" அவருடைய வார்த்தை என் எலும்புகளில் அடைபட்டு எரிகிற அக்கினியைப் போல் என் இருதயத்தில் இருந்தது. அதைச் சகித்து இளைத்துப் போனேன். எனக்குப் பொறுக்கக் கூடாமற் போயிற்று. " ( எரே.21:9 )
தேவனுடைய ஆதரவையும், ஆசீர்வாதத்தையும், வழி நடத்துதலையும் பெறத் தகுதியுள்ளவர்களாக இக்காலத்தில் ஜீவிக்கும் ஒவ்வொருவரும் முழு பெலத்துடன் தங்களை பூரண பலிகளாக ஒப்புக்கொடுத்தல் வேண்டும்.
இதன் மூலம் அவருடைய தத்தம் செய்யப்பட்ட நம் சரீரம் ஆவியிலே அவரை மகிமைப்படுத்தவும் வேண்டும்.
சங்கீதக்காரன் சொன்னது போல," என் இருதயம் எனக்குள்ளே அனல் கொண்டது, நான் தியானிக்கையில் அக்கினி மூண்டது. அப்பொழுது என் நாவினால் விண்ணப்பம் செய்தேன் "என்று நாமும் சொல்லக் கூடியவர்களாக காணப்பட வேண்டும்.