" ஒருவனையும் தூஷியாமலும், சண்டை பண்ணாமலும், பொறுமையுள்ளவர்களாய் எல்லா மனுஷருக்கும் சாந்த குணத்தை காண்பிக்கவும் நினைப்பூட்டு." (தீத்து, 3:2)
சிலுவைப் போர் வீரனாகக் கருதப்படுகிறவன் அவதூறு பேசுவதும், தீங்கு செய்ய நினைப்பதும், பேசுவதும் ஒரு நல்ல குணமுள்ள நிலையைச் சீர்குலையச் செய்வதற்கொப்பாகும்.
இது தேவனுடைய பார்வையில் அசுத்தமாகக் காணப்படும்.
அவதூறு பேசுவது சதி செய்து கொலை செய்வதற்கும், தூஷிப்பது ஒருவனது நற்பெயரை களவாடுவதர்கும் ஒப்பாக தேவனுடைய பார்வையிலே கருதப்படும்.
இக்காரியங்களுக்கு ஒருவன் சத்திய ஒளியிலே நடக்க பிரயாசப்படும்பொழுது விழிப்புள்ளவனாக இருந்து, இத்தகைய மாமிச பலவீனக்களுக்குத் தன்னை ஒப்புக்கொடாமல் மேற்கொள்ளவேண்டும்.
புதிய சிருச்க்டியாகிய இவர்கள் பழைய புளித்த மாவாகிய தீய காரியங்களாகிய கசப்பும், கோபமும், மூர்க்கமும், தூஷனமுமான சகல துர்க்குணங்களுக்கும் நீங்கலாகி புதிய இருதயத்துடன், கிறிஸ்துவின் மாதிரியாகக் காணப்பட வேண்டும்.