" சகோதரரே ஒருவன் யாதொரு குற்றத்தில் அகப்பட்டால் ஆவிக்குரியவரகளாகிய நீங்கள் சாந்தமுள்ள ஆவியோடே அப்படிப்பட்டவனைச் சீர்பொருந்தப்பண்ணுங்கள். நீயும் சோதிக்கப்படாதபடிக்கு உன்னைக் குறித்து எச்சரிக்கையாயிரு. " ( கலா. 6:1 )
தேவனுடைய பிள்ளைகள் இதில் ஓர் நல்ல பாடத்தை கற்றுக்கொள்ள வேண்டும்.
குற்றம் செய்த ஒருவனை கண்டித்து சீர்திருத்தும் போது மிக சாந்தமும் அன்புமுள்ள வார்த்தைகளினாலும், வசனத்தின் மூலமாகவும் மிகப் பணிவுடன் அவன் இருத்யயத்தின் சிந்தனைகளை மாற்ற முயல வேண்டும்.
நாம் ஒருவரையும் நியாயம் தீர்க்காமலும், அவர்கள் குற்றத்திற்கு தண்டனை விதிக்காமலும் தேவனிடம் ஒப்படைக்கவேண்டும்.
அதோடு நாம் நம்மைக்காத்துக்கொண்டு அப்பாவங்களில் நாம் சோதனைக்குட்படாமல் இருக்க வேண்டும்.