையும் குறிக்கிறது. வேதம் கூறுகிறது: "நமது கர்த்தரும் இப்போது ஆவியாயிருக்கிறார்." தேவ தூதர்களுக்கும், முதலாம் உயிர்தெழுதலில் பங்குபெறும் திருச்சபையாராகிய மணவாட்டிக்கும், இந்த ஆவிக்குரிய நிலை பொருந்துகிறது. மேலும், சாத்தானும் அவனது தூதர்களும் கூட வல்லமையுள்ள, காணக்கூடாத ஆவியின் ஜீவிகளாக இருப்பதாக வேதம் கூறுகிறது.
புதிய ஏற்பாட்டில் கூறப்படுகிற புதிய சுபாவம், புதிய ஆவி
மனிதனைப் பற்றி சொல்லும்போது, 'ஆவி' என்று குறிப்பிடப்படுகிற இடங்களை நாம் சிந்திக்கையில், கீழ்க்கண்டவற்றை நாம் நினைவில் கொள்ள வேண்டும்.
1. புதிய ஏற்பாட்டில், 'ஆவி', 'ஆவிக்குரிய' என்ற சொற்கள் கீழ்க்கண்டவற்றைக் குறிக்க உபயோகப் படுத்தப்பட்டுள்ளன.
அ) புதிய சுபாவத்திற்குட்பட்ட பரிசுத்தவான்களுடைய 'மனது.' தேவ ஆவியினாலும், வார்த்தையினாலும் ஜெநிப்பிக்கப்பட்டவர்கள், கிறிஸ்துவுக்காக புதிய சிருஷ்டிகளாக்கப்பட்டவர்கள். இவர்களே மனித நிலையிலிருந்து ஆவிக்குரிய நிலைமைக்கு அழைக்கப்பட்டவர்கள். இவர்கள் இறுதிவரை விசுவாசத்தில் உறுதியாய் இருந்தால், முதாலாம் உயிர்த்தெழுதலில் வாக்குத்தத்தம் பண்ணப்பட்ட இந்த சுபாவத்தைப் பெறுவார்கள்.
ஆ) உயிர்தெழுதலுக்குப் பின்னர் கிறிஸ்து பெற்ற ஆவிக்குரிய நிலையை(spirit beings) அடைவார்கள். அது பரம பிதாவின் மகிமையுள்ள புதிய தெய்வீக சுபாவமாகும். இதன்படியாக திருச்சபையின் நம்பிக்கை எதிர்காலத்தில் மகிமையுள்ள நிலைக்கு உயர்த்தப்படும்.
இ) ஆயிர வருட அரசாட்சியில் இந்த பூமிக்குரிய ஆசீர்வாதத்தைப் பெறும் உலக ஜனங்களை விட, திருச்சபையார் பெறப்போகும் மகிமையோ, ஆவிக்குரியதாகவும், பரத்துக்குரியதாகவும் இருக்கும்.
ஈ) தூதர்களைப் பற்றிக் குறிப்பிடுகையில் அவர்கள் இயல்பாகவே பரத்துக்குரிய ஆவிக்குரிய மேனியைப் பெற்றிருப்பார்கள். மாமிசத்துக்குரிய மேனியை அல்ல. 'ஆவி', 'ஆவிக்குரிய' என்று சொல்கின்ற இடங்களிளெல்லாம் அது காணக்கூடாத தன்மையை உணர்த்துவதாய் இருப்பதை கவனிக்கவும்.
இப்படிப்பட்ட வார்த்தைகளின் சில உதாரணங்களை கீழே காண்போம்:
* " பவுல் அத்தேனே பட்டணம் விக்கிரக ஆராதனைகளால் நிறைந்திருக்கிறதைக் கண்டு தன் ஆவியில் மிகுந்த வைராக்கியமடைந்தான்" இவ்விடத்தில் சொல்லப்பட்ட நியூமா (ஆவி) மனதின் உணர்வுகளைக் குறிக்கும். அப். 17:16
* "பவுல் ஆவியில் வைராக்கியம் கொண்டு, இயேசுவை கிறிஸ்து என்று யூதருக்கு திருஷ்டாந்தபடுத்தினான்."
(நியூமா என்ற சொல் மனதின் உத்வேகம் என்று பொருள்படுகிறது. அப்18:25
* "இடைவிடாமல் உங்களை நினைத்துக் கொண்டிருக்கிறதைக் குறித்து, தமது குமாரனுடைய சுவிசேஷத்தினாலே, என் ஆவியோடு, நான் சேவிக்கிற தேவன் எனக்கு சாட்சியாய் இருக்கிறார்" ரோம 1:19
(நியூமா - புதியமனம், புதிதாக்கப்பட்ட சிந்தை)
* "தேவனுக்குரியவைகளாகிய உங்கள் சரீரத்தினாலும், உங்கள் ஆவியினாலும் தேவனை மகிமைப்படுத்துங்கள்" 1கொரி 6:20
(நியூமா - மனது)
* "நான் சரீரத்தினாலே உங்களுக்குத் தூரமாயிருந்தும், ஆவியினாலே உங்களோடு இருக்கிறவனாய், இப்படி செய்தவனைக் குறித்து நான் கூட இருப்பது போல..."1கொரி5:3
"ஜென்ம சரீரம் விதைக்கப்படும்; ஆவிக்குரிய சரீரம் எழுந்திருக்கும்." 1கொரி15:44. (இங்கு ஆவிக்குரிய என்ற சொல்லுக்கு நியூமேட்டிகோஸ் என்ற கிரேக்கச் சொல் உபயோகப்படுத்தப் பட்டுள்ளது.)
"ஆவிக்குரியவர்களாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப் பண்ணுங்கள்." கலாத்6:1 (நியூமேட்டிகோஸ் இங்கு ஆவியினால் ஜெநிப்பிக்கப்பட்டதாயும், புதிய சிந்தை உடையது என்றும் பொருள். நியூமா - குணநலன்கள்)
"நீங்கள் எல்லா ஞானத்தோடும், ஆவிக்குரிய விவேகத்தோடும் அவருடைய சித்தத்தை அறிகிற ஆவியினாலே நிரப்பப்படவும்..." 1கொலோ 1:9.(நியூமேட்டிகோஸ் - தேவனையும் அவருடைய திட்டத்தையும் அறிவதால் ஏற்படுகிற புதிய சிந்தை)
"நீங்கள் ஆவிக்கேற்ற மாளிகையாகவும்..... கட்டப்பட்டு வருகிறீர்கள்." 1பேது2:5.(நியூமேட்டிகோஸ் ஆவிக்குரிய ஒரே குடும்பத்தைச் சார்ந்த என்ற பொருள்படுகிறது)
"குறிசொல்ல ஏவுகிற ஆவியைக் கொண்டிருந்து, குறிசொல்லுகிறதினால்..." அப்:16:16 (நியூமா காணக்கூடாத ஒரு வல்லமை)
"பவுல் திரும்பிப் பார்த்து, நீ இவளைவிட்டு புறப்படும்படி... உனக்குக் கட்டளையிடுகிறேன் என்று அந்த ஆவியுடனே சொன்னான்." அப்16:18
(நியூமா ஒரு பெண்ணைப் பற்றியிருக்கும் அசுத்த ஆவியைக் குறிக்கும்)
"பொல்லாத ஆவிகளும் அவர்களை விட்டுப் புறப்பட்டன" அப் 19:15 (நியூமா)
"பொல்லாத ஆவி நீங்கள் ... யார் என்று சொல்லி..." அப்.19:15 (நியூமா)
"சதுசேயர்... தேவதூதனும் ஆவியும் இல்லை என்றும் சொல்கிறார்கள்." அப்.23:8
(நியூமா ஆவிக்குரிய ஜீவி)
"ஒரு ஆவி அல்லது ஒரு தேவதூதன் இவனுடனே பேசினதுண்டானால் நாம் தேவனுடனேபோர் செய்வது தகாதது" அப்.23:19
(நியூமா ஆவி)
-- Edited by soulsolution on Friday 15th of January 2010 03:36:38 PM
-- Edited by soulsolution on Saturday 16th of January 2010 03:25:14 PM
-- Edited by soulsolution on Wednesday 25th of May 2011 05:48:48 AM
2. பொதுவாக மனுக்குலத்தில் உள்ள அனைவரையும் குற்க்க பழைய ஏற்பாட்டில், "ஆவி" என்று சொல்கிற மரபு உண்டு. எப்படியிருந்தாலும், ஜீவ ஆவியையே குறிப்பதாக இது உள்ளது. முதன்முதலாக் ஆதாமுக்கு நிபந்தனக்குரிய நித்திய ஜீவன் என்கிற வெளிச்சம் கொடுக்கப்பட்டது. அது அவனுக்கு பின் வழிவந்த தலைமுறை தலைமுறைக்கும் பின் சந்ததிக்கும் தொடர்ந்து வந்தது. இந்த ஜீவன் காணக்கூடாத ஒரு வல்லமையாகும். அல்லது மனதின் ஆவி அல்லது சித்தம் இந்தக் காணமுடியாத வல்லமையே ஜீவனைக் கட்டுப்படுத்துகிறது.
ரூவாக், நியூமா - ஒரு உயிரளிக்கும் வல்லமை
மனிதனுடைய படைப்பிலேயே ஜீவ ஆவி என்பது ஜீவனுக்குக் காரணமாயிருக்கிற மூச்சு ஆகும். தேவனால் சிருஷ்டிக்கப்பட்ட சகல ஜீவ ஜந்துக்களுக்கும் கொடுக்கப்பட்ட ஜீவ ஆவி பொதுவான ஒன்றே. இது ஏதோமனிதன் மாத்திரம் பெற்றுக் கொண்டிருக்கிற ஆவியல்ல. இதை கீழ்க்காணும் வசனங்கள் வெகு விளக்கமாக எடுத்துக் காண்பிக்கின்றன.
"வானத்தின் கீழே ஜீவ சுவாசமுள்ள சகல மாச ஜந்துக்களையும்" ஆதி 6:17; 7:15 (இங்கு ரூவாக் என்ற கிரேக்கச் சொல் எல்லா ஜீவன்களின் மூச்சு அல்லது ஆவி என்று பொருள்படும்)
"வெட்டாந்தரையில் உண்டான எல்லாவற்றிலும் நாசியிலே ஜீவசுவாசமுள்ளவைகள்" ஆதி.7:22 (ரூவாக் ஆவி, ஜீவ ஆவி என்று பொருள்படும்)
"அவர்களுடைய தகப்பனாகிய யாக்கோபின் ஆவி உயிர்த்தது" ஆதி.45:27 (ரூவாக் உயிரளிக்கக்கூடிய உடலின் வல்லமைகள் புதுப்பிக்கப்பட்டன)
"அவன் குடித்தபோது அவன் உயிர் திரும்ப வந்தது." நியாயாதி15:19 (ரூவாக் பலம், சக்தி, ஆற்றல் ஆகிய உடலின் வல்லமைகள் திரும்பக் கிடைத்தது)
"மாம்சமான சகல மனுஷரின் ஆவியும் அவர் கையில் இருக்கிறது." யோபு 12:10 (ரூவாக் சகல மனிதரின் ஆவியும், தெய்வீக வல்லமைக்குள் அடக்கம் என்பதைக் காண்பிப்பதற்காக தேவனுடைய கையில் உள்ளது என்று சொல்லப்படுகிறது)
"தேவனே மாம்சமான யாவருடைய ஆவிகளுக்கும் தேவனே, ஒரு மனிதன் பாவம் செய்திருக்க சபையார் எல்லார்மேலும் கடுங்கோபம் கொள்வீரோ?" எண். 16:22 (ரூவாக் ஜீவ வல்லமை, ஜீவ ஆவி என்று பொருள் கொள்கிறது)
பூர்வீகமான தத்துவ சாஸ்திரிகளினால் உண்டாக்கப்பட்ட கொள்கை: மனிதனுக்கும் விலங்குகளுக்கும் வித்தியாசமான ஆவி கொடுக்கப்பட்டுள்ளது, மரணத்தில் மனிதனின் ஆவி மேலே செல்கிறது, விலங்குகளின் ஆவி தாழ பூமிக்குக் கீழே இறங்குகிறது என்பது ஆகும். ஞானியாகிய சாலொமோன் இது பற்றி கீழ்கண்டவாறு வினவுகிறார்.
"உயர ஏறும் மனுஷனுடைய ஆவியையும், தாழ பூமியில் இறங்கும் மிருகங்களுடைய ஆவியையும் அறிகிறவன் யார்? பிரச 3:19 - 21(ரூவாக் மனிதனின் ஜீவ ஆவி, மிருகங்களின் ஜீவ ஆவி என்று பொருள்படும்)
"மனுப்புத்திரருக்குச் சம்பவிக்கிறது மிருகங்களுக்கும் சம்பவிக்கும், அவர்களுக்கும் இவைகளுக்கும் ஏக சம்பவமுண்டு; இவைகள் சாகிறது போலவே அவர்களும் சாகிறார்கள்; ஜீவன்களுக்கெல்லாம் சுவாசம் ஒன்றே; மிருகத்தைப் பார்க்கிலும் மனிதன் மேன்மையுள்ளவன் அல்ல;" (ரூவாக் ஜீவ ஆவி, ஜீவ சுவாசம் என்று இவ்விடத்தில் பொருள் படுகிறது.
இவ்விடத்தில் நாம் பார்த்தபடி, மனிதனுக்கும் விலங்கிற்கும் ஜீவ சுவாசத்தில் வேற்றுமை இல்லை என்பதை அறிகிறோம். ஆனால் வேற்றுமையிருக்கிறதாக கருதுகிற வேறு சில இடங்களை இபோது ஆராய்வோம்.
"உமது கையில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன்." சங். 31:5 (ரூவாக் இவ்விடத்தில் ஜீவ ஆவி அல்லது உயிரளிக்கும் வல்லமை என்று பொருள் தருகிறது)
நமது கர்த்தராகிய இயேசு கிறிஸ்து மரிக்கும் தருவாயில் சொல்ல வேண்டிய வார்த்தைகளை தீர்க்க தரிசனமாக இவ்விடத்தில் சொல்லப்ப்ட்டுள்ளது. இயேசு கிறிஸ்து ஜீவ ஆவியை பிதாவிடமிருந்து கொடையாகப் பெற்றார். பிதாவின் திட்டத்திற்குக் கீழ்ப்படிந்தவராக, மனிதனுக்கு மீட்பளிக்க, மனிதராகி, தன் ஜீவ ஆவியை தேவனுக்குத் தத்தம் செய்யும்போது, உயிர்த்தெழுதல் மூலமாக ஜீவ ஆவியை திரும்ப கொடுக்கிற தேவனுக்கு வாக்குத்தத்தத்தின்மேல் தமது நம்பிக்கையை பிரகடனப்படுத்தினார்.
மனுக்குலம் முழுவதும் அவர்களின் ஆதித் தகப்பனாகிய ஆதாமின் மூலமாக, யாவருக்கும் ஜீவ ஊற்றாகிய பிதாவாகிய தேவனிடமிருந்து, ஜீவ ஆவியைப் பெற்றுக்கொண்டனர். கீழ்ப்படியாமையினாலே ஆதாம் தன்னுடைய ஜீவ ஆவியின் உரிமையை இழந்துபோனான். படிப்படியாக தன்னுடைய ஜீவ ஆவியை விட்டு, செத்துக்கொண்டே இருந்து, 930ம் வயதில் முழுமையாக செத்துப் போனான். மரணத்தில் இந்த சரீரமானது, அது சிருஷ்டிக்கப்படுமுன் இருந்த நிலைமைக்கு சென்றுவிடுகிறது. ஜீவிக்கின்ற உரிமையாகிய ஜீவ ஆவியானது அந்த உரிமையை, சலுகையை, வல்லமையை, அனுமதித்த தேவனிடத்தில் திரும்ப செல்கிறது. எந்த ஒரு பொருளையும் யார் கொடுத்தார்களோ, அவர்களுடைய நிபந்தனைக்குக் கட்டுப்படாதபோது, அதைக் கொடுத்தவரிடமே திரும்பக் கொடுத்தது போல, ஜீவ ஆவியையும் தேவனிடத்திற்கு திரும்பக் கொடுத்துவிட வேண்டியதாகிறது. (பிர.12:7)சிலர் சொல்வதுபோல இந்த வசனத்தின்படி ஜீவ ஆவி ஏதோ சிறகு முளைத்து, பறந்து தேவனிடத்தில் சென்று அடைகிறது என்பதற்கான எந்தக் குறிப்பும் இல்லை. ஜீவ ஆவி என்பது நுண்ணறிவல்லஒரு ஆளுமல்ல இது ஒரு உரிமை அல்லது ஒரு சலுகை. அந்த உரிமை அல்லது சலுகை பறிபோன பிற்பாடு கொடுத்தவரிடமே அந்த சலுகை திரும்பிவிடுகிறது. மனிதன் பாவத்திற்குட்பட்ட போதே நிபந்தனையை மீறிவிட்டான். அதனால் அந்த ஜீவ உரிமை பறிக்கப்பட்டுவிட்டது. மனிதன் பறிகொடுத்த அந்த ஜீவ உரிமை, அதைக் கொடுத்தவரிடமே திரும்பிச் சென்றுவிடுகிறது. அந்த சரீரமோ மண்ணோடு மண்ணாகிறது.
தெய்வீக வாக்குத்தத்தத்தின் மீது இயேசு கிறிஸ்துவுக்கு விசுவாசம் இருந்ததினால், அவர் மரித்தாலும் உயிர்தெழுதலில் இழந்த ஆவியை திரும்பப் பெற்றுக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கையோடு இருந்தார். கர்த்தராகிய இயேசு கிறிஸ்துவின் மீட்பின் காரணமாக எல்லா மனுக்குலத்திற்கும் தாங்கள் இழந்த ஜீவனைப் பெற்றுக்கொள்ளக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டது..(எபி 12:24) நம்பிக்கையில்லாத மற்றவர்களைப் போல விசுவாசிகள் துக்கப்பட வேண்டிய அவசியமில்லை. ஆதாம் தனக்கும் தன் பின்க்வரும் சந்ததிக்கும் இருந்த ஜீவ உரிமையை பறிகொடுத்து விட்டார். இந்த ஜீவ உரிமையை கர்த்தராகிய இயேசு கிறிஸ்து முழு மனுக்குலத்திற்கும் பெற்றுத் தந்தார். இயேசு கிறிஸ்துவும்ஸ்தேவானும் தேவனுடைய வாக்குத்தத்தத்தின் நிச்சயமாகிய உயிர்த்தெழுதலை நம்பினதால் தங்கள் ஜீவ ஆவியை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர்த்தெழுதலின் போது திரும்ப பெற்றுக்கொண்டது போலவே, இயேசு கிறஸ்துவைப் போலவே விசுவாசிகளும் தேவனுடைய திட்டம், வாக்குத்தத்தங்களின்படி தங்களுக்காகவும், மற்றவர்களுக்காகவும் தங்கள் ஜீவனை தேவனிடம் ஒப்படைத்துவிட்டு உயிர்த்தெழுதலின் போது தாங்கள் ஜீவிக்கிற உரிமையை திரும்பப் பெற்றுக் கொள்வார்கள். உலகத்தாரைப் பொறுத்தமட்டில் மிதலாம் உயிர்த்தெழுதலில் மனித உடலோடு ஜீவ ஆவி இணைவதாகும். மூலச்சொல்லாகிய ரூவாக்(எபிரேயம்), நியூமா(கிரேக்கு) ஆகியவைகள் ஜீவ ஆவியைக் குறிக்கும். சுவிசேஷ யுக திருச்சபையாரைப் பொருத்தமட்டில் முதலாம் உயிர்த்தெழுதலில் பங்குள்ளவர்கள், ஆவியின் மேனியை(spirit body) ஜீவ ஆவியோடு பெற்றுக்கொள்வார்கள். மூலச்சொல்லாகிய ரூவாக், நியூமா என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. 1கொரி 15:42 - 45
-- Edited by soulsolution on Saturday 16th of January 2010 11:31:29 PM
பூமிக்குரிய உயிர்தெழுதல் குறித்து எழுத்தோவியமாக எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில்(37:5 - 10,13,14) சரீரம், ஜீவசுவாசம்(ஜீவ ஆவி) இவையிரண்டுக்குமிடையேயுள்ள வேறுபாட்டை விளக்கியுள்ளது. எசேக்கியேல் தீர்க்கதரிசனத்தில் சொல்லப்பட்டவைகள் அடையாளங்களாக சொல்லப்பட்டாலும் அந்த மாம்ச சரீரத்தில் எலும்பு, தசை, நரம்பு ஆகிய எல்லாம் இசைவாக இணக்கப்பட்டிருந்தாலும் ரூவாக் என்ற ஜீவ சுவாசம் மனிதருக்கு மாத்திரமல்ல, விலங்குகளுக்கும் உயிரோடிருக்க அத்தியாவசியமானது என்று பல இடங்களில் ஏற்கனவே விளக்கி இருக்கிறோம். எசேக்கியேலின் தீர்க்கதரிசனத்தின் கீழ்க்காணும் வரிகளை ஆழ்ந்து சிந்திப்போமாக.
*"நான் உங்களுக்குள் ஆவியை(ரூவாக் ஜீவாஆவி, ஜீவசக்தி) பிரவேசிக்கப்பண்ணுவேன், அப்பொழுது நீங்கள் உயிரடைவீர்கள்."
* "நான் ...... மாமிசத்தை உண்டாக்கி, உங்களைத் தோலினால் மூடி உங்களில் ஆவியைக் கட்டளையிடுவேன். அப்பொழுது நீங்கள் உயிரடைவீர்கள்." (ரூவாக் - ஜீவ ஆவி, ஜீவ சக்தி)
* நான் பார்த்துக்கொண்டிருக்கையில், இதோ... மாம்சமும் உண்டாயிற்று, மேற்புறமெங்கும் தோலினால் மூடப்பட்டது; ஆனாலும் அவைகளில் ஆவி (ரூவாக் - ஜீவ ஆவி, ஜீவ சக்தி) இல்லாதிருந்தது.
*"அவர் என்னைப்பார்த்து: நீ ஆவியை (ரூவாக் - ஜீவ ஆவி, ஜீவ சக்தி, மூச்சு) நோக்கித் தீர்க்க தரிசனம் உரை; மனுப்புத்திரனே, நீ தீர்க்கதரிசனம் உரைத்து, ஆவியை (ரூவாக் - ஜீவ ஆவி, ஜீவ சுவாசம்) நோக்கி: கர்த்தராகிய ஆண்டவர் உரைக்கிறது என்னவென்றால், ஆவியே (ரூவாக்) நீ காற்றுத்திசை நான்கிலுமிருந்து வந்து, கொலையுண்ட இவர்கள் உயிரடையும்படிக்கு இவர்கள் மேல் ஊது என்கிறார் என்று சொல் என்றார்."
* "நான் தீர்க்க தரிசனம் உரைத்தேன்; அப்பொழுது ஆவி (ஜீவ ஆவி, ஜீவ சக்தி, உயிர்மூச்சு) அவர்களுக்குள் பிரவேசிக்க அவர்கள் உயிரடைந்தார்கள்."
-- Edited by soulsolution on Wednesday 27th of January 2010 09:41:05 AM
-- Edited by soulsolution on Wednesday 27th of January 2010 09:54:30 AM
"நான் உங்கள் பிரேதக்குழிகளைத் திறந்து, உங்களை உங்கள் பிரேதக்குழிகளிலிருந்து வெளிப்படப்பண்ணும்போது, நான் கர்த்தர் என்று அறிந்து கொள்வீர்கள். என் ஆவியை (ரூவாக் - ஜீவ ஆவி, ஜீவ சுவாசம்) உங்களுக்குள் வைப்பேன்; நீங்கள் உயிரடைவீர்கள்"
ஜீவ ஆவி அல்லது வல்லமையின் ஆவியை சிருஷ்டிகர் ஆதாமுக்குக் கொடுத்தபோது அவன் கீழ்ப்படிந்திருந்தால், அந்த உரிமைச் சலுகைகள் நிலத்திருக்கும், அவனோ கீழ்ப்படியாமல் போனதினால் உரிமைகள் சலுகைகள் பறிபோய்விட்டன. எனவே ஆதாம் பெற்றிருந்த ஜீவ ஆவி அதனைக் கொடுத்தவரிடமே திரும்பிப்போய்விட்டது. ஒரு மனிதனாக அல்ல, ஒரு பொருளாக அல்ல, ஒரு உரிமையாக, ஒரு சலுகையாக. ஜீவ உரிமை சலுகையைக் கொடுத்தவர், கட்டளையிட நிபந்தனைகளை மீறினபோது, கொடுத்த சலுகைகள், உரிமைகள் கொடுத்தவரிடமே திருப்பிக் கொடுக்க வேண்டியதாயிற்று. (பிர. 12:7)
இழந்துபோன தன்னுடைய ஜீவ உரிமையை அல்லது சலுகையை, மரணத்தில் ஒவ்வொரு மனிதனும் தேவனிடம் ஒப்புவித்த உரிமையை, எல்லாருக்காகவும் தன் விலையேறப்பெற்ற இரத்தத்தினால் இயேசு மீட்டுக் கொடுத்ததனாலே மனுக்குலம் முழுமைக்கும் இழந்துபோன சலுகைகள் உரிமைகள் தேவ கிருபையினாலே திரும்பக் கிடைக்கிறது. இவ்வாறு இயேசு அவரது இரத்தத்தினால் கிரயத்திற்குக் கொண்டதால், அவரை முழுமனதுடன் ஏற்றுக்கொண்டவர்கள் எல்லாரையும் முந்தின சீருக்குக் கொண்டு வருகிறதினால் மனுக்குலத்தின் பிதா எனவும் அழைக்கப்படுகிறார்.
இது குறித்து புதிய ஏற்பாட்டிலிருந்து ஒரு உதாரணத்தைத் தருகிறோம்.
மனம் அல்லது சித்தம் என்பது காணமுடியாத வல்லமை அல்லது ஆதிக்கம். இதைக் குறித்துக் காட்டக்கூடிய வார்த்தைகள் எபிரெயு மொழியில் "ரூவாக்" என்றும் கிரேக்க மொழியில் "நியூமா" என்றும் குறிக்கப்பட்டுள்ளதை கீழ்க்காணும் பகுதிகளில் காண்போம்.
"அதற்கு அன்னாள் பிரதியுத்தரமாக : என் ஆண்டவனே, நான் மனக்கிலேசமுள்ள (ரூவாக் - மனம், குணம்) ஸ்திரீ." (1சாமு 1:15)
"பெருமையுள்ளவனைப்பார்க்கிலும் (ரூவாக் - மனம், குணம்) பொறுமையுள்ளவன் உத்தமன், உன் மனதில் (ரூவாக் - மனம் குணம்) சீக்கிரமாய்க் கோபம் கொள்ளாதே." (பிர. 7:8,9)
புதிய ஏற்பாட்டிலிருந்து சில உதாரணங்களைப் பார்ப்போம்.
"அந்தப் பிள்ளை (யோவான்) வளர்ந்து, ஆவியிலே(நியூமா - சித்தம்) பலம் கொண்டது." லூக் 1:80
பூர்வ மொழியிலிருந்து ஆவி என்று பொதுவாக மொழி பெய்ர்க்கப்பட்டிருப்பது சரியே. ஏனெனில் பொதுவாக ஆவி என்பதை ஜீவ ஆவியென்றும், சாந்தமும் அமைதலுமுள்ள ஆவியென்றும், நல்ல ஆவியென்றும், கோபத்தின் ஆவி என்றும் பல நேரங்களில் பலவாறாக மாறக்கூடிய மன இயல்பு என்றும் கசப்பான ஆவியென்றும், உக்கிரக் கோபமான ஆவியென்றும் பலவிதத்திலும் மாறுபடும் தன்மையை விளக்கிக் கூறுகிறோம். இப்படி சமயத்திற்கு சமயம் மாறுபடுகின்ற தன்மை, மனிதனுக்கு மட்டுமன்றி விலங்குகளுக்கும் உண்டு. ஆவியென்பது உணர்வுகளை மையமாகக் கொண்டது. அது மனிதனைக்குறிக்காமல் மனித உணர்வுகளையே குறிக்கும் என்ற உண்மையை விளக்கவே, ஏராளமான உதாரணங்கள் மூலமாக எடுத்துக்காட்டினோம். மனித சிருஷ்டிப்பில் இச்சொல்லை உபயோகிக்கும்போது ஜீவ வல்லமை அல்லது ஜீவ ஆவியை, அதன் ஆதிக்கத்தை உணர்த்துவதற்காக உபயோகிக்கப்பட்டுளளது. இந்த ஜீவ வல்லமை, ஜீவ ஆவி எல்லா மிருகங்களுக்கும் பொதுவானது..
மனிதன் எப்படி உருவாக்கப்பட்ட்ருக்கிறான் என்ற விபரம்கூட அறியாமல் மரணம். பரலோகம், நரகம் பற்றி பாபிலோனிய வேசி சபை கட்டுக்கட்டாக கதைகளை கொண்டுள்ளது. குழப்பத்தின் மொத்த உருவமாக இருந்து கொண்டுள்ள பாபிலோனிலிருந்து பகுத்தறியும் சத்திய விரும்பிகள் வெளியேறுவதில் வியப்பேதுமில்லை.
-- Edited by soulsolution on Wednesday 25th of May 2011 05:55:41 AM
சரீரமும், ஜீவ சுவாசமும்(ஆவி) இணைந்துதுதான் 'ஆத்துமா' ஆகிறது. அதாவது ஒரு மின்சார பல்பிலிருந்துவரும் 'வெளிச்சம்'தான் ஆத்துமாவென்றால் பல்ப் சரீரம், அதை எரிய வைக்கும் மின்சக்தியை 'ஆவி' எனவும் கொள்ளலாம். ஆக மின்சாரம் என்ற ஆவி நிறுத்தப்படும்போது சரீரமாகிய பல்பு 'செத்து'ப்போகிறது. இந்நிலையில் 'வெளிச்சம்' எங்கே போனது என்று கேட்பது எவ்வளவு அபத்தம்...
உயிர்த்தெழுதலின்போது எல்லா சரீரங்களூக்கும் மீண்டும் ஆவியூட்டப்பட்டு அனைவரும் உயிரடைவார்கள். வேதம் கூறும் சத்தியம் இதுவே.
பிதாவாகிய தேவனின் இந்த மகத்துவமான திட்டத்தை சற்றும் உணராத பாபிலோனிய சபை கட்டுக்கதைகளுக்கு அடிமையாகி குழப்பத்தின் உச்சத்தில் உள்ளது.
"நீ சாகவே சாவாய்" என்று தேவன் சொன்ன சத்தியத்தை இன்றைய கிறிஸ்தவம் நாங்கள் சாகவே சாவதில்லை, வேறெங்கோ 'உயிரோடுதான்' இருப்போம் என்று சாத்தானின் பொய்யை நம்பி மோசம் போய்க்கொண்டிருக்கிறது. வெளிச்சத்தின் பிள்ளைகளுக்கு மற்ற சத்தியங்களை புரிந்து கொள்ள மரணம் பற்றிய தெளிவு மிக அவசியம். அவர்களுக்கு இந்தக் கட்டுரை மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.