ஜெபத்திலே நாம் எதை தேவனிடத்திலே கேட்க வேண்டும் என்பதை வேதாகமத்திலிருந்தே நாம் எடுக்கக் கூடியவர்களாக இருக்க வேண்டும்.
உங்கள் சந்தோஷம் நிறைவாகுமாறு பெற்றுக்கொள்ள, என் நாமத்தினாலே பிதாவிடம் கேளுங்கள் என்றார். (யோ.16: 23,24)
ஜெபமானது பிதாவினிடம் குமாரன் மூலம் நாம் ஏறெடுக்கும் விண்ணப்பம்.
சாத்தான் தேவ பிள்ளைகளை சோதிக்க இடங்கொடாமல், தேவனோடு ஒருமைப்பட தக்கதாக அவனுக்கு இடைவெளியும் சந்த்ர்ப்பங்களும் தராது சோதனைகளிலே ஜெபத்தின் மூலம் அவருடன் தொடர்பு கொள்ள வேண்டும்.
பரம பிதா தம் பிள்ளைகளுக்குத் தேவையானதைத் தர சித்தமுள்ளவராயிருக்கிறார். ( லூக். 18: 1 - 8 )